தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 17, 2017

ஜீவன்

நானொரு ராசியில்லாதவன் என்று எல்லோருமே என்னை ஓரங்கட்டியே வந்தார்கள் என்மனம் வேதனைப்படுமென யாருக்குமே கவலையில்லை இருப்பினும் என்னைப்பற்றி கவலைப்படவும், கலங்காதே உனக்கும் ஒருகாலம் வருமென, என்னை சமாதானப்படுத்தவும் ஒரு ஜீவன் இருந்தது ஆதலால் சமாதானப்பட்டு காலம் இன்றுவரை ஓடிவிட்டது...

ஒருமுறை நண்பனுக்கு பெண் பார்க்க போனோம் நான் மறுத்தும் நண்பன் என்னைத்தான் வரவேண்டுமென கட்டாயமாக அழைத்துப் போனான் காரணம் பாசம் அல்ல மற்ற நண்பர்கள் எல்லாம் அவனைவிட அழகானவர்கள் ரயில் நிலையத்திற்க்கு போனால் ரயில் ரத்து யாரோ தீவிரவாதகும்பல் தண்டவாளத்தில் ஃபாம் வைத்ததால் கடைசி நேரத்தில் அறிந்து அப்புறப்படுத்தி விட்டார்கள், பேரூந்தில் போகலாம் எனநான் சொன்ன, யோசனையை நிராகரித்தார்கள் காரணம் அபச குணமாகி விட்டதாம் அதற்கு காரணம் நான்தான் என்று, என் காதுபட முணுமுணுத்தார்கள்... நான் மனதுக்குள் சந்தோஷப்பட்டேன் நல்லவேளை ரயில் விபத்துக்குள்ளாகாமல் பலருடைய உயிர் பாதுகாக்கப்பட்டது.

ஒருமுறை பக்கத்து வீட்டு பவானிக்கு இடுப்புவலி உடனே ஓடிப்போய் டாக்ஸி பிடித்து வா என்றார்கள் நான் உடனே ஸ்டாண்டுக்கு போய் தெரிந்த டாக்ஸியை அழைத்து வந்தேன்... பவானியும், கூடுதலாக மூன்று பெண்களும் ஏறிக்கொள்ள சுகந்தி நர்ஸிங் ஹோம் விடு எனச்சொல்ல டிரைவர் சரியான வழிக்கு வண்டியை திருப்ப, நான் கண்ணாடியார் வீதி வழியா போ என்றேன் இந்தவழி நேரமாகுமே என்ற டிரைவரை நான் முறைக்க.. அந்த வழியே போனால் மோகனா வீட்டு வாசலில் நிற்பாள் நாம் காரில் போவதை அவளும் பார்க்கட்டுமே சரியாக வலைவில் மோகனா வீட்டருகே வரும்போது திடீரென வழி மறித்த ரவுடிக் கும்பலொன்று தலைவர் இறந்துட்டாரு வண்டி எல்லாம் ஓடக்கூடாது போ போ திரும்பிப்போ எனவிரட்ட... எவ்வளவோ கெஞ்சியும் திருப்பி விட்டார்கள், டிரைவர் என்னை முறைத்து அட மூதேவி தொண்டியார் வீதி வழியா போயிருந்தால் இந்நேரம் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாமே ஏண்டா இங்கிட்டு கூட்டி வந்தே ? இந்த தரித்திணியம் புடிச்சவனை கூட்டி வந்தாலே ஏடாகூடமா ஆகுமே எல்லா பெண்களும் என்னைத் திட்டினார்கள், நிலைமை விபரீதமாக பவானிக்கு இடுப்புவலி முற்றி காரிலிருந்து இறங்கவும் வேறு வழியில்லாமல் மோகனாவின் வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம் அடுத்த கால்மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஆண் குழந்தை பிறந்து விட்டது சுற்று வட்டார பெண்கள் எல்லோரும் பிரசவத்தை குறித்து பொரணி பேசிக்கொண்டிருக்க... டிரைவர் வண்டியில் பாணட்டை திறந்து ஏதோ செய்து கொண்டிருக்க... நானும் மோகனாவும் கண்களால் மௌனமொழி பேசிக்கொண்டிருந்தோம்... எப்படியோ சுகந்தி நர்லிங் ஹோம் போகாமல் சுகப்பிரசவம் இருபதாயிரம் ரூபாய் லாபம் அதே டாக்ஸியில் வீட்டுக்கு வந்தோம்...

ஒருமுறை நண்பர்கள் ஐந்துபேர் சேர்ந்து ஊட்டி சுற்றுலா போனோம், மொத்தமாக பணத்தை என்னிடம் கொடுத்து செலவு கணக்கை என்னை கவனிக்க சொல்லி விட்டார்கள், லேக்கில் குதிரை சவாரி போனோம் குதிரைக்காரனுக்கு பணம் வாங்கும்போது பாக்கி ஐந்து ரூபாய் இல்லை அண்ணே அஞ்சு ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கிகங்கண்ணே.. என்றான் சரியென வாங்கி கொண்டேன் கவனமாக நண்பர்கள் நம்பரை குறித்துக் கொண்டார்கள் காரணம் பொதுப்பணமாம் அடுத்து தொட்டு உள்ள தொட்டபெட்டா போனோம் நான்கு நாள் கோலாகலாமாக கழித்து திண்டுக்கல் வழியாக வரும்போது தலைப்பாக்கட்டு பிரியாணி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது ஐயா தர்மம் பண்ணுங்கசாமி... ஒரு பெரியவர் கேட்கவும் பாக்கெட்டில் சில்லரையில்லை மற்றவர்களிடம் சுத்தமாக எதுவுமே இல்லை எனக்கு பாவமாக இருந்தது கையில் வந்த லாட்டரிச் சீட்டை விழுந்தா எடுத்துக்கங்கய்யா... எனச்சொல்லி விட்டு வந்தேன் இரண்டு பேர் திட்டினார்கள் ஏண்டா சில்லரை இல்லைனா வரவேண்டியதுதானே... என்னமோ வள்ளல் பரம்பரை மாதிரி கையில உள்ளதை கொடுக்குறே ? ஊரும் வந்துவிட்டோம் ஒருவாரம் கழித்து பரசுராமன் வீட்டுக்கு வந்தான், ஏண்டா வீணாப் போனவனே லாட்டரிச் சீட்டுக்கு ஒரு லட்சம் விழுந்துருக்கு அதை தூக்கி கொடுத்துட்டியேடா... ? சிறிது நேரத்தில் மற்ற மூவரும் அம்மை-அப்பனோடு எனது வீட்டாரும் சேர்ந்துகொண்டு தருத்திணியம் புடிச்ச மூதேவி இனி அந்த ஆளை எங்கே போயி... புடிக்கிறது திண்டுக்கல்ல இருக்கானோ இல்லை நாமக்கல்லுக்கு போயிட்டானோ ? எப்படியோ எங்க புள்ளைங்களுக்கு நாமம் போட்டுட்டான் உங்கபுள்ளை. தாண்டவமூர்த்தி அப்பா தாண்டவமாடினார், எல்லோரையும் சமாளித்து அப்பாதான் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தார், நான் அந்த பெரியவருக்கு நல்லதுதானே செய்தேன், எல்லோரும் ஏன் என்னை திட்டுகிறார்கள்.?.

இருப்பினும் எனக்காக அந்த ஜீவன் மட்டும் ஆறுதல் கூறியது கவலைப்படாதே அந்தப் பெரியவர் உனக்காக இறைவனிடம் பிரார்த்திப்பார் அதன் மூலமாகவாது உனக்கும் ஒரு காலம் வரும், அந்த ஜீவன் யார் தெரியுமா ? என் மனசாட்சி

34 கருத்துகள்:

 1. மீ தான் இம்முறை 1ஸ்ட்டூஊஊ... ஹா ஹா ஹா மிக ரசிச்சு ருசிச்சு எழுதியிருக்கிறீங்க.. இப்படித்தான் துன்பத்திலும் இன்பம் காணப் பழகிட்டால்.. சந்தோசமாக வாழலாம்.

  அந்த லொட்ரறி விழுந்தது உண்மையா?:) சும்மா கதை விட்டிருக்கிறீங்களோ?:)..

  “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அழகாக சொன்னீர்கள்

   //எண்ணம் அழுக்கானால் எல்லாம் அழுக்காகும்//

   நீக்கு
  2. முகம் மொளுக்கானால் எல்லாம் கிளிக் ஆகும் ,முயற்சி பண்ணுங்க ஜி :)

   நீக்கு
  3. நல்லது ஜி உடன் ஆயத்தமாகி விட்டேன்

   நீக்கு
 2. உண்மையோ, பொய்யோ இப்படியும் நடக்கத் தான் நடக்கிறது. என்ன பண்ணுவது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராசியில்லாதவன் நிலை இப்படித்தான்.

   நீக்கு
 3. சிலசமயம் இப்படி ஆவதுண்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள். நல்லது என்பது நமக்கு நடந்தால்தானா? ?மற்றவர்களுக்கு நம் மூலம் நல்லது நடந்தாலும் சரிதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நாம் ஓட்டு போடுவதால் எம்.எல்.ஏ. குடும்பத்துக்கு நல்லது இது தெரிந்துதானே நாமலும் வேட்டு... சாரி ஓட்டு போடுறோம்.

   நீக்கு
 4. பல சமயங்களில் நாம் நல்லது நினைக்க, விபரீதமாக நடந்து விடுகிறது.

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 5. இங்கு உங்களை தேடிக் கொண்டியிருக்கிறார்கள் ஜி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி பிரியாணிக்கு பணம் கொடுத்துட்டுதான் வந்தேன்

   நீக்கு
 6. மற்றதெல்லாம் எப்படியோ... சுகப் பிரசவம் ஆனது தான் மகிழ்ச்சி.. பணம் வேறு மிச்சம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி ஆனால் சுகந்தி ஹோஸ்பிட்டலுக்கு வருமானம் போச்சே..

   நீக்கு
 7. ஆகா இப்படியெல்லாம் அனுபவமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கடைசியில் திட்டும் விழுகிறதே..

   நீக்கு
 8. நாமக்கல்லுக்கு அடிக்கடி வருவீர்களா?

  நீங்கள் வந்தால் நல்லதே நடக்கும். மீண்டும் வரும்போது மின்னஞ்சல்[இரண்டு நாள் முன்பே] அனுப்புங்கள். நான் தேடிவந்து என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கதைக்காக வந்தேன் இனி தங்களுக்காக நிச்சயம் ஒருநாள் வருகிறேன்.

   நீக்கு
 9. இடுகையும் பல பின்னூட்டங்களையும் படித்தேன். கில்லர்ஜி, நாம் எப்போவும் 'ராசியில்லாதவன்' போன்ற எதிர்மறை எண்ணங்களையோ அல்லது பேச்சையோ பேசக்கூடாது. நம்ம என்ன நினைக்கிறோமோ அதுவே நம்மைச் சூழ்ந்துடும். எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை விளைவுகளை ஆகர்ஷிக்கும் சக்தி படைத்தது.

  சினிமா ஃபீல்டுலயே நிறைய உதாரணங்கள் உண்டு. டி.எம்.எஸ் அவர்கள் எப்போதும் சொல்வது, 'டி ராஜேந்தர் சொல்லி நான் ஒரு தலை ராகத்தில், 'நானொரு ராசியில்லா ராஜா' பாடலும், 'என் கதை முடியும் நேரமிது' பாடலும் பாடின நேரம், என் திரையிசை வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று சொல்லியிருக்கிறார். அதேமாதிரி, 'வெள்ளி தங்காது' என்ற மாதிரி வசங்களையும் பாடல்களையும் ஏ.வி.எம் செட்டியார் அனுமதிக்கமாட்டாராம். இதுமாதிரி பல உதாரணங்கள் உண்டு. நாம 'காக்கை உட்கார பனம்பழம்' என்று நினைக்கலாம். ஒரு வேளை அப்படி நடந்தால்?

  ஜாலியாத்தான் எழுதியிருக்கீங்க.. ஆனால் சொல்லணும்னு தோணினது.

  பதிலளிநீக்கு
 10. வருக நண்பரே விரிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

  இது பதிவுக்காக எழுதியது மட்டுமே மற்றபடி நான் தன்னம்பிக்கைவாதி படிக்காத காரணத்தால் அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை எட்டி... எட்டி பார்க்கும்.

  மனதில் தோன்றும் கருத்தை பகிர தயக்கம் வேண்டாம் காரணம் நாம் எழுத்துரிமை பெற்றுள்ளோம்.

  பதிலளிநீக்கு
 11. நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒன்னு...

  பதிலளிநீக்கு
 12. இராசி என்று ஒன்றுமில்லை.உங்கள் பக்கத்தில் ‘எண்ணம் போல் வாழ்’ என சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நாம் நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் நல்லதொரு கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. எல்லாம் நன்மைக்கே!
  மூன்று நிகழ்விலும் நல்லதே நடந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவின் முக்கியத்துவத்தை சரியாக சொன்னீர்கள் நன்றி

   நீக்கு
 14. நல்ல எண்ணங்கள் நல்ல நிகழ்வுகளுக்கு வித்தாகு ம்

  பதிலளிநீக்கு
 15. நினைவு நல்லதாக இருந்தால் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்

  பதிலளிநீக்கு
 16. கில்லர்ஜி!! மிகவும் மனதை நெகிழ்த்திய ஒன்று. ஏனென்றால் நாம் நல்லது நினைத்தால் கூட, சில சமயம் எதிர்மறையாக நடக்கும் போது நம் மீது விரல் சுட்டப்படும் போது அதுவும் ராசியற்றவன்/வள் என்று சொல்லப்படும் போது மனம் முதலில் வலிக்கும் தான் பின்னர் அதுவே பழகிப் போய் நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொண்டு விடுவோம்....சரிதானே ஜி??!!!

  நமது உண்மையான வெல்விஷர் நமது உள் மனம் அதாவது மனசாட்சி என்பது மிகவும் உண்மை. அது நம்மை அவ்வப்போது கரெக்ட் செய்து கொண்டே இருக்கும். எச்சரிக்கை விடும். நாம் தான் அதைப் புறக்கணித்து சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறோம்...சரிதானே ஜி??!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக விரிவான விடயம் தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. இத்தனையும் சொல்ல வைத்த
  மனச்சாட்சியைப் பாராட்டலாம்.
  மனச்சாட்சி இல்லை என்றால்
  மனிதனும் மிருகம் ஆகலாம்

  பதிலளிநீக்கு