தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 14, 2015

பரமக்குடி, பரதேசி பரமசிவம்


இரக்கமில்லாதவளே
இறக்கப்பட வேண்டியவள் நீ
இதை உரக்கச் சொல்வேன்
உறைக்கச் சொல்வேன் உலகுக்கு.

என்னை, அரக்கப் பரக்க விட்டு விட்டு
பறந்து விட்டாய் பறவையாய்...
பறட்டைத்தலை, பரஞ்ஜோதி மகன்,
பரமகுருவுடன் பரவூருக்கு,

பரமக்குடியினிலே பாரதி நகரினிலே...
பம்பரமாய், சுற்றி வந்த இந்த பரமசிவத்தை,
பரதேசியாக்கி விட்டாயடி
பரந்தாமன் மகளே பரமேஸ்வரி.

உறக்கமின்றி திரிகின்றேன் கிறக்கத்தில்
இறுக்கமான அரக்கியே...
உனக்காக, உருகிய என்னை
பருக வைத்தாய் பிராந்தியை

துறவியாய், அருவியோரம் திரிகின்றேனே...
என்னை கருவியாக்கி பயன்பட்ட கன்னியே...
அருவியாக்கி விட்டாயே என் கண்ணீரை
கருகி விட்டதடி என் இதயமே

பன்னீர் தெளித்து வாழ்த்திய என்னை
தண்ணீர் தெளித்து விட்டாயடி கண்ணே..
உனக்காக, இரக்கப்பட்ட என்னை
இறக்கச் சொல்லி விட்டாயடி பெண்ணே...

இரக்கமில்லாதவளே
இறக்கப்பட வேண்டியவள் நீ
இதை உரக்கச் சொல்வேன்
உறைக்கச் சொல்வேன் உலகுக்கு.

இப்படிக்கு,
ஆவியாகப் போகும் அப்பாவி.

சாம்பசிவம்-
உலகுக்கு சொல்றதுக்கு நீ என்ன தியாகி, தியாகராஜனா ? வெட்டிப்பயலே ஒரு தாலியை கட்டிப்போட்டா அவ, உனக்கு சொல்லியிருப்பாளா டாட்டா உன்னைப் போல கூதறைகள் இருந்தென்ன... இறந்தென்ன ?

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
இவங்கே என்ன... சொல்றாங்கே LOVE பண்ணுறது சரியா... இல்லே தப்பா ? ஒரே குழப்பமா இருக்கே, காலைலதான், கலைச்செல்விக்கு APPLICATION கொடுத்தோம், RICH FAMILY வேற...RETURN REVOLVER லருந்துல வரும். 

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

அக்குள் 99


வணக்கம், ஐயா ஆரம்பிக்கலாமா ?
நல்லது, நானும் தயார்.

ஐயா உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல் ஏதாவது உண்டா ?
ஆம், ஒரு முறை சாலையில் நடந்து செல்லும்போது வாழைப்பழத்தோல் சறுக்கி விட்டது.

பெருக்கல் ஏதும் உண்டா ?
முதன் முதலில் அரபு நாட்டில் எனது வேலையே சாலையை பெருக்குவதுதானே...

கழித்தல் ஏதும்...
ஆமாம் விபரமறிந்த நாளிலிருந்து தினம் காலையில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் சிக்கல் ஏதாவது...
ஆமாம், பலமுறை போயிருக்கிறேன் ஏர்வாடியை அடுத்து இருக்கிறது, சின்ன வயதில் செந்தில் முருகன் டாக்கீஸில் சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் கூட அங்குதான் பார்த்தேன்.

ஐயா அழித்தல் ஏதும் உண்டா ?
ஆமாம் வலைப்பதிவில் எழுதும்போது... தவறாக வந்து விட்டால் உடன் அழித்து விடுவேன்.

வாழ்க்கையில், குலுக்கல் அப்படி ஏதும்...
நிறைய தடவை இதில் கலந்து கொண்டுள்ளேன் ஆனால் பரிசு இதுவரையில் விழுந்ததில்லை.

வாழ்வில் இளித்தல் அப்படி...
பல தடவை இளம் பெண்களை பார்த்து பல் இளித்து இருக்கிறேன்.

நக்கல் ஏதும்...
பலமுறை கொம்புத்தேனை நக்கி இருக்கிறேன்.

தாங்கள் வாழ்வில் கிறுக்கல், ஏதாவது...
அதைத்தானே வலைப்பதிவில் செய்து கொண்டு இருக்கிறேன்.

நல்லது ஐயா தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, எங்களது நிறுவனத்தின் சார்பாக கேட்கப்பட்ட 9 கேள்விகளுக்கும் நவரத்தினமாய் பதில் அளித்த தங்களுக்கு எங்கள் அக்குள் 99 கம்பெனி வழங்கும் ஃபாடி ஸ்பிரே டப்பாக்கள் வழங்கப்படுகிறது. 
நன்றி, இதனைப்போல பல கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் காத்திருக்கிறேன், கடமைப் பட்டிருக்கிறேன் வணக்கம்.

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

புதுக்கோட்டை போவோமடி...

வரவேற்பு பதாகை.

அன்பு நண்பர்களே... நண்பிகளே... எல்லா பெருந்தலை பதிவர்களும் புதுக்கோட்டை பதிவர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து எழுதி விட்டார்கள் இருப்பினும் இந்தக் கத்துக்குட்டியும் எனது பங்கு அழைப்பு விட வேண்டுமல்லவா ! ஆகவே இதை வித்தியாசமாக முளைக்கொட்டு பாட்டு மாதிரி அழைப்பு விடுப்போமே.. என்று மனதில் தோன்ற அப்படியே என் மனக்குறையும் வந்து விழுந்து விட்டது குறுக்கு கேள்வி கேட்பவர்களுக்கு நீங்கள் வராமல் அபுதாபியில் உட்கார்ந்து கொண்டு அழைப்பு விடுவது முறையா ? எனக்கேட்டு விடாதீர்கள் நானே வர முடியவில்லையேனு வேதனையில் இருக்கிறேன்.

வியாழன், செப்டம்பர் 10, 2015

பழங்குடி, பழமொழி பழனிச்சாமி


ஏண்டா, பழனி உனக்கு பல மொழிகள் தெரியுமாமே அப்படியா ?
ஆமாண்ணே,
பரவாயில்லையே  எங்க பார்ப்போம்.
ஏட்டுச் சொரைக்காய் கூட்டுக்கு உதவாது.
என்னடா இது ? 
வேற சொல்லட்டுமாண்ணே ?
சொல்லு.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.
டேய்,
வேற சொல்றேன்ணே,
ம்,
முண்டைக்கு போட்றா முருங்கைக்காயும், சோறும்.
டேய் திண்ணி முண்டே, என்னடா... சொல்றே நீ ? 
பளமொலிண்ணே..
பளமொலியா ? ஏண்டா, உனக்கு பல மொழிகள் பேசத் தெரியும்னு ஊருக்குள்ளே சொல்றாங்களே, அது இதுதானா ?
வேற புதுசா சொல்லட்டுமாண்ணே ?
டேய் இப்பவே இடத்தைக் காலி பண்ணு இல்லே உன் முழியப் பேத்துடுவேன்.

செவ்வாய், செப்டம்பர் 08, 2015

சாகாக்கலை


நரை திரை மாற்றிடும் வித்தை
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெல்ல குடைந்துநின் நாடார் வினைகெடப்
பள்ளமும் மேடு்ம் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வி யிலோரே-