தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 13, 2017

சரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா


ரியான நேரத்தில்
ரிப்பன் வெட்டி
டையைத் திறந்தார்
ந்திரி மாதவன்
ளீரென்று விளக்குகள்
க தகவென ஜொலிக்க
நின்று கொண்டிருந்தவர்கள்
ட சடவென கை தட்டினர்
* * * * * * *
ட்டென்று சந்தோஷ் மனைவி
நின்று கொண்டு இருந்தவர்களை
யவு செய்து உட்காருங்கள் என்றாள்
ல பிரமுகர்களும் வந்திருந்தார்கள்
திய விருந்து பரிமாறப்பட்டது
டையின் முதலாளி சந்தோஷ் மனதுக்கு
ரிதமாக சங்கீதத்தை முழங்க விட்டான்
ந்தோஷமாய் திறப்பு விழா நடந்தது.

நண்பர்களே... இதை நான் எழுதி சுமார் 25 வருடங்கள் இருக்கலாம் ஒலி நாடா பதிந்து கொண்டு திரிந்த காலங்களில் ராணி வார இதழுக்கு எழுதி அனுப்பியது முகவரி தவறாகி திசைமாறி மளிகைக்கடைக்கு போயிருக்கலாம் அதை மீண்டும் நினைவில் கொண்டு வந்து எழுதினேன் தற்போது சிறிய மாற்றமும் இருக்கலாம் முதன் முறையாக கணினியில் ஏற்றுகிறேன் - கில்லர்ஜி

ராகம்
ச...ரி...க...ம...ப...த...நி...ச... ச...நி...த...ப...ம...க...ரி...ச...
கேளொலி

52 கருத்துகள்:

 1. அருமை அருமை
  எப்படி இப்படி வித்தியாசமாகவும்
  மிக மிக சுவாரஸ்யமாகவும்
  தொடர்ந்து சிந்திக்க முடிகிறது ?
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. கேளொலியைத் தேடினேன்

  பதிலளிநீக்கு
 3. சரிகமபதநி திறப்புவிழா....இசை சாரல்...நன்று

  பதிலளிநீக்கு
 4. செம கில்லர்ஜி!! நல்ல கற்பனை...சரிகமபதநி

  பாட்டு வாவ் ! அருமையான பாடல்!! சூப்பர்!!!

  பதிலளிநீக்கு
 5. அருமை.. அருமை..
  சும்மாவா சொன்னார்கள் - வைரம் பாய்ந்த கட்டை என்று!..

  இதெல்லாம் முகவரி மாறிப் போய் இருக்காது..

  வேற யாராவது சுட்டு இருப்பார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இருக்கலாம் வருகைக்கு நன்கை

   நீக்கு
 6. நல்ல ரசனை உங்களுக்கு கில்லர்ஜி. 'சட சடவென' - இங்கு 'ச்' வரக்கூடாது. ("சடச் சடச்" கிடையாது என நினைக்கிறேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன் பிறகே மாற்றமுடியும் இது செல்பேசி.

   நீக்கு
 7. மிக அருமை. திரு நெல்லைத் தமிழன் அவர்கள் சொன்னபடி ‘சட சட’ என இருக்கவேண்டும். ஜேசுதாஸ் அவர்களின் பாடலை பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரைவில் திருத்தம் செய்கிறேன்

   நீக்கு
 8. நல்லா சிந்திச்சிருக்கீங்க! :) மிக அருமை!

  பதிலளிநீக்கு
 9. ராணி இம்மாதிரி படைப்புகளை விரும்பி வெளியிடும். உண்மையிலேயே முகவரி தவறியிருக்கலாம்.

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் நிறைய அனுப்பி இருக்கிறேன் ஒன்றுமே பிரசுரமாகவில்லை.

   பெயர்ராசி சரியில்லையோ... விரைவில் நல்ல ஜோதிடரை காணவேண்டும்.

   நீக்கு
 10. நன்றாக அமைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு திறப்பு விழா பற்றி எழுதியிருந்த விதம் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 12. ஜேசுதாஸின் ஆரோகணம் அவரோகணம் போன்றே உங்களுடையதும் அருமை ,ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 13. சரிகமபதநி
  என்ற
  ஏழு ஸ்வரங்களை
  எண்ணிப்பார்க்க வைத்து
  கைதட்டலும்
  கடைத் திறப்புவிழாவும்
  மகிழ்ச்சியும்
  சிறப்பாக வெளிப்படுத்திவிட்டீர்!

  பதிலளிநீக்கு
 14. சரி சரி கில்லர் அருமை

  பதிலளிநீக்கு
 15. இதிலும் ஒரு புதுமை. எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
 16. வணக்கம்.

  பாலகுமாரனின் நாவலொன்றில் ( பெயர் நினைவில்லை ) அமுதா என்ற பெயரைக் கொண்டு இப்படி எழுதியிருப்பார்.
  சிறுவயதில் படித்தது.
  மீண்டும் நினைவு வந்தது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே அதுதான் இது அப்படினு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன் ஹி.. ஹி..

   நீக்கு
 17. நீங்க எழுதியிருப்பது மிக அருமை... ஆனா சரிகமபதநி ஓடியோவா.. மீ எஸ்கேப்ப்ப்:)..

  பதிலளிநீக்கு
 18. அப்பவே..நீங்கள்...பாட ஆரம்பிச்சிங்களா.......அதான் நடையும் எழுத்தும் துள்ளி விளையாடுது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பவே எழுத ஆரம்பித்து விட்டேன் நண்பரே..

   நீக்கு
 19. வணக்கம் ஜி !

  ஏழ்சுரம் காட்டும் அந்த
  .....எழுத்தினைக் கொண்டே நல்ல
  சூழ்நிலை ஒன்றைக் காட்டும்
  .....சுடர்கவி தந்த கில்லர்
  நீழ்புகழ் கொண்டே வாழ்க்கை
  .....நிறைந்திட வேண்டும் தன்னின்
  வாழ்மனை சுற்றம் பேணி
  .....மகிழ்வுற வாழ்த்து கின்றேன் !

  அருமை ஜி சிந்தனை புதிது வாழ்த்துகள்

  சடசடவென
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே கவிதையாகவே கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு