தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 14, 2015

பரமக்குடி, பரதேசி பரமசிவம்


இரக்கமில்லாதவளே
இறக்கப்பட வேண்டியவள் நீ
இதை உரக்கச் சொல்வேன்
உறைக்கச் சொல்வேன் உலகுக்கு.

என்னை, அரக்கப் பரக்க விட்டு விட்டு
பறந்து விட்டாய் பறவையாய்...
பறட்டைத்தலை, பரஞ்ஜோதி மகன்,
பரமகுருவுடன் பரவூருக்கு,

பரமக்குடியினிலே பாரதி நகரினிலே...
பம்பரமாய், சுற்றி வந்த இந்த பரமசிவத்தை,
பரதேசியாக்கி விட்டாயடி
பரந்தாமன் மகளே பரமேஸ்வரி.

உறக்கமின்றி திரிகின்றேன் கிறக்கத்தில்
இறுக்கமான அரக்கியே...
உனக்காக, உருகிய என்னை
பருக வைத்தாய் பிராந்தியை

துறவியாய், அருவியோரம் திரிகின்றேனே...
என்னை கருவியாக்கி பயன்பட்ட கன்னியே...
அருவியாக்கி விட்டாயே என் கண்ணீரை
கருகி விட்டதடி என் இதயமே

பன்னீர் தெளித்து வாழ்த்திய என்னை
தண்ணீர் தெளித்து விட்டாயடி கண்ணே..
உனக்காக, இரக்கப்பட்ட என்னை
இறக்கச் சொல்லி விட்டாயடி பெண்ணே...

இரக்கமில்லாதவளே
இறக்கப்பட வேண்டியவள் நீ
இதை உரக்கச் சொல்வேன்
உறைக்கச் சொல்வேன் உலகுக்கு.

இப்படிக்கு,
ஆவியாகப் போகும் அப்பாவி.

சாம்பசிவம்-
உலகுக்கு சொல்றதுக்கு நீ என்ன தியாகி, தியாகராஜனா ? வெட்டிப்பயலே ஒரு தாலியை கட்டிப்போட்டா அவ, உனக்கு சொல்லியிருப்பாளா டாட்டா உன்னைப் போல கூதறைகள் இருந்தென்ன... இறந்தென்ன ?

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
இவங்கே என்ன... சொல்றாங்கே LOVE பண்ணுறது சரியா... இல்லே தப்பா ? ஒரே குழப்பமா இருக்கே, காலைலதான், கலைச்செல்விக்கு APPLICATION கொடுத்தோம், RICH FAMILY வேற...RETURN REVOLVER லருந்துல வரும். 

57 கருத்துகள்:

 1. வணக்கம்! ஜி!!! அ.....சத்தல் ....ருமை...ட்டகாசம் .....சத்துங்க ...நன்றி!!!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோ,
  சிவசம்போ சொல்வது போல் ஒன்னும் புரியலையே,,,,,
  பிராந்தி குடிக்க இப்படியா?
  நல்லா இருக்கே,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவசம்போ பேச்சு எப்பவுமே இப்படித்தானே இருக்கும்.

   நீக்கு
 3. என்ன எழுதினாலும் ஓசை நயம் வருமாறு எழுதுகிறீர். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா

   நீக்கு
 4. வருத்தம், ஏக்கம், சோகம், கோபம் அனைத்தும் ஒரே பதிவில். எப்படி உங்களால் முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைப் போன்றவர்களின் பாராட்டுகள் தரும் உந்து சக்தியே காரணம் முனைவரே...

   நீக்கு
 5. ரெண்டு பேரும் ஆவியாகிக் காதலித்துப் பார்க்கலாம் மீண்டும்!

  பதிலளிநீக்கு
 6. அப்பப்பா .... எத்தனை பபபபபபப பபபபபபபப

  விடுங்கப்பா ... அருமையப்பா

  பதிலளிநீக்கு
 7. ஆவியாகவும் சேர்ந்து டூயட் பாடலாம்! அட்டகாசமான கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவி டூயட் அதுவும் சரிதான் நண்பரே... டிக்கெட் செலவு இல்லை எங்கும் இலவசம்.

   நீக்கு
 8. இறக்கப் பட வேண்டியவள் ,எங்கே இறக்கப் படணும்?ஓ...ஆறடி குழியிலா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஜி இப்படியா ? அபசகுணமாக பேசுவது பாவம் அவள்.

   நீக்கு
 9. நானும் கொஞ்சம் குழம்பித்தான் போனேன் நண்பரே!
  த ம 7

  பதிலளிநீக்கு
 10. ரைமிங் நல்லா இருக்கு... சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டைமிங் நல்லா இருந்தால் ரைமிங் சரியாக வரும் சகோ...

   நீக்கு
 11. ரிதம் ரைமிங்க் நல்லாருக்கு நண்பரே!

  அது சரி ஆவியாகித் துரத்திப் போயி அங்கயும் துரத்தல், காதலா? சரி அங்கயாவது கழுத்துல ஒரு கயிற கட்டிடுங்க..தாலியத்தான் சொன்னோம்..பபப கிட்ட

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப.ப.ப. கிட்டேதானே... சொல்லிடுறேன் நமக்கு தெரிஞ்சவந்தான்.

   நீக்கு
 12. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 13. ஜி... நம்ம போட்டியில் கவனம் செலுத்துங்கள்...

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள ஜி,

  காதல் போயின் சாதல்...! புலம்பல் நன்றாக இருக்கிறது. பாடலைக்கேட்டு மனசு மாறியிருந்தாலும் இருக்கலாம். பரமக்குடியார்... இதற்காக அவசரப்பட்டுக் குடிகாரர் ஆக வேண்டாம்.

  த.ம.10.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மணவையாரே பரமக்குடியாரிடம், மணவையார் சொன்னதாக சொல்லி விடுகிறேன்.

   நீக்கு
 15. இப்ப பின்னோட்டம் போடு முன்னே
  தெரிஞ்சுக்க வேண்டியது எல்லாமே

  நீங்க ஆவியா இருக்கீகளா ?
  அப் பாவியா இருக்கீகளா ?

  எப்படியும்
  அப்பாவி இல்லேன்னு
  ஷிவாஸ் ரீகல் சொல்லுது.

  பாரு நயினா அந்த பாட்டிலை பாரு.
  அதுவே என்ன சொல்லுது ?

  ஷி இஸ் அப்படின்னா சொல்லுது ? இல்லையே
  ஷி வாஸ் அப்படின்னு தானே இறந்த காலத்துலே சொல்லுது.

  பின்னே என்ன ?


  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com

  பதிலளிநீக்கு
 16. வாங்க தாத்தா பரமசிவமத்தின் கவிதை சொல்வது ஆவியாகப் ''போகும்'' அப்பாவி என்றுதானே ?
  சாம்பசிவம் திட்டுவதும் அவன் இன்னும் உயிருடன் இருப்பதைத்தானே குறிக்கின்றது
  சிவாஸ் ரீகலும், சொல்வதும் அதைக்கானே...
  தங்களின் கருத்துரைக்கு நன்றி தாத்தா

  பதிலளிநீக்கு
 17. எப்படி சகோ உங்களால் மட்டும் இப்படி எழுத முடியுது ? அருமை அற்புதம். தொடர்ந்து இதே போல் அசத்துங்க.

  பதிலளிநீக்கு
 18. இரவு வேலை முடிந்த பின் -
  தொகுப்பில் பல வேலைகளையும் முடித்து விட்டு மதியம் ஒரு மணிக்குப் படுத்தேன் .. தூங்கினேன்.. சற்று முன் தான் எழுந்தேன்..

  இரவு மறுபடியும் வேலைக்குப் போக வேண்டும்..

  இப்போது ஒரு கேள்வி!.. ஒரே ஒரு கேள்வி!..

  வேலைக்குப் போகவா!.. வேணாமா!..

  ஏ.. சாமீய்.. சதாசிவம்.. எங்கே ஆளக் காணல.. ரெண்டு நாளா!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரவுப்பணிக்கு தைரியமாகப் போய் வாருங்கள் ஜி பரமசிவத்துக்கு தைரியம் கொடுத்து பக்குவமாக பேசி வைத்து விட்டேன் இனி தவறான முடிவு எடுக்க மாட்டானாம் அவனுக்கு குவைத் விசா ஒண்ணு பார்த்து அனுப்பி வைங்களேன்....

   நீக்கு
  2. ஓட்டும் போட்டேன் சொல்ல மறந்திட்டேன்

   நீக்கு
 19. கூதரைகள் இருந்தென்ன...இறந்தென்ன..சிவசம்போ..............சிவசம்போ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைத்தானே நண்பரே நம்ம சிவசம்போவும் சொல்றாரு....

   நீக்கு
 20. நீங்களா சொன்னீங்க எனக்குக் கவிதை எழுத வராது அப்பிடி இப்பிடீன்னு!..

  அதெல்லாம் ஒண்ணுமே இல்லை! என்ன ஒரு ஓசை நயமுடன் எழுதியிருக்கிறீங்க !..

  அட்டகாசமா இருக்கு!..

  எங்கோ போயிட்டீங்க சகோ! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே நான் சித்தன் போக்கு 7 o’clock அப்படினு எழுதுறவன் ஆனால் ரசிக்க வைக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு(ம்) உண்டு வருகைக்கு நன்றி.

   நீக்கு
 21. வணக்கம் கில்லர் ஜி !

  செம தூள் பாடல் அசத்தல் இப்படியே எழுதிட்டே வாங்க மரபிலக்கணம் கொஞ்சம் தெரிந்தால் சும்மா வலையுலகம் அதிரும்ல கவிதைகளால் ! ம்ம் நானே ஒரு பாவி எனக்கும் ஆவிக்கும் நல்ல பொருத்தம் அவ்வ்வ்வ் !

  அசத்தல் ஜி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் பாவலரே தங்களின் கருத்துரையை ஏற்று இனியெனும் முயல்-கிறேன்.

   நீக்கு
 22. வணக்கம் புரவலரே...
  நலமா
  பரமசிவம் பரிதாபம் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தோழரே என்ன திடீரென வசனத்தை மாத்திட்டீங்க...

   நீக்கு
 23. பரபரன்னு இருந்தது நண்பரே.... பரமக்குடி பரதேசி பரமசிவத்தின் கவிதையும் அதற்கு சாம்ப(ல்) சிவம் மற்றும் She Was (rejected) Regal சிவசம்போவின் கவுன்ட்டர் கருத்துகளும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலையுலகத்தில் பரபரப்பாக இயங்கனும், இருக்கனும் அதுதான் நமது கொள்கை நண்பரே...

   நீக்கு
 24. காதலிப்பானேன்? பின் கண்ணீர் வடித்து கவிதை படைப்பானேன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதற்குத்தானே நமது சாம்பசிவம் பரமசிவத்தை திட்டினாரு... வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 25. "கில்லர் ஜி" எப்போது கள்வர்- ஜி ஆனார் (மனம் கவர் கள்வர்)........ உணர்சிபோங்கும் நேரத்தில்- "உளறிக்கொட்டி அழகாக கிளறி மூடுவதுதான் கவிதை" ... இப் ..படிக்கு ...கோகி ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே ஒரு ஆளு கொலைகாரரரே அப்படினு கூப்பிடுறாரு... நீங்க களவாணி அப்படினு சொல்றீங்க... ஹூம் என்னமோ போங்க... அப்பாவியைக் கண்டால் எல்லோருக்கும் தொக்கு...

   நீக்கு
 26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்
  ஜி
  ஓசை நயமிக்க கவிதை.. அருமையான புதுக்கவிதை பகிர்வுக்கு நன்றி ஜி தொடருங்கள்
  எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 28. மிகவும் அருமையாக எழுதி கலக்கிறீங்க அண்ணா ஜி.

  பதிலளிநீக்கு