தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 05, 2025

மும்பை வாலா

மேலேயுள்ள புகைப்படத்தில் இருக்கும் குடும்பம் யாருடையது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். வாழ்க வளத்துடன் இதிலுள்ள நான்கு பெண்மணிகளில் ஒருவர் மட்டும் தலைவிரி கோலமாக இருப்பதின் காரணமென்ன ? அதுதான் குடும்பப் பெண்களுக்கும் திரைப்படக் கூத்தாடிகளுக்கும் உள்ள வேறுபாடு. இது நடைமுறைகளுக்கு சரிப்பட்டு வராது ஆகவேதான் மும்பை வாலாவாகி விட்டது.
 
நமது நாட்டு பெண்மணிகள் இப்படி தலைவிரி கோலத்தைதான் விரும்புகின்றனர். பழங்கால புகைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். கணவர் நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து இருப்பார், மனைவி பக்கத்தில் நின்று கொண்டு இருப்பார். அல்லது நிறைய பெண்மணிகள் இருந்தால் தரையில் காலை மடக்கி உட்கார்ந்து கொண்டு இருக்கும் வகைகளும் உண்டு. இங்கு அப்படியே நேர்திசை காரணம் காலம் மாறிவிட்டது என்றொரு வார்த்தையை போட்டுக் கொள்ளலாம்.
 
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர் அவருக்கு இதில் விருப்பமேயில்லை காரணம் தொழிலின் முழுவிபரமும் அறிந்தவர். ஆனால் மகன் சூர்யாவுக்கு வயசுக்கோளாறு புரியாத வயது குடும்பமானம் விமானம் ஏறக்கூடாது என்ற கொள்கையாளர் நம்ம மார்க்கண்டேயன். நிபந்தனையோடு சம்மதம் சொன்னார். திருமணம் முடிந்ததும் வாக்குறுதி அரசியல்வாதிகளின் சொல் போலாகி விட்டது. மீண்டும் நடிக்க வந்து விட்டார் மருமகள். எது நடக்ககூடாது என்று நினைத்தாரோ... அதுவே நிகழ்ந்து விட்டது.
 
பிள்ளையார் சுழியாக மும்பை நகர்வு, தனிக்குடித்தனம், குழந்தைகள் ஹிந்தி படிக்க வேண்டும், தமிழ் அவசியமில்லை, அடுத்து சொத்து பிரச்சனை வரும், சிகரமாய் திகழும் அகரம்கூட தகரமாய் மாறலாம். பணம் பெறுக, பெறுக குடும்பம் சிதறித்தான் போகும் போல திரைத்துறையில் நல்ல மனிதர் சிவகுமாரின் குடும்பமே இப்படி என்றால் விஜயகுமாரின் குடும்ப நிலை எப்படி இருக்கும் ? நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் இது ஏட்டுக்குத்தான் கூட்டுக்கு உதவாது போல...
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சாம்பசிவம்-
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா... படைக்கும் நெஞ்சிலே துயரம் யாவுமே அண்ணன் தம்பிகள்தானடா...

4 கருத்துகள்: