01. சிறப்பாக நடந்த திருமணங்களின் எல்லோருடைய வாழ்க்கையுமே சிறப்பாக இருப்பதில்லை.
02. ஊர் சிரிக்க நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கின்றது
03. மனங்கள் ஒன்றி நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் பிரிந்து போயும் இருக்கின்றன.
04. மனம் சேராமல் நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சேர்ந்தே சிறப்பாக இருந்திருக்கின்றது.
05. விருப்பத்துடன் நடந்த திருமணங்களின் பலர் சமூகத்துக்காக பிரியாமல் வாழ்கின்றார்கள்.
06. விருப்பமில்லாமல் நடந்த திருமணங்களின் பலரும் சமூகத்துக்காக சேர்ந்தே வாழ்கின்றார்கள்.
07. குழந்தைகளுக்காக விருப்பமில்லாத கணவனுடன் வாழும் பெண்கள் இருக்கின்றார்கள்.
08. குழந்தைகளால் விருப்பமுடன் கணவனுடன் வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்
09. குழந்தை இல்லாததால் கணவனை பிரிந்து வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்.
10. பேராசையால் பொன்னுக்காக, பலரும் பெண்ணை திருமணம் செய்கின்றார்கள்.
11. ஆசைக்காவும், அழகான பெண்ணுக்காகவும் சில ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள்.
12. ஆசைப்பட்டு திருமணம் செய்த அழகான பெண்களாலும் சிலர் பிரிகின்றார்கள்.
13. ஆசைப்படாமல் திருமணம் செய்த அழகில்லாத பெண்களால் பலரும் சந்தோஷமாய் வாழ்கின்றார்கள்.
14. நல்ல கணவனுக்கும் துரோகம் செய்து கொண்டும் சில பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
15. அயோக்கிய கணவனுக்கும் துரோகம் செய்யாமலும் பல பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
16. பழிக்குப்பழி என்ற கோட்பாட்டில் கணவனும், மனைவியும் துரோகம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள்.
இந்த முரண்பாடுகளுக்கு எல்லாம் காரணகர்த்தா யார் ? மேல் வீட்டு திருவாளியத்தவனா ? இல்லை விதி என்றும் எல்லாம் அவன் செயல் என்று மேல் வீட்டுக்காரரை கைகாட்டி விட்டு கீழ் வீட்டுக்குச் செல்லும் காலம்வரை வாழ்வின் நெளிவு சுழிவு அறிந்து வலிகளை நீக்கத்தெரியாத வழிப்போக்கர்களான புரியா மடந்தை மனித மனங்களா ? இதன் மூலம் கீழ்காணும்...
விருப்பமற்ற விவாஹம் விருத்திக்கு வராது.
திடீர் திருமணம் திருப்தி தராது.
கட்டாய கல்யாணம் களத்தில் நிற்காது.
என்பதும் பொய்யாகிறது ஆம் இவை எதிர் புறமாகவும் திரும்பலாம் என்பதே எமது கருத்து உங்கள் கருத்தென்ன, நட்பூக்களே... ?
காணொளி
மணப்பெண் கதறக் கதற கட்டியதாலி நிலைக்குமா ?
பதிவுக்கு காரணமான திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி.