தேனி பேருந்து நிலையத்தில் ஹோட்டலில்
சாப்பிட்டு விட்டு ஒதுக்குப்புறமாக நின்று சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்
பொழுதுதான் கவனித்தேன் ஒருத்தி என்னையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டு நின்றாள்
நானும் அவளைப் பார்த்தேன் மலைத்தேன் அத்தனை அழகு மனதில் தைரியத்துக்காக பகவான்ஜியை
நினைத்துக்கொண்டு பார்வையால் அருகில் அழைத்தேன் வந்தாள் பெயரென்ன ? என்று
வினவினேன் தேன்மொழி என்றாள் வியந்தேன் காரணம் பெயரிலும் தேன் உங்கள் பெயர் கேட்டது
தேவதையே தேனப்பன் என்றதும் சட்டென எனக்கு கை கொடுத்தாள் இலவம் பஞ்சு போன்ற கையை
தொட்டதும் ஒரு நொடிதான் உடல் சிலிர்த்தேன் உயரத்தில் பறந்தேன் உலகை மறந்தேன். ‘’ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா’’ சட்டென நினைவோட்டங்கள் சிதற சுயநினைவுக்கு
வந்தேன் எதிரே ஒரு பிச்சைக்காரர் ஹூம் இந்த நேரத்தில் வந்துதான் கேட்க வேண்டுமா ? இதுவும்
நல்லதுதான் தேவதைக்கு முன் பெருமையாக 10 ரூபாய்
போடுவோம் என நினைத்து பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டால் ? எனது
பர்ஸ் எங்கே ? அந்த தேவதை எங்கே ? அய்யோ வந்தவள் எங்கே ? அடிப்பாவி
இந்த அப்பாவிதான் இன்றைக்கு கிடைச்சேனா ? அவ்வ்வ்வ்வ்வ்.
கோயமுத்தூர் ரயில்வே நிலையத்தில் இரவு 07.30 உள்ளே நுழைந்தேன் சாரே ஒரு மினிட் குரல் கேட்டு
திரும்பினேன் தேவதை ஆம் தேவதையே என்ன ? சாரே நிங்களு பாலக்காடானோ போகுன்னது ? ம்ம் அது வந்து... ஆமா.. என்ன ? அல்ல ஞானும் பாலக்காடு
போகுன்னு சகாய்க்கான் ஆளில்லா அதான் சோதிச்சது சரி வாங்க டிக்கெட்
எடுத்துட்டீங்களா ? இல்லை நான் எடுக்கட்டுமா ? அல்ல ஞான் எடுக்காம் வேண்டாம்
நானே எடுக்கிறேன் கௌண்டரில் 2 பாலக்காடு என்றேன் ச்சே எவ்வளவு அழகாக
இருக்கிறாள் பாலக்காடு பக்கம்தானே போய் விட்டு வருவோம் கம்பார்ட்மெண்டில் வேறு
யாரும் இல்லாமல் இருந்தால் நல்லது பிறகு அங்கிருந்து சென்னை போகலாம்
அப்படியொன்றும் முக்கியமான காரியமில்லை டிக்கெட் எடுத்து அவளிடம் ஒன்றை கொடுத்து
விட்டு வாங்க சீக்கிரம் இன்னும் 10
மினிட்தான் இருக்கு என்றேன்
டிக்கெட்டை பெற்றுக்கொண்டவள் நிங்கள் போய் ஸீட் பிடிக்கு ஞான் டோய்லெட் போய்
இப்போல் திருச்சு வரான் நான் மின்னல் வேகத்தில் ஆளில்லாத கம்பார்ட்மெண்டை தேடி
ஏறினேன் டாய்லெட்தான் ரயிலில் இருக்கிறதே... ஒருவேளை இங்கு அசுத்தமாக இருக்கும்
என்று நினைத்திருப்பாள். இன்னும் 5 மினிட்டே உள்ளது வாசலில் நின்று அவளுக்காக
காத்திருக்க தூரத்தில் யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டு அவனது கையில் எதையோ திணித்து
விட்டு எதையோ வாங்க அவன் வேகமாக ஓடி வந்து நான் நின்ற கம்பார்ட்மெண்டில் என்னை
இடித்துக் கொண்டு ஏறினான் அவ்வ்வ்வ்வ்வ்.
தூத்துக்குடி துறைமுகத்தில் எனது முகவரிக்கு சிங்கப்பூரிலிருந்து
நானே அனுப்பி விட்டு வந்த கார்கோ பெட்டி பார்சலை மதியம் நுழைந்தவன் அவர்களின் கெடுபிடியில் அழுது
கட்டி விட்டு மாலை 06.00 மணிக்குதான் வாங்கிவிட்டு வெளியேறினேன் இருட்டுவதற்குள்
வீட்டுக்கு போய் விடலாம் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உழைத்து சம்பாரித்தது
போதுமென்று திருச்செந்தூர் முருகன் அருளால் வீடு கட்டுவதற்கான கதவின் பாட்லாக்,
பூட்டு சாவி, பெயிண்ட் மற்றும் வீட்டுக்கான சாமான்கள் நான் வேலை செய்த கம்பெனியில்
டிரைவராக இருந்ததால் ஸ்டோருக்கும் போவதும் வருவதுமாக இருந்து சுட்டதும்,
சுடாததுமாக சேர்த்து வைத்து
1 டன் சேர்த்து அனுப்பி
விட்டு கேன்ஷலில் வந்து விட்டேன் பிக்கப்பை நானே ஓட்டி வந்தேன் பக்கத்து ஊர்தானே
என்பதால் துணைக்கும் யாரையும் அழைத்து வராமல் நான் மட்டுமே வந்தேன் காரணம்
சொந்தக்காரனைக் கூட்டி வந்தால் வாயைப் பிளப்பான் ரயில்வே கேட்டை தாண்டியதும் ஒரு
கணவனும், மனைவியும் நின்று கொண்டு கையை ஆட்ட நிறுத்தி என்ன ? என்றேன்
அண்ணே நானும் எம் பொஞ்சாதியும் பஸ்ஸுக்காக ரொம்ப நேரமா நிற்கிறோம் எங்களை
உடன்குடியிலே இறக்கி விட்ருங்களேன் நான் அவளைப்பார்த்தேன் செம கிராமத்துக்கட்டை
பார்வையே ஒரு மாதிரியிருக்க சரி உடன்குடிதானே ஏறுங்க என்றேன் உடனே ஏ புள்ளே
சட்டுனு ஏறு என்று முதலில் அவளைப்பிடித்து ஏற்றி விட்டு பிறகு அவன் ஏற அவள்
மையத்தில் உட்கார்ந்து இருந்தது எனக்கு என்னவோ போலிருந்தது அவன் சட்டென சாய்ந்தவன்
உறங்கிவிட இவள் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள் வண்டியே தடுமாறியது
கையிலிருந்த பையிலிருந்து பிஸ்கெட்டை எடுத்து தின்றாள் தின்றவள் எனக்கு கொடுக்க
நான் வேண்டாம் என்றேன் அவள் சட்டென கணவனை ஒரு கள்ளப்பார்வை பார்த்து விட்டு எனது
வாயில் பிஸ்கெட்டை திணிக்க வேண்டாமென்று சொல்லத்தான் முடியுமா ? ’’சுள்’’ என முகத்தில் வெயில் அடிக்க முழித்தேன் கருவக்காட்டோரம்
கிடந்தேன் எழுந்து எனது பிக்கப் எங்கே ? அடிவயிறு கலக்கியது காரணம் மனக்கண்னில் மனைவி
மருதவள்ளியின் முகம் அவ்வ்வ்வ்வ்வ்.
சென்னை விமான நிலையத்தின் உள்புறம். குவைத்திலிருந்து
ஒருமாத விடுமுறையில் வருகிறேன்
எஸ்க்யூஸ்மி சார்
திரும்பிப் பார்த்தேன் ஏர்ஹோஸ்டல் ட்ரெஸ் போட்டிருந்தாள்
இவள் எந்த ஏர்லைன்ஸ் யோசித்துக் கொண்டே எஸ் ப்ளீஸ் என்றேன்
ஐ வாட்ச் யூ வொய் திங்கிங்
நெவர் நோ நத்திங்
ஐ நோ சார்
கௌ யூ நோ
யூ ஹேவ் கோல்ட் அன் லிமிட் கரைட்
நோ...
எஸ் சார் நௌவ் ஹியர் கஸ்டம்ஸ் ப்ராப்ளம் டூ மச் கென் ஐ
ஹெல்ப் யூ
கௌ ஹெல்ப் மீ
கிவ் மீ யுவர் கோல்ட் ஐ வில் ரிடெர்ன் அவுட்ஸைட் மை சார்ஜ்
ஜஸ்ட் ட்டூ பெர்சண்ட் ஒன்லி
யூ நாட் மீ டெரெட் கரைட் என்ன ? செய்யலாம்
கோல்ட் நிறையாத்தான் இருக்கு நண்பர்களும் கொடுத்து விட்டார்கள் தட்ட முடியவில்லை
டி.வியும் 42 இஞ்ச் டூட்டி போடாமல் விடமாட்டார்கள் இவள் ஏர்ஹோஸ்டஸ்தானே
எவ்வளவு அழகாக இருக்கின்றாள் இவளா ஏமாற்றப்போகிறாள் ? லிப்டிக் போட்டவள் பொய்
சொல்ல மாட்டாள் வாய்மையே வெல்லும் என்று சிறுவயதில் குருந்தன் வாத்தியார் சொல்லிக்
கொடுத்தாரே.... கூடவே வரப்போகிறாள் வெளியில் வந்து தருவாள் வாங்கி கொள்வோம் அவ்வளவுதானே....
ஓகே யூ ஆர் ஃப்ரம் வேர்
ஐம் ஃப்ரம் மோண்டியா ஐ நோ லிட்டில் டமிள் வண்க்கோம்
இட்ஸ் ஓகே ஐ கிவ் யூ டூ பிக் செயின் அன்ட் ப்ரேஸ் லெட்
ஒன்லி
ஓகே டோட்டல் கௌமெனி க்ராம் சார்
டோட்டல் மேபி 60 கிராம்
கம்மிங்
ஓகே மை சார்ஜ்
3000 தௌடண்ட் ஒன்லி சார் யூ ஹேவ்
இண்டியன் மொணி
நோ ப்ராப்ளம் மை ஃபேமிலி அவுட்ஸைட் வெயிட்டிங்க்
ஓகே கிவ்
ப்ளீஸ் கம் ட்டூ தட் ஸைட் ஒதுக்குப்புறமாகப் போய் கேமரா
இல்லாத இடத்தில் பேண்டுக்குள் இருந்த நண்பர்கள் கொடுத்து விட்ட இரண்டு செயினையும்
ப்ரேஸ் லெட்டையும் அவளிடம் கொடுக்க அவள் சட்டென வாங்கி ஹேண்ட் பேக்கில் திணித்து
விட்டு
ஓகே சார் ஐம் வாட்சிங் யூ யூவில் எக்ஸிட் ஐம் கம்மிங்
ஸ்டாஃப் எக்ஸிட் வேய் ஓகே
ஓகே ப்ளீஸ் கிவ் மீ யுவர் செல் நம்பர்
நோட் த நம்பர்
9876543210 பை சீ யூ
அவள் விடைபெற நான் கஸ்டம்ஸ் வரிசையில் நின்று நான் அவளையும்
அவள் என்னையும் பார்த்துகொண்டு நிற்க எனக்கு பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து
டி.விக்கு மட்டும் 3000 ரூபாயை தள்ளி விட்டு எனது பெட்டிகளை எடுத்துக்
கொண்டு அவளுக்கு கண்களால் சைகை காட்டி விட்டு வெளியேறி மனைவி மக்களைப் பார்த்து
குழந்தைகளுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டு ஸ்டாஃப் வாசலிலேயே நின்று கொண்டு
காத்திருந்தேன் அவளுக்காக.... அவள் வருவாளா ? அவ்வ்வ்வ்வ்வ்.