தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 08, 2016

செல்லில் சொல்லிய வார்த்தை

பதிவுக்கும், புகைப்படத்துக்கும் சம்பந்தம் இல்லைங்கோ....

என்ன மூர்த்தி செல்போணையே முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்கே ?
வாடா.. ராமு வாங்கிய பணத்தை திருப்பி அனுப்பி வச்சது குற்றமாடா ?
குற்றம் இல்லையே யாருட்டே வாங்குனே எப்ப அனுப்புனே ?
போனமாதம் நடுத்தெரு நல்லமணிக்கிட்டே 500 ரூபாய் வாங்கி இருந்தேன் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கேன்னு அனுப்பி வச்சா.... நாக்கைப் பிடுங்கிகிட்டு சாகுறது மாதிரி வாட்ஸ்-அப்பில் எழுது விட்ருக்கான்டா...
அப்படி என்னடா எழுதுனான் ? சொல்லு...
வேண்டாம்டா வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.
சரிடா போணைக் கொடு நான் படிக்கிறேன்.
வேண்டாம் பார்த்துட்டு இதைப்போயி நீ உன்னோட ஃப்ரண்டு பகவான்ஜிட்டே சொல்லுவே அவரு இதை வச்சு 4 பதிவெழுதி என்னை நாறடிக்கவா ?
நான் நல்லமணிக்கு போண் போட்டு பணத்துக்காக நண்பன் மூர்த்தியை வேதனைப்படுத்திட்டியே உனக்கு அறிவு இருக்கா ? னு கேட்கிறேன்.
வேண்டாம் இப்பத்தான் சாமிநாதன் கேட்டான் அதுக்கு அவனை என்ன கேட்டான் தெரியுமா ?
என்ன கேட்டான் ?
......பீப்.......பீ.ப்.......பீப்.......
டேய் நிறுத்துடா.... நிறுத்துடா.... என்னடா இப்படிப் பேசியிருக்கான்.
ஆமாடா அவன் ரொம்ப மோசம்டா...
சரிடா அவனே கஞ்சப்பயல் பணத்தை திருப்பி கொடுத்ததுக்கு எதுக்கு திட்டுறான் ?
அதானே எனக்கும் புரியலை....
ஒருவேளை நேரில் வந்து கொடுக்கலைன்னு கோபப்பட்ருப்பான் சரி பணத்தை யாருக்கிட்டே கொடுத்து அனுப்புனே ?
யாருகிட்டேயும் கொடுக்கலைடா..
பின்னே... எப்படி ?
வேலையா இருக்கேன்னு வாட்ஸ்-அப்ல அனுப்பினேன்.
க்க்க்க்க்க்க் ப்’’தூ’’
மூர்த்தியை காறித்துப்பி விட்டு கிளம்பினான் ராமு.

16 கருத்துகள்:

 1. ஆகா
  இப்படியும் அனுப்பலாமா

  பதிலளிநீக்கு
 2. அடக்கஷ்டமே..
  பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலும் பிரச்னையா?..

  பதிலளிநீக்கு
 3. இப்ப இப்படித்தான் ஆயிருச்சு...
  ஹா... ஹா....

  பதிலளிநீக்கு
 4. கல்யாணப் பத்திரிகையை வாட்சப்பிலோ இ மெயிலிலோ அனுப்பறவங்களுக்கு மொய்யையும் அப்படியே அனுப்பிடலாமோனு நினைக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 5. நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் பதிவை காண வந்தேன் இரசித்தேன் ஐயா..எப்பவும் போல இன்றும் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 6. இப்படிப் பட்ட யோக்கியனைப் பற்றி தினமலர் வார இதழில் எழுதி நாறடித்து விட்டேனே !அது இதோ ...
  ''ஐந்நூறு ரூபாய் கொடுங்க ,நாலே நாளில் திருப்பித் தர்றேன் ,இல்லைன்னா பெயரை மாற்றிக் கொள்கிறேன்னு சொன்னவர் நாணயமா நடந்துகிட்டாரா ?''
  ''ஓ,பெயரை மாத்திக்கிட்டாரே !''

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  தொடர்க தோழர்
  தம +

  பதிலளிநீக்கு
 8. ரசித்தேன். சிரித்தேன். நண்பரே!
  த ம 7

  பதிலளிநீக்கு
 9. வாட்ஸாப் இதுக்கெல்லாம் கூட உபயோகமாகுமா

  பதிலளிநீக்கு
 10. வாங்கின பணத்தை வாட்சஆப்புல அனுப்புலாமுனு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்...

  பதிலளிநீக்கு
 11. ‘வாட்ஸ்அப்’பை கண்டதிற்கெல்லாம் பயன்படுத்துவதைப்பற்றி நையாண்டி செய்திருக்கிறீர்கள். இரசித்தேன்!

  பதிலளிநீக்கு