தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 05, 2015

கோவைப்பழத்துடன் கில்லர்ஜி


பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு ? என்பார்கள் இருப்பினும் இவரைத் தெரியப் படுத்துகிறேன் காரணம் என்ன ? பூவோடு சேர்ந்த இந்த (கில்லர்ஜி) நாரும் மணம் பெறும் என்ற நப்பாசையே... அன்றி வேறில்லை.

ஐயா திரு. பழனி கந்தசாமி அவர்கள் வலையுலகில் ‘’பழம்’’ பெறும் பதிவர் என்பது வலையுலகம் அறிந்த விடயமே... கோவைக்கு திருமணத்திற்கு வருகிறேன் என்று சொல்லவும் கண்டிப்பாக வருவேன் என்று சொன்னவர் சொன்னபடியே குறிப்பிட்ட திருமண மண்டபத்திற்கு காலையிலேயே வந்து விட்டார் பதிவுகளில் அவருடைய கரடு முரடான கருத்துரைகளையும், ப்ரொப்பைலில் இருக்கும் அவருடைய முறுக்கிய மீசையையும் கண்ட நான் உண்மையிலேயே கொஞ்சம் பயந்துதான் இருந்தேன் ஆனால் நேரில் கண்டபொழுது எனது கணிப்பு பொய்யாகி விட்டது.

வயதில் சிறியவரையும் வணங்கி இன்முகத்துடன் பேசிப்பழகும் அவரின் இயல்பு நிலை கண்டு பிரமித்தேன் அவரிடமிருந்து கத்துக்குட்டியான நானும் சில விடயங்களை கற்றுக் கொண்டேன் கற்றல் என்பது மரணம்வரை என்று சொல்வார்கள் உண்மைதானே...


பிறகு மீண்டும் ஒருநாள் வீட்டுக்கு வந்து என்னை அவரது காரில் வீட்டிற்க்கு அழைத்துப் போனார் வீட்டில் அவரது கணினியில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டோம் பிறகு மருதமலை போகும் வழியில் அவருக்கு ஒரு சிறிய வேலை காரணமாக ஐயா வேலை செய்த கோயமுத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் போய் முடித்து விட்டு மலையேறி முருகனிடம் இருவருமே (மனதிற்குள் சீக்கிரமே தமிழ் மணத்தில் நான் முதலிடம் பிடிக்க அருள் கொடு தமிழ்க்கடவுளே முருகா என்று இருக்குமோ ?) வேண்டிக்கொண்டோம் எவ்வளவோ விடயங்களைக்குறித்து பேசினோம், வலைப்பூவைப்பற்றி, எனது வாழ்க்கைக்குள் பந்தப்பட்ட விடயங்களைப்பற்றி, நாட்டு நடப்புபற்றி, பிறகு மதியம் ஹோட்டல் அன்னபூர்ணாவில் அன்னம் களித்து என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார் எமது வாழ்வில் இன்றைய பொழுது புதுமையான இனிமையான பொழுது என்பது எமது திண்ணமான எண்ணம்.


 

ஒட்டிக்கோ கட்டிக்கோ
விவேக் & தமிழ்வாணன்
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

வந்துட்டன்... அபுதாபி

 
அன்பு நெஞ்சங்களே.... நலமா ? நான் வந்துட்டன்... அபுதாபி கடந்த மாதம் இனிய இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் பொழுது பலருடைய பதிவுகளை எனது செல் போணில் திறக்க முடியவில்லை சிலருக்கு கருத்துரை போட முடியவில்லை, சிலருக்கு தமிழ் மணம் ஓட்டுப்போட முடியவில்லை குறிப்பாக நண்பர்கள் தஞ்சையம்பதி, குழலின்னிசை, வெங்கட் நாகராஜ், தில்லை அகத்து, மற்றும் பலருடைய தளங்கள் திறப்பதே கஷ்டமாக இருந்தது இருப்பினும் அனைத்தையுமே படித்து விட்டேன் 80தை அறியத் தருகின்றேன் குடும்பத்தில் பலருக்கும் சொளவு போல் செல் போண் வாங்கி கொடுத்திருந்தாலும் நான் இன்னும் அதே பழைய பண்டாரத்தைத்தான் வைத்துக்கொண்டு இருக்கின்றேன் ஊருக்கு வந்த காரணத்தால் எனது பதிவுகள் (சில பதிவுகளை விடயமே இல்லையென நானே வேண்டாமென்று நீக்கி விட்டேன்) அவசரமாக அள்ளித்தெளித்த கோலம் போல் காமா சோமா என்று இருந்திருக்கும் இதன் காரணமாகவோ... என்னவோ...
 
எப்படி இருந்த நான்...
இப்படி ஆயிட்டேன்.
 
இனி ‘’அப்படி’’ போக முயற்சிக்கின்றேன் நட்புகளே...
அடுத்து வரும் எனது பதிவுகள் ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, வித்தியாசமாக ஒருநாள் விட்டு மறுநாள் தரலாம் என்று நினைக்கின்றேன் வருகையாளர்கள் அதிகரித்தால் தினம் எமது பதிவுகள் வெளிவரும் 80 குறிப்பிடத்தக்கது தொடர அழைக்கின்றேன்.
 
தேங்கி கிடக்கும் எமது எண்ணங்கள் ஓங்கி ஒலிக்கும் விண்ணில்.
என்றும் நட்புடன் கில்லர்ஜி.


புதன், ஜூலை 29, 2015

நல்லதோர் வீணை.


நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்

பாரதியார்

இதை,  தன்மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனுக்கு நன்றி சொல்லும் தன்னம்பிக்கை என்பதா ? இல்லை அறிவற்ற மானிடருக்கு நான் அறிவாளியென அறை கூவல் என்பதா ?


Video
(Please ask Audio Voice)

ஞாயிறு, ஜூலை 26, 2015

NAPOLEAN’s


இந்த, மூன்றில் பிரபலமானது மட்டுமல்ல ! இன்றும் மக்கள் மனதில் நிரந்தரமாய் இருப்பது எது ?


A - இவர் ஒரு நாட்டை ஆண்ட மன்னர்,

B - இது உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பிரபலம்,

C - இவர் சினிமாவில் நடிக்க வந்து அதன் மூலம் M.P ஆனவர்,

இருப்பினும் தற்கால மனிதர்களிடம் கேட்டால் ''குடிமகன்'' ''கள்'' வழக்கம் போல B யை தெரியும் என்பார்கள், அதேநேரம் மாணவர்களிடம் கேட்டால் C யை தெரியும் என்பார்கள், ஆனால் A யில் இருக்கும், NAPOLEAN னை எல்லோருமே மறந்து விட்டார்கள். காரணம் என்ன ? எப்பொழுதுமே நல்ல விசயங்களை மறந்து விடுவதுதான் மனிதர்களின் இயல்பு A யில் இருக்க வேண்டியவரை C யில் வைத்தாலும் பரவாயில்லை, மொத்தமாகவே தூக்கி விட்டார்களே, இவரை மறப்பதற்க்கு இவரென்ன ? பிலிப்பைன்ஸை ஆட்சி செய்த இமெல்டா மார்க்கோஸா ? இதற்கு காரணகர்த்தா யார் ? Bயை, சர்வசாதாரணமாக புலக்கத்தில் விட்ட இன்றைய ஆட்சியாளர்களே ! நாளை இவர்களுக்கும் இதேநிலை வரும் 80தை மறந்து விட்டார்கள்.