தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 19, 2016

டாஸ்மாக் கடையில், 7 ½ கள்01. மாப்ளே ஓங்கணக்குல ஒரு க்வாட்டர் சொல்லேன்.
டேய் ஏற்கனவே குடிச்சதும் ஏங்கணக்குதான்டா.
என்ன, மாப்ளே அதுக்குள்ளே போதை ஏறிடுச்சா ? நாந்தானடா காசு கொடுத்தேன்.
டேய் போனவாரம் கொடுத்ததை இன்னும் ஞாபகம் வச்சுருக்கே..
டேய் எம்பொண்டாட்டி சொர்ணா மேல சத்தியம் நாந்தான்டா கொடுத்தேன்.
ஏன்டா, பொண்டாட்டி பேரையே சொர்ணா’’னு மாத்திச் சொல்றே ?
டேய் குடிகார மட்டைகளா... சத்தமில்லாம குடிக்கிறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

02. செல்லத்தொரை நாம ரெண்டு பேரும் பார்ட்னர் போட்டுக்கிருவோமா ?
ஏன்டா, கஞ்சிக்கு வழியில்லாத நாயி... யேங்கூட சோடி போட்டு தண்ணியடிக்கிற அளவுக்கு வளந்துட்டியா ?
டேய் யாரைப்பாத்து சொல்றே ? நாங்கள்லாம் கஞ்சியில நெய் விட்டு குடிக்கிறவங்கே...
கஞ்சா அடிக்கிற முண்டமே நெய் எப்டி இருக்கும்னு தெரியுமாடா ?
டேய் நொண்ணைகளா... சத்தமில்லாம குடிக்கிறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

03. டேய் மொக்கை ய்யேன் மொதலாளி என்னை சக்கையாப் புழிஞ்சிட்டு சம்பளம் கேட்டா... நாக்கைப் புடுங்கி கிட்டு சாகுறமாறி பேசுறான்டா...
இப்ப சொல்லுடா, தூக்கிடுவோமா ? யெனக்கு ஒரு பெக்கை ஊத்து மாமு.
இன்னைக்கு பொதன்கெழமை வேணாமுடா நாளைக்கி வெள்ளிக்கெழமை அவனைத் தூக்குறோம்டா...
டேய் கொங்காப் பயல்களா... சத்தமில்லாம குடிக்கிறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

04. மச்சி நான் கொடுத்த லட்டரை அவ கிழிச்சு மூஞ்சியிலே வீசிட்டாடா..
அவளை முட்டையிலே ஆசிட் வச்சி அடிச்சிடுவோமா... சொல்றா ?
மொதல்ல ஒரு முட்டே ஆம்லெட் சொல்லு மச்சி.
தம்பி ஒரு ஆம்லெட் போடுப்பா.... காசு நாளைக்கி தர்றேன்.
டேய் கூமுட்டைகளா... எந்திரிச்சு போறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

05. டேய் சோமா எம்பொண்டாட்டி இப்படிப் துரோகம் பண்ணிட்டாளேடா ?
வெவரத்தை சொல்லுடா... நான் இருக்கேன் எவன்டா அவன் ?
பாட்லுக்கு நீ செலவு செய்யிற மாதிரிப் போயிருச்சேடா ?
அதுனால என்ன, நீ ஒம்பொண்டாட்டி பண்ணுனதை சொல்றா ?
நேத்துதான்டா சம்பளம் வேங்கியாந்தேன், வீட்ல வச்சுருந்தா நீ குடிச்சே அழிச்சிடுவேன்னு மொத்த ரூவாய்க்கும் அரிசி மூடைய வாங்கியாந்து போட்டுட்டாளேடா....
விட்றா இந்தப் பொண்டாட்டிகளே இப்டித்தான்டா...
இல்லடா நான் வீட்டுக்கு போகமாட்டேன் இங்கியே படுத்துக்கிருவேன்.
டேய் வெண்ணைகளா... எந்திரிச்சு போறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

06. கவாலி பாட்லுக்கு ரூவா கொடுடா...
டேய் நானே சவாரி கெடைக்காம காண்டாகி வந்துருக்கேன் நீதானா கொடுடா நான் நாளை பாத்துக்கிறேன்.
சரிடா தம்பி ஒரு ஆப்பு எடுத்துவாப்பா.
ஒனக்கு சவாரி எப்டி இன்னைக்கு ?
பரவாயில்லை மச்சி வழியிலேயே யேன் வூட்டுக்காரி பாதியே புடுங்கிட்டு போயிட்டாடா.
பொழப்பு சரியில்லடா ஏதாவது பிசினசு செய்வோமா ? சொல்லு மாரி.
ஆமாடா நாமலும் கல்யாண் சூவல்லரி மாதிரி ஏதாவது தொறப்போமா ?
டேய் தொண்ணை நக்கிகளா... பேசாம குடிக்கிறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

07. மாமு யாருக்கு ஓட்டுப் போடுவே ?
மாப்ளே யாரு... டாஸ்மாக்கை மூடுறாங்களோ ? அவுங்களுக்குத்தான் போடுவேன்.
மாமு அது நம்க்கு பெரச்சனை இல்லையா ?
அப்பத்தான் மாப்ளே கள்ளச்சாரயம் காய்ச்சி நாமலும் நாலு காசு பாக்கலாம்.
ஓஹோ நீ அப்டி வர்றியா ? நானும் அவுங்களுக்கே ஓட்டுபோடுறேன் மாமு.
டேய் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நெனைக்கிற நாயிகளா... வெளியே போறியளா ? இல்லை கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளவாடா ?

17 கருத்துகள்:

 1. வணக்கம் ஜி !

  அருமை ரசித்தேன்

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஷிவாஸ் ரீகல் : இந்த கில்லர்ஜீ பயல் என்னை விட்டுட்டு டாஸ்மாக் போயி அங்கெ நடக்கறதை பதிவு எழுதிட்டானா? வரட்டும் பாக்கறேன். ஒரு புல் இல்லாம அடுத்த பதிவு எழுத விட மாட்டேன்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. வெளியபோறீங்களா கழுத்தபுடிச்சி தள்ளவா :-)

  பதிலளிநீக்கு
 4. ரசித்தேன். சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. ஏழு இங்கே இருக்கு ,அரை எங்கே இருக்கு :)

  பதிலளிநீக்கு
 6. இப்படி எல்லாம் நடப்பதை படிப்பதோடு சரி அனுபவமே இல்லை.

  பதிலளிநீக்கு
 7. ஏனய்யா.. சதாசிவம்.. ஏழரைகள்..ன்னு சொன்னீரே.. ஏழு இங்கே இருக்கு.. மிச்சம் அரை கள் எங்கேய்யா?..

  அந்த அரை கள் தான்..னே.. இது!..

  யோவ்.. மப்புல ஒளறாதீர்.. ஏழரை கள்..ன்னு சொல்லீட்டு ஏழு மட்டும் வெச்சிருக்கீரே!.. மிச்சம் அரை கள் எங்கேயா!?..

  அண்ணே.. அங்க பாருங்க.. அத்தாச்சி அரைக் கல்லோட வர்றாங்க!.. நான் ஓடிடுறேன்!.. சாமியோவ்!..

  அரை கள்ளா கேக்கிறீரு.. இந்தா வாங்கிக்குங்க!..

  யம்மா.. யம்மா.. ஆத்தாடியோ!?..

  பதிலளிநீக்கு
 8. சிரிப்பு வரலை. வேதனை தான் வருது! :( ஏனெனில் உண்மையைத் தான் சொல்றீங்க!

  பதிலளிநீக்கு
 9. டாஸ்மாக் கடையில் நடப்பதை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது தங்களின் பதிவு. திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வதைப்போல வேதனையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. போதையில் இருந்து எப்போது மீள்வார்கள் குடி-மக்கள்

  பதிலளிநீக்கு
 11. நேரடி ஒளிபரப்பு மாதிரியே இருக்கே சூப்பர்

  பதிலளிநீக்கு
 12. soon another five to six young ladies would become widows this month......thanks to taasmac

  பதிலளிநீக்கு
 13. அது சரி எப்ப கில்லர்ஜி டாஸ் மாக்குக்குள்ள நுழைந்தீர்கள்? இல்ல என்னவோ நேர்ல கேக்கறா மாதிரி இருக்கு அதான்...

  பதிலளிநீக்கு
 14. வேதனை.... தினமும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. so young widows are on the rise in tamilnadu///

  பதிலளிநீக்கு