2013
- Emirates Etihad Airways-ல் அதிகமுறை
பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய்
வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் கொடுத்தார்கள் என்ன அதிசயம் கில்லர்ஜி பெயர் வந்து
விட்டது சந்தோஷமாக புறப்பட்டு போய் ஊர் சுற்றினேன்... மலேசியாவில் யாரை பார்க்கலாம்...
என யோசிக்கும்போது... ஆஹா நமது இலங்கை நண்பர் ரூபன் அவர்களை சந்திக்கலாமே...
ஹோட்டலில் இருந்து நண்பர் ரூபனை தொலைபேசியில் அழைத்தேன்...
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, ஜனவரி 18, 2020
வியாழன், ஜனவரி 31, 2019
UAE to AUSTRALIA
Place: Australia Sydney Banks town Airport Me & My Frantz Mr. Chokkan
ஆஸ்திரேலியாவில் இருக்கும்
நமது இனிய நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் நான் அபுதாபியிலிருக்கும்
பொழுது மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் விடுமுறை கிடைத்தால் வாங்களேன் ஆஸியை
சுற்றிப் பார்த்து விட்டு போகலாம் என்று... மனதுக்குள் என்ன நினைத்திருந்தாரோ....
நண்பரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது நட்பின் இலக்கணம் அல்லவா ஆகவே
எமிரேட்ஸில் தேசியதினம் அரசு தினத்தோடு சேர்ந்து ஐந்து தினங்கள் விடுமுறை
கொடுத்தார்கள். மேலும் ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்து மணிகண்டனுக்கு வேஷ்டி சட்டை
எடுத்துக் கொண்டு விசிட் அடித்தேன்.
திங்கள், ஏப்ரல் 09, 2018
சனி, மார்ச் 14, 2015
Killergee in AMERICA
அன்பு நெஞ்சங்களே கடந்த சிலிர்க்க வைத்த, ஸ்ரீலங்கா. பதிவில் சொல்லி இருந்தேன் அமெரிக்கா அழைத்து போகிறேன் என்று
அதைப் போலவே செய்து விட்டேன் சந்தோஷம்தானே.
AMERICA, LOS ANGELES SPECTER STREET - 11.30 pm
நான் மட்டும், கழுத்தில் தொங்கிய CANON CAMERA வில்
(GERMANY போயிருந்தபோது வாங்கி
வந்தது)
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்களை,
கடைகளை சுட்டுக் கொண்டே வந்தேன்...
(ஏற்கனவே
பகலில் எடுத்து விட்டேன்)
ச்சே.. எவ்வளவு அற்புதமாக
இருக்கு, நம்ம தேவகோட்டையே தோற்றுப் போயிரும் போலயே.... ரசித்துக் கொண்டே நடந்தேன்
இந்தசிலை நல்லாயிருக்கே நம்மளை PHOTO எடுக்க சொல்லலாம்னா
ஒரு தமிழ் ஆளைக்கூட காணோமே, இவங்களை நம்பி CAMERA வை கொடுக்கவும் பயமா
இருக்கு... கடைசிவரை என்னை எடுக்கவே இல்லை
(அதனால்தான்
எந்த PHOTO விலும்
நான் இல்லை)
நடந்து கொண்டே வரும்போது ஒருத்தி அருகில் வந்து
(இவள் உடைதான் போட்டு இருக்கிறாளா)
PLEASE WELCOME
Sirrrrrrr…
என்றாள், ஒரு மாதிரியாக... கையை பிடித்தவள்
இழுத்துக் கொண்டே போனாள்.. பஞ்சு போன்ற கை என்மீது படவும் என்னால் ஒன்றுமே
சொல்ல முடியவில்லை, சட்டென ஒரு கதவருகே போனவள் கையில் வைத்திருந்த MOBILE போன்ற REMOTE ஒன்றை
அமுக்கவும் கதவு திறந்து கொண்டது, சட்டென என்னை உள்ளே தள்ளவும் கதவு மூடிக் கொண்டது
அவள் வெளியே போய் விட்டாள், பார்த்தால் எதிரே வண்ணவிளக்கில் QUOINS PAR என்று
எழுதியிருந்தது... மெதுவாக நடந்தேன்... மேற்கத்திய இசை வெளியே துளையிட்ட என்காதை
உள்ளேயும் நுளைந்து துளைத்தது, செக்கச் சிவந்த இளம்குமரிகள்.
(ஹூம்
என்ன சொல்ல, முடியலை)
ஆடிக் கொண்டிருந்தார்கள்,
அதில் ஒருத்தி என்னருகே வந்து...
Hi, Sir How are You Today ?
கேட்டவள்
சட்டென SORRY என்னால
எழுத முடியலை..... ம்ம்.... ம்ஹூம் எழுதவும் முடியாது, அடுத்தவள் எனது
மொட்டைத் தலையை தடவிக் கொண்டே
I LIKE YOU BLACK MAN
என்றாள்,
அடுத்தடுத்து வந்தாள்கள்... வந்தவள்கள்... நான் என்னத்தே எழுத முடியலை,
என்னைச்சுற்றி நான்கு பெண்கள், இல்லை.. இல்லை ரம்பா, ஊர்வசி, மேனகா, என்று
சொல்வார்களே... என் வாழ்விலுமா இப்படி... ?
மெய்மறந்து
கண்ணை மூடி அப்படியே.............. நின்றவன், தப்பு இப்படியே நிற்பது தப்பு,
சந்தோஷத்தில் இதயம் நின்றாலும் நின்று விடும் பிடித்துக் கொள்வோம், கையை இதயத்தின்
அருகே கொண்டு போனதும் எங்கே ? எனது MONEY PURSE, அய்யோ..
யேன் CAMERA… CAMERA…
CAMERA… வைகாணோம்...
அட்சீ, கஸ்மாலம் கம்னுகெட காலங்காத்தாலே
கணாக்கண்டுகினு கேமராவெ காணோம், கேயார் வெசயாவே காணோமுன்னு
உட்ஸ்ர எடுத்துக்கினுகீரே கம்னாட்டி, ஒரு ஜோலிக்கி போக, துப்பில்லே... எப்ப பாத்தாலும்
வூட்ல தூங்கிகினு... இன்னொருதபா கணாகண்டுகினு பினாத்துனே மூஞ்சிலே சுடு தண்ணிய
அட்சுருவேன் கயிதே, எந்ரிச்சி கபாலி கடையிலே சாயி வாங்கிகினு வா போ.
மனைவி மயிலு, சத்தாய்கவும் சத்தமில்லாமல் எழுந்து தூக்குச் சட்டியை
எடுத்துக் கொண்டு சேரிக்குள் இருக்கும், கபாலி டீ கடையை நோக்கி நடையை கட்டினேன்.
காணொளியைப்பற்றிய தங்களது கருத்தை எழுதுவீர்.
Video
(Please
ask Audio Voice)
புதன், பிப்ரவரி 11, 2015
Germany Part - 3
You Want See Big size ? Just Click One Time Photo Inside.
ஜெர்மனி, நாட்டைக் குறித்து அதன் அபார வளர்ச்சி,
கலாச்சாரம், கண்டு பிடிப்பாளர்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், அழிந்து வரும் மக்கள்
தொகை, அதன் காரணம், பெருகி வரும் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள், அடுத்த இருபது ஆண்டுகளில் அதன் பாதிப்பு, இதனைக் குறித்து எனது பார்வையில், ஜெர்மனியில், ஜெயாவுடன் ஜெமினி என்ற
தலைப்பில் ஒரு கட்டுரை எழுத தீர்மானித்து உள்ளேன்.
அரண்மனை பெயர் மறந்து விட்டேன்.
வித்தியாசமான தூண்கள் வெளிப்புறந்திலிருந்து எடுத்தது.
பூமிக்கு அடியில்.
பெர்லினில், செக் பாய்ண்ட். அமெரிக்க ஆர்மி.
பெர்லின் சுவர்.
முழு மரத்தில்.
பெர்லின் சுவர்.
என்னைப்போன்ற பாமரர்களுக்கு வழிகாட்டி.
பூசணிக்காய்கள்தான்.
கல்லிலே கலை வண்ணம்.
ஆயிரக்கணக்கான தையல் இயந்திரங்கள் விற்பனைக்கு அல்ல.
காண்டாமிருகம்.
You Want See Big size ? Just Click One Time Photo Inside.
கீழே ஆறு ஓடுகிறது.
நண்பர்களே.... இதில் தொங்கி கொண்டு இருப்பதெல்லாம் நமது வலைச்சித்தர் அவர்களின்
திண்டுக்கல் பூட்டுதான்... இதைல்லாம்
இதில் பூட்டி வைத்தது யார் தெரியுமா ?
தெய்வீக காதலர்கள் ஆம் காதலர்கள் தங்களின் காதல்
இறுக்கமானதாக இருக்க வேண்டுமென நினைத்து இந்த இரும்பு கேட்டுகளில் பூட்டி சாவியை,
என்ன செய்வார்கள் தெரியுமா ? சாவியை.... சாவியை.....
சாவியை... கீழே ஓடிக்கொண்டு இருக்கிறதே.... தாமிரபரணி ஆறு அதில் வீசி விடுவார்கள்
இப்படிச் செய்தால் தனது காதல் கை கூடி விடுமாம், நம்மூரு கோயில் மரத்தடியிலே ஆத்தா மகமாயி எம்மவ வவுத்துல ஒரு புழு
பூச்சியைக்கொடு அப்படினு நேர்த்திக்கடன் வச்சு தொட்டிகட்டி தொங்க விடுறதுபோல அப்படியொரு
நம்பிக்கை இவங்களை என்ன சொல்றது ? நம்மூருல நித்தியை நம்புறகின்ற கூட்டம் இன்னும்
இருக்கே இவங்கெளப்போல அங்கே அவங்கே.
(அடப்பேதியிலே
ஓயிருவியலா... ஏண்டா அவ அப்பன், ஆத்தா கிட்டப்போயி பேசுங்களேன்டா,
எப்படியிருந்தாலும் அவுங்கதானே நாளைக்கு தாரை தம்பட்டம் முழங்க தாரை வார்க்கணும்)
சாவியை ஆற்றில் வீசினால் அந்த ஆறு அடிச்சு கன்னியாகுமரி
கடலில் கொண்டு போயி சேர்த்துட்டா, இவளும் காலம் பூராம் கன்னியாத்தானேடா இருப்பா,
இந்த முட்டாப்பயல்கள் எப்படி விஞ்ஞானத்துல இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சாங்கே ?
எனக்கு கூட மனதில்
தோன்றியது இப்படியே ஒரு ஓரமா சாக்கு விரிச்சு உட்கார்ந்துக்கிட்டு நம்ம நண்பர்
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஊருல இருக்குற பூட்டைப்பூராம்
வளைச்சுப்புடிச்சு இங்கே அனுப்புங்க ரெண்டு பேருக்கும் 50/50 எப்பூடி ? அப்படினு கேட்கலாம்னு
தோணுச்சு, பூட்டும் சாவியும் ஒன்றாக இருந்தால்தானே சிறப்பு இந்தப்பழக்கம்
ஜெர்மனியில் மட்டுமல்ல, ஸ்விட்சர்லாண்டிலும் இருக்கிறது.
//போங்கடா
நீங்களும் உங்க காதலும்// அப்படினு கோபமாக திட்டிப்புட்டு
வந்துட்டேன்.
பெர்லின் ஜூவின்
முகப்பில்....
நான் வியந்த ஓவியம்.
போன இடத்தில்
கொழுந்தியாளுக்கு கல்யாணம்.
ஜெல்லி வகை மீன்கள்.
மியூசியம் 6-வது மாடி.
எனது கண்ணில் பட்ட மரத்தூர்.
நம்மூரு வைக்கோல்தான்.
பென்ஸ் மியூசியம்
வெளிப்புறத்தில்.
முதல் தட்டச்சு
இயந்திரம்.
புகைப்படக்கருவி.
சரி அடுத்து ஸ்ரீலங்கா போவோமா ?
இதன் தொடர்பான மற்ற
பதிவுகளை காணதவர்கள் கீழே ‘’கிளிக்’’கவும்.
ஒலியோடு, ஒளி காண்பீர்.


.jpg)
.jpg)
.jpg)