தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 05, 2016

இரத்தபாசம்

  
மனிதாபிமானம் இல்லை என்கின்றோமே... மேலேயுள்ள செய்தியை பார்த்தீர்களா ? ஒருக்கால் பெற்றவளுக்கு தெரியாமல் மற்றவர்கள் இந்த வேலையை செய்திருக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம் இப்படி முட்புதருக்குள் இட்டுச்செல்ல வேண்டிய அவசியமென்ன ? இக்குழந்தை செய்த பாவம்தான் என்ன ? குப்பைத் தொட்டிக்கு பக்கத்தில் குழந்தையை வைத்து விட்டு செல்கின்றார்களே... அவர்கள் இவர்களைவிட உயர்ந்தவர்கள் என்றே தோன்றுகிறது எத்தனையோ செல்வந்தர்கள் குழந்தைகளுக்காக வேண்டுகின்றார்கள் இப்படியும் நிலைப்பாடு.

ஆத்திகரிடம் கேட்டால் ? கடந்த ஜென்மத்து பாவம் இக்குழந்தை பிறந்தவுடன் கஷ்டப்படுகின்றது என்பர், நாத்திகரிடம் கேட்டால் ? ஒழுக்கமற்ற ஜென்மங்களால் இக்குழந்தை கஷ்டப்படுகின்றது என்பர், எம்மிடம் கேட்டால் ? சமூகமே காரணம் என்பேன் ஆம் பண்டைகால வாழ்க்கை முறைகளை மறந்து புதுமை, புண்ணாக்கு, சித்தாந்தம் என்று பேசி நவீன விஞ்ஞான மோகத்தில் வீழ்ந்து திளைத்து மூழ்கி விட்டோம் இதை விட்டு இனி வெளியேறி விடமுடியாது.

விஞ்ஞான வளர்ச்சியே இன்று வயதுப்பெண்களை நள்ளிரவில் ஊர் சுற்ற வைத்து விட்டது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளிகள் அதிகமாகி விட்டது அதன் பலனாக பல வகைகளில் பெண்களுக்கு இடையூறுகள், சிலர் வரம்பு மீற பயப்படுகின்றார், பலர் வரம்பு மீறியதை மீறியதாகவே நினைக்கவில்ல அதாவது திருடர்களில் பலருக்கும் தான் செய்வது தவறு என்றே தோன்றாதவாறு தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போவது போல... நம்மில் பலரும் பேசித்தீர்க்காமல், தீர்ந்த பிறகு பேசுவதற்கு ஆயத்தமாகின்றோம். இந்நிலை இனி இதைவிட மோசமாக நிகழும் பொழுது திருமண பந்தம் என்ற சடங்கு முறைகள் அழிந்து விடும் பிடித்தவர், பிடித்தவருடன் வாழலாம், குழந்தை பெற்றால் ? ஆஸ்ரமத்தில் சேர்த்து விடலாம் பிடிக்கா விட்டால் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். பந்தபாசம் முற்றிலுமாக குறைந்து விட்டது காரணம் இன்றைய தலைமுறைகள் சகோதர, சகோதரிகளுடன் பிறந்து வளரவில்லை எல்லோருமே தனியொருவனாக. தனியொருவளாக பிறந்து வாழ்கின்றார்கள். ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் மோகப்பொருளாகவே உணரத்தொடங்கி விட்டார்கள்.

இதற்கு இன்றைய ஊடகங்கள் நிறைய உதவுகின்றன. பண்டைகால மனிதனின் தவறுகளை தட்டிக்கேட்க தாத்தா, அப்பத்தா இருந்தார்கள், பெரியப்பா, பெரியம்மா இருந்தார்கள், சித்தப்பா, சின்னம்மாள் இருந்தார்கள், அண்ணன், அண்ணி இருந்தார்கள், அக்கா, அத்தான் இருந்தார்கள், தாய்மாமன், அத்தை இருந்தார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர் இருந்தார், இதற்கும் மேலாக இறைவன் தண்டிப்பான் என்ற இறை பயமும் இருந்தது இன்று ?
நானே ராஜா, நானே மந்திரி எனக்கு எல்லாம் தெரியும் காரணம் நான் படித்தவன் உலக நடப்புகள் அனைத்தும் அறிந்தவன்.

பத்துமாதம் சுமந்து பிரசவ மரணவேதனையை அனுபவித்து பெற்றால் ? அந்த ரத்தபாசம் வளரும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால் மருத்துவர்களுக்கு வருமானம் வேண்டும் என்ற சூழலால் எல்லோருமே இன்று சிசேரியன் முறைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் மயங்கி விழித்தவுடன் அறுவை சிகிச்சை முலம் வெளியேற்றிய சிசு யாருக்குத் தெரியும் ? இது இவளது குழந்தைதான் என்பது அந்த மருத்துவருக்கும், சில செவிலியர்களுக்கு மட்டுமே தெரியும் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைய வாய்ப்பு உண்டு இப்படி வளரும் குழந்தை மீதி பாசம் எப்படி இருக்கும் ? அந்தக் குழந்தைக்குத்தான் தாய்ப்பாசம் எப்படி இருக்கும் ? முதியோர் இல்லங்களின் பெருக்கத்திற்கு அடித்தளம் இங்குதான் ஆரம்பமாகின்றது பத்திரிக்கைகளில் எங்கு பார்த்தாலும் மாதத்திற்கு ஒருமுறை காணலாம் கள்ளக்காதலனுடன் சேர்ந்த போது ஐந்து வயது மகன் பார்த்து விட்டதால் கிணற்றில் வீசிக்கொலை கள்ளக்காதலர்கள் பிடிபட்டனர்.

இந்தக் கள்ளக்காதல்கள் பிறப்பதற்கு டாஸ்மாக்கும் ஒரு காரணமே இவன் சரியெனில் அவளும் சரியே இதுதானே உண்மை.

செய்தி ஆதாரம் 22.07.2016 தேதி துபாய் தினத்தந்தி.

19 கருத்துகள்:

 1. 'நியாயமான கோபம். இதேபோன்ற சம்பவம் 89ல் மேட்டூரில் நடந்தது. குழந்தை, கல், முள் இவற்றால் தீண்டப்பட்டு இரத்த காயங்களோடு இருந்ததாம் அங்கு வேலைபார்த்த ஒருவர் (அவருக்குக் குழந்தை இல்லை) அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாக எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அந்தக் காலகட்டத்தில் என்னால் நம்பவே முடியவில்லை. உங்கள் ஆதங்கம் நியாயமானது.

  பதிலளிநீக்கு
 2. கலிகாலம். அநியாயம் செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 3. போன பதிவில் நீங்கள் போட்ட காணொளி இதற்கும் பொருந்தும் ..உன்னை சொல்லிக் குற்றமில்லை ....:)

  பதிலளிநீக்கு
 4. மனிதனின் முதல் தேவை...இரக்க குணம். அது குறையக் குறை பழையபடி மனிதன் ஆதி மனிதனாக மாறி வருகிறான்.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் ஆதங்கம் புரிகிறது. கேட்டால் சமஉரிமை என்று கூப்பாடு போட்டு கூட்டத்தை கூட்டிவிடுகிறார்கள். காலம் கலிகாலமாச்சே

  பதிலளிநீக்கு
 6. காலம் செய்த கோலம்தான் ..இந்த கோலத்திற்கு மேன் மக்களும் காரணம்தான்...

  பதிலளிநீக்கு
 7. இவற்றைக் கேட்கும்பொழுது வேதனையாக இருக்கிறது. கல் நெஞ்சம்1!!

  பதிலளிநீக்கு
 8. ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை சகோ...மனம் வலிக்கும் உண்மை.

  பதிலளிநீக்கு
 9. தொட்டில் குழந்தை திட்டம் என்னவாயிற்று? தொட்டில் எல்லாம் திருடிக்கொண்டு போய் விட்டார்களா?
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 10. சத்தமாக சொல்லி விடாதீர்கள்..

  யாராவது - கூட்டங்கூட்டிக் கொண்டு உரிமை.. அது இது.. என்று கூச்சலுடன் வந்து விடப் போகின்றார்கள்...

  மிருகங்கள் கூட இவ்வாறு நடந்து கொள்வதில்லை..

  பதிலளிநீக்கு
 11. மனிதர்களிடம் கருணை மட்டுமல்ல, மனசாட்சியும் இறந்து ரொம்ப‌ நாட்ளாகின்றன என்பதையே இந்த செய்து உணர்த்துகிறது!

  பதிலளிநீக்கு
 12. வேதனையான நிகழ்வு ஜி! எங்கள் தளத்தில் கூட இது போன்று தொட்டியில் கிடந்த பெண் குழந்தையைக் காப்பாற்றிய அனுபவம் எழுதியுள்ளோம் ஜி...

  பதிலளிநீக்கு
 13. ஹூம்! வேதனை தான். தட்டிக் கேட்பவர்களை இன்று பொல்லாதவர்களாகப் பெற்றோரே முத்திரை குத்துகின்றனர். பெண்ணோ, ஆணோ சரியில்லை எனில் பெற்றோரிடம் கூடச் சொல்லிக் கண்டித்து வைக்குமாறு சொல்ல முடியலை! எங்கள் குழந்தையைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பார்கள். :(

  பதிலளிநீக்கு
 14. என்ன பிரச்சனை என்றால் தவறு எங்கே என்று தெரிகிறதுஎங்கு எப்படித் திருத்துவது என்பதே தெரியாதது.

  பதிலளிநீக்கு
 15. எனக்கோ குழந்தைகள் இல்லை
  வீசுகின்ற குழந்தையை
  என்னிடம் கொடுத்திருந்தால்
  நான் வளர்த்து
  நல்ல அறிஞர் ஆக்கி இருப்பேனே!

  பதிலளிநீக்கு
 16. பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் முட்புதரில் வீசி சென்ற அவள் தாயல்ல.

  மனதை உருக்கிய தகவல்.

  பதிலளிநீக்கு