வணக்கம் ஐயா
கொங்கு மலையார் அவர்களே சமூக ஆர்வலரான தங்களிடம் பேட்டி காண்பதில் எங்களது
கொழுஞ்சி பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது பேட்டியை ஆரம்பிக்கலாமா ?
நன்று நல்லதே நிகழட்டும் கொழுஞ்சிக்கு எமது வாழ்த்துகளோடு...
ஐயா இன்றைய இளைய
சமூகம் சரியான பாதையில் செல்வதாக தாங்கள் கருதுகின்றார்களா ?
அதற்கான காலங்கள் வந்தால் ? நிச்சயம் சொல்கிறேன்.
அந்தக்
காலங்களுக்கான சூழல் எப்படி இருக்கும் ?
வடநாட்டவர்களின் வரவு தமிழகத்தில் குறைந்து இருக்கும்.
வடநாட்டவர்களின்
வருகை குறைவுக்கும் இளைய சமூகத்தினரின் பாதை சரியாக செல்வதற்கும் ஏதும் பந்தம்
இருக்கிறதா ?
நிச்சயமாக, அன்று அலைபேசிகளின் உபயோகம் குறைந்து இருக்கும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படும்.
அரசியல் விழிப்புணர்வு
அன்றைய சூழலில் மக்களுக்கு எவ்வாறு ஈடுபாடு இருக்கும் ?
வாரிசு அரசியலுக்கு மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி விடுவார்கள், இளைஞர்களும், வேலை இல்லாதோர்களின் குறைவு காரணமாக வாழ்க என்ற வெட்டி கோஷத்தை மக்கள் மறக்க ஆரம்பித்து விடுவார்கள். நெடுஞ்சாலைகளில், தெருக்களில், சந்து பொந்துக்களின் முனைகளில் மக்களுக்கு இடையூராக கொடிக்கம்பங்கள், தலைவர்கள் பெயர் பொறித்த சிறிய கல்வெட்டுக்கள் இருக்காது.
திரைத்துறையினரின்
வாழ்வாதாரம் எப்படி இருக்கும் ?
சாலையில் செல்லும்போது ரசிகர்கள் தங்களிடம் கையெழுத்து கேட்காததாலும், செல்ஃபி எடுக்க விரும்பாததாலும், முன்பு போல மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாததாலும், பதாகைகளுக்கு பாலூற்றாததாலும், தயாரிப்பாளர்களும் வேறு தொழிலுக்கு சென்று விடுவது பெறுகி விட்டதாலும் பூவாவுக்கு வழியின்றி தாங்களும் சிறுகுறு தொழில் செய்தும் பிழைப்புத் தேடியும் அலைவார்கள்.
கிரிக்கெட்
விளையாட்டாளர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ?
அவர்களுக்கு எப்படி இருக்கும் ? இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பெற்ற காரணத்தால் இவர்களின் வாழ்வு நிலையும் மாறிவிடும்.
தமிழகத்தில்
காவல்துறையினரின் செல்பாடுகள் சிறப்பாக இருக்கிறதா ?
சமிக்ஞை திடலில் சாலையின் எல்லைக் கோட்டைத்தாண்டி நின்று எதிர் சாலையிலிருந்து வரும் வாகனங்களை மறைத்துக் கொண்டு நிற்பவர்களை அதே இடத்தில் நிற்கும் காவலர்கள் அபராதம் விதிக்காமல், மூத்திரச்சந்தில் பத்துக் கிலோ மீட்டர் வேகத்தில் வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் விதிப்பது என்று நிற்கிறதோ அன்றுதான் சிறப்பாக செயல்படுவதாக சொல்வேன்.
தலைக்கவசம்
அணிவது மக்களின் உயிர் பாதுகாப்புக்காக நீதிபதிகள் இயற்றிய சட்டம்தானே ஐயா ?
இந்த சட்டத்தை இயற்றிய நீதிபதிகளை பத்து தினங்களுக்கு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தச் சொல்லுங்கள் பார்க்கலாம், அவர்கள் குளிரூட்டப்பட்ட மகிழுந்தில் சென்று வருபவர்கள் அவர்களுக்கு அடிப்படை மக்களின் வேதனைகள் புரியாது.
இந்நிலையை
மாற்றுவது மக்களின் மனப்போக்கு மாறினால்தானே ?
நிச்சயமாக மாற்றம் வந்தாலே இவைகள் சாத்தியமாகும்.
மருத்துவமனைகளின்
செயல்கள் தற்போது மிகவும் கொடூரமாக இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள் ஆட்சி மாற்றம்
வராவிட்டால் மருத்துவத்துறையின் செயல்கள் இனிமேல் எப்படி இருக்கும் ?
மருத்துவமனைக்கு வருபவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று நாம் முதலில் அவர்கள் தரும் அட்டவணையில் கையெழுத்து போட்ட பிறகே உள்ளே நுழைய முடியும் என்ற நிலைப்பாடு நிச்சயமாக வரும். மக்களும் மறுப்பு சொல்ல முடியாது காரணம் எங்கும் இதேநிலைதான் நோயாளிகளின் உடல் உறுப்புகள் மருத்துவர்களால் திருடப்படும், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் முடியாது காரணம் மருத்துவமனையை நடத்துபவர்கள் அனைவருமே ஆளுங்கட்சியினர்தான். அப்படியே போனாலும் நோயாளிக்கு திதி கொடுத்த பிறகும் வழக்கு தொடரும்...
அரசியல்வாதிகளின்
ஊழல்கள் எந்த நிலைவரை போகும் ?
இனி வரும் காலங்களில் மக்களின் பணத்தை அவர்கள் மில்லியன் கணக்கில் கொள்ளை அடிப்பார்கள், விலைவாசிகள் மேலும் உயர்ந்து கொண்டே போகும்.
நல்லது ஐயா
நேரத்தை எங்களுக்கு பேட்டியாக தந்தமைக்கு எங்களது கொழுஞ்சி சார்பாகவும், எமது
சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றி கொழுஞ்சி மேலும் செழிக்க எமது வாழ்த்துகள்.
கில்லர்ஜி தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
இவரு தேர்தலில் நின்றால் ஓட்டுப் போடலாம் போலயே... ?
நன்று நல்லதே நிகழட்டும் கொழுஞ்சிக்கு எமது வாழ்த்துகளோடு...
அதற்கான காலங்கள் வந்தால் ? நிச்சயம் சொல்கிறேன்.
வடநாட்டவர்களின் வரவு தமிழகத்தில் குறைந்து இருக்கும்.
நிச்சயமாக, அன்று அலைபேசிகளின் உபயோகம் குறைந்து இருக்கும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படும்.
வாரிசு அரசியலுக்கு மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி விடுவார்கள், இளைஞர்களும், வேலை இல்லாதோர்களின் குறைவு காரணமாக வாழ்க என்ற வெட்டி கோஷத்தை மக்கள் மறக்க ஆரம்பித்து விடுவார்கள். நெடுஞ்சாலைகளில், தெருக்களில், சந்து பொந்துக்களின் முனைகளில் மக்களுக்கு இடையூராக கொடிக்கம்பங்கள், தலைவர்கள் பெயர் பொறித்த சிறிய கல்வெட்டுக்கள் இருக்காது.
சாலையில் செல்லும்போது ரசிகர்கள் தங்களிடம் கையெழுத்து கேட்காததாலும், செல்ஃபி எடுக்க விரும்பாததாலும், முன்பு போல மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாததாலும், பதாகைகளுக்கு பாலூற்றாததாலும், தயாரிப்பாளர்களும் வேறு தொழிலுக்கு சென்று விடுவது பெறுகி விட்டதாலும் பூவாவுக்கு வழியின்றி தாங்களும் சிறுகுறு தொழில் செய்தும் பிழைப்புத் தேடியும் அலைவார்கள்.
அவர்களுக்கு எப்படி இருக்கும் ? இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பெற்ற காரணத்தால் இவர்களின் வாழ்வு நிலையும் மாறிவிடும்.
சமிக்ஞை திடலில் சாலையின் எல்லைக் கோட்டைத்தாண்டி நின்று எதிர் சாலையிலிருந்து வரும் வாகனங்களை மறைத்துக் கொண்டு நிற்பவர்களை அதே இடத்தில் நிற்கும் காவலர்கள் அபராதம் விதிக்காமல், மூத்திரச்சந்தில் பத்துக் கிலோ மீட்டர் வேகத்தில் வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கு அபராதம் விதிப்பது என்று நிற்கிறதோ அன்றுதான் சிறப்பாக செயல்படுவதாக சொல்வேன்.
இந்த சட்டத்தை இயற்றிய நீதிபதிகளை பத்து தினங்களுக்கு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தச் சொல்லுங்கள் பார்க்கலாம், அவர்கள் குளிரூட்டப்பட்ட மகிழுந்தில் சென்று வருபவர்கள் அவர்களுக்கு அடிப்படை மக்களின் வேதனைகள் புரியாது.
நிச்சயமாக மாற்றம் வந்தாலே இவைகள் சாத்தியமாகும்.
மருத்துவமனைக்கு வருபவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று நாம் முதலில் அவர்கள் தரும் அட்டவணையில் கையெழுத்து போட்ட பிறகே உள்ளே நுழைய முடியும் என்ற நிலைப்பாடு நிச்சயமாக வரும். மக்களும் மறுப்பு சொல்ல முடியாது காரணம் எங்கும் இதேநிலைதான் நோயாளிகளின் உடல் உறுப்புகள் மருத்துவர்களால் திருடப்படும், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் முடியாது காரணம் மருத்துவமனையை நடத்துபவர்கள் அனைவருமே ஆளுங்கட்சியினர்தான். அப்படியே போனாலும் நோயாளிக்கு திதி கொடுத்த பிறகும் வழக்கு தொடரும்...
இனி வரும் காலங்களில் மக்களின் பணத்தை அவர்கள் மில்லியன் கணக்கில் கொள்ளை அடிப்பார்கள், விலைவாசிகள் மேலும் உயர்ந்து கொண்டே போகும்.
நன்றி கொழுஞ்சி மேலும் செழிக்க எமது வாழ்த்துகள்.
கில்லர்ஜி தேவகோட்டை
இவரு தேர்தலில் நின்றால் ஓட்டுப் போடலாம் போலயே... ?
ஐயா ஆசை தோசை அப்பளம் வடை என்றால் ன்ன என்று விளக்க முடியுமா?
பதிலளிநீக்குமுடியும். நண்பர் தேவகோட்டைஜி எதிர்காலத்தில் கிரிக்கெட் இருக்காது, நடிகர்கள் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறாரே.. அதுதான் அது! நல்லவேளை எல்லாமே சரியாகி பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லவில்லை.
ஹா.. ஹா.. ஹா.. சூப்பர் ஜி
நீக்குஐயா.. அப்போதும் மக்கள் குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் வாக்கை விற்பார்களா?
பதிலளிநீக்குஇல்லை, வெற்றிபெறும் வேட்பாளர் அடுத்த ஐந்தாண்டுகளில் சம்பாதிக்கும் தொகையில் அறுபது சதவிகிதம் தொகுதி மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இருபது சதவிகிதம் தர்மகாரியங்களுக்கு செல்ல வேண்டும்.
தர்ம காரியங்கள் சிறப்பு ஜி
நீக்குநம்ம வெங்கோலன் கும்பல் சுருட்டியது தான் அதிகபட்ச சாதனை...
பதிலளிநீக்குவாங்க ஜி அடுத்தும் சாதிக்கணுமாமே...
நீக்குஎன்னமோ..
நீக்குஇவனுங்க மட்டும்
தான் அக்குமார்க்கு செங்கோலன் மாதிரி!..
குத்தகைக்கு எடுத்து இருப்பாங்களோ...
நீக்குபெரம்பலூர் கல் குவாரி நிகழ்வுக்குப் பின்னரும் மோதியைக் கண்டிப்பதா? ஒரு வேளை மோதி தான் இதையும் செய்யச் சொன்னாரோ? :)
நீக்குகாவல் துறை அரசு அதிகாரிகள் என அனைவரையும் போட்டுத் தாக்குவது தான் செங்கோலின் மேன்மை போலும்.
நீக்குநமது பிரதமர் மோடி அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் விலை இதோ...
நீக்குகண்ணாடி 38 லட்சம்
பீட்டர் பார்க்கர் பேனா 14 லட்சம்
மார்டின் மோல்ட் ஜாக்கெட் 26 லட்சம்
டிராகன் Z வாட்ச் 6.7 லட்சம்
நோபில் M 600 கச்சை 22.7 லட்சம்
பெவிலியன் பேன்ட் 18 லட்சம்
Puffer Fish Toxin ஷூ 10 லட்சம்
ஆப்பிள் ஐ போன் M12
தினமும் மூன்று வேளை காளான்தான் சாப்பிடுகிறார் ஒருவேளையின் விலை 4 லட்சம்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் பிரதமர் இமெல்டா மார்க்கோஸூக்கு ஏற்பட்ட நிலை வரும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கும்ம்ம்ம்ம் நல்லது கில்லர்ஜி. இதைப் போலவே மற்ற மந்திரிகள், முக்கியமாய்த் தமிழ்நாட்டு மந்திரிகளின் நிலை பற்றியும் விபரமாகக் கேட்டறிந்து போடுங்கள். மோதி ஒருத்தரையே எத்தனை முறை தான் சொல்லுவது? அவரோ திருந்துகிறாப்போல் இல்லையே!
நீக்குகோராவில் வருவது எல்லாம் நம்பிக்கைக்கு உரியது அல்ல. நான் பல விஷயங்களில் பார்த்துட்டேன். கோரா அத்தனை உபயோகமாவும் இல்லை.
நீக்குஎனக்கு கட்சி பேதம் கிடையாது எவர் சிக்கினாலும் எழுதுகிறேன்.
நீக்குமீள் வருகைக்கு நன்றி சகோ
//எனக்கு கட்சி பேதம் கிடையாது எவர் சிக்கினாலும் எழுதுகிறேன்//...
நீக்குஅது சரி.... நம்ம துண்டு சீட்டு "ஸ்டாலின் ஜி" இன்னும் உங்களிடம் சிக்கவில்லையே... அது ஏனோ?... சிக்கினால் அது இடியாப்ப சிக்கலில் உங்களை கொண்டுபோய் விட்டுவிடும் என்கின்ற பயமோ?... கில்லர்ஜி இதற்கெல்லாம் பயப்படலாமோ?!!...
நண்பருக்கு நான் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அரசியல்வாதிகளை தேர்வு செய்கிறேன்.
நீக்குஎனது பதிவுகளை தொடர்ந்து வந்தால்தானே உங்களுக்கு தெரியும்.
ஆடிக்கும், அமாவாசைக்கும் வரும்போது இப்போது ஏதாவது ஒன்று சிக்கி விடுகிறது.
பந்தலும் மேடையும் போட்டுகிறான்
நீக்குஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான்
ஓட்டுகள் போட்டிட கேட்கிறான்
அதப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான்
எல்லாமே வேஷம்தான் ஏதேதோ கோஷம்தான்
எங்கேயும் தில்லுமுல்லு
திண்டாடுது தேசம்தான்
எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும் ?
அப்பாவி மனுஷனெல்லாம் சிவப்பா மாறணும்
ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல
புத்தனும் இல்ல ஹே...ஹே....ஹே....
எத்தனை எத்தனை சாமியடா இதில்
என் மதம் உன் மதம் சண்டையடா
எத்தனை எத்தனை ஜாதியடா இதில்
முட்டுது மோதுது மண்டையடா
கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு
எல்லோரும் கோயில் கட்டி
இங்க இப்போ என்னாச்சு ?
தன்னால புரிஞ்சிக்கிட்டு
எல்லாரும் திருந்தணும்
இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும்
அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
புண்ணியமில்ல ஹே...ஹே...ஹே...
எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல
நம்ம நாட்டுல ரோட்டுல
வீட்டுல காட்டுல
எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
பொன்னான பாரதம் புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு
மன்னன் இல்ல மன்னன் இல்ல...
இளையராஜா பாடிய சூப்பர் பாடல் ஜி
நீக்குஇளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
பதிலளிநீக்குமக்கள் மனபோக்கும் மாற வேண்டும்.
பேட்டியில் உறுதியாக தெரிவது அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதும் , விலைவாசி ஏறுவதிலும் ஒரு மாற்றம் ஏற்படாது என்று தெரிகிறது.
வருக சகோ
நீக்குசரியாக சொன்னீர்கள்.
கில்லர் ஜி ..
பதிலளிநீக்குதங்களது
சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி
நீக்குஇந்தப் பதிவில் நீங்கள் கண்டிருக்கும் கனவுகள் அனைத்தும் பலிக்கட்டும். கொஞ்சம் நடுநிலையாகவும் பார்த்து எழுதுங்கள் நண்பரே!
பதிலளிநீக்குவருக சகோ நான் எப்போதும் நடுநிலையாளர்தான் அரசியல்வாதிகள் எப்போதும் எனக்கு வெகுதூரம் தான்.
நீக்குஇன்னாது நடுநிலையா?.... (அது எங்க இங்க இருக்கு)...
நீக்குஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எங்கள் கில்லர்ஜி அய்யாவை பாளையாங்கோட்டை சிறையில் "களி" திங்க வைத்துவிடுவீர்கள் போல் தெரிகிறதே... நடுவாவது கிடுவாவது... ஒன்லி சென்ரல் கவர்மெண்ட்... நோ ஸ்டேட் கவர்மெண்ட்...
ஏன் இதில் கூட காவல்துறையை சொல்லி இருக்கிறேன்.
நீக்குகாவல்துறை மாநில அரசுதானே...
வாரிசு அரசியலை சொல்லி இருக்கிறேன் அதை படிக்கவில்லையா ?
ம்ம்ம்ம்ம்ம்ம் கப் சிப். வாயில் பிளாஸ்திரி. நடுநிலை நாட்டு நிலை.
பதிலளிநீக்குவாங்க ஐயா
நீக்குவாயை மூடிக்கொண்டால் நடுநிலையா ?
கில்லர்ஜி!! paதிவு நல்லாருக்கு. கண்டிப்பா, ஐயா சொல்றது போல, மக்கள் மாறலைனு வைங்க, அரசியல்வாதிகள் திருந்தலைன்னு வைங்க, திரை உலகம் உருப்படியா இல்லைன்னு வைங்க...எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஏனென்றால் அரசியல் வாதிகளின் கொள்ளையும், திரையுலகம் பின்னால் ஓடும் சமுதாயமும் அபப்டியேதான் இருக்கப் போவுது. அரசியல்வாதிகளின் இனாம் வழங்கலும் நிக்கப் போவதில்லை.
பதிலளிநீக்குமுதல்ல டாஸ்மாக் ஒழியட்டும் அப்புறம் மாற்றம் பற்றி யோசிக்க சொல்லுங்க ஐயாவ. ஐயாகிட்ட டாஸ்மாக் பத்தி கேக்கவே இல்லையே என்னய்யா பேட்டி இது ஹாஹாஹாஹா....ஐயா டாஸ்மாக் ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்னு நெறியாளர்கிட்ட கேட்கச் சொல்லுங்க ஜி அடுத்த பேட்டில...கேட்டு இங்க சொல்லுங்க!!!
கீதா
வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்கு"டாஸ்மாக்" ஸ்டேட் கவர்மெண்ட் ஆச்சே... நமக்கேன் வம்பு... மோடி திட்டத்தை பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருப்போம்.... அதுதான் நமக்கு பாதுகாப்பு....
நீக்குடாஸ்மாக் குறித்த பதிவுகளை படித்து இருக்கிறீர்களா ?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்ல பேட்டி. பதிவில் தங்கள் ஆதங்கம் தெரிகிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்று இப்படியெல்லாம் நடக்குமா? நடந்தால் நல்லதுதான். நேற்று சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் பதிவிலும் வருங்கால மாற்றங்கள் என்பதை பற்றி பலவற்றை சொல்லியிருக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குதங்களது வருகைக்கும், தகவல் செய்திக்கும் நன்றிகள் பல!
சமூகத்தின் மீதான அக்கரை . இப்படியும் வெளிப்படுத்தலாம்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான பதில்கள்.
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு