தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

எல்லாம் நன்மைக்கே...


எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் என்று நினைக்கிறேன் நான் கட்டிக்கொள்ள வேண்டிய முறைப்பெண் இதற்கு மேல் ஊர், பெயர் விபரம் வேண்டாமே காரணம் இந்தப்பதிவுகூட நாளை இந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு இடையூறு வரலாம் அந்தப்பெண் மூக்கை வடித்துக் கொண்டு பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும் எல்லோரும் என்னிடம் நீ தான் இந்தப் புள்ளையை கல்யாணம் செய்துக்கிறணும் என்பார்கள் எனக்கு கோபம் வரும் சண்டை போடுவேன் இன்னும் ஞாபகம் இருக்கின்றது பலமுறை பிள்ளையார் கோயிலுக்கு சென்று பிள்ளையாரப்பா எனக்கு இந்தப் புள்ளையை கல்யாணம் செய்து வச்சிடாதே எந்த நேரமும் மூக்கை வடிச்சுக்கிட்டே இருக்கு எல்லோரும் எனக்கு கட்டி வைக்கப் போறதாக சொல்றாங்க இந்த ஆபத்திலிருந்து நீதான் என்னை காப்பாற்றணும் என்று வேண்டுவேன். 

எனது அப்பத்தா கேட்பார் நீ அடிக்கடி கோயிலுக்கு போறீயே... எதற்கு ? நான் சொல்வேன் எனக்கு அறிவு (?) நிறைய வளரணும்னு வேண்டிக்கிட்டேன் அன்றே நான் பொய் சொல்லப் பழகியதற்கு காரணம் நானா ? இந்த சமூகம்தானே... காலம் உருண்டோடியது சொந்தம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது ஊர் மாற்றங்கள் வேலை வாய்ப்புகள் நான் அப்பெண்ணை சுத்தமாக மறந்து விட்டேன் என்பதே நிதர்சனமான உண்மை காரணம் நான் கட்டிக்கொள்ளும் முறைப்பெண்கள் மட்டும் 17 பிறகு அப்படி இப்படி என்று ஒரு 10 இருக்கலாம் ஆனால் நடந்தது என்ன ?  

சம்பந்தமே இல்லாத சம்பந்தம், சம்பந்தம் இல்லாமலே வந்தது சம்பந்தம் சம்’’பந்தத்தை’’ கொடுத்து விட்டு சம்பந்தம் இல்லாமல் போய் விட்டது யாம் மீண்டும் சம்’’பந்தம்’’ ஆவோம் எமது இறுதி நாளில் சரி அது கிடக்கட்டும் கதைக்கு சம்பந்தம் இல்லாத விசயம் நாம் பதிவுக்குள் வருவோம்.

காலம் உருண்டோடி மீண்டும் அப்பெண்ணை சந்தித்தேன் உண்மையிலேயே நான் வியந்து மயங்கி மனம் வருந்தினேன் இதுவும் நிதர்சனமான உண்மை அப்சரஸ் என்றும், அழகி என்றும், அஜந்தா என்றும், தேவதை என்றும், ரம்பா, என்றும், ஊர்வசி என்றும், மேனகா காந்தி என்றும் சொல்வார்களே அதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணமாக தோன்றியது எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது தெரியுமா ? எனக்கு மணமுடித்து இரண்டு பொக்கிஷங்கள் பிறந்து என்னவள் மறைந்து இவ்வளவும் கடந்த பிறகு. விடுமுறையில் வரும் பொழுது அனைவரது வீடுகளுக்கும் ஒருமுறை மட்டுமே சென்று விடுவது வழக்கம் மீண்டும் செல்ல காலம் போதாது காரணம் சொந்தங்கள் அதிகம் ஒருமுறை இந்தியா வந்திருந்த பொழுது அந்த வீட்டுக்கு போனேன் உள்ளே அப்பெண் முதல் பிரசவம் ஆண் குழந்தை பெற்று ஒரு மாதமே ஆன நிலையில் பிறந்த வீட்டில் முதல் முறையாக கண்டேன் குழப்பமாகி, தர்ம சங்கடத்துடன் இது..... யார் ? எனக்கேட்டேன். 

யாரா ? தெரியலை இவதான் ................. பார்த்து பல வருஷம் ஆச்சுல..... அதான் 

எனக்குள் வியப்பு, குழப்பம், ஆச்சர்யம், கவலை, வேதனை, ஆத்திரம் யார் மீது ஆத்திரம் ? எனக்கே புரியவில்லை இப்பெண்ணையா ? நாம் பிள்ளையாரிடம் வேண்டாம் என்று அன்று வேண்டிக் கொண்டோம் நீண்ட நேரம் பேச்சு வராமல் மௌனமாகி விட்டேன் என்ன சொல்ல...  யாரிடம் சொல்ல ? குழந்தைக்கு அன்பளிப்பு பணத்தை கையில் திணித்து விட்டு வெளியேறினேன் ச்சே விதி என்று சொல்வார்களே அது உண்மைதானோ ? 

விதி ஊமையாகி விட்டதே நாம் இவ்வளவு காலம் கடந்து சந்தித்து இருக்கின்றோமே... இதற்கு அயல்தேச வாழ்க்கையும் ஒரு காரணம்தானே ? பணத்துக்கு ஆசைப்பட்டு பந்தத்தை இழந்து விட்டோமே நம்மைப்போல எத்தனை மனிதர்கள் இப்படி மனம் புழுங்கி வாழ்வார்கள் இவள் வாழ்க்கையைத் தொடங்கும் பொழுது நமக்கு எல்லாமே முடிந்து விட்டதே நமக்கு எல்லாமே விரைவில் முடிந்து விட்டதே இன்னும் ஒன்றுதான் பாக்கி நாம் விரும்பாத வாழ்க்கையை நமக்குள் திணித்து விட்டது என்னை புரியாத ஆறறிவு (?) மனிதர்களா ? அல்லது பிள்ளையார் போன்ற இடைப்பட்டவர்களா ? 

சட்டென ‘’அந்த’’ பிள்ளையாரின் நினைவு வந்தது அவரைப் பார்த்து திட்டி விட்டு வந்தால் மனப்பாரம் குறையும் போல் தோன்றியது அவரும் இதே ஊரில்தானே இருக்கின்றார் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு உடனே அதே பிள்ளையாரை காணப் போனேன் நுழைவாயிலில் ஒரு பெரியவர் நேர்த்திக்கடனுக்கு லஞ்சமாக ஒரு தேங்காயை உடைத்து விட்டு பிள்ளையாருக்கு ஆன்மீக இரு கை சல்யூட் வைத்து விட்டு சென்றார் வாசலில் பண்டைகால மளிகைக் கடையில் இருப்பது போல மரத்தில் அடுக்குப் பெட்டிகள் டோக்கன் பெற்று செருப்புகள் அதனுள் சிறை வைக்கப்பட்டது, அன்று நான் கயிற்றைப் பிடித்து இழுத்த அடித்த கோயில் மணி தொங்கவில்லை எலட்ரானிக் செட்டிங் ஸிஸ்டத்தில் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்தது, தூண்களில் கருப்பு அழுக்குகளோடு விபூதியும், குங்குமமும் இல்லை டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்தது, தடுப்புக்கம்பிகள் இருந்தது, டியூப் லைட்கள் அதன் மையத்தில் இறை பயம் இல்லாத மனிதர்கள் உபயம் திரு. இன்னாரு மகன் மன்னாரு என்று வைத்திருந்தார்கள் உண்டியல் வெகு உறுதியாக ஸ்டீல் பாக்ஸில் இருந்தது, அதன் கீழிலும் உபயம் மாவுடியான் வெல்டிங் ஒர்க்ஸ் என்று எழுதி இருந்தது, ஐயரின் தலையில் குடுமி இல்லை இடுப்பில் சாம்ஸாங் செல்பேசி சொருகி இருந்தது ஆனால் பிள்ளையார் கொஞ்சமும் மாற்றமின்றி அதே அழுக்குத் துண்டை இடுப்பில் கட்டி இருந்தார் நான் பிள்ளையாரைக் கண்டதும் பிள்ளையார் என்னிடம் சொல்வது போல் ஒரு அசிரீரி குரல் ஒலிப்பது போன்ற உணர்வு 

பீடை பிடித்த உன்னை அவள் மணந்திருந்தால் அவளது இன்றைய நிலையென்ன ? 

செவிட்டில் அறைவது போலிருந்தது எனக்கு உடல் சிலிர்க்க சட்டென என்னுள் எண்ணம் மாறியது உண்மைதான் அவள் நீண்ட தீர்க்காயுசுடன் சுமங்கலியாய் எல்லா வளமும், நலனும் பெற்று பல்லாண்டு காலம் வாழட்டும் பிள்ளையாருக்கு நன்றி உரைத்து அவருக்கு கொடுக்க வேண்டிய லஞ்சத்தை உறுதியான ஸ்டீல் பாக்ஸில் போட்டு விட்டு எல்லாம் நன்மைக்கே என்ற பெரியோர் வாக்கு உண்மைதானோ என்ற சிந்தையுடன் கோயிலை விட்டு வெளியேறினேன்.

44 கருத்துகள்:

  1. காரணங்கள் இன்றி காரியம் இல்லை. எல்லாம் நன்மைக்கே!

    பதிலளிநீக்கு
  2. பலபேரின் வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கிறது. இதுவும் விதியின் விளையாட்டோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எல்லாம் உலக மேலாளாரின் திட்டமிட்டபடியே நடக்கின்றது

      நீக்கு
  3. எல்லாம் நன்மைக்கே..... எதுவும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை.....

    கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்வோம்!

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  4. மனதை உருக வைத்த பதிவு!

    நேரில் வந்து சந்தித்தீர் நன்றி ஓர் உதவி!தாங்கள் தாயகம் திரும்பும்
    போது கொசு பிடிக்கும் பேட் இரண்டு (முடிந்தால்) வாங்கி வாருங்கள்!உரிய தொகையை நேரில் தருகிறேன்!தொல்லைக்கு மன்னிக்க!
    இயாலாவிட்டாலும் பரவாயில்லை!தவறாக நினைக்க மாட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா முயல்கிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. ஒவ்வொருவருவர் வாழ்விலும் இப்படிப்பட்ட நினைவுகள் சில தங்கி இருக்கின்றன எனத் தோன்றுகிறது.
    தொடர்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் ஜி! நாம் நினைப்பது நடப்பதில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சில சமயம் மனம் யதார்த்ததை ஏற்கவும் மறுக்கிறதுதான். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறதுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பலருடைய நிலையும் இப்படித்தான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. நிணைப்பதெல்லாம் நடந்துவிட்டால....பாடல்தான் நிணைவுக்கு வருகிறது நண்பரே..!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்க்கை அவர்கள் விருப்பப்படி அமையாதா ஐயா? திடீரென்று ஒரு நாள் விழிக்கிறோம் இன்னார்க்கு பிள்ளையாக இன்ன ஊரில் வசிக்கிறோம், தொடக்கமே நமதில்லாதபோது எப்படி தொடர்ந்து வருவதை நம்மால் தீர்மானிக்க முடியும் அல்லது நம்மை எப்படி குறை கூற முடியும். "பீடை பிடித்த உன்னை" இந்த வரிகளை ஏற்று கொள்ள முடியவில்லை. வாழ்க்கையின் இறுதியில் மட்டுமே அனைத்திற்க்கும் விடை கிடைக்கும். ராதா ரவி அவர்கள் சொல்வது போல "கூட்டி கழித்து பார்த்தா கணக்கு tally ஆகிடும்" ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. சோமேஸ்வரன் அவர்களை வரவேற்கிறேன்
      விரிவான கருத்துரை நண்பரே பீடை பிடித்தவன் என்பது என்னை மட்டுமே குறிக்கும் சொல் பொதுவுக்குள் வராது நண்பரே

      நீக்கு
    2. ஐயா தவறேதுமிருப்பின் பொருத்தருளுங்கள். நான் மற்றவர்களை குறிக்கும் சொல்லாக அதை எண்ணவில்லை, நீங்கள் உங்களையே திட்டிக்கொள்ள அவசியமில்லை என்பதையே கூற விரும்பினேன். பயணத்தில் தொடர்ந்து வருகிறேன்.

      நீக்கு
    3. நான் புரிந்து கொண்டேன் நண்பரே நான் என்னை எப்பொழுதுமே ராசி இல்லாதவனாக நினைக்கின்றேன் மீள்வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. நடந்ததை நினைத்து வருத்தப் பட்டால் அவன் .....
    ஆஹா ,வருவது வரட்டும்.. என்று துணிவுடன் இருங்க நண்பரே !

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் அதே கணக்கு தான்.. ஆனால் பழைய கணக்கு!..

    யாருக்கும் எளிதில் புரிவதில்லை.. புரிவதேயில்லை!..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஜி புரியும் பொழுது முடிந்து விடும்

      நீக்கு
  11. இந்தப் பதிவு பல உணர்வுகளைத் தூண்டிவிட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அதுவும் ஆரம்பத்தில் உள்ள பிள்ளையார் படம் அருமை. (யாரோ.. கலை உணர்வோடு செய்துள்ளார்கள்).

    எனக்கு இதைத் தா, இது வேண்டாம் என்று வேண்டுவதை வெகுகாலத்துக்கு முன்பே விட்டுவிட்டேன். அப்படி வேண்டுவது தவறு. நமக்கு எது நல்லது என்று நமக்கு நிச்சயமாகத் தெரியாது என்று நான் நம்புகிறேன். நாம் 'ரதி' என்று எண்ணுகின்ற, மிக அழகிய, காண்பவர்களை எல்லாம் ஆச்சரியப்படுத்திய (இது நாகரிக வார்த்தை) பெண்கள், அதை ரசிக்கும் போற்றும் மன நிலை இல்லாதவரிடம் வாழ்வது, கஷ்டப்படுவது (அழகி படம் ஞாபகம் வருதா).. இதெல்லாம், சிம்பிளா.. அவன் விளையாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. பெயரில்லா9/26/2016 1:17 PM

    மிகவும் உருக்கமான பதிவு.
    எல்லாம் நன்மைக்கே என்பதை நானும் பாவிப்பேன் சகோதரா.
    நன்று.

    பதிலளிநீக்கு
  13. கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும்! ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாது என்பார்கள்!

    பதிலளிநீக்கு
  14. 'எல்லாம் நன்மைக்கே'
    இது
    சிந்தனை செய்யத் தூண்டும்
    இரு சொல்கள் ஆயிற்றே!
    எதுவாயினும்
    சிந்தித்துப் வெற்றி காண்போம்!

    பதிலளிநீக்கு
  15. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி விட்டானே அன்று

    பதிலளிநீக்கு
  16. கடவுள் போடும் கணக்கு வேறுதான் நண்பரே! போன் செய்து விசாரித்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. ninaippadellam nadanthu vittal deivam yedumillai..
    nadanthathaiye ninaithirunthal... ji

    பதிலளிநீக்கு
  18. எல்லாம் அவன் செயல்...தலையில் எழுதியதை யாரரிவார்....
    தம 9

    பதிலளிநீக்கு
  19. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. எனவே தாங்கள் பதிவின் தலைப்பில் சொல்லியுள்ளது போல் எல்லாம் நன்மைக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  20. எல்லோருக்கும் நினைப்பது நடப்பதில்லை. கிடைத்ததை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ பழகி கொள்வோம். சகோ நலமா? நீங்க அபுதாபிக்கு சென்று விடீர்களா? நங்கள் நேற்று தான் இந்தியாவுக்கு வந்தோம். இனி உங்கள் பதிவுகளை தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமே... அபுதாபி வந்து விட்டேன் வருகைக்கு நன்றி

      நீக்கு