மாஞ்சோலை
கிராமம் சாலையோர டீக்கடையில்....
வணக்கம் ஐயா இங்கே
பத்மநாபன்னு...
தம்பிக்கு எந்த ஊரு
தர்மபுரி
வாங்க டீ சாப்பிடலாம்
பரவாயில்லை நான்
சாப்பிட்டேன்.
எந்த பத்மநாபன் நம்ம கோயமுத்தூர்
மாப்ளே அவரா ?
இல்லை பட்ஜெட் பத்மநாபன்
அடடே நம்ம கந்தசாமி
மகன்
ஆமா பட்டப்பெயர்கூட குருவிமண்டைனு
சொல்வாங்க...
சரிதான் இப்படியே... நேரே
போங்க, பீச்சாங்கை பக்கமா திரும்பவும் கிழக்கு வாசல் வரும் அதுதான்.
நல்லது ரொம்ப நன்றி
தெருவில் திரும்பியதும்...
விருமாண்டியண்ணே நல்லாயிருக்கீங்களா ?
அடடே வா கண்ணா வா
என்ன திடீர்ன்னு உன் மனைவி வரலை ?
புறப்பட்டேன் மனைவி ரெடியாகலை
வந்துட்டேன்.
புதுவீடு கண்டு
புடிச்சு வந்திட்டியே... இது பத்மா கட்டியதுதான்,
வரும்போது குரு
அத்தான் கிட்டே விபரம் கேட்டுத்தான் வந்தேன்.
அம்மா இப்ப எங்கே இருக்காங்க ?
அவுங்களுக்கென்ன ? மெட்ராஸ் டூ பாண்டிச்சேரிதான், எல்லா மாசமும்.
எல்லா தடவையும் நீ
மட்டுமே வர்றே குடும்பத்தை கூட்டிட்டு வா.
அண்ணே அண்ணி இவங்களெல்லாம் எங்கே ஆளையே... காணோம் ?
இன்னைக்கு வெள்ளிக்கிழமை
விரதம்ல பத்மநாபனை கூட்டிக்கிட்டு எங்கிட்டாச்சும் கும்புடப் போயிருப்பா
வேண்டுதலுக்கு...
அண்ணே சாமி கும்பிடப்
போகலையா ?
எப்பவுமே நான் கடவுள்
இல்லைங்கிற சாதிதானே இதோ வந்துட்டா..
கண்ணா நல்லாயிருக்கியா ? மண்
வாசனை இழுத்துருக்கு இந்தப்பக்கம்.
கிழக்கு
சீமையிலே கால் வைக்காமல் இருக்க முடியுமாண்ணி ?
என் தங்கை கல்யாணி குழந்தைங்க,
எப்படியிருக்காங்க ?
இருக்காங்கண்ணி பத்மா நல்லா
இருக்கியா... எந்த கோவில் போனீங்க ?
நல்லாயிருக்கேன் நவக்கிரக
நாயகிக்கு படையல்,
வைஜயந்தி இன்னும் கல்லூரியிலிருந்து வரலையா.... படிப்பெல்லாம் எப்படிணே போகுது ?
வைஜயந்தி ஐ.பி.எஸ்தான் படிப்பேனு
சொல்றாடா...
நம்ம புள்ளையாவது
படிக்கட்டும்ணே, நாந்தேன் படிக்காதவன் ஆயிட்டேன்.
படிக்காட்டாலும் பட்ஜெட்
போட்டு வாழ்க்கை நடத்துறியே அது போதும்.
இருந்தாலும் அ.ஆ.இ.ஈ
கூட படிக்கலையேணே...
உன்னைப்போல அறிவாளி
யாரு சொல்லு ?
எல்லாம் என்னோட விதி
வேறென்ன ?
நம்ம வீட்டுக்கு படிக்காத
மேதையா வந்துட்டியே...
படிக்கிற ஆசை மட்டும்
விடமாட்டுதுணே...
விடுடா உன்னைப்போல உழைப்பாளி
படிச்சவன் எவன் இருக்கான் ?
காலம் பூராம் தொழிலாளியாவே
போயிட்டேனே..
ஏன் அப்படி நினைக்கிறே ? விவசாயினு நினைச்சுக்க.
சரிண்ணே நான் கிளம்புறேன் காடு
கரைக்கு போகணும். ஏண்ணே பத்மாவுக்கு நிச்சய தாம்பூலம் முடிஞ்சு வருஷமாச்சு
கல்யாணம் எப்போ வயசு கூடுதுல ?
தைப்பிறந்தால் வழி
பிறக்கும் பார்ப்போம் சரி, உன் மகனுக்கு அரசாங்க வேலை என்னாச்சு ?
சொல்ல மறந்துட்டேனே... ஜனவரி 1 டூட்டியில
ஜாய்ண்ட் பண்ணிட்டான்.
சந்தோஷம் செல்வி
கண்ணாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாடி..
வேண்டாண்ணி இப்பத்தான்
சாப்பிட்டேன், ஊருல தேர்த்திருவிழா கண்டிப்பா குடும்பத்தோட வந்துடணும்,
சொல்றதுக்குத்தான் வந்தேன்.
கந்தர் அலங்காரம் பார்த்து ரொம்பநாள்
ஆச்சு..
போன வருஷம் தைப்பொங்கல்
விழாவுக்கு வந்தீங்கள்ல ?
ஆமா அப்பத்தானே தேர்ல தீ
பிடிச்சது...
ஆமா இந்த வருஷம் வீரபாண்டிய
கட்டப்பொம்மன் நாடகமும் வச்சு இருக்காங்க..
வந்துர்றோம் மாயாண்டி
குடும்பத்தார் வருவாங்களா ?
அவுங்க வராமலா திருவிழா முதல்
மரியாதை அவுங்களுக்குத்தானே...
நம்ம கும்பக்கரை
தங்கையா மச்சான் வருவாரா ?
அவருக்கும், நம்ம நாட்டாமைக்கும்
சண்டை அதனால் வரமாட்டார்.
இவெங்க சண்டைக்கு தெய்வம்
என்ன செய்யும்... ?
அதானே பார்த்தேன் நம்ம தெய்வமகன்
வாயைத் திறக்கலையேனு...
உண்மைதானடி சொல்றேன் கண்ணா,
அவரு மகன் ராஜா என்ன செய்யிறான்... ?
அவன்தான் ரவுடியாகி அந்த
ஏரியாவுக்கே குப்பத்து ராஜா ஆயிட்டானே..
அவன் சின்ன வயசுலயே தில்லாலங்கடியில...
இப்ப சொல்லவா வேணும்.
சரிண்ணே மழை வர்ற...
மாதிரி இருக்கு கிளம்புறேன் கண்டிப்பா எல்லோரும் வந்துடுங்க.
சரிப்பா இப்ப சுந்தரா
டிராவல்ஸ் வரும் கவனமாப் போயிட்டு வா.
நட்பூக்களே...
இதில் வரும் ஒவ்வொரு கேள்வி பதில்களிலும் சில வார்த்தைகள் BOLD-ல் இருக்கிறது அதன் காரணமென்ன ? உங்களில் யாருக்காவது பிடிபட்டால்
சொல்லுங்களேன்.