தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 10, 2018

சீக்கிரம் அனுபவிக்க வேண்டும்


பழங்கால வாகனங்கள் எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும் சிறிய அளவில் நெளிந்தோ, அல்லது வர்ணங்கள் பெயர்ந்த நிலையில் இருக்கும், உள்ளே பயணம் செய்த நபர்கள் அதிக பட்சமாக, இறந்து விடுவார்கள், அல்லது படுகாயம் அடைவார்கள் இதன் காரணம் என்ன ? பழைய வாகனங்கள் அதிக எடை கொண்டதாக இருக்கும் (2400 kg) இதன் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்வது தடைபட்டுக் கொண்டே வந்தது எரிபொருள் செலவுகளும் கூடியது, உள்ளே மனித உயிர்களுக்கு எந்த விதமான பாதுகாப்புகளும் கிடையாது, அனைத்து பகுதிகளும் இரும்புகளால் வடிவமைக்கப்பட்டது கண்ணாடிகளிலும் அதிகமான பைபர் உபயோகம் இல்லை இதன் காரணமாக மனிதர்கள் உள்ளுக்குள்ளேயே அல்லோலப்பட்டு காயமடைகிறார்கள், அதிலும் வாகனம் பல்டி அடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையை மாற்றியமைக்கவே விஞ்ஞானிகள் பெரும் முயற்சிகொண்டு மனிதர்கள் குறைந்த பட்ச காயங்களுடன் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற வகையில் தயாரித்ததே இன்றைய வாகனங்கள் இவை குறைந்த பட்ச எடையாக (1200 kg) வாகனங்களை உருவாக்கினார்கள், உட்புறத்தில் பைப்பர் உடைந்தாலும் தெரிக்காமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிதில் சிதிலாக கீழே விழுவது போன்ற கண்ணாடிகள், முடிந்த அளவு இரும்பை குறைத்து கனத்த ரப்பர்கள், அலுமினியங்கள், வாகனம் ஒரு குறிப்பிட்ட சப்தத்திற்குமேல் மோதினால் எட்டுத் திசைகளிலும் வாகனத்தின் உட்புறங்களில் காற்றுகளை நிரப்பி திணிக்கப்பட்டிருந்த  SRS AIRBAG என்று சொல்லப்படும் (Supplemental Restraint System) ஊதுகூண்டுகள் வெளியேறி மனிதர்கள் உள்ளே எந்தப்பக்கம் வந்து மோதினாலும் ஊதுகூண்டுகளால் மோதப்பட்டு படுகாயம் அடையாதவாறு காப்பாற்றப்படுகிறார்கள் வாகனம் பல்டி அடித்தாலும் உயிர் பாதிக்கும் அளவுக்கு போவதில்லை, சுற்றிலும் மென்மையான பஞ்சு இருக்கைகள் குறைந்த எரிபொருள் செலவில் கூடுதலான தூரம் செல்ல முடிவதோடு விரைவாகவும் செல்கிறது மேலும் அபார விஞ்ஞான வளர்சியின் உதவியால், போகும் இடத்திற்கு வழிகாட்டும் GPS Navigation என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது அது மனிதனுக்கு வேண்டிய மொழிகளில் பேசி வழி சொல்கிறது, பின்புறத்தில் இருப்பவர்கள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் காணலாம், சங்கீதம் கேட்கலாம், வாகனம் ஓட்டிச் செல்லும் பொழுது தொல்லைபேசி அழைத்தால் எடுக்காமலே வாகனத்தின் இணைப்புடன் உள்ள Bluetooth என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது அதன் பொத்தானை அழுத்தி விட்டு பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டலாம், வெகுதூரம் ஓட்டியதால் கால் வேதனை ஏற்பட்டால் Cruise Control என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது இதன் அமைப்பை சரி செய்து விட்டால், வாகனம் ஒரே சீரான நிலையில் போய்க்கொண்டு இருக்கும்... கால்களை மாற்றி வைக்கலாம் அல்லது இருக்கையில் மடித்து வைத்துக் கொண்டு உட்காரலாம்

தயவு செய்து கை வலித்தால் ? என்று கேட்டு விடாதீர்கள், அதன் முயற்சியும் நடந்து முடிந்து விட்டது விரைவில் நடைமுறைக்கு வருகிறது, அதாவது போகுமிடத்தை பதிவு செய்து விட்டால் மகிழுந்து தானாகவே கொண்டு போய்விடும் இதில் ஒரு நல்ல செயல் இருக்கிறது விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு மகிழுந்துகள் மனிதனைப்போல போட்டி போடாமல் விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தும் அடுத்த வாகன ஓட்டிகளை சென்னைத்தமிழில் பெற்றோர்களை திட்டாது காரணம் இவைகளுக்கு ஆறறிவு கிடையாது

இப்படி விபத்துகள் நடந்தால் வாகனம் அதிகமான அளவில் பாதிக்கப்படும், ஒருவேளை பல்டி அடித்தால் கண்டிப்பாக வாகனம் கண்டம் ஆவது உறுதி அதேநேரம் மனிதர்களுக்கு அதிகமான காயம் ஏற்படலாம் உயிர்ச்சேதம் ஏற்படுவது குறைவு என்பது 100/100 உண்மை, மேலும் ஒரு உண்மை இருக்கிறது இந்த விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் செயல்படும் Navigation, Cruise Control, Supplemental Restraint System, Bluetooth போன்றவைகளின் அலைவரிசைகளால் மனிதனின் இதயம் பாதிக்கப்பட்டு, மருத்துவர் ராமதா... மன்னிக்க, ஊரில் உள்ள மருத்துவர்களிடம் சென்று சொந்த வீட்டை விற்று கப்பம் கட்டி அவர்கள் சொந்தமாக மருத்துவமனையும், அதன் வளாகத்திலேயே மருந்தகமும் கட்டிய பிறகே விரைவில் மரணத்தை தழுவும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் என்பதும்100/100 உண்மையே ஆனால் நமக்கு இதனைப்பற்றி கவலையில்லை காரணம் நாம் அனைத்து விஞ்ஞான அதிசயங்களையும் சீக்கிரம் அனுபவிக்க வேண்டும், இதனால் நாம் சீக்கிரம் மேலே போகிறோமே என்ற சிந்தை இந்த ஆட்டு மந்தை (ஆறறிவு) கூட்டத்துக்கு என்று தோன்றும் ?

காணொளி

திங்கள், மே 07, 2018

துபாய் விசா Dubai Visa


வணக்கம் நட்பூக்களே இவர்கள் உண்மையிலேயே வாழ்த்துகின்றார்களா ? இல்லை நக்கலடிக்கின்றார்களா ? என்று எனக்கும் குழப்பம் உண்டு அதன் மேலே எழுதியுள்ளதை பாருங்கள் உண்மை உழைப்பு உயர்வு இதுல, உண்மையாக உழைத்தது யாரு ? கீழே ஒரு அறிவுச்சுடர் சொல்லி இருக்கின்றார் பாருங்கள் அமெரிக்க அதிபர் நமீதா வாழ்க ! என்று ஏண்டா டோய் அதிராவோட அங்கிள் பராக் ஒபாமாவுக்கு மட்டும் தமிழ் படிக்கத் தெரிஞ்சுச்சு முதல்ல நமீதாவைத்தான் தூக்கிட்டுப் போவாரு.. தெரிஞ்சுக்க உன்னோட அபிமான நடிகையை வாழ்த்துறேன்னு பேருல ஆப்பு வச்சிடாதே... பாவம் அந்தப்புள்ள (?) ஏதோ வயித்துக்கு கஞ்சி ஊத்துறதுக்காக வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்துக்குள்ளே காலை விட்டுருச்சு.

இவங்களுக்கு இந்த வேலைகள் சரியென்று தோன்றுகின்றதா ? சிலர் சொல்வார்கள் வயசுப்பசங்க நாளைக்கு திருமணம் நடந்து குழந்தை, குட்டி ஆனால் திருந்தி விடுவார்கள் என்று திருமணம் ஆன ஜடங்களும் இப்படி திரிகின்றதே... ரசிகன் என்பதின் தொடக்கம் தொண்டன் என்ற வட்டத்துக்குள் வந்து நிற்கின்றது உனது அபிமான நடிகன் உன்னுடைய கரகோசங்களால் ஈர்க்கப்பட்டு நாற்காலி ஆசையில் மூழ்கி அவன் ஆட்சியைப் பிடிக்கின்றான் என்றால் மேலும் சுகவாசி, இல்லையெனில் லாபத்தில் நஷ்டம் ஆனால் உமது நிலை ? காலம் முழுவதும் கோஷம் போட்டே சாகின்றாய் நீ யாருக்குத்தான் கோஷம் போடவில்லை ? ஒரு காலத்தில் பாக்கியராஜின் பிறப்பு இந்தியாவின் சிறப்பு என்றாய் இன்று என்வாயிற்று உன் பேச்சைக்கேட்டு இறங்கியதில் இன்று ஈமு கோழி விற்கும் நிலைக்கு தள்ளி விட்டு அதிலும் ஏதோ பிரச்சனை வந்து விட்டதாக சமீபத்தில் படித்தேன். இதே வழியில் டி. ராஜேந்தர், விஜயகாந்த் இப்பொழுது கமல்ஹாசன் பிழைக்க வந்த ரஜினிகாந்த் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பழமை வாய்ந்த ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று என்றால் தமிழனும் பழமை வாய்ந்தவன் என்பதுதானே அர்த்தமாகின்றது உலகிற்கே வாழ்வியல் தத்துவங்களை அள்ளிக்கொடுத்த தமிழ் பெருமான்கள் உண்டு இன்று திரைப்படத்துறையிலும் சரி, அதன் வழியாய் அரசியலிலும் சரி பிற மொழிக்காரர்களின் சாம்ராஜ்யமே நடக்கின்றது இது உலகத்தின் பார்வையில், விமர்சனத்தில் தமிழனுக்கு பெருமையா ? இழுக்கா ? என்பதை நீ என்றாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா ? உனது செயல்களால் நீ மட்டும் பாதித்தால் நான் இப்பதிவை எழுத மாட்டேன் நண்பா உன்னால் தமிழ் இனமும் பாதிக்கப்படுகின்றது அந்த வட்டத்துக்குள் தமிழன் என்பதால் நானும் அவமானப்பட்டு இருக்கின்றேன் அரபு தேசங்களில் வாழும் பல தமிழர்களுக்கும் இந்த அவமானங்கள் நிகழும் விடுமுறை நாட்களில் அறையில் நண்பர்களோடு ஒரு சினிமா பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்றால் கன்னடன் சொல்கின்றான், மலையாளி சொல்கின்றான், தெலுங்கன் சொல்கின்றான் என்ன தெரியுமா ? எங்கள் ஆளை பார்த்தாயா ? என்று காரணம் அந்த திரைப்படங்களில் நாயகன் தமிழன் இல்லை, நாயகி தமிழச்சி இல்லை, வில்லன் தமிழன் இல்லை, ஆனால் ஒரேயொரு தமிழன் நிச்சயம் உண்டு அவன்தான் காமெடியன் அதாவது கோமாளி அர்த்தம் புரிகின்றதா ? அதாவது 90 சதவீதம் திரைப்படங்களும் இப்படித்தானே இருக்கின்றது இதற்கு நீ விளக்கம் சொல்லலாம் வந்தாரை வாழ வைத்தோம் என்று எங்கே ஒரு தமிழனை பிற மாநிலத்தில் நாயகனாக வேண்டாம் ஒரு காமெடியனாக வாய்ப்பு கொடுக்கச்சொல் பார்க்கலாம் நிச்சயமாக நடக்காது வேண்டுமானால் நாயகி அவள் அழகியாக இருந்தால் ? அவர்கள் ‘’பயன்படுத்தி’’ இருக்கலாம் நண்பா இது தமிழனுக்கு அவமானமில்லையா ? மலையாளியான எம்ஜிஆர் கன்னடனான ரஜினிகாந்தை கோயம்புத்தூரில் ஆள் வைத்து அடித்த பழைய சம்பவம் தெரியுமா ? அதன் காரணம் தெரியுமா ? நடிகை லதா யாருக்கு சொந்தம் என்பதே... இன்று இவளும்கூட சந்தர்ப்பவாத அரசியல் பேசுகின்றாள், காலக்கெரகமடி கருமாரி. பிழைக்க வந்தவர்கள் தைரியமாக தமிழச்சியை பங்கு போடுகின்றார்கள் இதற்கு அடியாள் கூட்டம் தமிழன் மானக்கேடு தமிழனுக்கு இது உரைக்கணும் உரைக்கும். கன்னடன் பிரகாஷ்ராஜ்கூட சமீபத்தில் கர்நாடாகாவை கன்னடனே ஆளணும் என்று சொல்லி இருக்கிறான் இது தவறில்லை அதேவேளையில் தமிழ்நாட்டில் யாரும் ஆளலாம் என்று சொல்லி இருக்கின்றானே காரணம் என்ன ? தமிழனின் லட்சணம் அறிந்தவன் தொடக்க காலத்தில் பிட்டு படங்களில் நடித்துக் கொண்டு இருந்த மூதேவி இதெல்லாம் தமிழக அரசியலை நிர்ணயம் செய்கிறது.

இந்த கோமாளிகளின் செயலை தடுப்பதற்கு அரசோ, சமூகமோ முன்வருவதில்லை அரசு வராது காரணம் இந்த வகையான கூமுட்டைகளால்தான் இன்றைய ஆட்சியாளர்கள் நாற்காலிகளை பிடித்தார்கள் இவர்கள் இதே நிலைப்பாட்டுடன் இருந்தால்தான் நமது வாழ்க்கை இப்படியே போவதோடு நமது வாரிசுகளும் இதையே தொடர்ந்து செல்லும், மக்கள் வரமாட்டார்கள் காரணம் இன்றைக்கு நாம் வேலைக்கு சென்றால்தான் நாளை நமது வீட்டில் உலை வைக்க முடியும் அதேநேரம் ஊரில் மதச்சண்டைகள், திரைப்பட ஸூட்டிங்குகள் நடந்தால் இவைகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் நமது தமிழ்நாடு நாசமாகப் போனதற்கு அடிப்படை காரணங்கள் இவைகள்தான் இவர்களுக்கு வாழ்வியல் உண்மையை புரியவைக்க கூடிய பக்குவமான யோசனைகள் எம்மிடம் நிறைய இருக்கின்றது ஆனால் அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் எனக்கில்லை ஒருக்கால் இருந்தால் ?


இவர்களுக்கு இந்த வட்டத்துக்குள் எனது மகன் இருந்தாலும் அரசு செலவில் துபாய் விசா எடுத்து (பிறகு இந்த செலவை மாதசம்பளத்திலிருந்து சிறிய தொகையாக திருப்பி வசூல் செய்யப்படும்) இவர்களுக்கு கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கம்பெனியில் வேலை கொடுத்து காலை 4:00 மணிக்கு எழுந்து வேலை முடிந்து மாலை 7:00 மணிக்கு கேம்ப்’’க்கு திரும்பி உணவு சமைத்து, குளித்து முடித்து சாப்பிட்டு மீண்டும் காலை 4:00 மணிக்கு எழுந்து வேலைக்கு சென்று வந்தால் ? அதுவும் வெயில் கால மே, ஜூன், ஜூலை மாதங்களில் சென்று வந்தால் ? வாழ்வியல் உண்மை விளங்கும் சோறு என்றால் என்ன ? என்பது விளங்கும், குழம்பு என்றால் என்ன ? என்பது விளங்கும், அவைகள் நமக்கு இவ்வளவு நாட்களும் எப்படி கிடைத்தது ? என்பது விளங்கும் அப்பாவின் உழைப்பு விளங்கும், அம்மாவின் கையால் உணவருந்திய இன்பம் விளங்கும், தங்கை தனக்கு உடை துவைத்துக் கொடுத்த பணியின் தன்மை விளங்கும், தலைவலி வந்தபோது அருகில் அமர்ந்து தைலம் தடவி விட்ட அப்பத்தாவின் பாசம் விளங்கும், வாழ்வியல் உண்மைகள் அனைத்தும் விளங்கும் நண்பா இவைகள் உங்களை பழி வாங்குவதற்கு அல்ல ! உங்களை நெறிபடுத்தி மனிதனாக்கவே உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.
 
கண்டிப்பாக இந்தியர்கள் படும்பாட்டை நினைத்துப் பாருங்கள் உங்கள் தந்தையோ, சகோதரர்களோ இப்படித்தான் வாழ்கின்றார்கள் ஒரு காலத்தில் நானும் இந்த வகைதான் கயிற்றில் தொங்கி வேலை செய்த அனுபவம் எமக்கும் உண்டு கரணம் தப்பினால் மரணம் எமது முயற்சியால் நான் இதிலிருந்து விடுபட்டு பிறகு அரசு அலுவலகத்தில் Filing Clerk ஆக வேலை செய்தேன் இறைவனுக்கு நன்றி.


Chivas Regal சிவசம்போ-
அதிராவின் அங்கிள் சொன்னதுதான் நடக்குமோ...?

சனி, மே 05, 2018

கம்பம், கரட்டுவாதம் கருப்பையா


அதோ கம்போட போறானே யாரு.... தெரியுமா ?
யாருண்ணே ?

அவன்தான் கரட்டுவாதம் கருப்பையா அவங்கிட்டே கவனமா பேசணும்.
எந்த ஊருக்காரர்ணே ?

கம்பம்.
யேண்ணே... வில்லங்கம் புடிச்சவரா ?

ஆமா எதைப் பேசுனாலும் கரட்டுவாதம் பண்ணி ஏழரையை இழுத்துடுவான்.
அப்படியென்ன பெரச்சனை ஓங்கூட... ?

ஆமாடா அன்னைக்கு அவன் வரும்போது சிங்கம் மாதிரி இருக்கீங்கனு சொல்லிட்டேன் அதுக்கு ஏண்டா... என்னை மிருகம்னு சொல்றியாடானு ? சண்டைக்கு வந்துட்டான்.
சரி அவென சொல்லிக்கிட்டு இருக்கும்போதே என்னை எதுக்கு மாடுனு சொன்னே ?

எப்பச் சொன்னேன் ?
எப்பவா இப்ப ஆமாடா அப்பிடினு சொல்லிப்புட்டு எப்பனு கேட்கிறே ?

ஒனக்கு அவனே தேவலை போலயே...
அப்படினா நான் சரியில்லாதவனா ?

நான் அப்படிச் சொல்லலையே...
அப்ப இதுக்கு அர்த்தம் என்ன ?
? ? ?

Chivas Regal சிவசம்போ-
கெரகம் கெழக்கே கெடந்து வருது

சாம்பசிவம்-
இது மாதிரி கேசுகளை எல்லாம் ஜேம்ஸ் ஊரணியில் நிற்கிற ஆளிடம் சொல்லி தண்ணிக்குள்ளே தள்ளி விடணும்

சிவாதாமஸ்அலி-
ஜேம்ஸ் ஊரணியைத்தான் மோடிஜி வாங்கிட்டாரே.... அதனாலதானே அதிராகூட ரெண்டு வருசமா குதிக்க வழியில்லாமல் இருக்காங்க...

தில்லைஅகத்தார்-
அப்ப நம்ம சென்னை கங்கை நதிக்கு வாங்க அதிரா

வியாழன், மே 03, 2018

விலை(யை)வாசி


நட்பூக்களே மேற்கண்ட விலைகளைப் பார்த்து மயங்கி விடாதீர்கள் உண்மையான விலைதான் இதையும் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு ‘’குடி’’மக்கள் இருக்கின்றார்கள் அல்லவா அதனால்தானே நிறுவனங்களும் இதை தொடர்ந்து தயார் செய்து விற்கின்றார்கள். இவ்வளவு உயர்ந்த வகையான மது குடிப்பதால் இவர்கள் குடிகாரர்கள் இல்லை என்ற நிலையைக் கடந்து விடுகின்றார்களா ? இல்லையே அப்பொழுதும் இவர்கள் குடிகாரன்தான் சரி அது கிடக்கட்டும் நாம் வந்த வேலையை பார்ப்போம்.

செவ்வாய், மே 01, 2018

பாலாபிஷேகம்


மானிடா ! இந்தக் குழந்தையைப் பார்த்தாயா ? பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் ? கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறாய் சினிமா நடிகனுக்கு வால்போஸ்ட் ஒட்டுகிறாய் நடிகைகளுக்கு கோயில் கட்டுகிறாய் மன்றங்கள் அமைத்து வாழ்க ! வாழ்க ! என்று கரகோஷம் செய்கிறாய் இது உமக்கு தேவையா ? உன்னைப் பெற்றெடுத்தவர்களை ஒரு நாளாவது மனதிற்குள்ளாவது வாழ்க ! என சொல்லி இருப்பாயா ? ஆனால் அவர்கள் தம்வாழ்நாள் முழுவதும் உன்னைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.