தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 16, 2015

16-ம் பெற்று, பெருந்தூரம் செல்க...


கவலை, என்னுள் நங்கூரமிடப் பட்டுள்ளது.

வேதனை, என்னுள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

விரக்தி, என்னுள் சம்மனமிடப் பட்டுள்ளது.

சோகம், என்னுள் உறைய வைக்கப்பட்டுள்ளது.

நிராசை, எனக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆசை, எனக்கு ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது.

கஷ்டம், பிறரால் எனக்குள் திணிக்கப் பட்டுள்ளது.

ஏக்கம், எனக்கே ஆக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகள், தினந்தோரும் சந்திப்பது.

அதிர்ஷ்டம், எனக்கு துரதிஷ்டமானது.

துரதிரஷ்டம், எனக்கு அதிஷ்டமானது.

தோல்வி, என்றுமே எனக்கே சொந்தமானது.

வெற்றி, எனக்கு என்றுமே தூரமானது.

எழுத்து, குருதி போல் சுழன்று வருவது.

சந்தோஷம், கனவில் மட்டும் வந்து போவது.

உயிர், தற்காலிகமாக நிரந்தரமானது.

ஆதலால், நான் நடந்து.......... செல்கின்றேன்...
From கருவறை to கல்லறை.


அறியதோர் வாய்ப்பு நட்புகளே... கலந்து கொள்வீர்....

வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை
தமிழ் இணையக் கல்விக் கழகம்

...இணைந்து நடத்தும்...

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மொத்தப் பரிசுத் தொகை 50 லட்சம் காசுகள்

விபரம் அறிய கீழே எலியால் சொடுக்குவீர்...


அன்புடன் அழைப்பது
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

60 கருத்துகள்:

  1. அசத்தல்...அருமை...16... பெரும் தூரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகையை முத்தாய் பதித்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. கருவறை முதல் கல்லறை வரை
    நண்பா! கையில் உள்ளதா சில்லரை?
    ஏதேது கல்லறையை மறக்க நினைத்து
    வலைப்பூ பக்கம் வந்தால்...
    இப்படி எல்லாம் ........ கூடாது!!!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா ஆரம்பம் முதல்... சில்லரையை மொத்தமாக உங்களிடம்தானே கொடுத்து வைத்திருக்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம் ஜி!!! சூப்பர் ஜி!!!

    பதிலளிநீக்கு
  4. வாழ்வில் அனைத்தும் கடந்து போகும் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. எலியால் சொடுக்குவீர், லட்சம் காசுகள் இவை போன்ற அங்கதங்களை ரசித்தேன். இவைதான் அந்த பதினாறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே 50 ஆயிரம் 80 கொஞ்சமாக தெரிந்தது ஆகவே லட்சமாக்கினேன்.

      நீக்கு
  6. தோல்வியும் வெற்றியும் என்றும் நிரந்தரமானதல்ல.அவை இரவும் பகலும் போல மாறி மாறி வரும். எனவே தோல்வி உங்களுக்கு சொந்தம் என சொல்லாதீர்கள்! தத்துவக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான, அழகான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  7. இந்த பதினாறு பேறுகளுடன் பெருந்தூரம் செல்ல முடியாதே!..

    ஆனாலும் - அட்டகாசம்!.. நிதர்சனமான உண்மை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி போகும்போது எல்லாவற்றையும் புடுங்கிடுவாங்களாமே.....

      நீக்கு
  8. அன்புள்ள ஜி,

    16 செல்வங்களை மட்டுமே பெற்று பெரு வாழ்வு வாழ... கல்லரையிலிருந்து கருவரைக்கு வரவும்... வாழ்த்துகள்!

    தமிழ் மணம்... ஆறு மனமே ஆறு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபிறவிக்கு அழைப்பா ? மணவையாரே... மீண்டும் மானிடனாகவா ?

      நீக்கு
  9. நண்பரே எதுவும் சித்தர் பாடல்களை படித்துவிட்டீர்களா? ஏன் இத்தனை சோகம்! இத்தனை விரகத்தி! அடுத்த மாதம் 11-ம் தேதி புதுக்கோட்டைக்கு வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் இல்லை நண்பரே நான் சித்தன் போக்கு 7 o’clock என்று எழுதிப் போகின்றவன்

      நீக்கு
  10. அனைத்தும் அருமை சகோ, ஏன் அப்பப்ப,,,,,, இப்படி,
    சிவசம்போ,,,,
    வாழும் வரை இந்த பூமியே உனக்கு தான் வருந்தாதே என்கிறார் சகோ,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே சிவசம்போ இன்று கருத்துரையில் வந்துட்டாரே...

      நீக்கு
  11. நீங்கள் கூறியுள்ள 16யும் கடந்து விட்டால் நிச்சயம் பெரு வாழ்வுதான்...

    உங்கள் அளவு இல்லையென்றாலும் ஓரளவிற்கு...
    எப்போதோ என் எண்ணத்தில் தோன்றியது....

    http://rajasabai.blogspot.sg/2009/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் நண்பரே ஸூப்பர் மிகவும் இரசித்தேன்

      நீக்கு
  12. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக எழுதி இருக்கீங்க நண்பரே...
      தமிழ் மணத்தில் குட்டு வைக்காமல் கருத்துரையிட்ட குட்டன் அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  13. கில்லர்ஜீ பல மொழிகளில் பிளாக் எழுதுறீங்க போல....

    அரபி, இந்தி, கன்னடா, மலையாலத்தில் உங்கள் பெயரைப் பார்த்தேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே இதே தளத்தில் 2014 செப்டம்பரில் பாருங்கள் தலைப்பு My India By Devakottaiyan பாருங்கள்
      மேலும் எனது பெயரை கில்லர்ஜி என்று எழுதவும் இல்லையேல் தெய்வகுற்றம் ஆகி விடும்

      நீக்கு
  14. சூப்பர்! சூப்பர்! சகோ. அசத்தல் அட்டகாசம் இன்னும் என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  15. அபுதாபி பெருந்தூரம் என்கிறீர்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லறத்தை விட்டு இங்கிலாந்துக்கு போனாலும் இங்கிலாந்துக்கு குரங்குதானே...

      நீக்கு
  16. அபுதாபி --லிருந்து அழைக்கும் தங்களுக்கு நன்றி! நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைக்கவில்லை நண்பரே புதுக்கோட்டை போகச்சொல்கிறேன்...

      நீக்கு
  17. ஆஹா! இத்தனையும் உடைத்து வெற்றியாக்கும் உளியும் உன்னில் (உங்களில்) இருக்கிறது :)

    ஒன்றா..இரண்டா..ஐம்பது இலட்சம்!! :) பிரமாதம் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ...

      நீக்கு
  18. அருமையான பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான வரிகள் சகோ. ஏன் இடையிடையே சோகம்? தங்களுக்கு விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

      நீக்கு
  20. வணக்கம்
    ஜி
    அற்புதமாக யார்த்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் த.ம 14
    எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகத்துக்கு மீள் வருகை தரும் கவிஞர் ரூபனுக்கு வாழ்த்துகள்

      நீக்கு
  21. தத்துவங்கள் பாடத் தலையாட்டி மகிழ்ந்தேன்!
    வித்தகம் என்று மெச்சினேன்! ஆனாலிவை
    உத்தமம் இல்லை உணருவீர் சோதரரே!
    புத்தொளி வீசப் புரிந்திடுவீர் புதுமை!

    தத்துவம் பாடித் தன்னை அடக்குவது வேண்டாம்!
    வெற்றியோ தோல்வியோ வி(வ)ரைந்திடுங்கள் நீங்களும்!

    வாழ்த்துகிறேன் சகோ!

    த ம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் கருத்துரை மகிழ்சியான புத்துணர்ச்சி அளிக்கிறது இனியெனும் கவிதை எழுத முயல்-VAN

      நீக்கு
  22. முகாரி இராகத்தில் முத்திரைபதித்த உங்களின் முல்லைபூ பதிவை படித்தபோது..... இந்த பழைய பாடல் நினைவுக்கு வந்தது:- நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

    "எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகளே, இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே,
    மனிதகுலம் வாழ்வது இந்த தத்துவத்திலே
    அனுபவத்தில் எழுதிவைத்தார் புத்தகத்திலே
    பிள்ளைக்கென வாழ்திருக்கும் தாயினத்திலே
    பிறந்தவரில் நீ ஒருத்தி ஆயிரத்திலே ... http://youtu.be/Eevyz41fRRo

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே அருமையான தன்னம்பிக்கை பாடல் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நான் பல நேரங்களில் கேட்கும் பாடல், தங்களால் இது முகாரி ராகம் என அறிந்தேன் மிக்க நன்றி.

      நீக்கு
  23. வணக்கம் கில்லர் ஜி !

    புதிது புதிதாய் சிந்திக்குறீங்க வாழ்த்துக்கள் ஜி
    விழா சிறப்புற நடைபெற நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
    போட்டியாளர்களுக்கு இறையாசி கிடைத்து வெற்றி தமதாகட்டும் !

    வாழ்க வளமுடன் தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே நன்றி தொடர்ந்தால் சந்தோஷமே..

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே.

    கருவறையிலிருந்து கல்லறை வரை உள்ள சோகங்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் ஒரளவு ஒத்து வருவதுதான். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும், "எழுத்து குருதியாய் சுழன்று வருவது" அது தங்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அருமையாய் எழுதிய தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ரசித்துப் படித்தேன்.

    புதுக்கோட்டை பதிவர் விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரையை பதிந்தமைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  25. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். விரக்தியின் எல்லையில் இருக்கிறீர்களோ?மனம் தளர வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காரணம் அறியும்வரை வாழ்க்கை போராட்டமே சகோ.. வருகைக்கு நன்றி

      நீக்கு
  26. இதுதானே வாழ்க்கை கில்லர்ஜி இல்லையா! மனிதனாய் பிறந்த எல்லோருக்கும்....வரிகள் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  27. வாழ்க்கைப்பாடம் ...!!அசத்தல் அருமை.

    பதிலளிநீக்கு