தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 01, 2015

சருகனி, சகுனம் சற்குணவதி


வீட்டில், எதற்கெடுத்தாலும் பெண்கள் சகுனம் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு திடீரென ஊருக்கு போகவேண்டிய சூல்நிலை உண்டாகும் உடனே புறப்படுவோம், அன்று பார்த்து திங்கள் கிழமையாக இருக்கும். போதக்குறைக்கு வடக்கே சூலம் வேறு, உடனே பெண்கள் என்ன சொல்கிறார்கள் ? இன்னைக்கு வேண்டாம் திங்கள் கிழமை பயணம் போனால் ? திரும்பாப் பயணமா போயிடும் என்பார்கள். கிழமை என்ன செய்யும் ? எல்லா நாளும் போல திங்களும் வந்து போகும் அவ்வளவுதான்.

திங்கள் என்று யார் பெயர் வைத்தது ? ஒருவேளை அவர்கள் மங்கள் என்று பெயர் வைத்திருந்தால் இந்த பெண்கள் என்ன சொல்லி இருப்பார்கள் ? மங்கள் கிழமை பயணம் போனால் மங்களகரமா இருக்கும் உடனே புறப்படுங்கள் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் புதன்கிழமை ஏதாவது நல்லகாரியம் நடந்து விட்டால் ? பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்கிறவர்கள்தானே இவர்கள். ஆனால் ஆறு நாட்கள் கழித்து புதன்  மறுபடியும் வரும் அதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள். அதே நேரம் பலருடைய வாழ்வில் இந்த புதன்கிழமை தறுத்தினியம் தாண்டவம் ஆடியிருக்கிறது. அதெல்லாம் கணக்கில் வராது.


வடநாட்டுக்காரர்கள் ஹிந்தியில் கிழமையை, வார் என்று சொல்வார்கள் செவ்வாய்க்கிழமையை மங்கள்வார் என்று சொல்கிறார்கள். நாம்கூட செவ்வாயை, வெருவாய் என்று ஒதுக்குகிறோம். அரேபியர்கள்கூட, திங்கள் கிழமையை யும்மெல் இத்தினீன் என்கிறார்கள். இதற்கு இரண்டாவது நாள் என்று அர்த்தம்.

(ஏதோ காரியத்துக்கு சொல்வது போல இருக்கும்)

ஆனால் எல்லோருக்குமே ஒரே சூரியன், ஒரே பகல். ஆகவே, எதை எல்லாமோ, பெயர் மாற்றம் கொண்டு வருகிறார்கள் இந்த திங்கள் கிழமையை மங்கள் கிழமை என்று மாற்றினால் என்ன ?

 
சாம்பசிவம்-
ஏய்யா, நீ சும்மாவே இருக்க மாட்டியா அம்மாவே மாத்தி சும்மான்னு சொல்லச் சொல்லுவே போலயே ஏற்கனவே நிறையப்பேரு பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு அம்மாவ வீட்ல சும்மாதான் வச்சு இருக்கான். நீ வேற ஏய்யா, குட்டைய குழப்புறே ?

27 கருத்துகள்:

  1. ஸ்ரீ ராம்ஜி சொலவ்தைப் போல் ,ள் லை எடுத்துவிட்டு 'திங்க' கிழமை ஆக்கி விடலாம் ,அன்று ஒருநாள் நல்லா கொட்டிக்களாம் :)

    பதிலளிநீக்கு
  2. குட்டையெல்லாம் தான் காஞ்சு போய் கெடக்கே!.. இதுல நீங்க வேற எங்ஙன குழப்புறது!?..

    அது சரி..

    ஏம்பா.. சதாசிவம்!..
    சற்குணம் சகுனவதி.. அப்படின்னு பேரை மாத்திட்டா.. எப்படியிருக்கும்!?..

    பதிலளிநீக்கு
  3. நாள் என் செயும்? கோள்தான் என் செயும்?

    பதிலளிநீக்கு
  4. இந்த நாள் கிழமை என்பதெல்லாம் ஒரு அடையாளம்தானே. இந்த அடையாளங்கள் வருமுன் எப்படி சகுனம் பார்த்திருப்பார்கள்?

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான சிந்தனையே. தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கும் சூட்சுமத்தைக் கூறமுடியுமா?

    பதிலளிநீக்கு
  6. எல்லா நாளும் நல்ல நாளே - நம் மனதைப் பொறுத்து...!

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கீழமைகளை யாரு படைத்தது....அவரையே திருத்திட்டா....?????

    பதிலளிநீக்கு
  8. தமிழ் வருடப்பிறப்பை மாற்றியது போல கிழமைகளிலும் மாற்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  9. நல்லவர்க்கில்லை நாளும் கோளும்!

    பதிலளிநீக்கு
  10. நம் முன்னோர்கள் சொன்னது ....! சும்மாவாச் சொல்லி இருப்பார்கள்,? எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கக் கூடாது தெரியுமா.?( இந்தியாவில் நலமாக இருக்கிறீர்களா? பெங்களூர் பக்கம் வருகை உண்டா.)

    பதிலளிநீக்கு
  11. நாள் என்ன செய்யும் எல்லாம் நாம் தான் செய்கிறோம்...தம 8

    பதிலளிநீக்கு
  12. வடக்க பாத்து உக்காந்து சாப்பிடாதீங்க....கிழக்கனிக்கி உக்காருங்கம்பா..ஏன்னு கேட்டா பதிலிருக்காது...

    அருமையா சொல்லிட்டிய..

    பதிலளிநீக்கு
  13. பெயரில் என்ன இருக்கிறது! ஓர் அடையாளம் மட்டும் தானே!

    பதிலளிநீக்கு
  14. கிழமையின் பெயரில் என்ன இருக்கிறது?திங்கள் கிழமை 7.30-9 ராகு காலம்.அதனால் 8 மணிக்குள்ள அலுவலகம் போக வேண்டியவர் அன்று மட்டும் 9க்கு மேல் போகவா முடியும்?.பார்க்காத வரை கவலை இல்லை!

    பதிலளிநீக்கு
  15. வாரத்தில் ஏழு நாளும் நல்ல நாளே
    என பொருள் படும் திருஞான சம்பந்தர் பாடல் ஒன்று உண்டு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  16. அன்று
    சகுனம் பார்ப்பது அதிகம் தான்
    ஆனால், இன்று
    தன்னம்பிக்கை இருந்தால்
    வெல்லலாம் என்று
    உளவியல் பேசுவோர் அதிகம் தான்

    பதிலளிநீக்கு
  17. அவரவர் மனதை பொறுத்தது!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    ஜி

    எல்லாவற்றையும் வகுப்பது நாமதான் ஜி... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. காலம் மிகவும் வலிமையானது, ஒருத்தனை அம்பானியாகவும் ஆக்கு, ஆண்டியாகவும் ஆக்கும். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை நேரம் பார்த்து செய்யலாம், எதற்க்கெடுத்தாலும் நல்ல நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தால் அது மடத்தனம்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்,
    மங்கள வாரம் என்று இருப்பது அதாவது சோம வாரம் இருக்குப்பா,
    அருமையாக சொன்னீர்கள்,
    எங்க காணோம் தங்களை
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  21. எல்லா நாளும் நல்ல நாளே!

    த.ம. 16

    பதிலளிநீக்கு
  22. நாளும் கோளும் நமக்கல்ல....நாளும் கோளும் ஒன்ணும் செய்யப்போறது இல்லை எல்லாம் முட்டாள்கள்களின் வேலையத்த வேலை...

    அது சரி எந்த நேரத்துல இடுகையைப் போட்டீங்க....ஹும் நல்ல நேரத்துல போட்டீங்க...ராகுகாலம் போல நாங்கப் போட போட இந்த கமென்ட் போக மாட்டேனு சொல்லிருச்சு....நேரம் நல்லா இல்லையாம்....இப்ப போடறோம்....நீங்க எங்க இருக்கீங்க? வடக்கப்பார்த்தா, தெற்கைப் பார்த்தா, மேற்கப் பார்த்தா? கிழக்கப் பாத்தா? இல்ல சூலம் எதுனு தெரில.. பார்ப்போம்...இந்தக் கமென்ட் போகுதானு...

    பதிலளிநீக்கு
  23. மங்கல் வார், சோம வார் எல்லாம் சரி...மக்கள் இதச் சொல்லிக்கிட்டு வார் பண்ணாம இருந்தா சரி...........ஆனா வாருக்கு காலம், சூலம் எல்லாம் பாக்குறாங்களாப்பா? அதாங்க வீட்டுல சண்டைக்கு...

    பதிலளிநீக்கு
  24. நாளும் கிழமையும் நமக்கெங்கே இருக்கு... இங்கு எல்லா நாளும் ஒன்றே...

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா7/04/2015 8:24 PM

    பதிவும் கருத்துகளும் நல்ல அலசல். ரசித்தேன்.
    ஒரு புதுச்சொல்லு - தறுத்தினியம் இது
    பேச்சு வழக்கச் சொல்லாக இருக்குமோ?
    தரித்திரம் என்பது தெரியும் இப்படி ஒரு ஆய்வு....

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா7/12/2015 3:41 PM

    சருகனி - கருத்து தெரியவில்லை. பயணம் முடித்து வந்து பதில தாருங்கள்.
    கரந்தையாரின் பதிவு சந்திப்பு வாசித்தேன்.

    பதிலளிநீக்கு