1999-ம் ஆண்டு நான் நான்கு மாத விடுமுறையில்
இந்தியா வந்திருந்தேன் மீண்டும் அபுதாபி திரும்பும்போது எனது மனைவியிடமிருந்து ஒரு
கோரிக்கை என்னைப்பற்றி எனது மனைவிக்கு தெரிந்திருந்தும் தயக்கத்துடன் இப்பொழுது
ஜனித்திருக்கும் குழந்தையை அபார்ஷன் செய்து விடுவோமா ? எனக்கு வந்தது கோபம் காரணம் எனக்கு குழந்தைகள்
என்றாலே மிகவும் ஆசைப்படுபவன் அப்படியானால் எனது குழந்தை மீது ஆசை இருக்காதா ? அதற்கு அவள் சொன்ன காரணம்தான் மேலும் கோபத்தைக்
கிளப்பியது அதாவது மனைவி வீட்டார் ஜோசியம் பார்த்து இருக்கிறார்கள் அதில்
மூன்றாவதாக ஜனிப்பது கண்டிப்பாக பெண் குழந்தைதான் மேலும் அது பிறந்தவுடன் தாய்
இறந்து விடுவாள் இதுதான் காரணம் சொன்னது ஜோசியர்.
பீதி போதாதா ? நான் சொன்னேன் உனக்கு பயமாக இருக்கிறது என்றால்...
அதில் நியாயம் இருக்கிறது யாரோ ஜோசியர் சொன்னதுக்காக சொல்றியே.. இதே ஜோசியர் நான்
இப்பொழுது அபுதாபி போனால் திரும்ப மாட்டேன் என்று சொன்னால் உனது கருத்தென்ன ? நீ கண்டிப்பாக தடுக்க மாட்டாய் என்பதும்
எனக்குத் தெரியும் அதேநேரம் நீ தடுத்தாலும் நான் கண்டிப்பாக போவேன்.
காரணம் இப்பொழுது குழந்தைகளுக்கு காது குத்தினோம் எவ்வளவு செலவு முக்கியமாக வரும்போது நிறைய வெளியூர் நண்பர்களிடம் கடன் வாங்கி வந்திருக்கிறேன் அதை எப்படிக் கொடுப்பது ? சர்ச்சைகள் சண்டையாகி அவள் இறப்பதை நான் விரும்புவதாக அந்த தீர்க்கதரிசி ஜோசியரைப் போலவே எனது மனைவி கணித்து விட்டாள் காரணம் அம்பூட்டு அறிவு என்னவளுக்கு இதற்கு உறுதுணையாக மனைவி வீட்டார் ஆத்திரத்தில் நீ அப்படி நினைத்தால் ? உனது இஷ்டப்படி செய்து கொள் என்று அந்தப்பாவச் செயலுக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு சென்று விட்டேன்.

நான் மீண்டும் அவசரமாக வந்து 2001-ல் பார்க்கும்போது அவள் இதயத்தில் BLOOD
CENCER மரணத்தின்
கடைசி நிலை. எல்லாம் முடிந்தும் விட்டது இதற்கு காரணம் யார் ? அழிக்கப்பட்ட அந்த சிசு காரணமில்லையே ஒருக்கால்
அந்தக் குழந்தையையும் கொடுத்து விட்டு சென்றிருக்கலாமே என்ற கவலையும் எனக்கு
வந்தது மீண்டும் தோன்றியது ஒருக்கால் நான் வெற்றி பெற்றிருந்தால்.
(நான் எதில்தான் வெற்றி பெற்றேன்
இதில் வெற்றி பெற)
இவளது மரணத்திற்கு அந்தக் குழந்தையும், நானுமே காரணம் என்று முத்திரை குத்தி விடுவார்கள் நான்
சமாளித்து விடுவேன் நானில்லாதபோது குழந்தையை பழித்தால் ? ? ? அதன் மனம் எவ்வளவு வேதனைப்படும் எல்லாம்
நன்மைக்கே என்று பெரியோர்கள் சொல்லி வைத்தது இதனாலும் தானோ ? நண்பர்களே ஜோசியம் பொய்யா ? இல்லை கணிப்பது பொய்யா ? இதை நம்புவது சரியா ? இல்லை நம்பாதது சரியா ? சிலவற்றை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை
நம்பவும் முடியவில்லை.
நட்பூக்களே தங்களின்
கருத்தென்ன ?