மரணபுரி
என்ற ஊரில் மலங்கோலன் என்று ஒருவன் இருந்தான் அவன் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும்
அமங்கலமான வார்த்தைகளையே உபயோகிப்பான்... திருமண வீட்டில் வேலைகள் தடபுடலாக நடந்து
கொண்டிருந்தது எண்ணை கேன்களை தூக்கி கொண்டு போனவன்..
ச்சே
எலவு வீட்டுல எவ்வளவுதான் சாமான்களை தூக்கிச் சாகுறது ?
திண்ணையில்
உட்கார்ந்திருந்த பெரியவர் பொடுகு மலையான் கேட்டார்.
ஏண்டா
கல்யாண வீட்டுல என்ன பேச்சு பேசுறே ?
திண்ணையில
உட்கார்ந்து கிட்டு பேசுவியல்ல தூக்கிப் பார்த்தாவுல தெரியும் ஒவ்வொண்ணும் பொணம் கனம்
கனக்குது ?
ஏண்டா
நீ இப்படிப் பேசுறதை எப்ப நிறுத்துவே ?
ம்...
என்னைக் கொண்டி குழியில வச்சதுக்கு பொறகு.
உன்னை
எப்ப குழியில வெப்பாக ?
ம்
உன்னைக் கொண்டி குழியில வச்சதுக்கு அப்புறம்.
அத்துடன்
பெரியவர் வாயை திறக்கவில்லை அரிசி மூடைகளை எண்ணிக் கொண்டிருந்த சடகோபன் சொன்னான்.
இவனை
வச்சுவேலை வாங்குறதுக்குள்ளே... யேன் ஆவியும், ஜீவனும் போயிடுச்சு.
அப்ப
நீ என்ன செத்த பொணமா ?
சடகோபனின்
ஆத்தா கோமளவள்ளி இதைக் கேட்கவும் கோபம் வந்து விட்டது.
ஏண்டா
தாலியறுப்பா மவனே எம்புள்ளைய என்னடா கேள்வி கேட்கிறே..? கட்டையிலே போறவனே...
ஆமா
நாங்க மட்டும் கட்டையிலே போறோம் நீ மட்டும் இரும்பு மேலயா போகப்போறே ?
றே
ஆமாடா
நாங்களெல்லாம் தேர்ல போன பரம்பரைடா...
எது....
மார்ச்சுவரி வண்டியிலேயா ?
யா
டேய்...
எங்க ஆத்தாவை பத்தி இதுக்குமேலே பேசுனே.. உனக்கு காசுவெட்டி போட்டுருவேன்.
ஏண்டா..
சடகோபா என்னடா சொன்னான் என்னை..?.
அது...
வந்து... ஆத்தா நீ பொணம் ஏத்துற வண்டியிலே போவியாம்...
அப்படியா...
சொன்னான்..? ஏண்டா பேதியில பெரண்டு போக நாசமாப்போக உன்னை அந்தக்காளி கேட்பா...
மண்ணை அள்ளி தூற்ற விபரம் அறிந்து அடுத்த
தெருவிலிருந்து மலங்கோலன் ஆத்தா மொடிச்சியம்மாளும் வந்து விட்டாள்..
ஏண்டி....
தாலியறுத்த முண்டே யாரைப்பாத்து தாலியறுப்பானு சொல்லுவே எம்புருஷன் இன்னும்
முப்பது சந்தைக்கு இருப்பாருடி... ஒம்புருஷன் மாதிரி குடிகார மட்டைனு நெனைச்சியா ஏண்டி தூ....
யாரு...
ஒம்புருஷனா..... சீக்குப்புடிச்ச கோழிடி....
இருவரும்
குடுமியை பிடித்து வீதியில் உருண்டு கொண்டிருக்க... எப்படியோ... தகவல் அறிந்து 12 B - Police station னிலிருந்து Sub inspector ரங்கநாயகி பெண் காவலர்கள் ஐந்து பேருடன் வந்து கோமளவள்ளியையும், மொடிச்சியம்மாளையும் பிரித்து பிடித்துக் கொண்டு
போனார்கள் பிரித்து மேய.
அதுக்குப் பிறகு என்னாச்சோ... யாருக்குத் தெரியும் ? - கில்லர்ஜி
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எல்லாம் இப்படித்தானே நடந்து கொண்டிருக்கின்றது...
பதிலளிநீக்குஎன்ன செய்றது!..
ஜிஞ்சர் பீர் வாங்கிக் குடிக்க வேண்டியது தான்!..
வாங்க ஜி வெயிலுக்கு ஏற்றதுதான்.
நீக்குஇயல்பா எழுதியிருக்கீங்க...
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குசண்டையை மூட்டிவிட்ட அலங்கோலனைப் போலீஸ் பிடிக்கவில்லையே! இது என்ன நியாயம்?
பதிலளிநீக்குபெண் போலீஸ் வரும்பொழுது இரண்டு பெண்கள் மட்டும்தானே குடுமியை பிடித்து உருண்டார்கள்.
நீக்குஇப்படியும் சிலர் இருக்காங்க.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குஊர் உலகமெல்லாம் அலைஞ்சு திரிஞ்சிட்டு ,திருமண வீட்டுக்கு மொய் வைக்காம சாப்பிட வந்தா ,என்ன இழவுடா இது ...பாத்திரத்தை எல்லாம் கழுவிகிட்டு இருக்காங்களே :)
பதிலளிநீக்குமொய் வைக்காமல் சாப்பிடணும் என்றால் இப்படித்தான் ஜி
நீக்குபலர் இப்படித்தான்இருக்கிறார்கள் நண்பரே
பதிலளிநீக்குஅருமை
வருக நண்பரே நன்றி
நீக்கும்ம்ம்ம்ம்ம் இப்போவும் இப்படி நடக்குதா என்ன?
பதிலளிநீக்குவாங்க மரணபுரியில் இப்படித்தான் நடக்குதாம்.
நீக்குஹா ஹா ஹா மிக நகைச்சுவை கலந்து அருமையா எழுதியிருக்கிறீங்க.. மை வச்சிட்டுப் போறேன்.. மீண்டும் சந்திக்கலாம்.
பதிலளிநீக்குவாங்க நன்றி மீண்டும் வறுக்க... வருக.
நீக்கு
பதிலளிநீக்குஅருமையான உரையாடல் (Script)
இதை வைச்சு
குறும்படம் எடுக்கலாம் தான்
வருக நண்பரே தாங்களையே தயாரிப்பாளராக்கி விரைவில் எடுப்போம்.
நீக்குபேச்சைக் குறைத்தால் பிரச்னை இல்லை! எதிர் வார்த்தையாடாமலிருந்தால் சரி!
பதிலளிநீக்குஆம் நண்பரே வாய்தானே பிரச்சனை.
நீக்குமரணபுரியில் பொம்பள போலீஸ் வந்தார்கள்.. எங்களுரில் ஆம்பள போலீஸ் வந்து கூட்டிகிட்டு போனார்கள்...
பதிலளிநீக்குசூழ்நிலைகள் மாறி இருக்கலாம் நண்பரே...
நீக்குஎவ்வளவு எளிதாக இந்த வார்த்தைகள் தொற்றிக் கொள்கின்றன
பதிலளிநீக்குஆமாம் ஐயா இப்படி பேசுவது தவறுதானே...
நீக்குஇப்படி எல்லாம் அமங்கலமாக பேசுவது சிலருக்கு வாடிக்கை. இதைப் போய் பெரியவர் பொடுகு மலையான் போல் பெரிதாக எடுத்துக்கொண்டால் கடைசியில் நடந்தது போல் தான் நடக்கும். நாட்டு நடப்பை வழக்கம்போல் உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். இரசித்தேன்!
பதிலளிநீக்குஆம் நண்பரே பிரச்சனைகளின் தொடக்கமே பெரியவர் பொடுகு மலையான்தான் அவர் வாயை சாத்தி இருந்திருக்கலாம்.
நீக்குஆமாம் இப்படி பேசரத்துக்கு ஒரு சிலர் இருப்பாங்க....அதுக்குத்தான் யார் காதிலயும் விழககூடாதுனு.....மேளம் வாத்தியம் நாத ஸ்வரம்....வாசிக்க வைப்பது....
பதிலளிநீக்குவாங்க நாதஸ்வரக்காரங்களும் இப்பொழுது ''பீப்'' ''பீப்'' ''பீப்'' என்று ஆபாசமாக வாசிக்கிறாங்களே....
நீக்குநல்லதே பேச வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். ஆனால் சிலர் இப்படித்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குவருக சகோ உண்மைதான் தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குஇந்தப் பெயர்களையெல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்களோ?
முதல் வார்த்தையில் சிரிக்கத் தொடங்கியது இன்னும் முடியவில்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி. ஹ ஹ ஹா
நன்றி.
வருக கவிஞரே ஒருமுறை மரணபுரி சென்று வந்தேன் அந்த ஊரில் இப்படித்தான் நாமம் இடுகிறா... மன்னிக்கவும் வைக்கிறார்கள்.
நீக்கு