தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 19, 2023

மன்னித்து விடு மகளே...


மது ஊரில் அவசியமின்றி மகிழுந்தில் பறக்கும் மக்களே... இந்த குழந்தை பள்ளிக்கு செல்லும் பொழுது இப்படி சேற்றை வாறி இறைத்து செல்கின்றீர்களே... இவள் உனது மகளாக இருந்தால் எப்படி இருக்கும் ? உனக்கு பணத்தின் திமிரா ? வீடு பக்கத்தில் இருந்தால்கூட உடன் மாற்றி செல்லலாம். ஒருவேளை மற்றொரு சீருடை அழுக்காக இருந்தால் ?
 
மேலும் இந்தக் குழந்தைக்கு வீட்டிலும் வசை கிடைக்கலாம் ? பள்ளிக்கு தாமதமாக சென்று அங்கும் ஆசிரியரின் வசையும் கிடைக்கலாம் ? உங்களை எல்லாம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலைக்கு அனுப்பி பாடம் படிக்க வைத்தால்தான் உணர்வீர்களா ? அரபு நாடுகளில் தலைக்கு தலை, கண்ணுக்கு கண், கைக்கு கை என்று குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பார்கள். இந்தியாவுக்கும் இது வந்தால்தான் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும்.
 
ஆனால் இந்த சட்டங்களை இயற்ற வேண்டிய அரசியல்வாதிகள் இவைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே காலம் கடத்துவார்கள். காரணம் இவைகள் சட்டமானால் அவர்களின் வாரிசுகள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். ஒழுக்கம் என்பது நமது நாட்டு மக்களின் மனதுக்கு ஒட்டாத எட்டாக்கனியாகவே தெரிகிறது. ஒழுக்கத்தை ஓர்முறை சுவைத்துப் பார்த்தால் இறுதி காலம்வரை அச்சுவை தித்திக்கும். நியாயம், தர்மம், நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடும் இப்படித்தான்.
 
உலகமெல்லாம் சுற்றி வரும் அரசியல்வாதிகள் அந்த நாட்டின் நல்ல செயல்களை தமது மக்களுக்கும் போதிக்கும் புத்தி வராதா ? எதற்குத்தான் இவர்கள் அரசாள வருகின்றார்கள் ? பணம் சேரக்க மட்டும்தானா ? அத்தோடு உங்களது கணக்கில் பாவமும் சேர்வது உமது அகக்கண்ணுக்கு தெரியவில்லையா ? புண்ணியத்தை நாடி வாருங்கள் தலைவர்களே...
 
அறச்சீற்றம் கொண்டு
கல்வி பயில் மகளே...
இவர்கள் முகத்தில் காறி
உமிந்து விடு மகளே...
உனக்கும் ஓர் எதிர்
காலம் உண்டு மகளே...
இந்த சண்டாளர்களை
மன்னித்து விடு மகளே...
 
கில்லர்ஜி அபுதாபி

Share this post with your FRIENDS…

37 கருத்துகள்:

 1. பார்க்கவே எரிச்சலூட்டும் காட்சி. சகதி தெறிக்கும் என்றுகூட உணராத கயவன் வண்டியை ஓட,டிச் செல்கிறான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே இப்படி சகடைகள் நாட்டில் நிறைய உண்டு.

   நீக்கு
 2. படத்தை பார்த்தவுடன் மிகவும் வருத்தமும் கோபமும் வருகிறது. ஏன் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள்? சட்டம் போட்டுதான் மக்கள் திருந்துவார்கள் என்றால் நீங்கள் சொல்வது போல சேற்றை அடித்து சென்றவனுக்கு தண்டனை கட்டாயம் கொடுக்கவேண்டும்.
  உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. குழந்தைமனம் மன்னித்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 3. படிக்காத தற்குறி, நம்ம வெங்கோலனும் இப்படித்தான்... குடிசைப்பகுதிகளை துணிகளால் மூடும் பொய்யன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. சும்மா இங்கே சொல்லுவதையும்/காட்டுவதையும் வைத்து எதுவும் சொல்லக் கூடாது. பத்து வருடங்களுக்கு முன்னர் அங்கெல்லாம் போய்ப் பார்த்திருந்தால் வாரக்கணக்கில்/மாதக்கணக்கில் இருந்திருந்தால் இப்போதுள்ள மாற்றங்களை உணர முடியும். இங்கே உள்ள அவலங்களைச் சொல்ல வாயில்லாதவர்கள் மத்திய அரசை மட்டும் குற்றம் கூறுவதை ஏற்கவே முடியாது. தைரியம் இருந்தால் இங்குள்ள அவலங்களையும் எடுத்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

   நீக்கு
 4. கில்லர்ஜி உங்கள் பதிவோடு நானும் டிட்டோ செய்கிறேன். சேற்றை இறைத்தவனோடு அங்கு ரோடு போட்ட???!!! அல்லது ரோடு ஒழுங்காகப் போடாத அத்தனைபேரையும் தண்டிக்க வேண்டும்.

  அப்படத்தைப்பார்த்ததும் அக்குழந்தையின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் ஒரு காலத்தில் இப்பருவத்தில் எனக்கும் இது நடந்துள்ளது. இப்போதும் நடக்கிறது.

  உங்கள் கவிதையும் சூப்பர் கில்லர்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 5. ஆமாம் நம்மூரில் சட்டம் வலுவாக இல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஒரு காணொளியில் பார்த்திருக்கிறேன்.  கார் ஒன்று வேகமாக வரும்.  சேற்றுத் தேங்கி இருக்கும் இடத்தில் கடக்கும் பாதசாரிப் பெண் கையில் ஒரு கருங்கலை எடுத்துக் கொள்வாள்.  கார் உடனே ஸ்லோ ஆகிவிடும்.  ஜாக்கிரதையாக மெதுவாகக் கடக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி நானும் அந்த காணொளியை பார்த்து இருக்கிறேன்.

   நீக்கு
 7. எங்கள் ஏரியாவில் புதிதாக சாலையொன்று போட்டார்கள்.  திருமிகு முதல்வர் அவர்கள் திடீரென உத்தரவு ஒன்று போட்டிருக்கிறாராம்.  எல்லா இடங்களிலும் சாலை போட வேண்டுமென்று., செப்பனிட வேண்டுமென்று.  போட்டு ஒரு வரம் கூட ஆகவில்லை.  இரண்டு மழையைச் சந்தித்தது சாலை.  புதுசாலை போட்ட அடையாளமே இல்லை.  எத்தனை கோடி அடித்தார்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன், சாலை போட்ட மறுநாள் கையால் பெயர்த்து எடுத்து காண்பித்தார்கள் ஊர் மக்கள்.

   நீக்கு
  2. நானும் பார்த்தேன்.  அது பணி முடிந்ததும் திருமிகு முதல்வர் அவர்கள் நேரில் ஆய்வு செய்த சாலை வேறு!

   நீக்கு
  3. அவருக்கு பிறரை கண்டிக்கும் தகுதி உண்டா ?

   நீக்கு
  4. தகுதியா? தைரியமா?

   நீக்கு
  5. ஆமாம் ஜி தைரியம் உண்டா ? என்றுகூட கேட்கலாம்.

   நீக்கு
 8. நான் தினசரி பயணம் செய்யும், செய்த சாலைகளில் பயணித்தால் உடலினுள் எலும்புகள்  இடம் மாறும்.  கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பனிக்குடத்தினுள் மூழ்கும்.  சட்டைப்பையில் வைத்திருக்கும் பொருட்கள் சாலையை நோக்கி எகிறிப் பறக்கும். தலை அடிக்கடி கூரை தொட்டு வரும்.  அதிருஷ்டம் இருந்தால் வண்டியினுள்ளேயே தொடர்ந்து பயணம் செய்யலாம்.  தமிழக சோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இன்னும் இந்நிலை மாறவில்லை ஜி

   நீக்கு
 9. இந்த மாதிரி அறச்சீற்றம் எனக்கும் ஏற்படுகின்றது..

  இன்று பேருந்தில் பொறுப்பாக பேசத் தெரியாத நடத்துனருடன் தகராறு..

  என் மனைவியின் கோபம் என்னிடம்..

  போனோம் வந்தோம் என்று இருக்காமல் உங்களுக்கு ஏன் பிறரது பிரச்னை?.. என்று..

  இந்த பஸ் திருவையாறு போகாது என்றால்!..

  போய் போர்டை பார்!..

  எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்/ ஊருக்குப் புதியவர்கள் - ஆகியோர் யாரிடம் கேட்பது?..

  அந்தப் பேருந்தில் இருக்கின்ற நடத்துனரைத் தானே..

  நடத்துனர் சாப்பிடுகின்ற நேரம் என்றால்!...

  நடத்துனர் பேருந்துக்குள் இருந்தால் அவரைத் தானே கேட்பார்கள்...

  சாப்பாட்டு நேரத்தில் கேட்டதற்காக மூதாட்டியை வசை பாடுவது எந்த விதத்தில் நியாயம்?..

  இதைச் சொன்னதற்காக நடத்துனரும் ஓட்டுனரும் என்னை வசை பாடி தீர்த்தனர்..

  ஒழுக்கம் என்பது நமது நாட்டில் பலருக்குப் பிடிக்காதது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நமது நாட்டில் நடத்துநர்கள் பொதுமக்களை மதிப்பதே இல்லை.

   இலவசமாக அரசு பேருந்து விடுகிறது அதில் பயணிப்பவர்களை நடத்துநர்கள் இழிவாக பேசுகின்றனர்.

   நியாயம் என்பது நம்மில் பலருக்கும் கிடையாது.

   தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஜி.

   நீக்கு
 10. நன்றாக இருந்த சாலையை உடைத்து விட்டு நவீன தொழில் நுட்பத்தில் போடப்பட்ட சாலைகள் தண்ணீருடன் இணை பிரியாமல் குலாவிக் கொண்டிருக்கின்றன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பணத்தை சுருட்டுவதற்கான செயலின்றி வேறில்லை.

   நீக்கு
 11. நல்ல மழைக்காலத்தில் தானே சாலை போடவேண்டும் என்னும் எண்ணமே இவங்களுக்கு வரும். திநகரில் தாமோதரா தெருவில் தீபாவளிக்கு முன்னால் சாலை போட வெட்டிப் போட்டிருக்காங்க. ஒரு வரம் மழை. :( ஏற்கெனவே அங்கே உஸ்மான் சாலையில் மெட்ரோ திட்டத்துக்காகச் சாலையை மறித்து வெட்டிப் போட்டுக் கழிவு நீரும்/குடி நீரும் கலந்து அங்குள்ள 2,3 தெருக்களுக்குக் குடி நீர் விநியோகமே இல்லை. ஏனெனில் லாரியும் வர முடியாது. பொதுமக்கள் படும் கஷ்டம் அவ்வளவு இவ்வளவு இல்லை. இதை எல்லாம் எடுத்துச் சொல்லுவோரும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   நல்லதை நல்ல எண்ணத்தோடு செய்யும் எண்ணம் அரசுக்கு வருவதில்லை.

   நீக்கு
 12. நல்லவேளையாகச் சென்னைப் போக்குவரத்திலிருந்தும் பேருந்துப் பயணங்களில் இருந்தும் தப்பித்தோம். இறைவனுக்கு நன்றி. இம்மாதிரிக் கழிவு நீர்/மழை நீர் சேறோடு மேலே வாரிப் பல முறை அடித்திருக்கிறது. வீட்டுக்கு வந்து உள்ளே செல்லாமல் சுத்திப் போய்க் குளிக்கணும். துணிகளை இரண்டு நாட்கள் ஊற வைத்துத் தோய்க்கணும். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய நகரங்களில் வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கிறது.

   தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 13. அறச்சீற்றம் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்

  பதிலளிநீக்கு
 14. அட....பாவிகளே....வாகனத்தில் செல்கின்றோம் என்ற திமிர்தான்.

  பதிலளிநீக்கு