தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 21, 2022

நம்புவோருக்கு நாராயணன்

 

இரவு 11:15 மணி கல்லல் பேருந்து நிலையம் இரவு நேர ரோந்துப் பணியில் தனது பரிவாரங்களோடு வருகிறார் இன்ஸ்பெக்டர் நாராயணன்.
 
அந்த கல் மேலே உட்கார்ந்து இருக்கிறவனை கூட்டிட்டு வாயா...
அருகில் வந்ததும் தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து விட்டு ஒரு கும்பிடு போட்டான்.
 
ம்... உன் பேரென்ன ?
கல்யாணராமன் சார்
 
சொந்த ஊரு ?
சிக்கல்
 
என்ன வேலை செய்யிறே ?
கல்யாண தரகர் சார்
 
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?
ஆமா சார்
 
எந்த ஊருல ?
கல்லூருல...
 
கல்லூரா... நம்ம மாமியார் ஊராச்சே அங்கே யாரு வீட்டுல ?
கல்யாணசுந்தரம் மகள் சார்
 
யாரு கல்குவாரி வச்சு இருக்காரே அவரு மகளா ?
ஆமா சார்
 
அந்தப் பொண்ணு பேருகூட...
கல்யாணி சார்
 
ஆமா... இங்கே இந்நேரத்துல என்ன செய்யிறே ?
கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன் கடைசி பஸ் போயிருச்சு சார்
 
எங்கே கல்யாணம் ?
திண்டுக்கல் சார்...
 
இப்போ எங்கே போகணும் ?
நாமக்கல் சார்
 
சரி நமக்கு தெரிஞ்சவரோட மாப்பிள்ளையா போயிட்டே இப்ப பஸ் கிடையாது லோக்கல் லாரியில போறியா ?
சரி எதுலயாவது ஏத்தி விடுங்க சார்
 
யோவ் கான்ஸ் இப்ப ஏதாவது செங்கல் லாரி வருமா ?
இதோ விசாரிச்சுட்டு வர்றேன் சார்
 
சரி டீ சாப்பிடுறியா ?
இல்லை சார் இப்பத்தான் ஓட்டல்ல பொங்கல் சாப்பிட்டேன்.
 
கட்டைப்பையில என்ன இருக்கு ?
கல்கோனா சார் பையனுக்கு வாங்கிட்டு போறேன்
 
இப்ப முண்டுக்கல் ஏத்திக்கிட்டு போற லாரி வருமாம் நாமக்கல் பைபாஸ்ல இறங்கிக்கலாம் சார்.
அதேநேரம் கல் ஏற்றிய லாரி வந்தது, கான்ஸ் கை காட்டவும் நின்றது.
 
எங்கேயிருந்து வர்றே ?
கல்பாக்கம் கல்குவாரி சார்
 
லோடு எங்கே போகுது ?
கல்லுப்பட்டி சார்
 
நாமக்கல் பைபாஸ்லதானே போறே ?
ஆமா சார்
 
இந்த ஆளை கல்லூரான் கல்லூரிகிட்டே இறக்கி விட்ரு...
சரி சார்.
 
கல்யாணராமா ஏறிக்க...
ரொம்ப நன்றி சார்
 
இன்ஸ் லாரியின் முன்புறம் வந்து பார்த்தார், அதில் கல்பதரு பிரிக்ஸ் என்று எழுதி இருந்தது. காவல்துறை உங்கள் நண்பன் என்றால் நம்புங்கள்.
 

சிவாதாமஸ்அலி-
இந்தப்பதிவில் ஏதும் சிக்கல் இல்லாது இருந்தால் நல்லது
 
Chivas Regal சிவசம்போ-
இவரு ஏதாவது நக்கல் பண்ணாமல் போகமாட்டாரே... நாட்டுல நல்லவுகளும் வாழத்தான் செய்யிறாக...

40 கருத்துகள்:

  1. கலக்"கல்".... பதிவினை ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நலமா ?
      வெகு நாட்களாக காணவில்லையே... வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. // கலக்"கல்" பதிவினை...//

      முந்திக் கொண்டீர்கள் வெங்கட்.  ரசித்தேன்!

      நீக்கு
    3. யெஸ் மீ டூ...ஸ்ரீராம் நானும் லேட்டு!!!,,,வெங்கட்ஜி சூப்பர்

      கீதா

      நீக்கு
  2. சிக்கல் இல்லாவிட்டாலும் கொஞ்சம் நக்கல் இருக்கிறது!  அந்த இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர்களில் ஒரு மைல்கல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. எங்கும் சிறு "கல்" இடறாமல், பதிவெனும் பாதையை செவ்வனே அழகாக போட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தேர்ந்தெடுத்த படங்களும் பொருத்தம். தலைப்பும் அருமை. நம்பினவர்களை நாராயணன் காத்தருள்வார். முதல் தலைப்பிலிருந்து ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. சபாஷ் ! இனிமேல் கில்லர்ஜீ யைக் 'கல்'லர்ஜீ என்று தான் அழைக்கவேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. அதிசய இன்ஸ்பெக்டர்தான். ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நாட்டில் நல்லவர்களும் உண்டு.

      நீக்கு
  6. நம்புவோருக்கு நாராயணன் அருள்வார் உண்மை.
    கலக்கல் பதிவு.
    லாரி படமும் அருமை. கல்பதரு, கோபுர படம். கல்பதரு நினைப்பதை தரும்.
    காவல்துறை உங்கள் நண்பர் என்று முன்பு ஒரு படம் வந்தது சினிமா போடும் போட்டும் தியேட்டரில் போடுவார்கள். பொன்.பரமகுரு என்ற காவல்துறை அதிகாரி எடுத்த படம். தங்கவேலு மற்றும் பல நடித்த படம்.
    கடைசி படத்திற்கு சிவசம்போ சொல்லும் கருத்தும் அருமை.
    நாட்டில் நல்லவர்களும் இருக்கிறார்கள் தான்.
    படங்களை வைத்து அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
    2. மற்றும் பலர் நடித்த படம்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. கல்லிலே கலைவண்ணம் கண்டு விட்டீர்கள் ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முடிந்தவரை செதுக்கி வைப்போம்

      நீக்கு
  8. வித்தியாசமான படங்களை எடுத்துவைத்துக்கொண்டு அதற்கேற்றபடி எழுதுவதற்கே தனித் திறமை வேண்டும். பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது பாராட்டுகளுக்கும், மீள் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  9. கல்.....கல்.....கலக்கல். கருங்கல் போல நல்ல பகிர்வு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. எடைக் கல் ஆனாலும்
    கலைக் கல் ஆக்கி வைக்கும் கலக்கல் மாமணியே கில்லர் ஜி!..

    தடைக் கல் உமக்கில்லை
    வழுக்கல் உமக்கில்லை
    வாழ்கவே பல்லாண்டு கில்லர் ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கவிதை வழியாக வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  11. அருமையான கலக்கல்! உங்கள் திறமைக்கும் கற்பனா சக்திக்கும் அளவே இல்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. மிகச் சிறந்த பதிவு. பாராட்டுகள் கில்லர்ஜி.

    இப்பதிவு காவல்துறையினரின் கவனம் பெறுவது மிகத் தேவையானது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ?

      சில காலங்களாக பதிவுலகம் வரவில்லையே தங்களது கருத்துக்கு நன்றி

      நீக்கு
  13. கில்லர்ஜி, கல் கல் கல்...கல்னு 'கல்லா' நிறைச்சுட்டீங்க...கல்லடி பட்டாலும்ம் கண்ணடி படக்கூடாதுன்னு சொல்லுவாங்களே....இன்ஸ்பெக்டர்க்கு கண்ணடிபடாம!!!...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இந்தக் கல்லை வைத்து வீடு கட்டலாமா ?

      நீக்கு
  14. கில்லர்ஜி கருத்து வந்ததா நான் இங்குப் பார்த்தேனே? இப்போது காணவில்லையே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ இருக்கிறதே...
      முந்தைய பதிவின் கருத்துதான் இல்லை.

      கருத்துரை திடீரென்று ஸ்பேமில் விழுகிறது.

      நீக்கு
  15. பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. நன்று நண்பரே. ரசித்தேன் .
    ஒரு கான்ஸ்டபிள்ஐ தான் கான்ஸ் என்று போட்டிருக்கிறீர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் வார்த்தைகளை தேவையில்லாமல் இழுக்க கூடாது பிறகு வாய் வலிக்குமே...

      நீக்கு