Dear பாரதி & செல்லம்மா...
கேட்டீரே
மாற்றத்தை கண்டீரா நாற்றத்தை ?
புதுமைப்
பெண்களடி பூமிக்கு கண்களடி என்றீரே
கண்கள்
கலங்குதடி.. ஞாபகம் உண்டோ ?
இந்த
வரிகள்கூட மற்றொரு பாடலில் நீர் எழுதியதே !
நல்லவேளை இவைகளை எல்லாம் காணாது போய் விட்டீர் இல்லை எனில் தற்கொலையாளர்களின்
பெயர்ப் பட்டியலில் உமது பெயரும் இடம் பெற்றிருக்கும். பெண்களுக்கு சுதந்திரம்
வேண்டுமென்பதில், உம்மைக் காட்டிலும் ஒண்ணேமுக்கால் காணி தாராளமானவன் நான். அடுப்பூதும்
பெண்களுக்கு படிப்பு எதற்கு ? என்று முன்னோர்கள் கேட்டு
வைத்தது இப்படியாகும் என்று கணித்திருந்ததனால்தானோ ? அழகியின் அழகை ஆராதிப்பவன் கவிஞன் அந்த ஆராட்டை மனதினுள்
மட்டும் ஏற்பவள் வளர்பிறையாவாள் தலையினுள் எட்டும்வரை ஏற்பவள் தேய்பிறையாவாள்.
பெண்கள் தங்களின் மதிப்பை அறியாதவர்களாக போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
பெண்களுக்கும், குதிரைக்கும் மதிப்பு போய் விட்டால் இந்த உலகம் அழியும்வரை அது
திரும்பக் கிடைக்காது என ஒரு வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது உண்மைதான் என
நடைமுறையில், தெரிகிறது புதுமை விரும்பியில் முதலாமாவன் நான் அதற்காக பழமையை
குழிதோண்டி புதைப்பதில் உடன்பாடு இல்லாதவன். ஒரு ஆணால் சாதிக்க முடியாத சில விசயங்கள்
பெண்ணால் சாதிக்க முடியும் என்று சொல்வதை மறுக்கத் திராணியில்லாத ஆண்வர்க்கத்தை
சேர்ந்தவன் நான். திராணியில்லாதவன் என குறிப்பிட்டதின் காரணம், அவர்கள் சாதிப்பதே
ஆண்களிடம்தானே நமக்கு ‘’அதை’’ மறுக்கத்
திராணியிருந்தால் அவர்கள் சாதிக்க முடியாது பெண்களை மதிக்கத் தெரியாதவன் மனிதனாகவே
வாழத் தகுதியில்லாதவன்,
நான் பெண்களை மதிப்பவன் ஏனெனில் எனக்கு...
அப்பத்தா என்றொரு பெண் இருந்தாள் (1983)
அம்மாயி என்றொரு பெண் இருந்தாள் (1998)
மனைவி என்றொரு பெண் இருந்தாள் (2001)
மாமியார் என்றொரு பெண் இருந்தாள் (2012)
அம்மா என்றொரு பெண் இருக்கிறாள்
சகோதரி என்றொரு பெண் இருக்கிறாள்
மகள், என்றொரு பெண் இருக்கிறாள்
நாளை, மருமகள் என்றொரு பெண்ணும்,
பேத்தி என்றொரு பெண்ணும் வரவிருக்கிறார்கள்.
எனது மரணகாலம் வரை இந்த பெண்களின் உறவுமுறை தொடரும்.
நன்றாகச் சொன்னீர்கள் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குசிந்திக்க வைத்தது. ரசித்தேன்.
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குசில பெண்களின் சில்மிசத்திற்காக பிற்போக்குக் கருத்துக்கள் நியாயம் என்று வாதிடுவது சரியல்ல தோழர்
பதிலளிநீக்குதோழரின் வெளிப்படையான கருத்துரைக்கு நன்றி
நீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குபெண்களை மதிக்கத் தெரியாதவன் மனிதனாக வாழவே தகுதியில்லாதவன்தான்
வருக நண்பரே மிக்க நன்றி
நீக்குகாலக் கொடுமையடா - கந்தசாமி!.. காலக் கொடுமையடா!..
பதிலளிநீக்கு>>>
அது சரி.. சதாசிவம் எங்கே?..
அருவாளை எடுத்துக்கிட்டு எங்கேயோ போயிருக்கார்!..
<<<
வருக ஜி தங்களது நபர் விரைவில் வருவார்.
நீக்கு‘நான் பெண்களை மதிப்பவன். ஏனெனில்.....
பதிலளிநீக்கு..............இந்தப் பெண்களின் உறவுமுறை தொடரும்’
நெஞ்சைத் தொட்ட வரிகள்.
குறிப்பிட்டு கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குஎழுதியது சரிதான். ஆனால் ஆண்கள் மட்டும் 1970லிருந்து இப்போ எவ்வளவு முன்னேறி(?)ட்டாங்க. அதை எங்க போய்ச் சொல்றது. (நீங்கள் போட்டுள்ள படம் 1950களில் இருந்திருக்கும்)
பதிலளிநீக்குஉண்மை நண்பரே மிகப்பெரிய மாற்றமே...
நீக்குரசித்தேன் ஜி
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி ஐயா
நீக்குவருத்தப்படுகிற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விஷயமில்லை நண்பரே! வெளியில் வந்தால்தான் உண்மை தெரியும். கோடிக்கணக்கான பெண்களில் சிலர் குடிப்பதால் குடிமுழுகிவிடாது.
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா , நியூ ஆர்லியன்ஸ்
வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குஇதையே ஆண் செய்தாலும் தவறுதான் !ஒரு சில பெண்கள் செய்வதால் ,பெண்களே இப்படித்தான் என்ற முடிவுக்கு வர வேண்டாமே :)
பதிலளிநீக்குநிச்சயமாக தவறுதான் ஜி
நீக்குஇருப்பினும் தற்பொழுது இதன் எண்ணிக்கை உயர்ந்து வருகிறதே...
ஆரம்பமும் புகைப்படங்களும் என்ன சொல்ல வருகின்றீர்களோ என்று சிந்திக்க வைத்தன. முடிவு இயல்பாக, பாடமாக அமைந்திருந்தது. அதுதான் உங்கள் பாணி. நன்று.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி
நீக்குமுதல் படம் மட்டும் ரொம்பவே பழசுனு நினைக்கிறேன். அந்த மாதிரி 70களில் யாரும் அலங்காரம் செய்து கொண்டதில்லை! மற்றபடி உங்கள் கருத்துக்கு என் ஆதரவு முழுமையாகக் கொடுக்கிறேன். :(
பதிலளிநீக்குவருக சகோ தங்களது ஆதரவுக்கு நன்றி
நீக்குநான் பெண்களை மதிப்பவன் என்று சொன்ன வரிகள் அனைத்தும் அற்புதம் சகோ.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ
நீக்குஇது காலத்தின் கோலம். ஒரு சிலர் செய்யும் தவறை திருத்தமுடியும் என நம்புகிறேன். பதிவை இரசித்தேன்!
பதிலளிநீக்குகாலமாற்றத்தில் இதுவும் மாறட்டும் நன்றி நண்பரே
நீக்குபெண்கள்
பதிலளிநீக்குபுகைப்பதும் மது அருந்துவதும்
இன்று தான்...
நன்றே சுட்டிக் காட்டி
விழிக்க வைத்துள்ளீர்கள்
புகையும் மதுவும்
உயிர் கொல்லியே!
வருக நண்பரே நன்றி
நீக்குகில்லர்ஜி...நல்ல பதிவு. ஆனால் சில கருத்துகளுக்கு இப்போது விரிவான பதில் இங்கு தர இயலவில்லை....காரணம் நேரமின்மை...மன்னிக்கவும்...
பதிலளிநீக்குபதிவை ஏற்றுக்கொண்டதுவரை நன்று
பதிலளிநீக்கு