தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 13, 2017

சினி சிரிப்பூக்கள்


டைரக்டர் மீடியாக்கள் மேலே கோபமாக இருக்காரே ஏன் ?
படத்தோட பேரு ''சுட்டகதை''னு வச்சதாலே பத்திரிக்கையில் பூராம் இயக்குனர் சுட்டகதை பிரமாதமாக சுட்டு இருக்காருனு எழுதிட்டாங்களாம்.
* * * * *01* * * * *

நடிகை நந்திதா ஏன்... திடீர்னு கால்ஷீட் தரமாட்டேனு சொல்றாங்க ?
நம்ம டைரக்டரு நடிகையோட சீட்ல கையை வச்சிட்டாராம்.
* * * * *02* * * * *

வில்லன் நடிகர் கற்புக்கலைஞன் ஏன் நூறு கற்பழிப்புக்காட்சி வைக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறாமே ?
அவருக்கு இது நூறாவது படமாம்.
* * * * *03* * * * *

சிரிப்பு நடிகர் சிங்காரத்தை டைரக்டர் ஏன்... வேண்டாம்னு சொல்றாரு ?
அவருக்கு ஹீரோவை அறையிறது மாதிரி ஒரு ஸீன் கண்டிப்பாக வேணும்னு சொன்னாராம்.
* * * * *04* * * * *

இசையமைப்பாளர் இந்திரனுக்கும், தயாரிப்பாளார் தயாநிதிக்கும் சண்டையாமே ?
ஆமா ட்யூன் போட ஸ்விஸ் போவதற்கு கொழுந்தியாள் கோகிலாவுக்கும் விசிட் விசா போடச்சொன்னாராம்.
* * * * *05* * * * *

அந்த வடநாட்டு புதுமுக நடிகரை டைரக்டர் ஏன் அறைஞ்சாரு ?
துணிவை இழக்க மாட்டேனு வசனம் சொல்லச் சொன்னதுக்கு துணியை இழுக்க மாட்டேனு சொல்லிட்டாராம்.
* * * * *06* * * * *

நடிகர் நந்தா ‘’லைட்பாய்’’ படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாராமே ?
தனது ஆரம்பகால வேலையை குத்திக்காட்டுவற்காக டைரக்டர் வச்ச தலைப்புனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாராம்.
* * * * *07* * * * *

நடிகை அகிலா அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாமே ?
ஆமா ஹீரோயினா சும்மா நடிச்சாலும் நடிப்பேனே தவிர அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாம்.
* * * * *08* * * * *

புதுமுக நடிகை முதலிரவு ஸீன்ல நடிக்கும்போது எல்லோரையும் வெளியே போகச் சொன்னாங்களாமே ?
ஆமா ஸீன் தத்ரூபமாக இருக்கனும்னா... யாரும் இல்லாட்டாதான் இயற்க்கையா இருக்கும்னு சொல்றாராம்.
* * * * *09* * * * *

அந்தப் பாடலாசிரியரை தயாரிப்பாளர் ஏன் வேண்டாம்னு சொல்றாரு ?
அவரு, தமிழ் வார்த்தையிலதான் பாட்டு எழுதுவாராம் அதனாலதான்.
* * * * *10* * * * *

பானை, சட்டி கழுவுற மாதிரியெல்லாம் நடிக்க முடியாதுனு ஹீரோயின் சொல்லிட்டாங்களாமே ?
ஆமா ஜட்டியோட வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால்... சட்டியை கழுவுற ஸீன் மாதிரி நடிக்க வராதுனு சொல்றாங்க.
* * * * *11* * * * *

புது கேமராமேன் புருஷோத்தமனை ஏன்... திடீர்னு படத்துலருந்து நீக்கிட்டாங்களாமே ?
முதலிரவு ஸீன் ஒரு மணிநேரம் எடுத்த பிறகு பார்த்தால் ரெக்காடிங்குல ஒண்ணுமே வரலையாம் கேட்டதுக்கு பழைய ஞாபகத்துல தூங்கிட்டேன் அப்படினு சொன்னாராம்.
* * * * *12* * * * *

சனி, பிப்ரவரி 11, 2017

விழித்தெழு தமிழா...


நண்பா பேரூந்திலோ, ரயிலிலோ பயணம் போகிறோம் பொழுது போக்கிற்காக ஏதாவதொரு பத்திரிக்கை வாங்குகிறோம் பத்திரிக்கை எதற்காக நேரத்தை கழிப்பதற்காக பத்திரிக்கை சுமார் முப்பது பக்கம் என்று வைத்துக் கொள்வோம் அதில் சரிபாதி விளம்பரம். முன் புறமும், பின்புறமும் திரைப்படத்திலும், தொல்லைக்காட்சியிலும் நாம் அன்றாடம் பார்த்துப் பார்த்து சலித்துப் போன திரைப்பட நடிகர் நடிகையரின் புகைப்படம். எல்லா பத்திரிக்கையுமே வருடத்திற்க்கு ஒருமுறை மை விலையேற்றம், பேப்பர் விலையேற்றம், மின்சாரக் கட்டணஉயர்வு, போக்குவரத்துக் கட்டணஉயர்வு, தொழிளாலர் சம்பளஉயர்வு என்று விலை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நமக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்திக்க நேரமில்லை ஏன்னா நமக்கு தூங்கணும்.
சரி மறுபாதியில் என்ன இருக்கு அதைக்காண்போம்,

01. தூ.... வில் தொடங்கும் அந்த மூன்றெழுத்து நடிகையின் நாய்க்கு சுகமில்லை அதனால் நடிகை மூட்அவுட்.
02. உஜாலா நடிகை கொடைக்கானலில் குஜாலா
03. மீன் குழம்பு எனக்கு உயிர் கைலாஞ்சி நடிகையின் சுவையான பேட்டி.

இந்த மாதிரியான அறிவுப்பூர்வமான விசயங்கள் நண்பா, நண்பி சிந்தித்துப்பார் இவையெல்லாம் தேவையா ?
கரும்பு தின்னக்கூலியும் கேட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாம். நான் ஒருவன் வாங்காமல் இருந்தால் இவர்கள் திருந்தி விடுவார்களா ? என்று கேட்காதே சிறுதுளி பெருவெள்ளம் ஒருகை தட்டினால் ஓசை வராது மறு கையும் தட்டவேண்டும் மறுகை தட்டினால் பல கைகளும் தட்டும். வேறு என்னசெய்வது பொழுது போக வேண்டுமே என்கிறாயா ?
இயற்கையை ரசித்துப்பார்... இல்லையேல்...
உன்சக பயணிகளிடம் பேசிப்பார்...
விஞ்ஞானம்பேசு
மெய்ஞானம்பேசு
அஞ்ஞானம்பேசு
ஏன் உன் ஞானமும்பேசு
பேசு நண்பா உன் வைரத்திற்கு (மூளைக்கு) பட்டை தீட்டு இல்லையேல் இவர்கள் உன் நெற்றியில் பட்டை போட்டு விடுவார்கள். ஏமாந்து விட்டு ஏமாற்றியவனை குறை சொல்லாதே அது கையாலாகாதவன் பேச்சு.

ஏமாற்றியவன் அயோக்கியன்
ஏமாறுபவன் அப்பாவி
இது அந்தக்காலம்.

ஏமாற்றியவன் அறிவாளி
ஏமாறுபவன் முட்டாள்
இது இந்தக்காலம்.

நண்பா... ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்.
ஏமாறுபவன் முதல் இலக்கம் ஏமாற்றுபவன் இரண்டாம் இலக்கம் முதலாமாவன் இல்லையேல் உலகில் இரண்டாமாவன் தோன்றவே முடியாது ஆகவே இரண்டாமாவனை உருவாக்கிய முதலாமாவனே குற்றவாளி எல்லாவற்றிலும் முன்னோக்கிப் போகும் நீ இதில் மட்டும் பின்னோக்கிப் போவதேன் ?

வியாழன், பிப்ரவரி 09, 2017

வண்டு மகன் வாண்டு


அம்மா தெருவுல உள்ளவங்க பூராம் என்னை வண்டு மகன் வாண்டு அப்படினு சொல்றாங்களே... ஏம்மா ?
உங்க அப்பா எந்த நேரமும் பேசுறவங்கள்ட்ட காதுல வண்டு குடையுறது மாதிரி தொனத்தொனனு பேசிக்கிட்டே இருக்காருல அதனாலதான்.
*-------------------------------------------01------------------------------------------*
அப்பா உன்னை சித்தி விநாயகர் கோயிலுக்கு கூட்டிட்டு போனாரே... நல்லா வேண்டிக்கிட்டியா ? 
இல்லேமா, நம்ம சித்தி செல்வநாயகி வீட்டுக்குத்தானே கூட்டிட்டுப்போனாரு...
? ? ?
*-------------------------------------------02------------------------------------------*
ஏம்மா, எனக்கு நிறைய கறியை வச்சுட்டு அப்பாவுக்கு மூளையை மட்டும் வைக்கிறீங்க ?
அப்பவாவது, உங்க அப்பாவுக்கு வளருதானு பார்ப்போம்.
*-------------------------------------------03------------------------------------------*
அம்மா, செப்டம்பர் 20 தானே உங்களுக்கும், அப்பாவுக்கும் கல்யாண நாளு
ஆமா ஏன் ? 
அப்பயேன் அப்பா அவரோட டைரியிலே துக்கநாள்னு எழுதி வச்சு இருக்காரு ?
? ? ?
*-------------------------------------------04------------------------------------------*
அம்மா கந்தசஷ்டி கவசத்திலே, காக்க காக்க கனகவேல் காக்க அப்படினுதானே படிக்கணும்.
ஆமா, என்ன... திடீர்னு சந்தேகம் ? 
அப்பா, காக்க காக்க கனகவள்ளி காக்க அப்படீனு படிக்கிறாரே அது என்ன கவசம்மா ? 
? ? ?
*-------------------------------------------05------------------------------------------*
சித்ரா சித்தி நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்களாமா ? 
சித்ரா சித்தியா அது யாரு... புதுசா ?
அதான்மா, அப்பா என்னை கொண்டு போயி ஸ்கூல்ல விட்டுப்புட்டு ஆஃபீஸ் போகும்போது ஸ்கூட்டர்ல கூட்டிக்கிட்டு போறாங்களே, அந்த சித்தி.
? ? ?
*-------------------------------------------06------------------------------------------*
சனிக்கிழமை தவறாமல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துறியே, ஏம்மா ?
உன் அப்பனைத்தான் சாத்தமுடியலை அதுக்காவது சாத்துவோம்னுதான்.
*-------------------------------------------07------------------------------------------*
அம்மா நேத்து அப்பா சொன்னபடி முருகன் கோயில்ல வேண்டிக்கிட்டேன்மா.
அப்பா என்ன... வேண்டிக்கிற சொன்னாரு ?
சீக்கிரமா புது அம்மா கிடைக்கணும்னு.
? ? ?
*-------------------------------------------08------------------------------------------*
நாம, அடுத்தவங்களுக்கு செய்யிற உதவியோ, பணமோ வலது கை கொடுக்குறதை இடது கைக்குகூட தெரியாமல் கொடுக்கணும்.
ஓஹா, அதனாலதான் நேத்து பக்கத்து வீட்டு ஃப்ரீத்தி அம்மாவுக்கு அப்பா மூக்குத்தி கொடுக்கும்போது மறைச்சு கொடுத்தாங்களோ...?
? ? ?
*-------------------------------------------09------------------------------------------*
அம்மா வாத்தியாரு, என்னை முட்டாப்பய மகனே அப்படினு கூப்புடுறாருமா...
 இதிலிருந்து நீ படிச்சுக்கிட்டது என்ன....? என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளியே வந்தே தீரும் நாளைக்கு உன்னோட மகனை இந்த மாதிரி எந்த வாத்தியாரும் சொல்லக்கூடாது அந்த அளவுக்கு நீ படிப்புல கவனம் செலுத்தி படிக்கணும் கேட்டோ...? 
 ஓகேமா.
*-------------------------------------------10------------------------------------------*
காணொளி

செவ்வாய், பிப்ரவரி 07, 2017

இரையாக இறைவா !


நான் யானையாக பிறந்திருந்தால் ?
கோவில்களில் தெய்வங்களை 
சுமந்திருப்பேன்.

நான் குதிரையாக பிறந்திருந்தால் ?
போர்களில் மன்னர்களை சுமந்திருப்பேன்.

நான் காளையாக பிறந்திருந்தால் ?
வயல்களில் உணவுக்காக உழுதிருப்பேன்.

நான் பசுவாக பிறந்திருந்தால் ?
தாயில்லா குழந்தைகளுக்கு பால் கொடுத்திருப்பேன்.

நான் ஆடாக பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு திடஉணவாக இருந்திருப்பேன்.

நான் நாயாக பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு வேட்டையாட உதவியிருப்பேன்.

நான் ஒட்டகமாக பிறந்திருந்தால் ?
மனிதன் பாலைவனத்தை கடக்க உதவியிருப்பேன்.

நான் கழுதையாக பிறந்திருந்தால் ?
ஒரு சமூகத்து மனிதருக்கு உதவியிருப்பேன்.

நான் கோழியாக பிறந்திருந்தால் ?
சத்துணவுக்கு முட்டை கொடுத்திருப்பேன்.

நான் சேவலாக பிறந்திருந்தால் ?
சத்துணவுக்கு முட்டையை போட உதவியிருப்பேன்.

நான் மயிலாக பிறந்திருந்தால் ?
குழந்தைகளுக்கு அழகு காட்டியிருப்பேன்.

நான் குயிலாக பிறந்திருந்தால் ?
மனிதன் சந்தோஷமாய் கேட்க கூவியிருப்பேன்.

நான் புறாவாக பிறந்திருந்தால் ?
மன்னர்களுக்கு இ-மெயில் கொண்டு போயிருப்பேன்.

நான் காகமாக பிறந்திருந்தால் ?
மனிதருக்கு விரதநேரத்தில் உதவியிருப்பேன்.

நான் பூனையாக பிறந்திருந்தால் ? 
வீட்டில் எலித் தொல்லையை ஒழித்திருப்பேன்.

நான் கிளியாக பிறந்திருந்தால் ?
கிளி சோசியர்களுக்கு வாழ்வு அளித்திருப்பேன்.

நான் பல்லியாக பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு சகுணம் சொல்லியிருப்பேன்.

நான் மீனாக பிறந்திருந்தால் ?
மனிதனுக்கு வைட்டமின்-சியை கொடுத்திருப்பேன்.

இதெல்லாம் இல்லாமல்....
நான் சிங்கமாக பிறந்திருந்தால்கூட
 காட்டில் ராஜாவாக வலம் வந்திருப்பேன்

ஆனால் என்னை புழுவாக பிறக்க வைத்து, பாவங்களை செய்து முடித்த பாழப்போன மனிதனின் பாழும் உடம்பை இரையாக தின்ன வைத்து விட்டாயடா இறைவா நான் என்ன பாவம் செய்தேன் ? போன பிறவியில் மனிதனாக பிறந்தேனா ? 

 குறிப்பு இதற்கு புழுதிக்குளம் புழுவின் புலம்பல் என்றுதான் தலைப்பு வைத்தேன் விசயம் கடைசியில் தெரியட்டுமே... என்பதால் புழுவை இரையாக்கினேன்

காணொளி 01

இது யானையின் பிரசவக்காட்சி இதை எல்லோரும் காண விரும்புவதில்லை இதை தவறாக நினைக்க வேண்டாம் நமக்காக நமது தாய் எத்தனை வேதனைப்பட்டிருப்பாள் என்பதை பலரும் உணர்வதில்லை உணர்ந்தால்... நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வராது என்பதே எமது கருத்து எனக்கு இந்தக் காட்சியை கண்டதால்தான் இதை எழுத தோன்றிற்று ஆகவே நன்றிக்காக இதை வெளியிட்டேன், இதைக்காண விரும்பாதவர்கள் கீழேயுள்ள அடுத்த காணொளிகளை காணலாம் நன்றி.


காணொளி 02
காணொளி 03
இந்த காணொளி நான் 2012 டில் தாய்லாந்து போகாதபோது எடுத்தது.

சனி, பிப்ரவரி 04, 2017

கணவனுக்கு கல்லடி


ஏங்க இன்னைக்கு கணவனுக்கு கல்லடி சினிமாவுக்கு போவோமா ?
அந்த சினிமா பார்க்க வேண்டாம்.
ஏன் ?
அதுல மனைவி கணவனை மதிக்கிறதில்லையாம்.
இப்போ நீங்க கூட்டிப் போகலைனா... உங்களை நான் மதிச்சிடுவேனா ?
அதான் தெரிஞ்ச விசயம்தானே...
பின்னேயென்ன ?
வேண்டாம் அந்தப் படத்துக்கு மனைவியை கூட்டிட்டு போறவங்களை தியேட்டருலே ஒரு மாதிரியா... பார்த்து கமெண்ட்ஸ் அடிக்கிறாங்கே....
இது உங்களுக்கு எப்படித்தெரியும் ?
அது... அது வந்து... ஃப்ரெண்டு சொன்னான்.
அப்படின்னா... இன்னைக்கு அந்தப் படத்துக்கு கண்டிப்பாக போறோம். 
சொன்னாக்கேளு, சும்மாவே எனக்கு மரியாதை இல்லை இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையாவது...
முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு ?
ஏண்டி... இந்தப் பழமொழி பெரியவங்க இதுக்கா... சொல்லி வச்சாங்க ?
பழமொழி சொன்னவங்க காரணத்தோடதான் சொல்லி வைப்பாங்க.
அப்படினா... நீ மட்டும் மேட்னி ஷோவுக்கு போயிட்டு வா
அப்படினா... மூணு நாளைக்கு வீட்டுல சோறு கிடையாது.
சரி நான் மூணு நாளைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுக்கிறேன்.
எதுக்கும் மூணு நாளைக்கு வெளியில நல்லது பொல்லது சாப்பிட்டுக்கங்க..
ஏன் ?
அப்புறம் சாப்பிட வீட்டுக்கு வந்துதானே ஆகணும்.
வேறெங்கே... போறது ?
வீட்டுல வந்து சாப்பிடுறதுதான் கடைசி சாப்பாடு.
ஏன் ?
சோத்துல விசத்தை வச்சுடுவேன்.
? ? ?
என்ன... பேச்சு மூச்சைக் காணோம் ?
அதான் மூச்சை நிறுத்திட்டியே...
மூச்சு தொடரணும்னா.... இப்பவே தியேட்டருக்குப் போயி ரெண்டு டிக்கெட் ரிசர்வேஷன் செய்திட்டு வாங்க.

சொன்னவள் ஒரு உஷ்ணப்பார்வை பார்க்க இவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு அருணா தியேட்டருக்கு கிளம்ப... பத்மினி டி.வியை போட்டாள் அதில் கே.ஜே.யேசுதாஸ் பாடிக்கொண்டு இருந்தார் இப்படி கீழே பாருங்களேன். 

காணொளி

வியாழன், பிப்ரவரி 02, 2017

இரு’’கை’’கள்

மாமா திரு. பாலா அவர்களுடன் கில்லர்ஜி

சில வருடங்களுக்கு முன்பு தேவகோட்டையிலிருந்து அருகிலிருக்கும் பவளமலையில் உள்ள அரண்மனை சேவகர் ஒருவரின் இல்லத்திற்கு சென்று இருந்தேன் அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் சித்திரம் யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து அதைப்பற்றிக் கேட்கவே இல்லை.

புதன், பிப்ரவரி 01, 2017

முதலும், கடைசியும்


விகடகவி தாத்தா TICKET செலவு இல்லாம AMERICA போயி லில்லி பாப்பாவுக்கு லாலா கடை மிட்டாய் கொடுத்து, திருப்பதியில குரங்குக்கு திதி கொடுத்த கதையும், சிவகாசி மாமா தலையில காக்கா TOILET போன கதையும் சொன்ன மொழி MALAYALAM


இப்படியும் நான் பதிவு எழுதிக் கொல்’’வேனே... – கில்லர்ஜி