2014
இடம் - மதுரை திருமலை
நாயக்கர் மஹால்
பலமுறை அவ்வழியே போயிருந்தாலும் வாழ்வில்
முதல் முறையாக உள்ளே நுழைகின்றேன் கழுத்தில் எனது கைக்குழந்தை நுழைவுச்சீட்டு
அலுவலகத்தில் இருந்த பலகையை கண்டவுடன் எனக்கு கோபம்தான் வந்தது இது எப்படி சரியானதாகும் ? அதாவது நுழைவுச்சீட்டின் கட்டணம் உள்
நாட்டுக்காரர்களுக்கு பத்து ரூபாய், வெளி நாட்டுக்காரர்களுக்கு ஐம்பது ரூபாய்
இருவருமே இரு கண்கள் கொண்டுதான் பார்க்கின்றார்கள் இதிலென்ன ? ஏற்றத்தாழ்வு உண்மையில் அவர்களுக்குதான்
குறைவாக இருக்க வேண்டும் இதைவிடப் பெருமை என்னவென்றால் ? அவர்களுக்கு இலவசம் என்பதே சரி புகைப்பட
கருவிக்கு மட்டும் கட்டணம் இருவருக்குமே முப்பது ரூபாய் இது மட்டும் சாத்தியமா ? புகைப்படக்கருவியே இல்லாமல்கூட இன்றைய
கைப்பேசிகளில் பிரமாண்டமாக எடுக்க முடிகிறதே அதற்கு கட்டணம் வேண்டாமா ? நம்ம நாட்டான் இதைத்தானே செய்வான்
.
நமது நாட்டு வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட
வருபவர்களை வரவேற்பது நமது கடமையில்லையா ? அவர்கள் நம்மைப்போல் பார்த்து விட்டு சாதாரணமாக மறந்து போய் விடுவதில்லை
புகைப்படங்கள் எடுத்து அதனைக்குறித்து அவர்கள் நாட்டு பத்திரிக்கைகளில் எழுதுவார்கள்
இது நமக்கு பெருமைக்குறிய விடயமில்லையா ? இந்த ரூபாய் அவர்களுக்கு இதொரு செலவே இல்லை என்று சுற்றுலா வாரியம்
நினைக்கிறதா ? இதையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள்
அவர்கள் இதென்ன ? நாட்டுக்கு ஒரு நீதி என நினைக்க மாட்டார்களா ? சரி, சிலர் வெளிநாட்டான் போலவே இருப்பான்
அவன் நுழைவுச்சீட்டு கேட்டால் ? அவனுக்கும் இதே கட்டணமா ? ஆனால் இதனைக்குறித்து ஆராய்வதற்கு அன்று நேரமில்லை எனக்கு, சில
உள்ளூர்க்காரர்களே ஸ்ரீலங்கா மாதிரி இருப்பார்கள் அவர்களிடம் ஐம்பது ரூபாய் கட்டணம்
கேட்டால் நியாயமா ?
உள்ளே நுழைந்தேன் எவ்வளவு சரித்திரப்புகழ்
பெற்றது இப்படி தரித்திணியம் பிடித்தது போலிருக்கிறதே மனம் வருந்தினேன் ஆம்
நண்பர்களே எங்கு நோக்கினும் கிறுக்கர்களின், கரிக்கிறுக்கல்கள் தவறான செய்கை
காட்சிகள் கரிகளால், சாக்பீஸ்களால் கோடுகள், காதலியின் பெயர்கள் ஏண்டா ? பேதியில ஓயிருவியலா.... சொந்தச் செலவில்
தாஜ்மஹால் கட்டி எழுதுங்களேண்டா... இதில் மலையாளப் பெயர்களும் இருந்தது மூலை
முடுக்குகளில் டெம்ப்ரவரி காதலர்கள் இவர்கள் சரித்திரம் படிக்கவா ? வருகிறார்கள் இவர்களுக்குத்தான் பத்து ரூபாயா ? ஐம்பது ரூபாய் கொடுத்தானே... அவன் நிச்சயமாக
இப்படிச் செய்யமாட்டான் காரணம் அவன் கலையை ரசிக்கத் தெரிந்த கலைஞன். இதில் வேலை
செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகள் இருக்கிறது என்கிறீர்களா ? அந்தப் பாராமரிப்பு லெட்சணத்தைத்தான்
இப்பொழுது காணப் போகிறோம் ஆம் நண்பர்களே எங்கு பார்த்தாலும் குப்பைகளும், பறவைகளின்
அசுத்தங்களும், ஆறறிவுகளின் பான்பராக் எச்சில்களும், ஒரு இடத்தில் மக்கள் நடந்து போகும்
நடைபாதைதான் எவ்வளவு சாதாரணமாக மின்சார வயர்களை கீழே போட்டு வைத்திருந்தார்கள்
தெரியுமா ? குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ட்ரான்ஸ்
பார்மர்கள் இதையெல்லாம் யார் கேட்பது ? கேட்டால் மக்களாட்சி என்கிறார்கள் இதில்
குப்பை போடுவதற்கு தொட்டிகள் வேறு நான் குறிப்புகள் எழுதியபோது தவறுதலாக எழுதிய
பேப்பரைக் கிழித்து அதில் போட்டு விட்டு பார்த்துக்கொண்டே நின்றேன் காரணம் யாராவது
இதில் குப்பையை போடுகிறார்களா ? ¼ மணி நேரமாக 28 + 3 நபர்கள் போட்டார்கள்
குப்பைத் தொட்டியில் அல்ல குப்பைத் தொட்டி மீது... ஆம்
தொட்டியை திறந்து போட்டவர்கள் மூன்று வெளிநாட்டினர் இதில்
என்னைச் சேர்க்கவில்லை தொட்டிமீது எறிந்தவர்கள் இந்தியர்கள்
இருபத்து எட்டு பேர். நான்தான் திறந்து போட்ட பிறகுதானே கணக்குப்பிள்ளையானேன் இதில்
பத்து ரூபாய் கட்டணம் யாருக்கு ? யாருக்குமே சமூக அக்கரை இல்லை ஆகவேதான்
நாம் பின்தங்கிப் போய்க் கொண்டே இருக்கிறோம் இதன் எல்லை எதுவரையோ....
இதில் சுவாரஸ்யமான விடயமும் உண்டு சுமார்
நான்கு மணி நேரம் உள்ளேயே உலாவி இருப்பேன் ஆம் ஐந்து கல்லூரிப் பெண்கள் இவர்கள்
நான் வளைத்து, வலைந்து புகைப்படம் எடுப்பதை கவனித்துக் கொண்டே வந்தார்கள்
அவர்களும் தங்களது கைப்பேசியையும், புகைப்படக் கருவியையும் கொண்டு எடுத்தார்கள்
எனது தோற்றம் அவர்களுக்கு வினோதமாகப் பட்டதோ என்னவோ என்னைப்பற்றி பேசுகிறார்கள்
என்பதை புரிந்து கொண்டேன் எனக்கென்ன, பயமா ? முகம் தெரியாத அரபிப் பெண்களிடமே பேசி விடுவேன்
இவர்கள் எனக்கு ஜூஜூபிதான் இருப்பினும் நான் போகும் இடமெல்லாம் அவர்களும்
வந்தார்கள் குறிப்பாக என்னை அவர்கள் வேறு எதையோ படம் எடுப்பதுபோல் என்னையும்
எடுத்தார்கள் (நான் அபுதாபியில் எடுக்க
கூடாத போலீஸ் அலுவலகத்திலேயே கைப்பேசியில் ஒலியை அணைத்து விட்டு பேசுவதுபோல்
நடித்து சுற்றுப்புறத்தை புகைப்படம் எடுத்தவன் இவர்கள் நம்மிடம் விளையாடுகிறார்கள்
போகும்வரை போகட்டும்)
எல்லாப் பெண்களுமே இதைச் செய்தார்கள் எனக்கு
நன்றாக புரிந்து விட்டது நானும் விதவிதமாக படமெடுப்பதுபோல் பல கோணங்களில்
நடித்தேன் குறைந்த பட்சம் என்னை இருபது புகைப்படமாவது எடுத்திருக்க வேண்டும்
இதுவரை நான் கைப்பேசிகூட பேசவில்லை முடிவுக்கு வந்து புறப்படும் தருணம் வரும்போது
அந்தப் பெண்களை பொதுவாகப் பார்த்து சாதாரணமாக கேட்டேன் இந்தப் படங்களை எல்லாம்
முகநூலில் போடுவீங்களா
? அனைவரும்
திடுக்கிட்டு திருத்திருவென முழித்தார்கள் அதாங்க புரியலை ஃபேஷ்புக் அதில்
போடுவீங்களானு கேட்டேன்.
ஏன்... அது எங்க இஷ்டம் ?
என்றாள் ஒருபெண் உங்கள் இஷ்டம்தான் அது
எனக்கும் தெரியும் என்னை வளைச்சு வளைச்சு எடுத்தீங்களே அதுனாலேதான் கேட்டேன் இப்போ
நீங்க என்னை எடுத்தீங்க, அதேநேரம் உங்களை நான் எடுத்தால் விட்டுக் கொடுப்பீங்களா ? என்னோட ஃபோட்டோவை போடுறதுல எனக்கு ஆட்சேபனை
கிடையாது காரணம் இண்டர்நெட்டில எங்கு பார்த்தாலும், எந்த சைட்டுக்குப் போனாலும்
என்னோட ஃபோட்டோ விதவிதமாய் இருக்கும் சரி இவ்வளவு ஃபோட்டோ எடுத்தீங்க எதுலயுமே
நான் நேருக்கு நேரா போஸ் கொடுக்கலையே...
உடனே பட்டென இரண்டு பேர் சிரித்து விட ஒருத்தி
சொன்னாள்
Sorry Sir
சாரி எதுக்கு ? இவ்வளவு தைரியமா ஃபோட்டோ எடுத்தீங்க நாம ஐந்து பேர்
இருக்கோம் இவன் ஒருஆளுதான் அப்படினா ? நீங்க
நூறு பேர் வந்திருந்தாலும் நான் இப்படித்தான் கேட்டிருப்பேன், நானே பேசிக்கிட்டு
இருக்கேன் யாராவது பதில் சொல்லுங்க...
இல்லை சார் நீங்க வித்தியாசமா இருந்தீங்க
யாருமே எடுக்காத இடங்களை வித்தியாசமாக உங்களை நீங்களே ஃபோட்டோ எடுத்தீங்க
அதனாலதான் உங்களை எடுத்தோம் சாரி ஸார்
சரி பரவாயில்லை உங்க டைம்பாஸூக்கு இன்றைக்கு நான்
கிடைச்சுருக்கேன்
ஸார் உங்க சொந்த ஊர் ?
தி கிரேட் தேவகோட்டை
அதென்ன... தி கிரேட் ?
ஏன்... தி கிரேட் ப்ரிட்டன் அப்படினா... நம்புவீங்களோ.... ?
சிரித்துக்கொண்டே தாங்க்யூ சார் என்றாள்
ஓகே பை என கை காண்பிக்கும்போது ஒருத்தி
தைரியமாக கிளிக்’’கினாள் முகத்துக்கு நேராக நான்
சிரித்துக்கொண்டே வந்து விட்டேன்.
நான் எடுத்த புகைப்படங்கள் ஏதோவொரு ஃபைலில்
சிக்கி விட்டது தேடிக்கொண்டு இருக்கிறேன் மேலேயுள்ள படங்கள் என் செல்லில் எடுத்தது