தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

ஈட்டி மரம்


இறைவன் இந்தப் பிறவியை எனக்கு இந்த தருணத்தில் கொடுத்தமைக்கு முதற்கண் நன்றி காரணம் நேற்று எனது தாத்தாவோ, எனது தந்தையோ, நாளை எனது மகனோ, எனது பேரனோ பெறாத பெரும்பேறை நான் பெற்றிருக்கிறேன் ஆம் எனது மூதாதையர்கள்
Flight டில் பறந்ததில்லை,
Cool drinks குடித்ததில்லை,
Pizza சாப்பிட்டதில்லை,
Pant-Shirt, Chudidhar போட்டதில்லை,
Fume மெத்தையில் படுத்ததில்லை,
Lift டில் ஏறிப்போனதில்லை,
3D Cinema பார்த்ததில்லை,
Weston Toiletடில் போனதில்லை,  
Computerரை தொட்டதில்லை,
Shaver pathதில் குளித்ததில்லை,
இதைப் போலவே.... நாளை எனது சந்ததிகள்....  
மாட்டு வண்டியில் போகப் போவதில்லை,
கம்மங்கூழு குடிக்கப் போவதில்லை,
கேப்பை ரொட்டி தின்னப் போவதில்லை,
வேஷ்டி-சேலை கட்டப் போவதில்லை, 
கயிற்றுக் கட்டிலில் படுக்கப் போவதில்லை,
ஏணிப்படி ஏறப் போவதில்லை,
தெருக்கூத்து பார்க்கப் போவதில்லை,
கம்மாக்கரையில் ஒதுங்கப் போவதில்லை,
அரிச்சுவடியை தொடப் போவதில்லை
ஊரணியில் குளிக்கப் போவதில்லை,
ஆயினும் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வாழ்வாதாரத்தின் முக்கியமாக கொடுக்க வேண்டியதை கொடுத்தெடுத்து ஈ கூட நெருங்காத ஈட்டி மரம் போல் உயிரற்ற ஜடமாக்கி விட்டாயடா சண்டாளா !

Chivas Regal சிவசம்போ- (தனக்குள்)

நடக்கும் போது பார்த்தேனே.... அப்படீனா இதுதான் நடைபிணமா ?

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

நான்தான் கடவுள்

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
கடவுளும், மனிதனும்.

நான் கடவுள் இந்த உலகத்தை நான்தான் படைத்தேன் உனக்கு என்ன வேண்டும் ?
உனக்கு என்ன வேண்டும் ?
(தனக்குள் என்ன இவன்... தமிழ் தெரியாதோ ? சரி இங்கிலீஷ்ல கேட்போம்)

புதன், பிப்ரவரி 24, 2016

வீராணம், வீச்சருவாள் வீராயி


எனக்கு யாரையாவது காதலிக்க வேண்டுமென ஆசை வந்து விட்டது இதனால் டிப்-டாப்பாக ட்ரெஸ் செய்து கொண்டு காலேஜ் வாசலில் போய் நின்று கொண்டேன் ஒருத்தியை மட்டும் இரண்டு வாரமாக தொடர்ந்து கொண்டே இருந்தேன் சட்டென நின்றவள்...
என்ன ?
இல்லை.... அது... வந்து உங்களை எனக்கு பிடிச்சுருக்கு நாம கல்யாணம் செய்துக்கிறலாமா ? 
சட்டென கேட்டு விட்டேன் ஒரு கணம் என்னை தீர்க்கமாக பார்த்தவள்.
பரவாயில்லையே நேரடியா கல்யாணத்துக்கே போயிட்டே ஆமா... பேரென்ன ?
அ............
ச்சூ சரியா வராது.
ஏன் ?
நாம ரெண்டு பேருமே வேற மதம் எங்க வீட்ல ஒத்துக்கிற மாட்டாங்க அதனால இனிமே என் பின்னால வரவேண்டாம்.
ஏங்க அது வந்து..
இதோ பார் முடிஞ்சுருச்சு இனிமே என் பின்னாலே வந்தே செருப்படி விழும்.
அவள் போய்க் கொண்டே... இருந்தாள் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ச்சே என்ன இது... சட்டுனு இப்படிச் சொல்லி விட்டாளே.... சரி போகட்டும் வேற எவளையாவது பார்க்கலாம் இனிமே நேரடியாக பேசவேண்டாம் லட்டர் கொடுத்துருவோம் சரியென அடுத்த ஒரு வாரத்துக்குள் ஒருத்தியை தேர்வு செய்தேன் லட்டரில் எனது பெயர் விபரங்களை எழுதி அவளிடம் கொடுத்து விட்டு சட்டென போய் விட்டேன் மறுநாள் அவளுக்காக மரத்தடியோரம் நின்றிருந்தேன் அவளும் நேராக என்னிடம் வந்தாள் அவள் கையில் லட்டர் இருந்தது என்னிடம் கொடுத்தாள் நானும் சந்தோஷமாக வாங்கி பிரித்தால் ? நான் கொடுத்த அதே லட்டர்
என்னங்க இது நான் கொடுத்ததையே திருப்பித் தர்றீங்க ?
என்ன இது ?
ல... லவ் லட்டரு
யாருக்கு ?
உங்களுக்குதாங்க...
இங்கே பார் இந்த விசயமெல்லாம் எங்க வீட்டுக்கு பிடிக்காது.
இல்லேங்க நான் உண்மையிலேயே காதலிக்கிறேன்.
நீங்க என்ன ஆளுக ?
என்னது ?
என்ன ஜாதினு கேட்டேன் ?
கௌதாங்கி.
அதுசரி இது வேறயா.... நாங்க சங்குனி ஜாதி எங்க குடும்பத்துல எதுக்கெடுத்தாலும் ஆச்சாரம் பார்ப்பாங்க சரியா வராது.
இல்லே நான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்.
இதோட நிறுத்திக்க ஏதோ சங்குனி ஜாதிக்காரிதானே மங்குனி மாதிரி இருப்பான்னு கணக்கு போடாதே சங்கே அறுத்துப்புடுவேன் ஓடிரு.
சொல்லி விட்டு நடையை கட்டி விட்டாள்... ச்சே என்ன இது இவ்வளவு மோசமா பேசிட்டுப்போறா.. என்ன செய்யலாம் ? மதமும் பிரச்சனை ஜாதினு வந்தாலும் பிரச்சனை பொறுமையாத்தான் கையாளனும் பெயரை மாற்றியாகணும் அப்பத்தான் சரியா வரும். வேற காலேஜ் பக்கமா போயிடுவோம் புதுசாபோன காலேஜ்ல முதல் நாளிலிருந்து ஒருத்தி என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாள் சரி இவளும் நல்லாத்தான் இருக்காள் நேராக அவளிடம் போய்...
ஐ லவ் யூ 
என்றேன் அவள் சிரித்து விட்டு போய் விட்டாள் மறுநாள்
ரெஸ்டாரண்ட் போகலாமா ? 
எனக்கேட்டேன் தலையாட்டி விட்டு கூடவே வந்தாள்.
என்ன சாப்பிடலாம் ஐஸ்க்ரீம் ?
ம் தலையாட்டினாள்.
பேரர் இரண்டு வெண்ணிலா கொண்டு வாங்க 
ஆர்டர் கொடுத்து விட்டு
உன் பேரென்ன ?
வெண்ணிலா.
நான் பேரைக் கேட்டேன் ?
அதான்...
பேரே வெண்ணிலாவா எனக்கு பிடிச்சுருக்கு.
ம்... உங்க பேரென்ன ? 
என்றாள் நான் சுதாரித்துக் கொண்டு
சிவாதாமஸ்அலி 
என்றேன் அவள் என்னைப் பார்த்து மிரண்டாள்.
என்ன ஒரு மாதிரியா... பார்க்கிறே ?
ஒண்ணுமில்லே... ஒரு நிமிஷம் கை கழுவிட்டு வர்றேன்.
ரெஸ்ட்ரூம் போனவள் கால்மணி நேரமாச்சு வரவில்லை போய் பார்த்தால் ? யாரும் இல்லை ஆர்டர் கொடுத்ததை நானே தின்று விட்டு வெளியே வந்தேன் மறுநாள் அவளுக்காக காத்திருந்தேன் என்னைக் கண்டதும் ஒதுங்கினாள் நான் நேரே போய் கேட்டேன்
என்ன நீ திடீருனு காணாம போயிட்டே ?
இங்கே பாருங்க இனிமே எம்பின்னாலே வராதீங்க.
ஏன் ?
உங்ககிட்ட நிறைய குழப்பம் இருக்கு, பேரே சரியில்லே.
அது வந்து... நான் ஏன்.. அப்படிச்சொ....
வேண்டாம் அடுத்து எங்கிட்டே பேசினே எங்க அப்பா தெரியுமா ? உலியாசாரி அவர்ட்ட சொன்னா குத்த மாட்டாரு கொத்திடுவாரு ஜாக்கிரதை.
போய் விட்டாள் பேரைக் கேட்டதும் கிலியாகி விட்டது இவள் உலியாசாரி மகளா ? பேரை மாற்றியும் பிரச்சனையா ? நமக்கு இந்த காதலே வேண்டாம். நம்ம வீராணம் அத்தை மகள் வீராயியை கட்டிக்கிட்டா கருதறுத்தாவது கஞ்சி ஊத்துவா போதுமடா சாமி. 

CHIVAS REGAL சிவசம்போ-
காதல்ல இவ்வளவு சமாச்சாரம் இருக்கா... நம்ம அந்த ரூட்ல போகாததுனால ஒண்ணும் தெரியாமே போச்சே....

திங்கள், பிப்ரவரி 22, 2016

கண்டனப்பேரணி


நண்பர்களே... நண்பிகளே... இந்தமுறை நாட்டுக்கு வந்திருந்த பொழுது நானும் தொலைக்காட்சி நாடகத்தை கண்டே தீரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன் இவைகளை வருடக்கணக்காக இழுத்துக் கொண்டு போவதின் மர்மம் எனக்கு பிடிபட்டது அதாவது ஒரு பெண் அவள் வயது 28 இருக்கலாம் அந்த வீட்டின் மொட்டை மாடியில் இரு ஆடவர்களுடன் அவர்களுக்கும் தலா 35 முதல் 37 வரை இருக்கலாம் அவள் தனது கடந்த காலத்தில் நடந்த கோல்மால்களை இவர்கள் இருவருக்கும் எடுத்துச் சொல்கிறாள் அதொன்றும் நான் கண்டவரை பெருமைப்படும் விடயங்கள் இல்லைதான் மகா கேவலமான விடயமே அதனால் அதைப்பற்றி நான் விவரிக்க வேண்டாமென நினைக்கிறேன் பிறகு தொடரும் போட்டு விட்டார்கள் பிறகு மற்றொரு நாடகம் ஆரம்பிக்கிறது எப்படியோ பொழுதைப் போக்கி...

மறுநாள் கோவை போனேன், பிறகு, புதுக்கோட்டை, சென்னை, மதுரை, திண்டுக்கல், கீழக்கரை, பாம்பன், பரமக்குடி, இப்படி பதிவர்கள் சந்திப்பு சொந்த பந்தங்கள் வீட்டுக்கு எல்லாம் போய்விட்டு மீண்டும் தேவகோட்டை வந்து விட்டேன் மாலை வழக்கம் போல அம்மா நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் உள்ளே வந்து தொலைக் காட்சியைப் பார்த்த எனக்கு வந்ததே கோபம் சுமார் 12 நாட்கள் கடந்திருக்கும் அந்தக் கேடுகெட்ட சிறுக்கி இன்னும் அதே மொட்டை மாடியில் நின்றுகொண்டு கதை சொல்லிக் கொண்டு இருக்கின்றாள் எனது அம்மாவின் முகத்தைப் பார்த்தேன் எந்த சலனமும் இல்லாமல் கதையில் ஒன்றிப் போய் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்னையா ? இது ஒரு வரைமுறை வேண்டாமா ? அடராமா இவர்கள் ஒரு வாரமாக மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தால் பார்க்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்கள் சரி ஒரு வாரமாக இவர்கள் சாப்பிட வில்லையா ? குளிக்க வில்லையா ? மற்ற காலைக்கடன்கள் தீர்க்க வில்லையா ? நல்ல குடும்பத்துப் பெண்கள்கூட இந்த வகையான காட்சிகளை பார்த்துதான் நாமும் இதுபோல் மொட்டை மாடியில் நின்று பேசலாம் தவறில்லை என்று நினைப்பதுடன் வெளியிடங்களுக்குப் போனால் நாமும் இதுபோல் தங்கி விட்டு வரலாம் என்ற சிந்தனையை கொடுக்கிறது இவ்வகையான காட்சிகள் சமூக நலனுக்கு கேடுகளை விளைவித்து எதிர்கால இளம் தலைமுறைகளை தவறான வழியில் இழுத்துச் செல்கிறது.

ஆகவே இதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு மாபெரும் கண்டன பேரணியை இம்மாதம் பிப்ரவரி 31-ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லி பாராளுமன்றத்தின் முன்பு நமது வலைப்பூ நண்பர்களை ஒன்று திரட்டி நடத்தலாம் என திட்டமிட்டு அதற்காக நமது டெல்லி வலைப்பதிவர் உயர்திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் தலைமையில் நடக்கிறது பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொல்கிறேன்.

அன்புடன் 
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

சனி, பிப்ரவரி 20, 2016

தைவத்தின்ற சொந்தம் பூமி கேரளம் (ദൈവത്തിൻറേ സ്വന്തം ഭൂമി കേരളം)


நெடுங்காலமாகவே இந்த விசயத்தைப்பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தேன் அதாவது மலையாளிகளிடம் பேசும்போது தனது கேரளத்தை ‘’தைவத்தின்ற சொந்தம் பூமி கேரளம்’’ என்பார்கள்.

(ദൈവത്തിൻറേ സ്വന്തം ഭൂമി കേരളം அர்த்தம் - இறைவனின் சொந்த பூமி கேரளா)

இந்த வார்த்தையை கேட்டு நான் பலமுறை பல நண்பர்களிடம் விவாதம் செய்திருக்கிறேன் இது எப்படி ? சாத்தியம் ஆனால், இதுவரை யாருமே எமக்கு சரியான பதிலை தரவில்லை இவர்கள் மட்டுமல்ல மலையாள அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஏதோ ஒரு காரணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் அவர்களும் இதையே சொல்லிச்சொல்லி வலியுறுத்துகிறார்கள் தெய்வம் உண்டா இல்லையா ? என்ற விசயத்திற்கு நாம் போகவேண்டாம், யாம் அதைப்பற்றியும் விவாதிக்க வரவில்லை தெய்வத்தின் சொந்த பூமி கேரளம் என்றால்  மற்ற தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ஏன் ? மற்ற நாடுகளான சீனா, அமெரிக்கா, ஜப்பான், மற்றும் உகாண்டா இவையெல்லாம் தெய்வத்திற்கு சொந்தமில்லையா ? அதை படைத்தது யார் ? என்ற கேள்வி எழுகிறது உலகையே படைத்தது இறைவன்தானே... அப்படி இருக்கும்போது இப்படிச் சொல்வது எந்த விதத்தில் சரியாகும் அல்லது இதற்க்கு புராணத்தில் ஏதும் சொல்லப்பட்டு இருக்கிறதா ? இல்லை அரசாங்க கெஜட்டில் ஏதும் வரைபடம் உள்ளதா ? நான் வாதம் செய்வதற்காக வரவில்லை மேலும் அந்த அளவுக்கு பக்குவமும் போறா, தெரிந்தவர்களிடமிருந்து... தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன், இவ்வளவு காலமும் நினைத்துக்கொண்டு இருந்ததை இன்று எழுதக்காரணம் நமது இனிய நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்கள் கடந்த வருடம் வந்த ‘’கனவில் வந்த காந்தி’’ தொடர் பதிவில்கூட கேள்வி பதிலில் தனக்கு கடவுளின் நகரமான கேரளாவில் பிறக்க வேண்டும் எனகேட்டு இருக்கிறார்.

நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்கள் தனது பதிவில் சொல்லியது. கீழே...
நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய் ?
நிறைய பேர் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்பார்கள். எனக்கு அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. இதைப்பற்றி விரிவாகவே ஓர் பதிவு எழுதலாம். மறுபிறவி எடுத்தால் இதே இந்தியாவில் பிறக்க வேண்டும் என்பதும் கடவுளின் நகரமான கேரளாவில் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே இருக்க அங்கே பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டு

இப்படி அவரும் கேட்டவுடன்தான் இதை உடனே எழுத வேண்டுமென நினைத்து எழுதியுள்ளேன் இதற்காகவே கடந்த சில மாதங்களாக மீண்டும் என் கண்ணில் பழக்கப்பட்ட (கண்டவுன் தெறித்து ஓடினார்கள் என்பதும், விரட்டிப் பிடித்தேன் என்பதும் வேறு விசயம்) சுமார் ஐம்பது மலையாளிகளிடம் கேட்டு இருக்கிறேன் யாருமே சரியான விளக்கத்தை சொல்லாமல் நீ வேண்டுமானால் தமிழகத்தை அப்படிச் சொல்லிக்கொள். என்றுதான் சொல்கிறார்களே தவிற மலையாளிக்கே உரித்தான குணமாக தனது விட்டுக் கொடுக்காமல் வாதம் செய்கிறார்கள், நான் அவர்களிடம் சொன்னது இது வெளியுலகம் தெரியாத மலையாளத்தில் சொல்வதால்தான் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு மலையாளம் தெரியாது தெரிந்தவர்களும் நமக்கேன் வம்பு எனக் கேட்பதில்லை ஆனால் நான் கேட்பேன். இதையே ஆங்கிலத்தில் (God’s Nativity India) ‘’இறைவனின் சொந்த நாடு இந்தியா’’ என்று நாம் சொன்னால்  மற்ற நாடுகள் அப்படியென்றால் ? எங்கள் நாட்டை படைத்தது யாரென கேட்குமா கேட்காதா ? மலையாளிகளிடம் இந்த வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் என்ன என்றால் அவர்கள் சுற்றுலாத்துறை அப்படி சொன்னது, இப்படி சொன்னதென வேறு விசயத்துக்கு போய் விடுகிறார்கள் அவர்களிடம் நான் விவாதித்ததை எழுதினால் இன்னும் நான்கு பதிவுகள் போடலாம், ஆகவே அவைகள் வேண்டாம்
.
மேலும் நமது பதிவர்கள் பலரும் அவர்களது பதிவுகளில் இதையே சிறிய அளவில் வலியுருத்தி இருக்கின்றார்கள் ஆகவே உடனே இந்தப்பதிவை எழுதினேன்
.
இதனைக் குறித்து தங்களின் கருத்து என்ன உண்மை என்ன ? தெரிந்தவர்கள் தெரிவிக்க வேண்டுமென என் இனிய நட்புகளை கேட்டுக்கொ(ல்)கிறேன்
.
அன்புடன் உங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

வெள்ளி, பிப்ரவரி 19, 2016

உண்மைகள் உறங்குவதில்லை


குழந்தைகளே ! நாம பேசும்போது, நல்ல வார்த்தைகளைத்தான் பேசணும் யாரையும் அசிங்கமான வார்த்தைகளை சொல்லி திட்டக்கூடாது அப்படி செய்தால் கடவுள் நம்மளை தண்டிப்பார்.
அப்படினா... எங்க அப்பா எங்க அம்மாவை தினம் அசிங்கமா திட்டுறாங்களே அவுங்களையுமா  கடவுள் தண்டிப்பாரு ?
**********************************01

மோகனா நான் எழுதி வைத்த கதை நோட்டு எல்லாம் எங்கே ?
தெரியலையே நல்லாப்பாருங்க அலமாரி உள்ளேதான் இருக்கும்.
காணோமே... வெளியாளுங்க யாரும் வந்தாங்களா ?
ஒருத்தரும் வரலை.
ஏம்மா அதைதானே நாம பேப்பர்காரங்கள்ட்ட போட்டு பேரீட்சம்பழம் வாங்கி தின்னோம்.
**********************************02

குழந்தைகளே ! நாம எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லக்கூடாது, நம்மிடமிருப்பதை இல்லாதவர்கள் கேட்டால் நம்மால் முடிந்ததை கொடுத்து உதவவேண்டும்.
ஸார் நேற்று பக்கத்து வீட்டு ஆண்ட்டி காபி பவுடர் கேட்டதுக்கு எங்க மம்மி இல்லைனு சொன்னாங்க என்னையும் காபி பவுடர் இருக்கிறதை யாருகிட்டேயும் சொல்லக்கூடாதுனு சொன்னாங்களே...
**********************************03

கோவிச்சுக்காதீங்க சித்தப்பா நானே நாளைக்கு கல்யாணத்துக்கு மதுரை நண்பர் பகவான்ஜி வீட்டுக்கு போகணும் பணம் இல்லாததாலே போகலை.
அப்படீனா நாளைக்கு அம்மாவும், நானும், நீங்களும் ஊட்டிக்கு டூர் போகலையாப்பா ?
**********************************04

அப்பா ஊருக்கு போகும்போது... சித்தி சொல்றதை கேட்டு நடக்கணும்னு சொன்னாங்கம்மா.
உனக்கு ஏதுடா கண்ணா சித்தி ரெண்டு மாமா மட்டும்தானே இருக்காங்க...
அப்படீனா கிச்சன்ல சமைக்கிறாங்களே அவுங்க சித்தி இல்லையா ?
யாரு சொன்னாங்க உனக்கு ?
அப்பாதான்.
**********************************05

மாணவர்களே ! வீட்டிலிருக்கிற பெரியவர்கள் தாத்தா-பாட்டி இவங்கள்ட்ட நாம அன்பா பாசமா இருக்கணும் அவர்களுடைய வாழ்த்துதான் நமது எதிர்கால வாழ்க்கையை செம்மை படுத்தும்.
ஸார் எங்க அம்மா சொன்னாங்க தாத்தா-பாட்டிக்கிட்ட போககூடாதுனு அப்புறம் நான் எப்படி அவங்கள்ட்ட பாசமா இருக்க முடியும் ?
**********************************06

காணொளி