தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 09, 2024

கவலை வேண்டாம் கண்மணி

வனோடு ஓடி விட நினைத்தாள் அவள்
வளை விட்டு ஓட்டம் எடுத்தான் அவன்
 
ண்மையானவன் என்று நினைத்தோமே
டலையும் கொடுத்திழந்து விட்டோமே
 
தினமும் கண்ணே மணியே என்றானே
திக்கற்ற நிலைக்கு வைத்து விட்டானே
 
னி எனது வாழ்க்கை நிலையென்ன
ப்படியே காலம் கடத்திட இயலுமா
 
லியை மறந்து வாழ்ந்து விடலாம்
யிற்றை மூடி மறைக்க முடியுமா
 
மூத்தோர் சொல்லை கேட்கவில்லையே
மூலையில் கிடந்து அழுதால் போதுமா
 
ம்மாவிடம் சொல்லி அழுது விடலாம்
ப்பாவும் தாங்கி வாழ்ந்து விடுவாரா
 
வாழ்ந்தது போதுமென முடிவெடுத்து
வாசலை கடந்து வெளியே வந்தவள்
 
ண்டாள் அவனை இதோ என்னவன்
ண்ணீர் விட்டு கட்டிப் பிடித்தழுதாள்
 
யிலுக்கு புறப்பட்டபோது கலவரத்தில்
யில் மாறி பணத்தினை இழந்த கதை
 
வித்ராவுக்கு பக்குவமாய் சொல்லி
யந்திருந்தவளை தெளிவாக்கினான்
 
பெற்றோரிடம் பேசி முடித்து விட்டேன்
பெண் கேட்க நாளையே நான் வருவேன்.
 
கில்லர்ஜி அபுதாபி

16 கருத்துகள்:

  1. ஸூப்பர்.  சின்னஞ்சிறிய கதை ஒன்றை வித்தியாசமான முறையில் வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.  அது மட்டுமல்ல, பாஸிட்டிவ் முடிவு கொடுத்ததற்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சுருக்கமான கவிதை போன்ற கதை. இறுதியில் நல்லபடியாக நடப்பது கண்டு பவித்திரவுக்கு மட்டுமின்றி நமக்கும் மட்டற்ற சந்தோஷம். சிறப்பாகவும், புதுமையாகவும் எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. இது போன்ற ஒரு அனுபவம் எனக்கு உண்டு. கல்யாணம் ஆனபின். இரண்டாவது பிரசவத்திற்கு மனைவியின் வீட்டிற்கு மனைவி, மூத்த மகன், நான் எல்லோரும் ரயிலில் சென்றோம். நடுவில் தண்ணீர் பிடிக்க நான் இறங்க ரயில் புறப்பட்டுவிட்டது. கையில் டிக்கெட்டு பணம் எதுவும் இல்லை. ஆனால் கடைசியில் எப்படியோ எல்லோரும் ஒன்று சேர்ந்தது ஒரு பெரிய கதை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. அருமையான கவிதை வடிவில் கதை.
    தை பிறந்தால் வழி பிறக்கும்.
    தை மாதம் கல்யாணம் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் கில்லர்ஜி. கதையே கவிதையாகவா....கவிதையில் கதையா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிதாவின் கதை என்று சொல்லலாமா ?

      நீக்கு
  6. அருமையான சிறிய ஆழமான க(வி)தையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் கில்லர்ஜி. பவித்ராவின் வாழ்வு அவ்வளவுதானா என்று எண்ணிய போது நல்ல முடிவு. இனி கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. படிக்கும் போது எங்கே போய் முடியப்போகிறது என நினைத்தேன். சுபத்தில் முடிந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. ‘வாழ்ந்தது போதுமென முடிவெடுத்து, வாசலைக் கடந்து வெளியே வந்தவள்[வந்தாள்]... ’ என்பதோடு முடித்திருந்தாலும் மனதைக் கலங்கவைக்கும் கவிதைக் கதையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு