தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

சோழவந்தான், மாப்பிள்ளை ஆளவந்தான்செல்ஃபி மாப்ளே... என்னய்யா சோகமா இருக்கே ?
ஆமா மச்சான் மனசுல நினைக்கிறது எதுவுமே நடக்க மாட்டுது.
அப்படி என்னத்தை நினைச்சே ?
இந்த நாட்டுல நிறையப் பெரிய மனுசங்களோட செல்ஃபி எடுத்துட்டேன் இனிமேல் வெளிநாட்டு மனிதர்களோடு செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை வச்சு கண்காட்சி நடத்தி கின்னஸ் ரெக்கார்டு செய்யலாம்னு திட்டம் போட்டேன் பாஸ்போர்ட் சீக்கிரம் வராது போலயே...
அப்ப நீ உன்னோட வேலையை செய்யணும் எண்ணமே கிடையாது ?
நான் எதுக்கு வேலை செய்யணும் ? எங்க அப்பா சம்பாரிச்சு வச்சுட்டாருல... அதை செலவு செய்யவே நேரம் இல்லை.
உன்னைச் சொல்லி குற்றமில்லை சம்பாரிச்சு உன் கையில பணத்தை கொடுத்தாருல உங்க அப்பா(வி) அவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
லைஃப்ல என்ஜாய்மெண்ட் வேணும் மச்சான்.
ஏண்டா.... செல்ஃபி எடுத்துக்கிட்டே திரியிறது ஒரு பொழைப்பா ?
நாம வாழ்ந்ததுல ஒரு சாதனை இருக்கணும் மற்றவங்க யாரும் செய்யாததை நாம செய்து காட்டணும்.
இப்படியே செலவு செய்துகிட்டே திரிஞ்சே இன்னும் அஞ்சு வருஷத்துல உங்க அப்பாவை கடன்காரன் ஆக்கிடுவே அதான் நடக்கப் போகுது பாரு.
அதனால எனக்கென்ன ? நான் நினைத்ததை நடத்தணும் இதுதான் எனது கொள்கை.
சரி வெளிநாட்டுல யாரை போயி பார்த்து செல்ஃபி எடுக்க ஆசை ?
மெரிக்காவுல பராக் ஒபாமா,
ஸ்திரேலியாவுல மெக்கலம் டுர்ன்போல்,
ங்கிலாந்துல டேவிட் காமரூன்,
ராக்ல ஹைதர் அல் அபாதி,
காண்டாவுல ருஹகனா ருகுன்தா,
ஜிப்த்ல ஷெரீப் இஸ்மாயில்,
ஸ்லாந்த்ல கயர் ஹார்டெ,
மான்ல சையித் அல் சையித்,
டேய், நிறுத்துடா... நிறுத்துடா 247 நாட்டுக்கு போகணும் சொல்லுவே போல...
இவங்க எல்லோரையும் சந்தித்து செல்ஃபி எடுக்கணும் மச்சான்.
சரிதான் சுருக்கமா சொல்லணும்னா.... மோடியை ஓவர்டேக் பண்ணப்போறே... எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது மாப்ளே....
என்ன பழமொழி மச்சான் ?
ஊரான் விட்டே நெய்யே எம் பொண்டாட்டி கையேன்னானாம் எப்படியோ.. மோசடி செஞ்சு நல்லா வாழ்ந்து நாசமாப் போங்கடா.

சொல்லி விட்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போனார் ஆளவந்தானின் மச்சுவாடி, மச்சான் மச்சக்காளை.


உலகமெல்லாம் சுற்றி செல்பி எடுத்தாலும் இப்படி எடுக்க முடியுமா ?


மோடிஜி இப்படி எடுக்க முடியுமா ?
 
Video

18 கருத்துகள்:

 1. வணக்கம் ஜி !

  செல்பி மன்னன் கில்லர் ஜி வாழ்க !

  தம +1

  பதிலளிநீக்கு
 2. அது சரி, இப்போது நீங்கள் எங்கிருந்துகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 3. நீங்க சொல்ற மச்சான் யாருன்னு எல்லோருக்கும் தெரியும் !
  மோடிஜியை சவாலுக்கு அழைக்காதீங்க ,அடுத்த செல்பி ,இதை விட நல்லாயிருக்கணும்னு உத்தரவு போட்டுவிடப் போகிறார் :)
  வீடியோ ஓபனாக மாட்டேங்குது ஜி !

  பதிலளிநீக்கு
 4. செல்ஃபி ஆசையில் விபத்தில் இறந்தவர்கள் நினைவுக்கு வருகிறார்கள் மோடியுடன் போட்டியா நடக்காதுமச்சான்

  பதிலளிநீக்கு
 5. ஹஹஹஹ் இப்படி எல்லாம் எடுத்தாலும் மோடி மாதிரி எல்லாம் ஆகிட முடியாது....அப்படி ஒரு நினைப்போ?!!! இப்படித்தான் சிலர் கிளம்பிட்டாய்ங்க போல ஹஹ்ஹ

  பதிலளிநீக்கு
 6. என் கிட்டேயும் அன்ட்ராயிட் தொலைபேசி இருக்கு. ஆனாலும் இன்னிக்கு வரை செல்ஃபி ஆசை வரலை! பிழைச்சேன்! :)

  பதிலளிநீக்கு
 7. செல்பி மோகம் உண்மையில் அதிகமாய்த்தான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 8. செல்பி மோகம் எல்லோரையும் சீரழிக்கிது...
  எங்க கில்லர் அண்ணாச்சியையும் விடலை போல...

  பதிலளிநீக்கு
 9. இருக்கிறதை விட்டுட்டு பறக்கறது மேல ஆசையா?..

  வேற வேலை ஏதும் இல்லேன்னா.. அப்படியே காலார நடந்து போய் KRS - ல என்ன நிலவரம்..ன்னு எட்டிப் பார்த்துட்டு வரலாம்!..

  அங்கேயே செல்ப்பி..யும் எடுத்துக்கலாம்!..

  பதிலளிநீக்கு
 10. மோடியை ஓவர்டேக் செய்தமைக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. அடுத்து..மோ(ச)டி தங்களை மாதிரியே செஃல்பி எடுப்பார்..பாருங்களேன்..........

  பதிலளிநீக்கு
 12. செல்பியா? அப்டி ன்னா?என்ன!

  பதிலளிநீக்கு
 13. வலைத்தளம் பக்கம் வந்து கருத்துரைத்தால் ஊக்கமாய் இருக்கும் அல்லவா

  பதிலளிநீக்கு
 14. செல்ஃபிலாம் நல்லாத்தான் இருக்கு. செல்ஃபிக்காக டிரெஸ் போட்டுப்பார்க்கும் அறைக்குள் செல்கிறீர்கள் என்று தெரிந்தால் இனிமேல் கடையில் நுழைய விடமாட்டான்.

  பதிலளிநீக்கு
 15. என்று தணியும் செல்ஃபியின் மோகம்? என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
  காணொளியை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 16. செல்பி கிங் கில்லர்ஜி!!! மோடி அவர்களின் செல்பி சாதனையை இன்னொரு இந்தியானால் நிச்சயம் முறியடிக்க முடியாது.

  பதிலளிநீக்கு