தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 19, 2025

குலப்படியான்

லோ வீட்ல யாரு ?
நாந்தான் இருக்கேன் நீங்க யாரு ?
 
நாங்க சுகாதாரத்துறையிலிருந்து வந்து இருக்கோம். தடுப்பு ஊசி போடணும்
சரி எதற்காக போடணும் சொல்லுங்க ?
 
பெரியவங்க, வேற யாரும் இல்லையா ?
யேன் எனக்கு பதில் சொல்லத் தெரியாதா ?
 
எடக்கா பேசுறியே... சரி வீட்ல மொத்தம் எத்தனை பேரு இருக்கீங்க ?
என்னையும் சேர்த்து பதினொரு பேரு இருக்கோம்.
 
அடடே... சரி எல்லோரையும் கூப்பிடு குரோனா பரிசோதனை செய்யணும்.
ஏற்கனவே கொரோனா வந்துதான் எங்க சித்தப்பு செத்துப் போனாரு இதென்ன புதுசா... குரோனா ?
 
ஆமாயா புதுசா இப்போ புருனேயில இருந்து வந்துருக்காம்.
ஐயய்யோ எங்க அண்ணன் அந்த நாட்டுலதானே இருக்காரு... முதல்ல அவருக்கு போன் போட்டு கேட்கணுமே ?
 
அப்படியா ? அப்ப உங்க குடும்பத்தை அவசியம் பரிசோதிக்கணும், முதல்ல வயசானவங்கள்லருந்து யாராருனு சொல்லு ?
அய்யா, ஆச்சி, அப்பா, அம்மா, சின்னம்மா, அண்ணி, அக்கா, தங்கச்சி, தம்பி, பாப்பா, நான் ஒன்னு.
 
சரி முதல்ல வரிசையா, அய்யா பேரு, வயசை சொல்லு ?
அய்யாத்துரை...வ
 
அய்யா பேரு துரையா... ?
இல்லை பேரு, அய்யாத்துரை வயசு 93
 
சரி அடுத்து ஆச்சி பேரு, வயசை சொல்லு ?
பூச்சியம்மாள் வயசு 87
 
அடுத்து, அப்பா பேரு, வயசை சொல்லு ?
அப்பாவு வயசு 65
 
அம்மா பேரு, வயசை சொல்லு ?
அங்கம்மா வயசு 58
 
சின்னம்மா பேரு, வயசை சொல்லு ?
மங்கம்மா வயசு 55
 
? ? ? .........
என்ன சார் ?
 
சரி, உங்க அண்ணி பேரு, வயசு ?
கன்னிகா பரமேஸ்வரி வயசு 27
 
? ? ? அக்கா பேரு, வயசு ?
மாளவிக்கா வயசு 26
 
? ? ? உன்னோட பேரு, வயசு ?
குலப்படியான் வயசு 24
 
இதென்னையா புதுசா இருக்கு ?
குலதெய்வத்து பேரு... சார்
 
ம்... ஏதோ குழப்புறே சரி, தங்கச்சி பேரு, வயசு ?
தங்கமயில் வயசு 20
 
தம்பி பேரு, வயசு ?
ஆசைத்தம்பி வயசு 17
 
? ? ? பாப்பா பேரு, வயசு ?
பாப்பாத்தி வயசு 6
 
சொன்னது பூராம் உண்மைதானா சாமி ? ஏதோ கில்லர்ஜி வலைப்பூவுல ஜோவடிச்சு வர்றது மாதிரி இருக்கே,,,, ?
எல்லாமே சரியான தகவல்தான் சார்.
 
நீங்க இஞ்செக்ஸனை ரெடி பண்ணுங்க சரி, முதல்ல அய்யாவை கூப்பிடு.
அவரு அய்யாபட்டி கல்யாணத்துக்கு போயிட்டாரு...
 
சரி ஆச்சியை கூப்பிடு.
அது ஆச்சியூர் கிரஹப்பிரவேசத்துக்கு போயிடுச்சு.
 
உங்க அப்பாவை கூப்பிடு.
அவரு அப்பாச்சிமேடு கோயிலுக்கு போயிருக்காரு...
 
? ? ? என்னய்யா... புது தினுசா பேசுறே ? சரி அம்மாவை கூப்பிடு.
அவுங்க அம்மாபேட்டை சடங்குக்கு போயிட்டாங்க.
 
? ? ? சரி உங்க சின்னம்மாவை கூப்பிடு.
அது சின்னம்மாள்புரம் எலவுக்கு போயிருச்சு.
 
என்னய்யா எல்லோருமேவா... சரி உங்க அண்ணியை கூப்பிடு.
அவுங்க அண்ணியேந்தல் காதுகுத்துக்கு போயிட்டாங்க.
 
உங்க அக்கா ?
அது அக்காமடம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு போயிடுச்சு.
 
? ? ? சரி உன் தங்கச்சியை கூப்பிடு.
அது தங்கச்சியம்மாபட்டி நிச்சயதார்த்தத்துக்கு போயிருச்சு
.
? ? ? உன் தம்பி இருக்கானா ? அவனையாவது கூப்பிடுயா...
அவன் தம்பிக்கோட்டை திருவிழாவுக்கு போயிட்டான்.
 
பாப்பா இருக்குனே அது இருக்கா இல்லை பேத்தியூருக்கு போயிருச்சா ?
அது ஸ்கூல் லீவுக்கு பொன்பேத்திக்கு போயிடுச்சு.
 
? ? ? நீ மட்டும் இங்கே என்னத்தை புடுங்குறே ? வீட்டை பூட்டிட்டு எங்கேயாவது போக வேண்டியதுதானே ?
அதான் சார் கணவன்துறைக்கு காதர்பாய் வீட்டு சுன்னத்துக்கு போறதுக்காக, கிளம்புனேன் நீங்க வந்துட்டீங்க...
 
? ? ? டேய் முடியலைடா....
முடியலைனா... ஊசி போடுங்க சார் அண்ணன் பேரை சொல்லலையே ?
 
? ? ? வேண்டாம்டா அவனை புருனே ஷேக் பார்த்துக்கிருவாரு...
அடுத்து எப்ப சார் வருவீங்க ?
 
இனி இந்த தெருவுக்கே வரமாட்டேன்டா... ஆளை விடுடா சாமி.
சரி சார் நான் ஊருக்கு கிளம்புறேன் பாப்பாமடம் பஸ்ஸுக்கு நேரமாச்சு.
 
கில்லர்ஜி தேவகோட்டை

14 கருத்துகள்:

  1. ஒவ்வொருவருக்கும் ஊர் பெயர் பொருத்தமாதான் அமைஞ்சிருக்கு!  ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஊரோடு Map போட்டால் தானே நம்புவீர்கள்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒரே வீட்டில், இத்தனை பெயர்கள், ஊர்கள் என பொருத்தமாக யோசித்து கலக்கிட்டீங்க...எப்படித்தான் இந்த யோசனைகள் உங்களுக்கு வருகிறதோ..? இந்த மாதிரி எழுதுவது தங்களுக்கு கை வந்த கலையாகி விட்டது. மனமார்ந்த பாராட்டுக்கள். படித்து மிகவும் ரசித்தேன். இறுதியில் ஊரின் வரைபடமும் அசத்தலாக உள்ளது. பாராட்டுக்கள் சகோதரரே. உங்களின் சிறந்த எழுத்துக்களை தொடருங்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. நல்லதொரு ஆக்கம். எத்தனை பெயர் பொருத்தம்! :)

    பதிலளிநீக்கு
  4. ஊர் பெயர், நபர்களின் பெயர் பொருத்தமா கொண்டாந்துட்டீங்களே கில்லர்ஜி. உங்க வழக்கமான காமெடி! ஹாஹாஹா...

    கடைசில அந்த வரி நம்ம கவுண்டமணியாரின் குரல் கேட்டுச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. கடைசில மேப், பஸ் நல்லாருக்கு ஐடியா.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை. கடைசியில் சிரித்து விட்டேன்.
    நல்ல பொருத்தமாய் ஊர் பேர்கள் அமைந்து விட்டது.
    முதல் படமும் , கடைசி படமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு