தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 13, 2024

எள்ளுப்பெயரன் ஆளட்டும்

த்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களுக்காக சேவை செய்யிறோம்னு சொல்லி விட்டு தனது மக்களுக்கு சொத்து சேர்ப்பதே குறிக்கோளாக இருக்கின்றார்களே இந்த பெட்ரோலுக்கான வரிகளை நீக்கினால்தான் என்ன ? மற்ற அனைத்து விலைவாசிகளும் ஏறுவதற்கு இதுதானே மூலகாரணம். உலக அளவில் எல்லா நாடுகளுமே கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோலின் விலையை குறைத்து விட்டது.
 
ஆனால் இந்தியாவுக்கு மட்டும் செய்வினை செய்துட்டாங்கே... உங்கள் மக்கள் நல்லபடியாக வாழவேண்டாமா ? ஊருப்பய காசை கொள்ளையடிச்சு உம்மாவுக்கு பாத்தியா ஓதுறீங்களே... கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறீங்களே... இது நியாயமாரே ? இந்தப் பணத்தை கோடிக்கணக்கில் சேர்த்து வச்சு என்னதான் செய்யப் போறீங்க ? கொள்ளையடிங்க, கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா ? மரத்திலிருந்து கிளையை ஓடித்து கொள்பவன் புத்திசாலி வேறோடு சாய்ப்பவன் முட்டாள்.
 
பதவி என்பது பொன் முட்டையிடும் வாத்தல்லவா ? நீங்கள் இதுகூட தெரியாத வாத்து மடையர்களா ? நல்லது கொஞ்சம் செய்து மக்களுக்கு சற்றேனும் மகிழ்வைக் கொடுக்க கூடாதா ? மத்திய அரசே... நல்லது செய்து மாற்றத்தைக் கொடுக்க கூடாதா ? மாநில அரசே...
 
மக்களின் மனதை ஏதாவது புரளியைக் கிளப்பி விட்டு அதில் அவர்களை குழப்பி விடுவது இன்னும் எத்தனை காலம் ? நல்லதை நினையுங்கள் நல்லதை செய்யுங்கள் உங்களது கொள்ளுப்பெயரன் மட்டுமல்ல, எள்ளுப்பெயரன் வரை நாங்கள் வாக்களிப்போம். இந்த வார்த்தை சம்சாரிக்கு மட்டுமல்ல, பிரம்மச்சாரிக்கும் சேர்த்துதான்.
 
இந்திய ஒரு ரூபாயை பெறுவதற்கு, அமெரிக்க பதினேழு டாலர்களை கொடுத்த காலத்தை மாற்றி அமெரிக்க ஒரு டாலரை வாங்க, இந்திய எண்பத்து மூன்று ரூபாயை கொடுக்க வைப்பதற்கா இந்த சுதந்திரம் ? இதுக்கு பேசாமல் அந்த இங்கிலீசுக்கார மச்சானையே ஆள விட்ருக்கலாமே... ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள். முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் இமெல்டா மார்க்கோஸை நினைத்துப் பாருங்கள் இன்றிருப்பார் நாளை இல்லை.
 
கில்லர்ஜி அபுதாபி

சிவாதாமஸ்அலி -
இராணுவத்தினரின் சவப்பெட்டியில் ஊழல் செய்த, பெர்னாட்ஷாவுக்கே மீண்டும் வாக்களித்து ரட்சித்தவர்கள் நமது மக்கள்.

28 கருத்துகள்:

  1. பெட்ரோல் விலை குறைந்தால் விலைவாசி குறைய வாய்ப்புள்ளது...  உள்ளதா??  பலமுறை ஏற்ற இறக்கங்களை கண்டுள்ள இந்த பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி விலையேற்றிய பொருட்களை ஹோட்டல்களோ, வணிக நிறுவனங்களோ மறுபடி எப்போதாவது கொஞ்சமாவது குறைத்திருக்கின்றனவா?  இருப்பினும் சாமானிய மக்களின் போக்குவரத்து செலவைக் குறைக்க பெட்ரோல் விலை குறைப்பதை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.  ஒன்றிய அரசு, குன்றிய அரசு இரண்டும் இதில் முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      "குன்றிய அரசு" ரசிக்க வைத்தது

      நீக்கு
  2. நல்ல பதிவு.
    பெட்ரோல் விலை குறைந்தால் நல்லதுதான். விலைவாசியை கட்டுப்படுத்தமுடியும்.
    கடைசி செய்தி மக்களுக்கு மறதி நோய் இருப்பதை காட்டுகிறது.
    நல்லது செய்தால் தொடர்ந்து எள்ளுப்பெயரனுக்கும் வாக்கு அளிப்போம் தான்.

    பூம் பூம் மாட்டுக்காரார் படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அந்தப் படத்தில் இருப்பது எஜிப்தியர்கள்.

      நீக்கு
    2. கீழே விளம்பரத்தில் விலை பட்டியலில் இருக்கும் பூம் பூம் மாட்டுக்காரரை சொன்னேன் ஜி.

      நீக்கு
    3. ஓ... அப்படியா ? நான் விளம்பரத்தை பார்க்க வில்லை.

      மேலும் விளம்பரம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும்.

      தங்களது மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. கில்லர்ஜி! "தனது மக்களுக்கு'த்தானே சேர்த்து வைக்கிறாங்க!!! நாட்டு மக்கள் அவங்க மக்கள்தானேங்க!!! ஹாஹாஹாஹா சும்மா...தனது மக்கள் என்ற சொற்களைக் கண்டதும் இப்படித் தோணிச்சு!

    ஆனா ஒண்ணு, கில்லர்ஜி, கண்டிப்பா பெட்ரோல் விலை டீசல் விலை குறைந்தால் எந்தப் பொருளின் விலையும் குறையப் போவதில்லை. ஏறுமுகம் தான் இருக்குமே அல்லாமல் இறங்குமுகம் இருக்காது. ஹோட்டல்ல விலையைக் குறைப்பாங்கன்றீங்க? சந்தையில் காய்களின் விலை தானியங்களின் விலை குறைந்தாலும் கூட வணிக நிறுவனங்கள், உணவகங்கள் ஏற்றிய விலையைக் குறைக்க மாட்டாங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் கில்லர்ஜி, இப்போது அரசின் வருமானமென்பதே பெட்ரோல், டீசல், மற்றும் பெவரேஜஸ் லிருந்துதானே. பின்னர் நம் மொபைல் ஃபோன், இணையம் இவற்றின் உபயோகம், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் வரி இவற்றால்தானே. எனவே விலைவாசி குறையும் என்பது நடக்குமா தெரியவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் உணர்ந்து பார்க்காதவரையில் அரசு உணரப்போவதில்லை.

      நீக்கு
  5. கில்லர்ஜி இந்தியாவின் ரூபாயின் மதிப்பு ரொம்பக் குறைந்துகொண்டே போகிறது என்பது மிகவும் வேதனைப்பட வேண்டிய விஷயம்தான். சமாளிப்பது ரொம்பக் கடினமாகத்தான் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இன்று பங்களாதேஷூம், இந்தியாவும் ஒரே நிலையில்...

      நீக்கு
  6. நல்ல வேளை நமது அம்மையார் " நான் பெட்ரோல் உபயோகிப்பதில்லை, எங்கே செல்வதானாலும் நடந்து தான் செல்கிறேன்" என்று சொல்லவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உயராமல் வைத்ததற்கு திருப்தி அடைவோம். தேர்தல் வருவதால் விலை உடனே உயர வாய்ப்பில்லை.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நடை நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பெட்ரோல் விலை உயர்வு நிறைய ஏறி உள்ளது. மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வு ஒவ்வொன்றிலும் விண்ணை முட்ட உயர்கிறது. அந்தக்காலம் வருமா என ஏங்க வைக்கிறது. உண்மைதான்... அப்போது ஒரு ரூபாய்க்கே நல்ல மதிப்பு இருந்தது. ஒரு ரூபாயில் எவ்வளவு பொருட்கள் வாங்கலாம் என அந்தக்கால பெரியவர்கள் சொல்லி கேட்டுள்ளேன். . இப்போது தப்பித்தவறி (வேறு சில்லறை இல்லாமல்) அந்த ஒரு ரூபாயாக (நான்கைந்தாக சேர்த்து) கையேந்துகிறவர்களுக்கு தந்தால் கூட முறைத்து விட்டு நமக்கு சாபம் தருகிறார்கள். தாங்கள் தந்த பல விபரங்களுக்கு நன்றி.

    நேற்று வெளியில் ஒரு பயணம் அதனால் நேற்றே பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  8. அறுநூறு நாட்களுக்கும் மேலாக எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை என்று செய்திகள் வந்தாலும் அவனவனும் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றான்..

    டீக்கடையில் இருந்து பிரியாணிக் கடை வரைக்கும் எங்கும் தாறுமாறான விலையேற்றம்..

    கூடிய விரைவில் நல்லது நடக்கும்.. நடந்தே தீரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. பெட்ரோல் விலை ஏன் குறைய வேண்டும்? அவனவன்ஒரு விதயையும் பின்பற்றாமல் ஆளுக்கு ஒரு டூவீலரில் ஜாலியாகச் சுற்றுகிறார்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. ஆட்டோக்கார்ர்களுக்கோ எத்தனை கொடுத்தாலும் பத்தலை. இதில் பெட்ரோல் விலை குறைவால் யாருக்கு லாபம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. வருமானம் இன்றி வாழ்பவர்களுக்கு எல்லாம் என்ன கதியோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் அவர்களின் வாழ்க்கை கஷ்டம்தான் ஜி

      நீக்கு
    2. லோயர் மிடில் கிளாஸும் அதற்குக் கீழே இருப்பவர்கள் பாடுதான் மிகவும் கடினம். அவங்களால வருமானத்தைப் பெருக்கிக்க முடியாது. விலைவாசி ஏற்றம் அவங்களைத்தான் மிகவும் பாதிக்கும். உண்மையிலேயே வருத்தமான விஷயம்.

      நீக்கு
    3. ஆம் உண்மைதான் மீள் வருகைக்கு நன்றி தமிழரே...

      நீக்கு
  11. கீழ்த் திருப்பதியில் பத்து ரூபாய் நாணயம் மறுக்கப் படுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழக கிராமங்களில் நிறைய உண்டு.

      நீக்கு
  12. எல்லாவற்றுக்கும் ஊளையிட்டுத் திரிவதற்கு ஒரு கூட்டம் இருக்கவே இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  13. கொள்ளையடிப்பதே தவறு... அந்தத் தவறிலும் ஒரு நியாயம் வேண்டும் என்று சொல்லும் சொல்லும் அளவுக்கு நம்ம மனதை மாற்றி விட்டார்கள் ஆட்சியாளர்கள்.

    பதிலளிநீக்கு