தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 27, 2020

மொழியில், கலந்திரு(ற)ப்பேன்


புதாபியில் நான் அரசாங்க வேலை வாங்குவதற்கு முன்பு சாதாரண நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் நானும் ஒருவன் இதில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடு இருந்ததே இல்லை தனித்து காணப்படும் மனிதனாக இருக்கவேண்டும் என்ற சிந்தை எனது அப்பா வயிற்றில் இருக்கும் பொழுதே தோன்றிய நீண்டகால எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

திங்கள், மார்ச் 16, 2020

பேயிடம் பேசிய பேரம்


புதாபி நகரின் மையப்பகுதியில் இருக்கும் நான்கு கி.மீ. இந்த அண்டர்க் ரௌண்டில் நள்ளிரவு 01.00 மணிக்கு நான் எனது காரில் வரணும் காணொளியும் எடுத்துக் கொண்டு (ஆதாரமாம்) வந்து மறுமுனையில் எனக்காக காத்திருக்கும் அதாவது இவர்கள் எனது தலைக்கு மேலே வந்து கொண்டு இருப்பார்கள் நண்பர்களிடம் காண்பிக்க வேண்டும் இது பந்தயம்.

புதன், மார்ச் 11, 2020

செய்யாலூர், செய்வினை செய்யது


மேலே படித்தீர்களா ? குறிமேடையாம் எங்கும் தீர்க்க முடியாத செய்வினை, ஏவல், பில்லி. சூனிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படுகிறது. மேலும் பேய் கோளாறுகள் ஒரே நாளில் முற்றிலும் சரி செய்யப்படுகிறது. அதாவது இறைவனுக்கு நிகரானவர்கள் என்றே சொல்லலாம் போல... இவைகள் உண்மையோ பொய்யோ சரி இவைகளெல்லாம் காலங்காலமாய் நம்பி வரும், நம்பப்படும் ஆச்சார விதிமுறைகள் கடன்கள் என்றே சொல்லிக் கொள்வோம்.

வியாழன், மார்ச் 05, 2020

தமிழனின் நிலை


மிழன் தமிழ் நாட்டில் உழைத்து பிழைப்பதற்கு இப்படி வெளி மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவனின் படங்களை தனது செலவில் போட்டு வைத்து பிழைக்க வேண்டியது இருக்கிறது இது தமிழனுக்கு அவமானில்லையா ? இவன் மட்டுமில்லை பல கூத்தாடிகளின் புகைப்படமும் இருக்கிறது. இதே தமிழனின் புகைப்படத்தை வெளி மாநிலங்களில் போட இயலுமா ? இதை தமிழன் சிந்திக்க மறுக்கிறான். தமிழ் நாட்டில் வந்தவனை எல்லாம் வளர்த்து விடுவதில் மதுரைக்காரர்கள்தான் முன்னிலையானவர்கள்.