தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 28, 2015

Dr. 6 முகம்


அன்பு நண்பர்களே... வணக்கம் எமது கடந்த Mineral Water பதிவுக்கு வந்த அன்பின் ஜி குவைத் திரு. துரை செல்வராஜூ அவர்கள் படித்து விட்டு பின்னூட்டத்தில் எனது கழுத்தில் இப்படியொரு கொக்கியை போட்டு விட்டு போய் விட்டார்கள் நானும் மறுமொழியில் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாமல் இப்படியொரு வாக்கு கொடுத்து விட்டேன் பிறகுதான் புரிந்தது எமது தவறு இருப்பினும் வாக்கு கொடுத்ததை காப்பாற்றுவது எமது கடமை இல்லையெனில் தி கிரேட் தேவகோட்டைக்காரன் 
வாக்கு கொடுக்க வக்கு இல்லாதவன் 
என்று இந்த பொல்லாத சமூகத்தில் முத்திரை குத்தி விடுவார்களே... ஆகவே அதன் சிந்தனையில் உதித்த அவசர பதிவு அன்றே எழுதி விட்டேன் இருப்பினும் புதுக்கோட்டை போட்டிகளில் கலந்து கொண்ட பதிவுகளால் வெளியிட தாமதம் இதை முதன் முதலாக படிப்பவர்கள் மேலேயுள்ள மினரல் வாட்டர் இணைப்பைச் சொடுக்கி படித்து விட்டு பிறகு தொடர்வது நலம் – கில்லர்ஜி

குட் ஈவ்னிங் டாக்டர்.
குட் ஈவ்னிங் ட்டூ யூ வாங்க, டாக்டர் திருமுகம் எப்படி இருக்கீங்க ?

இருக்கேன் டாக்டர் நீங்க நல்லா இருக்கீங்களா... க்ளப்ல முன்னே மாதிரி பார்க்க முடியலையே...?
இல்லை டாக்டர் இப்ப கொஞ்சம் பிஸி அதான் வர முடியலை அப்புறம் கிளினிக் எல்லாம் எப்படி போகுது ?

ஏதோ போகுது ஒரு நாளைக்கு பத்துக்குள்ளேதான் வர்றாங்க வர வர பேஷண்டோட எண்ணிக்கை குறையுது ஏன் அதான் எனக்கும் புரியலை ?
நானும் கேள்விப்பட்டேன் டாக்டர் நீங்க பேஷண்டுகளுக்கு ஒரே மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்காமல் ஏதோ மாற்றி மாற்றி டாப்லெட் கொடுக்கிறீங்களாமே...

அதான் மிஸ்டர் 6 முகம் அதைப்பற்றிதான் நான் டிஸ்கஸ் பண்ண வந்தேன்.
6 முகமா ? மிஸ்டர். திருமுகம் நீங்க யாருனு நினைச்சு பேசுறீங்க... நான் டாக்டர் 7 மலை.

ஓ.... மை காட் நான் நீங்க சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் 6 முகம்’’னு நினைச்சு வந்துட்டேன் ஸாரி.
இட்ஸ் ஓகே டாக்டர் சொல்லுங்க உங்களுக்கு என்னதான் பிரச்சனை..

அது.... வந்து... டாக்டர்...
சும்மா சொல்லுங்க டாக்டர் நான் வெளியில சொல்ல மாட்டேன்..

அது வந்து டாக்டர் கொஞ்ச காலமாகவே எனக்கு மறதி அதிகமாயிடுச்சு என்ன செய்யுறோம் யாருக்கு என்ன மருந்து எழுதிக் கொடுகிறோம்னு தெரியாமல் சில நேரங்களில் பழைய ஸ்க்ரிப்ட்டை பார்த்து எழுதிக் கொடுத்துடுறேன் அது பேஷண்ட்களுக்கு பல விளைவுகளை உண்டாக்கி பிரச்சனையை கொண்டு வருது...
பின்னே இது தப்பு இல்லையா ? முதலில் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கங்க டாக்டர் 6 முகம் உங்களோட க்ளாஸ்மேட் இல்லையா.. அவரையே கன்ஸல்ட் பண்ணுங்க.. என்ன திடீர்னு ஏதும் அதிர்ச்சியான சம்பவங்கள்... அப்படி... இப்படினு...

கடந்த சில மாதமாக ஒரு குடிகார மட்டைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தேன் அவன் வந்தாலே எனக்கு வயித்துல புளியைக் கரைக்கிற மாதிரியிருக்கும்..
ஏன் ?

எடக்கு மடக்கா பேசுவான், வார்த்தைகளை குண்டக்க மண்டக்க போட்டு பேசி என் மண்டையை காயவச்சுட்டுப் போயிடுவான் அவன் போனதும் நினைச்சு நினைச்சு நெஞ்சுவலி வந்துடும் ஏற்கனவே 2 முறை அட்டாக் வந்துடுச்சு டாப்லெட் எடுத்துக்கிட்டு தூங்கிடுவேன் இப்பவெல்லாம் கனவுலயும் வர்றான் பல நேரங்கள்ல அவனிடம் பணமே வேண்டாம் நீ வரவும் வேண்டாம் போடானு சொல்லிப் பார்த்துட்டேன் இருந்தாலும் தொடர்ந்து வர்றான் அவனாலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்.
யாரு, அவன் ?

இதோ ஃபோட்டோவைப் பாருங்கள் இவன்தான்.
இவன் ஃபோட்டோவை ஏன்... கையில வச்சுக்கிட்டு இருக்கீங்க ?

தெரிஞ்ச டாக்டர்களிடம் இவன் வந்தால் பார்க்காதீங்க அப்படினு சொல்லி அவங்களையாவது காப்பாற்றுவோம் அப்படினுதான்...
தவறு உங்கள் மீதுதான் டாக்டர் நீங்க ஏன் பணம் வாங்காமல் விட்டீங்க ? நாமென்ன, மெடிக்கல் காலேஜ்ல பணம் கட்டாமல் சும்மாவா படித்தோம் ? அடுத்த முறை இவன் வந்தால் பக்குவமாக பேசி என்னிடம் அனுப்பி வையுங்கள் இவனை நான் பார்த்துக்கிறேன் என்னோட ட்ரீட்மெண்ட் வேற மாதிரி கொஞ்சம் ஹார்டாத்தான் இருக்கும் ஒரே வாரத்துல சரியாக்கிடலாம்.

நல்லது டாக்டர் இந்த ஃபோட்டோவை நீங்களே வச்சுக்கங்க.. அப்புறம் டாக்டர் நம்ம விசயத்தை வெளியில யாருட்டயும் சொல்லிடாதீங்க.. தெரிஞ்சா கில்லர்ஜி மாதிரி ஆளுங்க வெப்ஸைடில் போட்டு கிழிச்சுடுவாங்க..
இல்லை டாக்டர் கண்டிப்பாக சொல்ல மாட்டேன் நீங்க உடனே டாக்டர் 6 முகத்தைப் பாருங்க... அப்புறம் இந்த கில்லர்ஜி வெப்ஸைடெல்லாம் படிக்கிறீங்களா ?

ஆமா டாக்டர்..
முதல்ல அதை நிறுத்துங்க...

ஏன்  டாக்டர்...?
உங்களுக்கு இப்படி ஆனதுக்கு அடிப்படை காரணமே கில்லர்ஜி வெப்ஸைடுதான்.

ஐயய்யோ சரி டாக்டர் ரொம்ப நன்றி ஏன்  இவனோட ஃபோட்டோவை எக்ஸ்ரேயிலே மாட்டுறீங்க ?
நம்மகிட்ட மாட்டுனான்ல... நம்மலோட ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் ஆகிடுச்சு அவன் மனசை படிக்க ஆரம்பிச்சுட்டேன், நீங்க ஆளை மட்டும் அனுப்புங்க..

ஹ...ஹ்...ஹா என்னமோ டாக்டர் நீங்களாச்சு, அவனாச்சு எனக்கு பீடை விட்டுச்சு அப்படினு போறேன் நல்லது டாக்டர் பை ஸீ யூ..
ஓகே பை.

சாம்பசிவம்-
ஆஹா இனி கெட்டகாலம் யாருக்கோ ?

54 கருத்துகள்:

 1. சிரிப்பு வெடிதான் ஜீ எப்படி உங்க சிந்தனை இப்படி[[

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா ஏதோ நினைச்சு எதையோ எழுதுறதுதான்..

   நீக்கு
 2. ஆகா
  தங்களின் பதிவைப் படித்த டாக்டருக்கு இந்த நிலையா?
  ரசித்தேன் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதையெல்லாம் நம்பாதீங்க.. நண்பரே.. அந்த டாக்டர் பொய் சொல்றான்...

   நீக்கு
 3. டாக்ட்டரோட கிளினிக்கில் - தங்களுடைய உளவாளி இருக்கின்றான் என்பது இதன் மூலமாக தெரிய வருகின்றது..

  கில்லர் ஜி வெப்சைட்டெல்லாம் படித்து விட்டுதான் -
  டாக்ட்டர் 7மலையும் இப்படி ஆகிவிட்டார் போலிருக்கின்றது..

  எப்படியோ - சனீஸ்வரனுக்கு சகடை கிடைத்து விட்டது!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அந்த டாக்டர் சொன்னதை நீங்களும் நம்பலாமா ? அவன் ஃப்ராடு ஜி இனி அந்த டாக்டர் எங்கே நலமுடன் வாழ...

   நீக்கு
 4. வணக்கம் ஜி! ரசனை பகிர்வு! 6முகம் 7மலை! அசத்துங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே முடிந்த அளவு அசத்துவோம்..

   நீக்கு
 5. ஆஹா. அசத்தல் அண்ணா. ரசித்தேன். கில்லர் ஜி வெப்சைட் படித்தால் இப்படியாகுமா....ஹா..ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் ஆகாது சகோ தைரியமாக வாங்க படிக்கலாம்.

   நீக்கு
 6. கில்லர்ஜி வெப்சைட் படிச்சிதான் 6முகவரும் 7மலையும் இப்படி ஆனார்களா? ஹஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயய்யோ அவன் சொன்னதை நம்பாதீங்க... சகோ.

   நீக்கு
 7. நவ சுவைகளில் நகைச்சுவை நன்றாக உங்களுக்கு வருகிறது நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 8. கெட்ட காலம் யாருக்குன்னு தெரிஞ்சு போச்சு, எனக்குத்தான். ஏன்னா கில்லர்ஜி பதிவைப் படிக்கிறேனில்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் வராது ஐயா அந்த டாக்டருக்கு என்னைப் பிடிக்கலைனு நினைக்கிறேன் இதுக்கு பயந்துகிட்டு பதிவுக்கு வராமல் இருந்துடாதீங்க, ஐயா

   நீக்கு

 9. ஒருவேளை அந்த மருத்துவர் 7 மலை அந்த நோயாளியை திரு KILLERGEE அவர்களின் பதிவுகளை படிக்க சொல்லி குணப்படுத்துவாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருக்குத்தெரியும் நானும் உங்களைப் போலதான் நண்பரே எல்லாம் விதிப்படிதான் நடக்கும் பொருத்திருந்து பார்ப்போம்.

   நீக்கு
 10. வயிற்று வலீக்கு மருத்துவர் யார் அருகில்?டாக்டர் 2கூரானா?இதோ வரேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா நீங்க போயிட்டு வாங்க ஆனால் என்னோட பேரை உபயோகப்படுத்தாதீங்க... ப்ளீஸ்...

   நீக்கு
 11. அன்புள்ள ஜி,

  டாக்டர் மூலமா அந்த ஏழுமலைக்கு ஒரு பேஷண்ட்ட புடுச்சு கொடுத்திட்டீங்க... வருமானம்தான்.

  த.ம.6.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே யாருக்கு வருமானம் பின்னால் பார்ப்போம்

   நீக்கு
 12. ஹஹஹஹஹ ரசித்தோம்...இப்பதான் வாசிச்சுட்டு வந்தேன்/தோம் ரெண்டுபேரும்...அதான் லேட்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இப்பத்தான் தெரி்ஞ்சுதா ? இதுக்கு முன்னால் 2 பதிவு போயிடுச்சு

   நீக்கு
 13. விளையாம கிடந்த பொட்டல் காடலெல்லாம் பெரிய ஆஸபத்திரியா... மாறிடுச்சு சேவை செய்ய காத்திருக்காங்க நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே பணம் கட்டி படிச்சதை எடுக்க வேண்டாமா ?

   நீக்கு
 14. நல்ல சிரிப்புதான்.
  த ம +1

  பதிலளிநீக்கு
 15. Dr.6 முகம் தொழிலில் இனி 7.முகம் ..அடச்சீ ..ஏறுமுகம்தான் :)

  பதிலளிநீக்கு
 16. அட கலக்கல் தான் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 17. கலக்கலும், குதூகலமும் வழக்கம்போல் அருமை.

  பதிலளிநீக்கு
 18. சகோ, என் கருத்து காணோம்,,,,,,,,, நீங்கு பாட்டுக்கு மருந்து சீட்டு நினைத்து என் கருத்தைத் தூக்கி கொடுத்திட்டீங்களா???????????
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ என்ன வந்தவங்க சிலபேரு வாக்குப்போடலை வாக்குப்போட்ட நீங்க கருத்துரை போடலையேனு நினைச்சுக்கிட்டு இருந்தேன் நாங்க வாக்கு தவற மாட்டோம் தெரிஞ்சுகங்க.... வலிப்போக்கனுக்கும் கருத்தும், எனக்கும் வாக்கும் போட்டு இருப்பீங்க....

   நீக்கு
 19. ஹா.ஹா....

  தலைவலி அந்த டாக்டருக்கு வரப் போகுது!

  பதிலளிநீக்கு
 20. கில்லர்ஜீ வெப்சைட் படிச்சா இப்படி ஆகுமா? அச்சோ தப்பாச்சே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பாதீங்க சகோ அந்த டாக்டர் ஃப்ராடு...

   நீக்கு
  2. நம்பாதீங்க சகோ அந்த டாக்டர் ஃப்ராடு...

   நீக்கு
 21. ஐய்ய்யோ எனக்கு இப்ப எங்க டாக்டர் பேரே மறந்திருச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா இதுக்குத்தான் வீட்டு சுவற்றில் எழுதி வைக்கணும்

   நீக்கு
  2. ஹாஹாஹா இதுக்குத்தான் வீட்டு சுவற்றில் எழுதி வைக்கணும்

   நீக்கு