4 வயது மகளிடம் கடந்த இரண்டு தினமாகவே வெறுப்புடன்
பேசினான் அரவிந்தன் இத்தனை நாள் கொஞ்சிக் கொண்டு இருந்த அப்பா திடீரென்று ஏன்
கோபப்படுகிறார் ? என்பது புரியாமல் விழித்துக் கொண்டு முகம் வாடி
இருந்தாள் ஸ்வேதிகா அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்ள நீ அப்பா கிட்டே போகாதடா
செல்லம் அவரு இப்படித்தான் உனக்கு நான் இருக்கேன்டா கவலைப்படாதே என்று ஆறுதல்
சொன்னாள் மலர்விழி. கடந்த ஒரு மாதமாக ஒட்டிக்கொண்டே திரிந்த மகள் நாம் போனவுடன்
முகம் வாடி விடக்கூடாதே என்பதற்காக கடைசி இரண்டு நாளில் வெறுப்பது போல் நடந்து
கொண்டது பாவம் ஸ்வேதிவுக்கு எப்படி புரியும் ? விடுமுறை முடிந்து மீண்டும்
துபாய் புறப்பட்ட கணவன் குழந்தைக்கு சந்தோசமாக டாடா சொல்ல முடியாமல் போய் விட்டதே
என்று வருந்துவது மலர்விழிக்கு மட்டும்தானே தெரியும்.
* * * * * * * * * * * 01 * * * * * * * * *
*
சுந்தரம்
சட்டீரென கன்னத்தில் அறைந்ததும் ’’அம்மா’’ என்று
அலறி கீழே விழுந்தாள் மல்லிகா சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த அவனின் அம்மா
ஏன்டா முரட்டுப்பயலே வாயும், வயிறுமா இருக்கிறவளை இப்படிப் போட்டு அடிக்கிறியடா
உனக்கு அறிவு இருக்கா ? அதுக்காக
என்னை வேலைக்குப் போகச் சொல்றா வேலைக்குப் போயி சாப்பிடுற அளவுக்கு நாம என்ன இவளுக
குடும்பத்தைப் போல பிச்சைக்காரங்களா ? ஏன்டா தண்டச்சோறு ஒரு
குழந்தைக்கு தகப்பனாகிட்டே இன்னும் அப்பன் சம்பாத்தியத்துல உட்கார்ந்து
சாப்பிடுறியே உனக்கு அறிவு இருக்கா ? என்ற
அம்மாவை இல்லாததை எத்தனை தடவை கேட்பே ? என்று சொல்லி சட்டீரென்று
விட்டான் சுந்தரம் ‘’அம்மா’’ என்று
அலறி கீழே விழுந்தாள் அம்மா ’’கட் கட்’’ என்று
டைரக்டர் சொல்லவும் கீழே கிடந்த மல்லிகாவும், அம்மாவும் எழுந்தார்கள்.
* * * * * * * * * * * 02 * * * * * * * * *
*
டெல்லிக்கு
அவசரமாக கிளம்புறீங்களே... அவ்வளவு முக்கியமான விசயமா ? என்று கேட்டதும் ‘’தூ’’ என்று
வாயிலிருந்த வெற்றிலையை துப்பிய அமைச்சர் விஜயகுமார் ஏன்டி வெளங்காமட்டை உனக்கு
எத்தனை தடவைதான்டி சொல்றது ? ஊருக்கு
கிளம்பும்போது குறுக்கு கேள்வி கேட்காதேன்னு என்று சொல்லி விட்டு மீண்டும்
வெற்றிலையை எடுத்து வாய்க்குள் ஒதுக்கி சுவைத்தவரை ஏங்க நானும் எத்தனை தடவை
கேட்கிறேன் என்னையும் ஒருதடவை டெல்லிக்கு கூட்டிக்கிட்டுப் போயி அந்தப்
பாராளுமன்றத்து நாற்காலியில் உட்கார வைக்க மாட்டீங்களா ? அவசரமாக வந்த அவரது பி.ஏ. டெலிக்ராமை படித்து
சொன்னான் உங்களது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது டெல்லி வரவேண்டாம் மனைவி பூங்கோதையை
பார்த்து ‘’தூ’’ என்று வாயிலிருந்த
வெற்றிலையை துப்பினார் முன்னாள் அமைச்சர் விஜயகுமார்.
* * * * * * * * * * * 03 * * * * * * * * *
*
கல்யாண
வீட்டில் நாதஸ்வரம் ஊதிய வித்வான் நாகேஸ்வரனை அடித்து விட்டதாக ஒரே பரபரப்பு நாங்க
இனி நாதஸ்வரம் வாசிக்க மாட்டோம் தாலி கட்டும் நேரத்தில் இப்படி தகராறு செய்து
விட்டாங்களே... என்று பதறியடித்து சமாதனப்படுத்த முயன்றனர் திருமணத்துக்கு
வந்திருந்த பெரியவர்கள் நாதஸ்வரக்கார கோஷ்டிகளிடம் மன்னிப்பு கேட்டு தயவு செய்து
தாலி கட்டு முடியட்டும் பிறகு பேசித் தீர்மானிப்போம் என்று கேட்டுக் கொண்டதற்கு
இணங்க நாதம் முழங்க திருமணம் இனிதே நடைபெற்றவுடன் நாதஸை அடித்தவனை தேடியதில் அது
டாஸ்மாக்கில் மூழ்கி சாப்பாட்டுக் கூடத்தின் பாத்திரம் கழுவிமிடத்தில் கவிழ்ந்து
கிடக்க ஏன்டா இவரை அடிச்சே ? இவரு
அசிங்கமா வாசிச்சாரு... நல்லாத்தானே வாசிச்சாரு ? இல்லை ‘’பீப் பீப் பீப்’’ அப்படின்னு
அசிங்கமா வாசிச்சாரு... கல்யாண வீட்ல இப்படி வாசிக்கலாமா ?
* * * * * * * * * * * 04 * * * * * * * * *
*
அனைத்தும் அருமை
பதிலளிநீக்குமிகக் குறிப்பாக பீப்பீ
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் உடனடி வருகைக்கு நன்றி
நீக்குவித்தியாசமான முயற்சியை ரசித்தேன்.
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குஅருமை நண்பரே.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்தும் அருமை நண்பரே
பதிலளிநீக்குதம +1
வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குநகைச்சுவை அனைத்தும் அருமை சகோ.
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநான்கு கதைகளையும் சொன்ன விதம் அருமை. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குவித்தியாசமான முயற்சி. நான்கும் நான்கு குட்டிக்கதைகள்.
பதிலளிநீக்குநன்றி சகோ வருகைக்கு.
நீக்குநாலும் நாலு விதமாக இருந்ச்சி...நண்பரே....
பதிலளிநீக்குநல்லது நண்பரே நன்றி
நீக்குஅது ஏன் நாலு பேரு நாலுவிதமாதான் பேசுவாங்களா எனக்கு தெரிஞ்சி நாலு பேரு நாப்பது விதமாக பேசுகின்றார்கள்
பதிலளிநீக்குவருக நண்பரே இது பேசுவதைக் குறித்து அல்ல...
நீக்குநாலு பேரின் குணம் மாற்றம் வருகைக்கு நன்றி
i pity the ministers wife
பதிலளிநீக்குon both the occasions she was only snubbed by the minister.......and not the otherrway around
வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குநாலுவிதக் குட்டிக்கதைகள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஐயாவின் வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஅதானே ,மங்களகரமான நேரத்தில் பீப் பாடலா ? கண்டித்த அவனை எழுப்பி இன்னொரு full வாங்கிக் கொடுக்கலாம் :)
பதிலளிநீக்குவாங்க ஜி அவனை ''ஃபுல்லா'' கவனிச்சிட்டாங்களாம்.
நீக்குநான்கு விதமான சிறுகதைகள் படிக்க சுவாரஸ்யம்! எழுத்து நடை அருமை!
பதிலளிநீக்குவாங்க சகோ தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி நல்ல எழுத்தாளர் தெரியும். அவர் எப்ப இயக்குனரா மாறினார்..? வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குஅப்படியே நம்ம வலைப்பக்கம் ஒரு முறை வந்துட்டுப் போங்க..!
வருக கவிஞரே அப்படியெல்லாம் மாறி உங்களை கொல்லமாட்டேன்.
நீக்குவந்தேன் கவிஞரே சிலம்பு தெறித்து முகத்தில் அடிக்க பதறி வந்தேன்.
சூப்பர்...
பதிலளிநீக்குநாலாவது நச்....
வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குரொம்ப நாளைக்கு பிறகு இந்த பக்கம்
பதிலளிநீக்குவந்ததில் மகிழ்ச்சி நண்பரே....
தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி நண்பரே
நீக்குநாலு ஆளு நாலு விதம்
பதிலளிநீக்குநாலு ஆளும் அறிந்திட
நன்றே பகிர்ந்தீர்
வருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குநாதஸ் வாசித்தாலும் குற்றம்.. வாசிக்காவிட்டாலும் குற்றம் என்றான நிலைமை - இனி வருங்காலங்களில் -
பதிலளிநீக்குகுடித்தாலும் குற்றம்.. குடிக்காவிட்டாலும் குற்றம் என்று ஆகிவிடப் போகின்றது..
என்னமோ..போங்க!.. நாம தான் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்!..
வாங்க ஜி உண்மையில் அப்படி வரலாம் கல்லூரிகளில் சிகரெட் பிடிக்காத ஆண்களை பெண்கள் பார்ப்பகில்லையாம் இது இன்றைய உண்மை நிலை.
நீக்குஅருமை ஐயா.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குநாலு பேர் நாலு விதம்! :) ரசித்தேன்.
பதிலளிநீக்குஇரசிப்புக்கு நன்றி ஜி
நீக்குநாலு பேர் நாலுவிதமா பேசுறதையும் ரசித்தோம். அதிலும் பீப் பீப் ரொம்பவே ஹஹ்ஹஹ..நான்கு குட்டிக் கதைகள் செம...
பதிலளிநீக்குவருக தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்கு