தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 06, 2021

பெயர்த்தி க்ரிஷண்யா

 

ணக்கம் நட்பூக்களே... எனது மூத்த பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்தி என்னை நாடி வருவாள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.

ஒருக்கால் நடவாது போனால் ? ? ? உனக்காகவே இத்தளத்தின் இடது புறத்தின் மேல் பகுதியில் சிவப்பு நிறத்தில் ஓர் அவசரச்செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது அதைப் படித்துக் கொள்க...


பிறகு மீண்டும் அத்தேதியில் வருக, தகவல் பெறுக... வாழ்க நலம்.
 
எனது இறுதிவரை உ(ன்)ங்களது நலம் விரும்பும் ஐயா – கில்லர்ஜி - 06.11.2021சிவாதாமஸ்அலி -
பெயர்த்தி க்ரிஷண்யா இறையருளால் தீர்க்க சுமங்கலியாய் நீடூழி வாழ்க...
 
சாம்பசிவம்-
பெயர்த்திக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள், வாழ்க வளமுடன், என்றென்றும் நலமுடன்...
 
ChavasRegal சிவசம்போ-
இறை துணையோடு, நமது பெயர்த்திக்கு எமத வாழ்த்துகளும்கூடி...

32 கருத்துகள்:

 1. குழந்தை க்ரிஷண்யாவுக்கு ஆசிகள்! உங்கள் பேத்தி நிச்சயம் உங்களைத் தேடி வருவாள். அடுத்த பிறந்த நாள் புகைப்படத்தில் தாத்தாவும், பேத்தியும் இணைந்திருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஆசிகளுக்கும், கருத்துகளுக்கும் நன்றி மேடம்.

   நீக்கு
 2. பேத்தி க்ரிஷண்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ஆசிகள். வாழ்க வளமுடன்!

  2039 வருடத்திற்கு போய் விட்டீர்கள்! இப்போதே பேத்திக்கு அழகான கவிதைகள் எழுதுங்கள். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள், அவள் மழலை பேச்சை , அவள் நடக்கும் அழகை விவரித்து எழுதி அனுப்புங்கள் .வருவாள் கண்டிப்பாய் தாத்தாவை பார்க்க வேண்டும் என்று அப்பா, அம்மாவை அழைத்து கொண்டு வருவாள்.

  நினைவிலும், கனவிலும் பேத்தி கொலுசுகள் சத்தமிட ஓடி வருவதாய் கற்பனை செய்யுங்கள் . நிச்சயம் வருவாள் . தாத்தாவை மகிழ்விக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆறுதலுக்கு நன்றி. தாங்கள் சொல்வது போல் கற்பனையில்தான் வாழ்கிறேன்.

   நீக்கு
 3. மகனுக்கு 26 வது வயதுக்கு அழகான கவிதை எழுதினீர்கள் அது போல அழகான கவிதை எழுதுங்கள் பேத்திக்கு.
  நாளை உங்கள் வலைத்தளத்தில் கவிதையாக பிறந்த நாள் வாழ்த்து வேண்டும்.
  பேத்தியின் படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 4. இன்னொரு பேத்தியும் ஓடி வருவாள். தாத்தாவை தேடி.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பேத்தி இப்போது எங்கே இருக்கிறாள்?  ஏன் இப்போது பார்க்க முடியவில்லை?  கண்டிப்பாக உங்களை அவள் தேடி வருவாள்.  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவை எமது வீட்டிலிருந்து சுமார் ஐநூறு அடி தூரத்தில்... வாழ்த்திய மைக்கு நன்றி ஜி

   நீக்கு

 6. உங்கள் பேத்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்களின் நல்லெண்ணத்தால் உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் அதற்காக என் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் பெயர்த்தி வாழ்க நலமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயா அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 8. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல விதமாக நடக்கும் நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பெயர்த்திக்கு எனது வாழ்த்துகள். பிரிக்கும் காலம் மீண்டும் சேர்க்கும்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  உங்கள் பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  குழந்தை பெயர் நன்றாக உள்ளது. பெயரின் அருமை குணநலன்களுடன் கண்டிப்பாக உங்களுடன் வந்து இருப்பாள். கவலைப்படாதீர்கள். இறைவன் சில நேரங்களில் மனதை வருத்தும் இந்தப் பிரிவை தந்தாலும்,அவனே அடுத்த நொடியிலிருந்து சந்தோஷத்தையும் தந்து விடுவான். அவளின் அடுத்த வருட பிறந்த நாளை உங்களுடன் வந்து கொண்டாடி மகிழ்ந்திருப்பாள். பாருங்களேன்... உங்கள் நல்ல மனதிற்கு கண்டிப்பாக இப்படி நடக்கும். கவலை வேண்டாம். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆறுதலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. நினைப்பது நடக்கும். பெயர்த்திக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 12. பெயர்த்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  பேரன் கோபித்து கொள்வான்... கவனிங்க ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றி எனக்கு பெயரன் இல்லை.

   நீக்கு
 13. தங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்...வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 14. cute.. சிறப்போடு பல்லாண்டு வாழ்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 15. பேத்தி கிருஷண்யாவுக்கு அன்பு நல வாழ்த்துகள். தங்கள் ஏக்கம்
  புரிகிறது. மனிதன் பிரித்ததை இறைவன் இணைப்பான். கவலை
  தீர்ந்து கவிதை எழுதுங்கள். எழுத்துக்கள் எண்ணங்களை விட வலிமையானவை.

  நலமுடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வருகைக்கும், ஆறுதலுக்கும் நன்றி.

   நீக்கு
 16. கலங்காதிரு மனமே
  விரைவில்
  பெயர்த்தி வருவாள்
  மகிழ்வைத் தருவாள்

  பதிலளிநீக்கு