பூக்கடைக்கு விளம்பரம்
எதற்கு ? என்பார்கள் இருப்பினும் இவரைத்
தெரியப் படுத்துகிறேன் காரணம் என்ன ? பூவோடு சேர்ந்த இந்த (கில்லர்ஜி) நாரும் மணம் பெறும் என்ற நப்பாசையே... அன்றி வேறில்லை.
ஐயா திரு. பழனி கந்தசாமி
அவர்கள் வலையுலகில் ‘’பழம்’’ பெறும் பதிவர் என்பது வலையுலகம் அறிந்த விடயமே... கோவைக்கு
திருமணத்திற்கு வருகிறேன் என்று சொல்லவும் கண்டிப்பாக வருவேன் என்று சொன்னவர்
சொன்னபடியே குறிப்பிட்ட திருமண மண்டபத்திற்கு காலையிலேயே வந்து விட்டார்
பதிவுகளில் அவருடைய கரடு முரடான கருத்துரைகளையும், ப்ரொப்பைலில் இருக்கும் அவருடைய
முறுக்கிய மீசையையும் கண்ட நான் உண்மையிலேயே கொஞ்சம் பயந்துதான் இருந்தேன் ஆனால் நேரில்
கண்டபொழுது எனது கணிப்பு பொய்யாகி விட்டது.

வயதில் சிறியவரையும் வணங்கி
இன்முகத்துடன் பேசிப்பழகும் அவரின் இயல்பு நிலை கண்டு பிரமித்தேன் அவரிடமிருந்து
கத்துக்குட்டியான நானும் சில விடயங்களை கற்றுக் கொண்டேன் கற்றல் என்பது மரணம்வரை என்று சொல்வார்கள்
உண்மைதானே...
பிறகு மீண்டும் ஒருநாள்
வீட்டுக்கு வந்து என்னை அவரது காரில் வீட்டிற்க்கு அழைத்துப் போனார் வீட்டில் அவரது
கணினியில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டோம் பிறகு மருதமலை போகும் வழியில்
அவருக்கு ஒரு சிறிய வேலை காரணமாக ஐயா வேலை செய்த கோயமுத்தூர் வேளாண்மை
பல்கலைக்கழகம் போய் முடித்து விட்டு மலையேறி முருகனிடம் இருவருமே (மனதிற்குள்
சீக்கிரமே தமிழ் மணத்தில் நான் முதலிடம் பிடிக்க அருள் கொடு தமிழ்க்கடவுளே முருகா
என்று இருக்குமோ ?) வேண்டிக்கொண்டோம் எவ்வளவோ
விடயங்களைக்குறித்து பேசினோம், வலைப்பூவைப்பற்றி, எனது வாழ்க்கைக்குள் பந்தப்பட்ட
விடயங்களைப்பற்றி, நாட்டு நடப்புபற்றி, பிறகு மதியம் ஹோட்டல் அன்னபூர்ணாவில்
அன்னம் களித்து என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார் எமது வாழ்வில் இன்றைய பொழுது
புதுமையான இனிமையான பொழுது என்பது எமது திண்ணமான எண்ணம்.

ஒட்டிக்கோ கட்டிக்கோ
விவேக் & தமிழ்வாணன்
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...


