தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 01, 2024

கீழக்கரை, கீரைவடை கீர்த்திவாசன்

ணக்கம் நண்பர்களே... ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’’ என்ற கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
இதோ எனது பாடல்...
 
கீழக்கரையினிலே.... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆ....
கீழக்கரையினிலே கீரைவடை தந்தவளே
கீர்த்திவாசன் காவலிலே உன்னை
தஞ்சம் தாரும் தாயே
தென்னம் பாளை தடை கடந்து நகன்றிடும் குயிலே
ஓசை தர கல்லு நெஞ்சம் வீசுவோம் வெயிலே
 
என்னைத் தரும் வேளையிலே
விட்டு போற கண்ணே
கல்லு நெஞ்சம் நீயும் பாரேன்
ஊர்ந்து பேசி போவாய் பெண்ணே
தென்னம் பாளை தடை கடந்து நகன்றிடும் குயிலே
ஓசை தர கல்லு நெஞ்சம் வீசுவோம் வெயிலே
 
பூ மரத் தோட்டத்திலே கீர்த்தி தருவேன்
பூங்குயிலே கீர்த்தி தருவேன் பூங்குயிலே
தாபம் கண்ட வாசனை விட்டு போகலாமோ
என் கிளியே தாபம் கண்ட வாசனை விட்டு
போகலாமோ என் கிளியே
 
தென்னம் பாளை தடை கடந்து நகன்றிடும் குயிலே
ஓசை தர கல்லு நெஞ்சம் வீசுவோம் வெயிலே
தென்னம் பாளை தடை கடந்து நகன்றிடும் குயிலே
ஓசை தர கல்லு நெஞ்சம் வீசுவோம் வெயிலே
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1958
படம்: முதலாளி
பாடலாசிரியர்: கவிஞர் கா.மு.ஷெரீஃப்
இசை: கே.வி.மஹாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
 
இதோ கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களின் பாடல் வரிகள்
 
ரிக்கரையின் மேலே.... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆ....
ஏரிக்கரையின் மேலே.... போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசிப் பேவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=hxrySZ7R3OQ
நன்றி – கில்லர்ஜி அபுதாபி
 
நட்பூக்களே அபுதாபியிலிருந்து கில்லர்ஜியின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2024
காணொளி 

18 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    அருமையான பாடல். இது போல் பாடல்களை மாற்றியமைத்து சிறப்பாகத் தரும் தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். மெட்டுக்கேற்றபடி பாடலை பிறகு பாடி பார்க்கிறேன். காணொளியும் பிறகு கண்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமே... நலமா ?

      தங்களுக்கு வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையான ஒரு பாடலை இப்படி மாற்றிவிட்டால், அந்தப் பாடல் ஒலிக்கும்போது கீரைவடை நினைவுக்கு வராமல் இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நல்லதுதான் உடனே வீட்டில் சொல்லி சுடவேண்டியதுதானே...

      நீக்கு
  3. கவிதை, காணொளி எல்லாம் அருமை.
    ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  4. நல்லாருக்கு கில்லர்ஜி வழக்கம் போல. ஓரிரு இடங்களில் மட்டும் வார்த்தைகள் தாளம்/பீட்டிற்கு டக்கென்று பாட வேண்டி வருகிறது.

    ஏரிக்கரை பாடல் மிக அருமையான பாடல். சிந்துபைரவி படத்தில் கூட இந்தப் பாடலின் ராகம் குறித்து ஒரு சின்ன வாதம் வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாடலை இரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. கி கி கி கீரைவடை...!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்கொட்லாண்டிலிருந்து அபுதாபிக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    அழகிய பிடிச்ச பாடல்..
    நான் இண்டைக்குக் கீரை வடைதான் சுடப்போறேன்.. ஊற விட்டிருக்கிறேன்.. செவ்வாய்க்கிழமை எல்லோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரை வடை (12) அபுதாபிக்கு பார்சல் அனுப்பவும்.
      நன்றி அதிரா.

      நீக்கு
  8. நல்ல கற்பனை! புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி! உங்களுக்கும் இந்த 2024 எல்லா நன்மைகளையும் தர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

      நீக்கு