தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 07, 2014

மதுரையை கலக்கியது யாரு ?

Just click on the photo to view it in big size.
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ.



26.10.2014 மதுரை மாநகர் எமது அன்புத் தங்கை தமிழ்ச்செல்வியின் வீடு.

அதிகாலையிலேயே எழுந்து தயாராகினேன் இரண்டு சக்கர வாகனத்தோடு காரணம் இருப்பு கொள்ள முடியவில்லை எமது கழுத்தில் கைக்குழந்தை (புகைப்படக்கருவி) தொங்கி கொண்டிருக்க... நானும், மருமகன் K.விவேக்கும் புறப்பட்டோம் பதிவர் திருவிழாவுக்கு... வைகை ஆற்றுப்பாலத்தை கடக்கவும், வண்டியூர் தெப்பக்குளத்தின் மையத்தில் அமர்ந்திருந்த சிறிய கோவில் வளாகத்தை சுற்றி நின்றிருந்த மரங்கள் தங்களின் கிளையென்ற கைகள் கொண்டு கையசைத்து வருக... கில்லர்ஜி என எம்மை அழைப்பது போன்ற உணர்வு வலதுபுறம் வளைந்தால் கீதா நடன கோபால நாயகி மந்திர் பள்ளி வளாகம் தென்பட வண்டியை விட்டு இறங்கினேன்.

(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)



முகவாயிலில் கண்கொள்ளாக்காட்சி ஆம் ! பழுத்தபழம் ஐயா திரு.சீனா அவர்கள் தனது துணைவியாருடன் நின்று கொண்டு ‘’வாங்க கில்லர்ஜி’’ என அன்பொழுக அழைத்தார். ஐயாவை வணங்கி விட்டு கரம் பற்றினேன்.... சற்று நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் ஒருவர் வந்தார்.. கண்களை ஊடுறுவினேன். சட்டென கணித்து ஐயாவிடம் சொல்லி விட்டேன், தலைக்கவசத்தை கழட்டும் முன்னே சொல்லி விட்டீர்களே... ஆம் சுழற்சி நாயகன் திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

பசுமை நினைவுகளை புகைப்படக்கலைஞர் K.விவேக் நிழற்படமாக சுட்டுத்தள்ள தொடங்கினார்.



உள்ளே நுழைந்தோம் பிரமாண்டமான பதாகைகள் எம்மையும் வரவேற்றன... சற்று நேரத்தில் மதிப்பிற்குறிய ஐயா திருச்சி திரு.தி.தமிழ் இளங்கோ அவர்கள் தொடந்து... எம்மை கழுத்துவரை கல்லாக்கிய மதுரை மன்னன் பகவான்ஜி (நேற்றிரவே வலைச்சித்தர், பகவான்ஜி, குடந்தையார் அனைவரையும் ஹோட்டல் ராஜேஸ்வரியில் சந்தித்து விட்டேன் என்பது வேறு விசயம், வாத்தியார் திரு.பாலகணேஷ் அவர்கள் மன்னிக்க) 

பிறகு ஐயா திரு.தருமி அவர்களை, தொடந்து ஐயா கவிஞர் திரு.ரமணி அவர்கள், துளசிதளம் திருமதி.கீதா அவர்கள் கணவருடன் வருகை தந்தார், அடுத்து பெங்களூருவிலிருந்து 76 வயது இளைஞர் ஐயா திரு.G.M. பாலசுப்பிரமணியன் அவர்கள், தனது துணைவி மற்றும் மகனுடன் வந்தார். அபுதாபி அண்ணல் கவிஞர் திரு.மகேந்திரன் அவர்கள், திரு.குடந்தையூர் சரவணன், வலைச்சித்தர், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.மணவை ஜேம்ஸ் அவர்கள், திரு.டி.என். முரளிதரன் அவர்கள், திரு.கோவை ஆவி அவர்கள், வாத்தியார் திரு.பாலகணேஷ் அவர்கள்

திடீரென பரபரப்பு சில காலங்களாக நேற்று மாலையில்கூட எமது செவிகளில் செல்களின் வழியே ஒலியலை மூலம் கேட்டுப்பழகிய எமது இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் மனைவி, மகளுடன் வருகை தந்தார். முதன் முதலாக ஒளியாக நேரில் கண்டதால் வணங்கி கட்டித்தழுவி வரவேற்றேன். கூடவே சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் ஐயா திரு. B. ஜம்புலிங்கம் அவர்களின் வரவு.













சிட்டுக்குருவி திரு.விமலன் (தங்களோடு புகைப்படம் எடுக்க முடியவில்லை கடைசிவரை தாங்கள் விலகியே இருந்தீர்கள்) 

தன்னை ஸ்கூல் பையன் என அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தார் திரு.ஸ்பை உண்மையிலேயே ஸ்கூல் பையன் போலவே இருந்தார். அவரோடு புகைப்படம் எடுக்க முடியவில்லை.







திடீரென மின்னல் போல தோன்றினர் மலர்த்தரு திரு.மது கஸ்தூரி மற்றும் அவரது துணைவியார் மகிழ்நிறை திருமதி.மைதிலி கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை கலக்கல் மன்னன் திரு.நா.முத்து நிலவனார் அவர்கள், கவிஞி திருமதி.தேன் மதுரத்தமிழ் கிரேஸ் குடும்ப சகிதமாய் வந்து கலக்கினார்கள். தேவகோட்டை பெற்றமகள் புதுக்கோட்டை கவிஞி திருமதி.மு.கீதா அவர்கள், நண்பர் திரு.வலிப்போக்கன் அவர்கள், திரு.நவாஸ் அவர்கள், திரு.மகாசுந்தர் அவர்கள், 

எமக்கு ஆச்சர்யம் என்ன என்றால் அனைவருமே எம்மை அடையாளம் கண்டு வாங்க கில்லர்ஜி என்று சொல்லி விட்டார்கள். சகோதரி மைதிலியின் குழந்தைகள்கூட கில்லர்ஜி அங்கிள் என.... நான்தான் திணறினேன், விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. குடந்தையாரின் குறும்பட வெளியீடு மற்றும் நண்பர் திரு.கரந்தையார், கவிஞி திருமதி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ், கவிஞி திருமதி.மு.கீதா, திரு.பி.ஆர். ஜெயராமன் ஆகியோரின் நூல் வெளியீடு, எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்பு பேச்சு

நிகழ்ச்சியினை அபுதாபி அண்ணல் கவிஞர் திரு.மகேந்திரன் அவர்கள் அழகாக தொகுத்து வழங்கியதை சற்றுப் பொறாமையுடனே... பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன். 




தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ....








பதிவர்கள் மேடையேறி தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ள அழைக்கப்பட்டார்கள்

தமிழ் வளர்த்த மதுரையிலே எமது வாழ்வில் முதல்முறையாக மேடையேறினேன். நேரமின்மை காரணமாக ஐந்து நிமிடம் மட்டுமே பேசினேன். 

ஆனால் எமது திட்டப்படி நான் பேச நினைத்த நிறைய விசயங்கள் பேசமுடியவில்லை எமது கனவை அடுத்த விழாவில் புதுக்கோட்டையில் கலக்கல் மன்னன் திரு.நா.முத்து நிலவனார் அவர்கள் நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன். ஐயா அவர்களுடன் சிறிது நேரமே பேசியதில் ஐயாவும், நானும் .......த்திகத்தில் ஒரு அலசல் அலச முடிந்தது. போதாது, போதாது இன்னும் இருக்கிறதே.... கேள்விக்கணைகள்.... பரவாயில்லை பதிவுகள் மூலம் அவரை சந்திப்போம்.





76 வயது இளைஞர் ஐயா திரு.G.M. பாலசுப்பிரமணியன் அவர்களுடன் பேசிய வார்த்தைகள் எமது வாழ்வின் பொன்னான தருணங்கள். ஐயா கையொப்பமிட்டு எமக்கு கொடுத்த வாழ்வின் விளிம்பில் என்ற தனது நூல் மறக்க முடியாதகும். 

இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களும் கரந்தை மாமனிதர்கள் என்ற தனது நூலை அன்புடன் கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.

வாத்தியார் மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்கள் தனது சரிதாசணம் என்ற நூலை எமது பதிவை தொடர்கிறேன் என்று சொல்லி கையொப்பமிட்டு கொடுத்தார்கள்

இனியதோழி கவிஞி திருமதி.மு.கீதா அவர்களும் ஒரு கோப்பை மனிதம் என்ற நூலை பருகச்சொல்லி, கையொப்பமிட்டு கொடுத்தார்கள்

இனியதோழி கவிஞி திருமதி.தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களும் துளிர் விடும் விதைகள் என்ற நூலை கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.

நண்பர் திரு.கோவை ஆவியும் தனது ஆவிப்பா என்ற நூலை கையொப்பத்துடன் வழங்கினார்.

அனைவருக்கும் நன்றியும் வேண்டுகோளும் இவை அனைத்தையுமே படித்து அதனைக்குறித்து பதிவிடுவேன் அதற்கு கால அவகாசம் தருவீர் தங்களுக்கே தெரியும் எமக்கு தற்போது வேலை நிறைய இருக்கிறது.






(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)







நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் காண இருகண்கள் போதாது என தனது பதிவில் சொன்னதை நானும் உணந்தேன். நண்பர் திரு.கரந்தையார் அவர்களிடம் மட்டுமல்ல, ஐயா முனைவர் திரு.B. ஜம்புலிங்கம் அவர்களிடம் மட்டுமல்ல, ஐயா திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமல்ல, தோழர் திரு.மது அவர்களிடம் மட்டுமல்ல, நிறைய எவ்வளவோ பேசுவதற்கு கேள்விக்கணைகளுடன் வந்தேன் எங்கே ? நேரம் கிடைத்தது நேரம் போனதே தெரியவில்லை திடீரென சூரியன் மேற்கே போய்விட்டான், அழைத்தால் மீண்டும் நாளைதான் வருவேன் என மறைந்தே விட்டான்.







விழா ஏற்பாடுகளை பம்பரமாய் சுழன்று வேலை செய்த, ஐயா திரு.சீனா அவர்கள், நண்பர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், நண்பர் திரு.பகவான்ஜி அவர்கள், திரு.தமிழன் கோவிந்தராஜ் அவர்களுக்கு கில்லர்ஜியின் மனமார்ந்த நன்றிகள்.




புதுக்கோட்டை கலக்கல் மன்னன் ஐயா திரு.நா.முத்து நிலவனார் அவர்களுக்கு பணிவான கோரிக்கை. பதிவர் சந்திப்பு என்பது தலைப்பு. சந்தித்தோம் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ? ஒருவருக்கொருவர் பேசினோமா ? ஆகவே அடுத்த புதுக்கோட்டை விழாவில் மடை திறந்த வெள்ளம்போல் மனம் திறந்து பேச குறைந்த பட்சமாக மூன்று மணி நேரமாவது இடைவேளை விடவேண்டும் என்பது எமது அவா.



இடையே ஜிகிர்தண்டா வழங்கப்பட்டது.





முடிவில் ஒரு வருத்தமும்கூட இனிய நண்பர் திரு.வே.நடனசபாபதி மற்றும் நண்பர் திரு.துளசிதரன் மற்றும் கீதா அவர்கள் நண்பர் திரு.தளிர் சுரேஷ், திரு.கிங் ராஜ், திரு..பாண்டியன், திரு.ஜெ.பாண்டியன், அவர்கள் வராமல், அவர்களை சந்திக்காமல் போனது மன வருத்தத்தை தந்ததே...



குறிப்பு இதில் பெயர் குறிப்பிடாத பதிவர்கள் தயவு செய்து மன்னிக்க எம்முடன் பேசியவர்களை குறிப்பிட்டு விட்டேன் ஆயினும் ஒருசிலர் எம்மிடம் பேசுவதற்க்கு தயங்கியதை கவனித்தேன் காரணம் அறியேன்.

02.11.2014 தினமலரில்...

Video All Persons

 Video I am on the stage speech.
மதுரையை கலக்கியது யாரு ?



அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

(புகைப்படங்கள் அனைத்தும் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது)

 வாழ்க தமிழ். 

07.11.2014 


123 கருத்துகள்:

  1. மதுரையில் சந்தித்த ஒருவரையும் விடாமல் தாங்கள் தங்களது மனதிலும், புகைப்படத்திலும் பதிந்ததோடு மட்டமன்றி எங்களோடு பகிர்ந்தமைக்கும் நன்றி. தாங்கள் கூறுவதுபோல நேரமின்மையை அங்கு உணரமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே...

      நீக்கு
  2. மதுரையை கலக்கியது யாரு,,..சந்தேகமில்லாமல் அபுதாபியிலிருந்து வந்திருந்த தேவக்கோட்டை கில்லர்ஜீதான்....!அருமை நண்பரே. நானும் வீடியோவில் மதியம் வரையிலான நிகழ்வுகளை எடுத்திருக்கிறேன் சிறிய துண்டுகள் சில இணைத்திருக்கிறேனுங்கள் அறிமுகத்துக்கு நட்புக்கும் நன்றி. தொடர்பில் இருப்போம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உடன் வருகையும், வாழ்த்தும், தொடர்பும் மகிழ்ச்சி ஐயா.

      நீக்கு
  3. சந்தேகம் வேண்டாம் மதுரையை கலக்கியது தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி...தான்

    பதிலளிநீக்கு
  4. அருமை
    அருமையான பதிவு நண்பரே
    சந்தேகமேயில்லாமல் மதுரையை கலக்கியது தாங்கள்தான்
    தங்களைப் பார்த்ததும், தங்களிடம் பேசியதும்
    நீங்கா நினைவுகளாய் நெஞ்சில் பதிந்துள்ளது நண்பரே
    மீண்டும் சந்திப்போம்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் மீண்டும் புதுக்கோட்டையில் சந்திப்போம் நண்பரே...

      நீக்கு
  5. செம கலெக்சன் !!! வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோதரி, ''அவர்'' வரவில்லையே....
      தங்களது புகைப்படம் அனுப்புகிறேன் தொடர்புக்கு... sivappukanneer@gmail.com

      நீக்கு
  6. மதுரையை கலக்கியது நிச்சயம் நீங்கள்தான் கில்லர்ஜி,ஒருவரைக் கூட விடாமல் சந்தித்து ,நீங்கள் கிளிக்கி போட்டிருக்கும் படங்கள் அருமையோ அருமை !நீண்ட பதிவுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை விடவா... கலக்கி விட்டேன் பகவான்ஜி

      நீக்கு
  7. பதிவர் திருவிழாவை நேரில் பார்த்த உணர்வை தந்து விட்டது. , உங்கள் பதிவு.

    துளசி கோபால் தான் அவர்கள் பெயர் கீதா இல்லையே! படங்கள் நன்றாக இருக்கிறது., உங்கள் பேச்சு கொஞ்சம் கேட்டது. காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி, தவறுக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  8. புகைப்படங்கள் அனைத்தும் அருமை...
    ஒரு நல்ல விழா... சந்தோஷமான விழா.... அதை அனுபவிப்பதே சநதோஷம்...
    படங்களில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, இன்று நேரில் சந்தித்தோம் சந்தோஷம் தொடர்பில் இருப்போம்.

      நீக்கு
  9. அன்பின் ஜி..

    மதுரையில் நடந்த நிகழ்வுகளைக் கண் முன்னே - காணும் வகைக்கு பதிவில் அளித்தமைக்கு மகிழ்ச்சி.. அருமை.. இனிமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் வராததுதான் குறை நண்பரே,,,

    பதிலளிநீக்கு
  11. சென்னை வாசிகள் யாரும் வரவில்லை போல!! பதிவுலகை சீரியசாக கருதி இத்தனை பேர் நேரம் ஒதுக்கி கலந்து கொண்டிருப்பது பெருமிதமாக இருக்கிறது. படங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தியை தருகின்றன. ............ Blogging........ம்,,,,,,,,,,,இதுவும் ஒரு உலகம்!! Thanks.

    பதிலளிநீக்கு
  12. பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கி விட்டீர்கள் சகோ. எல்லோரையும் நேரில் சந்தித்தது போல் இருக்கிறது.

    முத்து நிலவன் ஐயா பதிவில் (செய்தித்தாளில்)மதுரையை கலக்கியது யாருன்னு முன்னமே தெரிந்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தானே பதிவிட இத்தனை தாமதமானது தாங்கள் செலவில்லாமல் மதுரை வந்து போனது சந்தோஷமே,,,,,

      நீக்கு
  13. தங்களுடைய இந்தப்பதிவு என்னுடைய டாஸ்போர்டில் வரவில்லை ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி எனக்கும் வரவில்லை இது (ஆஸி )காரைக்குடியார் கண்ணேறோ ?

      நீக்கு
    2. இது என்னோட கண்ணு இல்லை. நீங்கள் இப்படி டி-ஷர்ட் போட்டுக்கிட்டு அலப்பறை பண்ணியது உங்களுக்கே கொஞ்சம் ஓவரோன்னு தெரிஞ்சிருக்கு, அதனால தான் நீங்களே இந்த பதிவை டாஷ்போர்டுல வராம பண்ணிவிட்டீர்கள்.

      நீக்கு
    3. ஆஹா, வந்துடீயளா, வந்துட்டீயளா

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே.!

    விரிவான பதிவும்,விளக்கமாக தாங்கள் சொன்ன விதமும், அருமையான படங்களுமாக மதுரையில் நடந்த பதிவர் விழாவை, நேரில் பார்த்தது மாதிரி சந்தோசமாக இருந்தது. .!

    பதிவர் விழாவில் அனைவரையும் சந்தித்து, பேச்சு பரிமாற்றத்தில், அனைவருடனும் கல(க்கி)ந்து மகிழ்வுடன் வந்திருக்கும் தங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது வாழ்வில் சந்தோஷ தருணங்கள் மிக மிக குறைவு இந்நாள் எமக்கு பொன்னாளே.... வருகைக்கு நன்றி சகோதரி

      நீக்கு
  15. இனிய வணக்கம் நண்பரே...
    சொல்ல வார்த்தைகள் இல்லை...
    செழிப்பான படங்களின் அணிவகுப்பு.
    மேடையில் நிகழ்ச்சி தொகுப்பில் சிறைபட்டுவிட்டதால்
    புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள முடியவில்லையே
    என வருந்தினேன். உங்கள் படவரிசை கண்டு
    மகிழ்வுற்றேன்.
    முழு நிகழ்ச்சியையும் கண்ட நிறைவு
    உங்களின் பதிவு கண்டு.
    அனுமதித்தால் சில படங்களை எடுத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே,,, தங்களை மதுரையில் சந்தித்ததும் தாங்கள் தொலைவில் இருப்பதால் நேற்று தொலைபேசியில் பேசியதும் மகிழ்ச்சியே மீண்டும் சந்திப்போம் நண்பரே... டிசம்பர் 3 ல், நண்பர் வசனகர்த்தா திரு.பரிவை சே.குமாரோடு பரிவட்டம் கட்டுவோம்.
      அனுமதி ? பூவைப் பறிக்கக் கோடரி எதற்க்கு ? கிள்ளிக்கொள்ளுங்கள் நண்பரே,,

      நீக்கு
  16. படங்கள் அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நவிழ்கிறேன் நண்பரே,,,

      நீக்கு
  17. ஜி... பதிவை பலமுறை படிக்க படிக்க + படங்களைப் பார்க்க பார்க்க... இனிமை... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    எனக்கு போட்டியாக கரந்தை ஐயா மட்டும் என்று இருந்தேன்... ஆனால் நீங்கள் தான் டாப்... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகை மகிழ்ச்சி தருகை தருகிறது நண்பரே... தங்களது தம்பி ரூபன் அவர்களை காணோமே,,,,, என்னவாயிற்று ?

      நீக்கு
  18. வணக்கம் ..மீண்டும் வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள்..அருமையான படங்கள்..எனது சொந்த ஊர் அரியலூர்..சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் அழைத்துச்சென்றேனா ? அப்படியானால், ஜாங்கிரி திண்ணச் சார்ஜ் எதற்க்கு ? தாங்கள்தானே தோழி என்னிடம் சொன்னீர்கள் சொந்தஊர் தி கிரேட் தேவகோட்டை என்று...

      நீக்கு
  19. அருமையான படங்கள், காணொளிகள்.... முழுவதும் கண்டு ரசித்தேன்... மதுரையைக் கலக்கியது கில்லர்ஜி மட்டுமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பா தாங்கள் பேசுவதற்குள் பெல் சப்தம் கேட்ட ஸ்கூல் பையன் போல் ஓடிவிட்டீர்களே...

      நீக்கு
  20. தங்களது 62 படங்களும் அருமை! படங்களை வரிசையாக பதிவு செய்தமை பாராட்டுக்குரியது !

    மதுரையை கலக்கியது வந்திருந்த பதிவுலக நண்பர்கள்தான் !


    சித்தையன் சிவக்குமார், மதுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... சரியான வார்த்தைகள் இனி, இணையத்தில் இணைந்திருப்போம்.

      நீக்கு
  21. கில்லர்ஜி, பதிவு மீண்டும் அந்த நாளுக்கே அழைத்துச் சென்றது. அருமை.. மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்தித்து அளவளாவ விரும்புகிறேன்..

    பதிலளிநீக்கு
  22. கில்லர்ஜீ இன் படங்களைப் பாரு
    மதுரையைக் கலக்கியது பாரு
    மின்னும் பதிவர் சந்திப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கவிதைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  23. சகோதரே என் டாஸ்போட்டிலும் வரவில்லை. மதுரையை கலக்கியது வேறு யாரு தங்கள் தான் என்று சொல்ல வந்தால் ஒட்டு மொத்தப் பேரும் இதயே சொல்கிறார்கள் குட். போகமுடியாதவர்கள் எல்லோர் சார்பாகவும் தங்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியே. அதுவுமில்லாமல் காட்சிகளை கண் முன் நிறுத்தி எம்மையும் கலந்து கொள்ள வைத்ததில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள் ...! பலரை இதன் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி பதிவுக்கும் படங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு செலவு இல்லாமல் வைத்தமைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

      நீக்கு
  24. மதுரையை கலக்கப் போவது யாரு என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். உண்மையிலேயே கலக்கி விட்டீர்கள். அனைத்துப் படங்களும் அருமை. அபுதாபியிலிருந்து அனைத்து பதிவர்களையும் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே வந்து இருந்தீர்கள். உங்கள் மகிழ்ச்சியை கண்களில் காண முடிகிறது. நோக்கம் நிறைவேறி விட்டது என்று நினைக்கிறேன். நானும் உஙளை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!

    காலையிலேயே உங்களின் பதிவை படித்து விட்டேன். துளசிதளம் வலைப்பதிவரின் பெயர் துளசி கோபால் என்பதாகும். அன்புடன் துளசி டீச்சர் என்பார்கள். உங்களுடைய பதிவினில் அவருடைய பெயரை கீதா என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கவனிக்கவும். (ஏற்கனவே கோமதி அரசு அவர்கள் இதுபற்றி சொல்லி விட்டார்)

    உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

    தங்கள் வலைத்தளத்தில் Google Friend Connect என்ற Widget ஐ வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே தங்களை சந்தித்ததும் மகிழ்ச்சியான தருணங்களே... தவறுக்கு வருந்துகிறேன்,
      Google Friend Connect நண்பர் D.D யிடம் கேட்கிறேன் நன்றி.

      நீக்கு
  25. முதல்முறை தங்கள் பக்கம் வருகிறேன் பதிவர் சந்திப்பினை நேரில் கண்டது போல் ஒரு ப்ரம்மை மகிழ்ச்சி கடல் எங்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று வந்த நண்பர் தினேஷ்குமார் என்றும் தொடர்க.... நன்றி.

      நீக்கு
  26. ஒரு நிறைவான பதிவு என்று
    தங்கள் பதிவைத்தான் சொல்லவேண்டும் என
    நினைக்கிறேன்.அத்தனை அருமையாக உள்ளது
    மேடையில் இருக்க நேர்ந்ததால்
    தங்களுடன் சரியாகப் பேசமுடியாது போனது
    பெரும் குறையே
    தொடர்ந்து தொடர்பில் இருப்போம்
    அடுத்த பதிவர் விழாவில் சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துப்பொதிகளை சுமந்து வந்து பதிந்தமைக்கும் நன்றியுரைத்தேன் கவிஞரே,,,

      நீக்கு
  27. தங்களை தேடிவந்து பேசிய என்னை மறந்த உங்களோடு பேசுவதாக இல்லை சார் ... கூட்டம் அதிகமாக இருக்கையில் இதெல்லாம் சகஜம் தான் சார் .. சும்மா சொன்னேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க நண்பரே, உண்மையில் மகிழ்ச்சியில் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் ஒருவேளை நம்மிடம் கருத்து பரிமாற்றம் இல்லாததுதான் காரணமோ இனி தொடர்பில் இருப்போம் ஆகவே தங்களை கூலாக்க தங்களது புகைப்படங்கள் 10 அனுப்புகிறேன் தொடர்புகொள்ள sivappukanneer@gmail.com

      நீக்கு
  28. ஒருசிலர் எம்மிடம் பேசுவதற்க்கு தயங்கியதை கவனித்தேன் காரணம் அறியேன்.//// வேறென்ன உம்மோட பெரிய மீசையப் பார்த்து முரடரோன்னு பயந்திருப்பாங்க. பழகினாதானே உங்களோட தங்க குணம் தெரியும் மீசைக்காரரே.... வாத்தியாரின் அறிவுரையா..? விழாவுல நான் எதும் அறிவுரை சொன்னதா நினைவே இல்லையே... தூக்கத்துல உளர்ற மாதிரி எனக்கே தெரியாம எதும் சொல்லிட்டனோ...? ஹா.. ஹா... ஹா... அன்றைய தினம் உங்களைப் போன்றவர்களைச் சந்தித்த மகிழ்வு இப்போது நினைத்தாலும் மனதில் வருகிறது. அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, வாத்தியாரே தமிழே தெரியாதவனைக்கூட வாத்தியாருனு சொன்னவன் தமிழன் நான் தங்களைச் சொல்வதில் தவறில்லை வாத்தியாரே...

      நீக்கு
    2. கில்லர்தானே உங்க பேரு...................................................................................................................................................................................................................................................................................................................................................................... ரொம்ப கோவமா இருக்கேன்.. கொஞ்ச நாள் பொறுங்க கிள்ளி காட்டுறேன்.. ரொம்பவும் கோபத்துடன்..... அ... அட எதுக்கு சொல்லனும்...

      நீக்கு
    3. அன்பே சிவம் ஒன்றும் புரியவில்லையே நண்பா,,,, கோபம் என்மீதா அன்பே சிவமான தாங்கள் என்னிடம் கோபம் கொள்ளலாமா ?

      நீக்கு
  29. ஒரு மிக முழுமையான் பதிவு. பறந்து வந்து தந்த படங்களுக்கும் செய்திகளுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறந்து வந்து கொடுத்த கருத்துரைக்கு நன்றி திரு. தருமி ஐயா அவர்களே....

      நீக்கு
  30. உங்கள் பதிவைப் படித்ததும் பார்த்ததும்..... நானும் நேரிலேயே கலந்துகொண்டது போன்ற ஓர் உணர்வு கில்லர் ஜி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு முதற்கண் நன்றி அப்படி உணர்ந்தால் போக்குவரத்து செலவை நண்பர் பகவான்ஜி அவர்களுக்கு அனுப்பி விடவும்.

      நீக்கு
  31. புகைப்படங்களுடன் புல் கவரேஜ்...
    சூப்பர் சார்.....
    நாம் பழக்கம் இல்லையென்றாலும், நட்புறவோடு பேசியது மிக்க மகிழ்ச்சி கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
  32. நல்ல தொகு சார்,வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  33. அங்கேதான் வரவில்லை!
    இப்பபொழுது பாருங்கள் இங்கேயும் இவ்வளவு தாமதமாய்!
    கில்லர்ஜியின் எழுத்தும் பேச்சும் கேட்டேன்.
    எல்லாரையும் பார்க்க வைத்து விட்டீர்கள்!
    நிச்சயமாய் உங்களையன்றி மதுரையைக் கலக்கியவர் யார் ஜி?
    உங்கள் பெயரின் ரகசியத்தை மணவையார் சொன்னார்.
    பகிர்விற்கு
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை நண்பரே புதுக்கோட்டையில் காணலாம் அதுவரை வலையத்தில் வளையம் வருவோமே... மணவையார் என்ன சொன்னார் ?என்னைப்பற்றி தவறாக சொல்லக்கூடியவர் இல்லையே...

      நீக்கு
  34. நான் போட்டோவில் அழகாய் கலக்கியதாய் சொன்னார்கள் கி...ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் பகவான்ஜிதானே அவர் சொன்னால் உண்மைதான் நண்பா,,,,

      நீக்கு
  35. அன்பிற்கினிய தோழர் அவர்கள் என்னையும் நினைவில் வைத்தமைக்கு மிக்க நன்றிகள் பல. தவிற்க முடியா காரணங்களால் வர வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறாமல் போனது... உங்கள் பதிவின் மூலம் அனைத்து அன்பு உள்ளங்களையும் காணச்செய்தமைக்கு எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் போதாது. வாழ்த்துக்கள் பல..... அனைவருக்கும்.
    அனைத்து படங்களையும் தரவிரக்கம் செய்துக்கொள்ளலாமா?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை நண்பரே... வருகைக்கு நன்றி வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் நண்பா.

      நீக்கு
  36. அன்புள்ள ஜு,

    மதுரை மட்டுமல்ல...வலைச்சரத்தையே கலக்கி விட்டீர்கள் அய்யா...!

    தங்களைச் சந்தித்த பொழுது தேவகோட்டையிலிருந்து வந்திருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் தேவகோட்டையிலிருந்து அபுதாபி (U.A.E) பணிக்குச் சென்று ...அங்கிருந்து தாங்கள் இந்தத் தமிழ் வலைப்பதிவர் திருவிழாவிற்காக வருகை புரிந்ததாக சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை!

    நூறு மைல் தொலைவிலுள்ள மணப்பாறையிலிருந்து மதுரை செல்லலாமா? வேண்டாமா? நமக்கு யாரையுமே தெரியாது! எனக்கு தெரிந்த ஒரே நண்பர் ஊமைக்கனவுகள் திரு.விஜு அவர்கள்தான். அவரும் வரஇயலாத சூழ்நிலையில் நாம் மட்டும் எப்படிச் செல்வது என்ற தயக்கத்துடன்தான் வந்தேன்.
    எனக்குத் தெரிந்தவர் என்று சொன்னால் கவிஞகர் முத்து நிலைவன் அய்யா நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்த திருமதி.மைதிலி (எங்கள் ஊர்க்காரர்) திரு.கஸ்தூரி அய்யா மட்டுமே.
    தாங்கள் வெளிநாட்டில் இருந்து இவ்வளவு ஆர்வமுடன் வந்ததை எண்ணிய பொழுது வியந்து போனேன்... அதுமட்டுமல்ல நான் பக்கத்தில் இருந்து வருவதற்கு தயங்கியதை நினைத்து வெட்கிப்போனேன். திருச்சி தமிழ் இளங்கோவடிகள் அன்புடன் வரவேற்று...அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்த அவர் வயதில் மூத்தவராயினும் செயலில் என்றும் பதினாறு. இந்த நேரத்தில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
    மதுரை தமிழ் வலைப்பதிவர் திருவிழாவின் தாங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் அருமை...இந்த ஆல்பம் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும். உந்தன் பெருமை என்றும் தமிழகத்தில் வலைப்பதிவர்களால் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
    வெளிநாட்டுக்காரராக இருந்தாலும்...தங்களின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பிடித்தது. தாங்கள் தொடராக எழுத இருப்பதாக அறிவித்தீர்கள்...அதை புதுகை வலைப்பதிவர் திருவிழாவில் நூலாக வெளியிட ஆவன செய்யுங்கள்.
    நண்பர் விஜு அவர்களிடன் தங்களைப் பற்றி தவறாக தவறியும் சொல்வேனா? தங்கள் பெயரைக் கேட்டார்...தாங்கள் சொன்னதைச் சொன்னேன் (ரகசியத்தை). என்ன சொன்னீர்கள் என்பது மறந்து இருக்காது என்றே கருதுகிறேன். நீங்கள் சொன்னதைத்தான் சொன்னேன் அய்யா. ஞாபகம் வருகிறதா?
    தங்களின் வீடியோ பதிவையும் பார்த்து மகிழ்ந்தேன்.

    மறக்க முடியாத மதுரை நிகழ்வனைத்தையும் ...
    சிறப்பான ஆவனமாக ஆக்கித் தந்தது
    உங்களுக்கு மேலும் பெருமை சேர்த்தது!

    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே, தங்களை காணவில்லையே என நினைத்தேன் தங்களின் நீண்ட கருத்துரை கண்டு மலைத்தேன், பிறகே படித்தேன் நான் பேசியதை எத்தனை தூரம் கவனித்து இருக்கிறீர்கள் என்பதை கண்டு வியப்பாக இருக்கிறது நண்பரே.... நிச்சயமாக நான் சொன்னபடி தொடர் பதிவை வெளியிடுவேன் அதன் மூலம் ஒரு மாற்றுக்கருத்தை சேகரிப்போம் இனிய நண்பர் ‘’ஊமைக்கனவுகள்’’ அவர்களிடம் தாங்கள் தவறாக சொல்லி இருக்கமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியாதா ? விளையாட்டுக்காக கேட்டேன் வருகைக்கு நன்றி நண்பரே.....

      நீக்கு
  37. ஆஹா ஏராளமான படங்களுடன் தாங்கள் வெளியிட்டுள்ள பதிவைக் கண்டதும் மீண்டும் பதிவர் சந்திப்பு கொண்டாடியது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த உணர்வு தங்களுகத்கு வந்தால் அது எமக்கு வெற்றியே நண்பரே...

      நீக்கு
  38. Killerjee thanks a lot....you gave me the great chance of watching our Madurai fest...Nodoubt Killerjee it was our beloved Killerjee who rocked Madurai fest with his presence from UAE ,with his unique article about the fest,with his loving and lovable address....only now I have realized how unfortunately I have missed our fest...once again Killerjee my hearty congrats for the fine report of our fest with photographs...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்க்ஸ் ஃபார் யுவர் விஷ்செஸ் ஃப்ரம் யுவர் ஸோல் ஐ ஆம் ரியலி ஃபீல்ட் ஹாப்பி ட்டூ அட்டெண்ட் தி பெஷ்டிவெல் இன் மதுரை.
      வாட் ஐ ஸ்போக் இன் மதுரை பெஸ்ட்வெல் இட்ஸ் ஆல் அபோட் மை ஃப்யூச்ஸர் ப்ளான் நாட் ஒன்லி நார்மல் வேர்ட்ஸ்.
      நோ வோர்ரிஸ் வி வில் மீட் ஓன் நெக்ஸ்ட் பெஸ்ட்வெல் ஹெல்ட் அட் புதுக்கோட்டை ஐ ஆம் ஈகெர்லி வெய்ட்டிங் ஃபார் யுவர் ப்ரெஸன்ஸ்.
      தாங்க்ஸ் ஒன் எகைன்.

      வித் லவ்
      கில்லர்ஜி

      நீக்கு
    2. எனக்குத் தெரியாம வந்துட்டாரா நண்பர்! அட! ஆச்சரியமே! (சொன்னாரு) அவர்கிட்டதமிழ் ஃபான்ட் இல்லை அதான் பீட்டர் விட்டுருக்காரு!ஹஹஹ்

      நல்ல தொகுப்பு! அருமை! படங்களும் அருமை! கில்லர் ஜி! நாங்கள் வருந்தினோம் மிஸ் பண்ணி விட்டோம் என்று! எங்கள் தோழி மைதிலியை பல புகைப்படங்கள் இட்டு காட்டியதற்கு மிக்க நன்றி! பதிவும் கலக்கல்! கில்லர் ஜி!

      பகவான் ஜியை அவரது ஐகான் ஆன அந்த கூலிங்க் ளாஸ் இல்லாமல் பார்க்க....ஏதோ போல் உள்ளது!!ஹ்ஹஹ்ஹ

      ஏம்பா நீங்க இப்படித் தொப்பியோடு, பெரிய வீரப்பன் மீசையோடு போட்டோவுல இருக்கற மாதிரி வந்தா பொறந்த குழந்தை கூட கண்டு பிடிச்சுடும்பா!!!!! ஹஹாஹ...இதுதானே உங்க ஐகான்! நம்மள எல்லாம் அப்படிக் கண்டு பிடிக்க முடியாதுல்ல!!!!!

      மிகவும் ரசித்த பதிவு! மட்டுமல்ல துளசி சொல்லி இருப்பது போல் கில்லர்ஜி has rocked the fest!!!

      நீக்கு
    3. விளாவாரியாக கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  39. கில்லர்ஜி அவர்களுக்கு வணக்கம். இன்று தான் இங்கு வருகிறேன்.
    வந்ததும் மிகச்சிறப்பான பகிர்வில் சந்தித்தது போன்ற உணர்வு. அத்தனை அருமையாக தொகுத்த விதம் சிறப்பு. உங்களை பார்த்தால் முதலில் பயம் தான் வரும் அனைவருக்கும் சரிஅதை விடுங்கள் அது தான் அண்ணா பாலகணேஷ் சொல்லிவிட்டாரே குணத்தில் நீங்கள் தங்கம் என்று. சரி உங்கள் பெயர் காரணம் தெரிந்தாக வேண்டும். என்ன இந்த பெண் முதல் முறை இப்படி அதிகாரமாக பேசுவதாக நினைப்பது தெரிகிறது. ஏனோ நான் யாரிடமும் இப்படி உரிமையாக பேசியது கிடையாது. தென்றல் வந்து தாங்கள் சகோதரி என்று உரிமையுடன் அழைத்த தைரியத்தில் இருக்கலாம். "பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு" மிகவும் அருமை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரியின் முதல் வருகையை முத்தமிழால் வரவேற்கிறேன் எமது பெயர் விபரத்தைதான் உலகறிய பேசியிருக்கிறேனே... மேலும் குலம் கோத்திரம் அறிய வேண்டுமெனில் எமது செப்டம்பர் மாத பதிவான ‘’விருது’’ படியுங்கள் அனைத்தும் அறியலாம் எமது பதிவையும் தங்களைப்போன்றவர்கள் தொட்டதற்க்கும், தொடர்வதற்க்கும் நன்றி.
      அன்புடன்
      கில்லர்ஜி.

      நீக்கு
    2. சகோ இங்கு எனக்கு கேட்க வாய்ப்பு இல்லை . கேட்டிருந்தால் பெயர் காரணம் கேட்பேனா ?
      சரி அந்த பகிர்வை பார்த்துவிட்டு வருகிறேன்.

      நீக்கு
    3. மீண்டும் வருகை தந்தமைக்கும் ''விருது'' கண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  40. நீங்கள் லேட்டாக இந்த பதிவை போட்டாலும், லேட்டஸ்ட்டாக போட்டுவிட்டீர்கள். என் சார்பாக நீங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஆனால் நான் சொன்னபடி நீங்கள் செல்லவில்லையே நண்பரே.

    வேட்டி கட்டிக்கொண்டு செல்லுங்கள் என்றல்லவா சொல்லியிருந்தேன். ஆனால் நீங்கள் என்னடா என்றால், கல்லூரி மாணவரை போல் ஒரு டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு என்னமா அலப்பறை பண்ணியிருக்கிறீர்கள். இதெல்லாம் டூ டூ டூ மச்.

    எப்படி, நான் லேட்டா கருத்து போட்டாலும், உங்களை கலாய்ச்சிட்டோம் இல்ல!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தாங்கள் சொல்வதுபோல் எனக்குப் பிடித்த (அரசியல்வாதிகள் போல்) வேஷ்டி கட்டிப் போவதாகத்தான் இருந்தேன் ஆனால் \\மழை தருமோ என் மேகம்\\ என்ற பாடல் நினைவு வந்தது அதனால்....
      கல்லூரி மாணவரைப்போல் இருப்பதால் பொறாமையா ?

      நீக்கு
  41. ஆஹா!! பதிவர்கள் பலருடனும் பேசி புகைப்படங்கள் எடுத்து அருமையாய்த் தொகுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள்..மிக அருமை! சிலப்பதிகாரத்தில் கோவலனை வராதே என்று சொன்ன மரங்கள் உங்களை வருக!வருக! என்று வரவேற்றது மகிழ்ச்சி! கலக்கிட்டீங்க சகோ! பலருடனும் பேசவேண்டும் என்று எண்ணியிருந்தாலும் பேசமுடியாமல் போனது..நீங்கள சொல்வது போல பேசுவதற்கு என்று ஓரிரு மணிநேரங்கள் விட்டுவிட்டால் நன்றாய் இருக்கும்..புகைப்படங்களுக்கும் காணொளிக்கும் நன்றி. மதுரையைக் கலக்கியது தாங்கள்தான் போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான், இதுதான் கவிஞி என்பது கருத்துரையில்கூட கவித்துவம் வருகைக்கு நன்றி சகோ, எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டமைக்கும் நன்றி ஆனால் ? ஐயா திரு.நா.முத்து நிலவனார் அவர்கள் என்ன சொல்வாரோ... யார் ? அறிவார்.

      நீக்கு
  42. அய்யா. வணக்கமுங்க..! கலக்கிப்புட்டிங்களே...! யப்பா.! கலர்கலரா படங்கள்..
    ஜிகிர்தண்டாவைக்கூட விடலையே..! நாம மனம்விட்டுப் பேசமுடியலே,ஆனாலும் ரொம்பநாள் பழகியதைப்போல ஒரு feel இருந்ததே..!
    புதுக்கோட்டைக்கு வாங்க..! இன்னும் கலக்குவோம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபீல் இருந்தது உண்மையே ஆனால் போதாதே.... நிச்சமாக கலக்கலாம் நண்பரே....

      நீக்கு
  43. பதிவர் விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை தங்கள் பதிவு போக்கிவிட்டது.தானக்ல் சந்தித்த ஒவ்வொரு பற்றியும் படத்தோடு குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதில் நானும் இல்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.
    அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம். காணொளியை கண்டேன். தங்களின் பேச்சையும் கேட்டேன். அரங்கில் இருந்தோர் பலர் பேசிக்கொண்டு இருந்ததால் பேச்சை தெளிவாக கேட்கமுடியவில்லை. இருப்பினும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே,,, அந்த சத்தம் பக்கத்து மஹாலில் நடந்த திருமணத்தில் போட்ட பாட்டுச்சத்தம் ஆகவே யார் பேசியதும் கேட்க முடியவில்லை.

      நீக்கு
  44. இன்னும் தாங்கள் மதுரையை கலக்கி கொண்டுருப்பதால்..அடுத்த பதிவு பதிவிடவில்லையோ.... திரு.கில்லர்ஜி..அவர்களே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலிப்போக்கனை புகைப்படத்தில் முதன் முறையாகத் தங்கள் பதிவில் தான் கண்டோம்! மிக்க நன்றி!

      நீக்கு
  45. வணக்கம் சகோதரரே!

    கண்கொள்ளாக் காட்சியும் நேரில் நானும் கலந்துகொண்டதான
    உணர்வுதரும் பதிவுமாக அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்!!!

    படங்களில் யார் யாரெனக் குறிப்பிட்டது மிகச் சிறப்பு!..
    எனக்கும் இப்படி எல்லோரையும் ஒன்றாகக் காணும் வாய்ப்புக் கிட்டாதா
    என் ஏங்க வைத்துவிட்டீர்கள் சகோதரரே!

    மிக அருமை! மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    நீங்கள் என் வலைப்பூவில் குறிப்பிட்டமையாலேயே
    தங்களின் பதிவிதனைக் கண்டேன்..!
    அதனாலேயே இத்தனை தாமதமான என் வருகை இங்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்பதிவு டேஷ்போர்டில் வரவில்லை அதுவும் ஒரு காரணமே... வருகைக்கும். கருத்துரைக்கும் நன்றி சகோதரியாரே,,,

      நீக்கு
  46. கொலைகாரரே! (வேறொன்றுமில்லை நண்பா உங்கள் பெயரைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்) நீங்கள் படுபயங்கரமான ஆள் என்பது தெரியாமல் எங்கே இந்த கில்லர்ஜியைக் காணவில்லை. வளைச்சு வளைச்சுப் படம் எடுத்தார் ஒரு பதிவையும் காணோமே என்று நினைத்தால் அத்தனை பேரையும் சுட்டுத்தள்ளிவிட்டீரே கொலைகாரரே! அருமைய்யா.
    (ஒரு கலக்கல் மன்னன்தான் அடுத்தவரைக் கலக்கல் மன்னன் என்று பொருத்தமில்லாமலே சொல்லமுடியும்!) புதுக்கோட்டைக்கும் வந்திருங்க.. உணவு இடைவேளை ஒருமணிநேரம், தேநீர் இடைவேளைகள் இரண்டுக்கும் சேர்த்து அரைமணிநேரம் விட்டுவிடுவோம்.. (அப்பறம் பதிவர்கள் இடையிடையே “பேசிக்கே“ இல்லாமலும் பேசிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்... தனீ இடைவேளை வேறா?) நன்று நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் ஐயா அடுத்த விழாவில் புதுக் ''கோட்டை''யையே உலுக்குவோம் ஐயா.

      நீக்கு
  47. விழாவில் கலந்தகொள்ள முடியாத ஏக்கத்தைப் பற்பல மடங்கு கூட்டிவிட்டீர்கள் ஐயா! நான் இவர்கள் யாரையும் பார்த்ததில்லை. (முத்து நிலவனார் ஐயா அவர்கள் தவிர!). உங்கள் புகைப்படங்களுக்கு மிக்க நன்றி! குறிப்பாக மைதிலி கஸ்தூரி ரங்கன், வலிப்போக்கன் ஆகியோர் முகங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி!

    எல்லோரும் உங்களைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டதற்காக நீங்கள் வியப்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. இணையத்தின் பல இடங்களில் இருக்கிறீர்கள் நீங்கள். உங்களைத் தெரிந்திருப்பதில் வியப்பேதுமில்லை.

    ஒரு சிறு திருத்தம்! 'கவிஞி', 'கவிஞி' என்று பல இடங்களில் குறிப்பிட்டு, ஏற்கெனவே பல் கூச்ச நோய் கொண்ட எனக்கு மேலும் மிகுந்த இக்கட்டை அளித்து விட்டீர்கள். 'கவிஞர்' என்றே கூறலாமே! அல்லது, பெண்பால் கவிஞர் என்பதைச் சுட்ட விரும்பினால் 'கவிஞை' எனக் கூறுங்களேன்!

    பணிவன்பான இன்னொரு கருத்து! சந்திப்பு நிகழ்ந்தாலும் கலந்து பேச முடியாததால், அடுத்த விழாவில் இடைவேளையை மூன்று மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என்றீர்கள். ஏன், அப்படி இல்லாமல், நிகழ்வையே கலந்து பேசும் நிகழ்வாக மாற்றினால் என்ன? விழா என்றாலே மேடை நிகழ்ச்சியாகத்தான் அமைக்க வேண்டுமா என்ன? கொஞ்சம் புதுமையாக முயன்று பார்க்கலாமே!

    நிகழ்வின் இறுதியில் உங்களுக்கு ஒரு வருத்தம் எழுந்தது போல், பதிவின் இறுதியில் எனக்கும் ஒரு வருத்தம்! சந்திக்க முடியாமல் போனதற்காக நீங்கள் வருந்திய பதிவர்களின் பட்டியலில் என்னை நீங்கள் குறிப்பிடவில்லை பார்த்தீர்களா? உங்கள் கையால் விருது வாங்கிய என்னை மறந்து விட்டீர்கள்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே,,,
      பெண்பால் என்பதால் கவிஞி என்றெழுதினேன் ‘’கவிஞை’’ இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
      நல்லது நண்பரே தங்களது யோசனையும் ஏற்கக்கூடியதே ஐயா திரு. முத்து நிலவனார் அவர்கள் ஏற்பாராக...
      மன்னிக்க நண்பரே தங்களை மறந்ததற்காக வருந்துகிறேன் அதாவது எல்லோருமே பதிவை போட்டு முடித்து போய்க்கொண்டே இருந்தார்கள் நான் தாமதாமானதால் சீக்கிரம் பதிவை இடவேண்டும் என்ற ஆவலின் காரணமாய் மறந்து விட்டேன் முன்கூட்டியே ஒரு பாராவில் மன்னிப்பு கேட்டு விட்டேன் இப்பொழுது நான் கணக்கு பார்க்கும்போது நிறைய தவறிழைத்து இருக்கிறேன் என்பது புலப்படுகிறது.
      கவலையை விடுங்கள் நண்பரே அடுத்த வருடம் புதுக்கோட்டையில் இருவரும் சேர்ந்தே கலக்குவோம் நன்றி.

      நீக்கு
    2. பரவாயில்லை நண்பரே! நன்றி!

      நீக்கு
    3. நண்பரின் ஆலோசனை மிக நன்றாக உள்ளது நாங்கள் யோசிபது போல அதாவது மேடை நிகழ்வாக இல்லாமல், கலந்து பேசும் நிகழ்வாக....அருமையானது!

      நீக்கு
    4. நண்பரி மதுவின் புகைப்படங்களும் மிகுந்த சந்தோஷம் தந்தது!

      நீக்கு
    5. தங்களது சந்தோஷம் எமது சந்தோஷமே...

      நீக்கு
    6. மிக்க நன்றி துளசி ஐயா / கீதா அம்மணி!

      நீக்கு
  48. திரு. கில்லர்ஜி!

    புகைப்படங்களே பாதி செய்திகளைச் சொல்லி விட்டன.
    மீதி நீங்கள் எழுதியதையும் படித்தேன். பிரம்மாண்ட விழா
    என்பதுபோல் இது பிரமாண்ட பதிவு!

    புகைப்படங்கள் எடுத்த அன்பருக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் திரு. அ.முஹம்மது நிஜாமுத்தீன் நன்றி,

      நீக்கு
  49. உண்மையிலேயே கலக்கல் பதிவு தான்! புகைப்படங்களும் விபரங்களும் மிக அருமை!!

    பதிலளிநீக்கு
  50. ஷார்ஜாவிலிருந்து.... அபுதாபியை கண்டு ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  51. கெஸட்லே போடாமல் இப்படி என் பெயரை மாற்றிவிட்டீர்களே:-)))))

    படங்கள் அனைத்தும் அருமை. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே... மன்னிக்கவும் பெயரில் தவறு நிகழ்ந்து விட்டது மாற்றினால் பதிவில் பெரிய மாற்றமே ஆகிவிடும் ஆகவே விட்டு விட்டேன். பரவாயில்லை அடுத்த பதிவில் சந்திக்கும்போது.. சரியாக பெயரைப்போடுகிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  52. மதுரை பதிவர் விழாக்கு போகலையேன்னு இருந்த கவலையை போக்கிவிட்டது ஜீ உங்க பகிர்வும் போட்டோக்களும்.. நிறைய பேர் மிஸ்ஸிங்.. ரமணி சார், தனபாலன் சார், சீனா அண்ணா, வாண்டு ஆனந்த் (ஆவி), சீனிமிட்டாய் சீனு, கணேஷா (பாலகணேஷ்), துளசிம்மா, மைதிலி குட்டி (ரொம்ப சந்தோஷம் குட்டிம்மா உன்னை பார்த்தது போட்டோவில்), தமிழ்வாசி பிரகாஷ், இளங்கோ சார், முத்து நிலவன் சார், கரந்தை ஜெயகுமார் சார், தேன்மதுர தமிழ்கிரேஸ், இன்னும் நிறைய தெரிந்த முகங்கள். கொஞ்சம் தெரியாத முகங்கள், பகவான் ஜீ.. ரொம்ப சந்தோஷமா இருந்தது ஜீ. படங்கள் பார்த்து...

    ஒரு டௌட் ஒரு சில போட்டோக்களில் யாம் என்று ஒரு பெயர் இருக்கே. :)

    பதிவர் விழாவுக்கு வந்த திருப்தி... அடுத்த வருடம் பதிவர் விழா சென்னையில் ஜூலை மாதம் வைத்தால் கண்டிப்பா மிஸ் பண்ணாம கலந்துப்பேன்..

    ஜிகிர்தண்டா சூப்பர்...

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி, அதென்ன ? டௌட் ‘’யாம்’’ இந்தப்பதிவாளர் அப்பாவி கில்லர்ஜிதான்.

      நீக்கு
  53. மகேன் இவ்ளோ குண்டாயிட்டியா :) எனக்கு அடையாளமே தெரியலையேப்பா :) யாரோ பெரியவர்னுல்ல நினைச்சுட்டேன் :)

    குடந்தையூர் சரவணன், ஜம்புலிங்கம் ஐயா இவர்களையும் போட்டோவில் பார்த்தது சந்தோஷம்.

    துளசிதளம் வலைதளத்துக்கு சொந்தமானவர் பெயர் எப்ப கீதா ஆனது :) ச்சும்மா சும்மா கலாட்டா. நீங்க துளசிம்மா கிட்ட சாரி சொன்னதை படிச்சிட்டேன்.

    சீனா அண்ணா அண்ணி இருவரும் பங்க்சுவலா கரெக்ட் டைமுக்கு விழாவுக்கு வந்துட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  54. இன்று மீண்டும் இப்பதிவைப் படித்துப் படங்களைப் பார்த்து மகிழ்ந்தேன் சகோ

    பதிலளிநீக்கு
  55. நண்பரே மதுரை சந்திப்பு அருமை
    நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியே தனி
    நண்பர்களை சந்தித்து விட்டு
    கிளம்பும் போது தங்கள் கண்களில்
    சிறியதாய் பிரிந்து விடுகிறோம் என்ற ஏக்கத்தில் கண்கள் நிறைந்திருக்க வேண்டும்...
    ஏனென்றால் இந்த பதிவை பார்க்கும் போதே
    என் கண்கள் நிறைந்து விட்டது....

    நான் சொல்வது உண்மைதானே....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே அந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரமுடியாது

      நீக்கு
    2. உண்மையே நண்பரே
      சந்திப்பு தொடரட்டும்...

      நீக்கு
  56. ஆகா.... மொத்த எழுத்து சிற்பிகளும் இங்குதான் இருக்காங்க போல...

    I am mind voice :- ம்... ம்ம்... நமக்குதான் வாய்ப்பு கிடைக்கல... நாம ரொம்ப லேட்டா எண்டர் ஆகிட்டோமா?.. ம் ... ம்ம்... எதுக்கும் ஒரு பெருமூச்சு விட்டு வைப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த மாநாட்டில் சந்திக்கலாம் நண்பரே...

      நீக்கு