தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 26, 2020

கண்ணூர், கண்ணகி கருப்பாயி


இன்று நடிகை நளினாவுக்கு திருமணம் சென்னையில் பிரபலமான ஹோட்டல் ரோஸிக் பேலஸ் கோலாகலமாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது முதல்வர் முகிலன் முன்னிலை வகிப்பதால் முன்னணி நட்சத்திரங்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு, மட்டுமே அழைப்பு ரசிகர்கள் போலீஸாரால் தெருவின் முனையிலேயே தெருநாயை போல் விரட்டி அடிக்கப்பட்டார்கள்

திங்கள், ஜூன் 22, 2020

ஜெர்மனியில் ஜெமினியோடு ஜெயமாலினி


        நான் ஜெர்மனி போயிருந்த போது சாலைகளில் குறுக்கே நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும் அதில் படகுகளில் மக்கள் உல்லாசமாக பயணிக்கின்றார்கள். இதில் பாலங்கள் தோறும் நான் கண்டது அதன் குறுக்கு கம்பிகளில் விதவிதமான பூட்டுகள் தொங்கின... அதில் தேதிகள் அல்லது காதலர்களின் பெயர்கள் செதுக்கி இருக்கும் அல்லது வண்ணங்களில் எழுதியிருக்கும் இவைகளைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன்.

வியாழன், ஜூன் 18, 2020

அரசியல்வாதி For 2020


நானொரு அரசியல்வாதி ஆதலால்...

எனது எண்ணங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள்
ரத்தக்காயம் பட்டால்கூட காவிச்சாயம் பூசுகிறார்கள்.

மேடையில் பேசினால் கட்சியினர் சாமரம் வீசுகிறார்கள்
மறந்து, மறுத்துப் பேசினால் கற்களை வீசுகிறார்கள்

ஞாயிறு, ஜூன் 14, 2020

அழுக்கான ஓவியா


வணக்கம் நட்பூக்களே... ஊருக்கு உழைப்பவன் (1976) திரைப்படப் பாடலான //அழகெனும் ஓவியம் இங்கே// என்ற பாடலை நான் உல்டாவாக அதாவது அங்கு காதலன் கொஞ்சுகின்றான் எனது பாட்டில் பாடுபவன் ஒரு திருடனும் அவனது மனைவியும். மேற்கண்ட பாட்டை எழுதிய தமிழன் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடலுக்கு இசையமைத்தது மலையாளி எம்.எஸ்.விஸ்வநாதன், பாடியது தெலுங்கு பி.சுசீலா மற்றும் மலையாளி கே.ஜே.யேசுதாஸ் படத்தில் வாயசைத்தது மலையாளி எம்.ஜி.ராமச்சந்திரன் திரைப்படத்தை இயக்கியவர் மலையாளி எம்.கிருஷ்ணன் நாயர் படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றி பெற வைத்தது தமிழகத்து பாமரத்தமிழர்கள்.

வியாழன், ஜூன் 11, 2020

காலம் மறக்காத கலாம்



ணக்கம் நட்பூக்களே நான் மிகவும் மதித்த மாமனிதர்களில் ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அவருடைய கனவு இறுதிவரை இந்தியாவைப் பற்றியதாகவே இருந்தது. மதம் மறந்து இவரை இந்திய மக்கள் அனைவருமே நேசித்தது மறுக்க இயலாத உண்மை.

ஞாயிறு, ஜூன் 07, 2020

தங்கரதம் வெள்ளோட்டம்


ணக்கம் நண்பர்களே மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? அதாவது இவர் தமிழ்க்கடவுள் முருகன் இவரது கோவிலின் புதிய தங்கரதத்தின் வெள்ளோட்ட விழா நடத்துவதற்கு தமிழகத்தை ஆளும் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார் இது ஆட்சி செய்பவர்களுக்கான பதவியின் அதிகாரம் இது தவறேயில்லை. ஆனால் இந்த தங்கரதம் வெள்ளோட்டமிடும் விழாவுக்கு ஆசி வழங்கியது யார் ?

புதன், ஜூன் 03, 2020

தள்ள வேண்டியதை தள்ளு


ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா ? டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு.பகவான்ஜி அவர்கள் அடிக்கடி சொல்வார் தள்ள வேண்டியதை தள்ளினால் தட்டு வண்டிக்கும் மின்சாரம் கொடுப்பாங்கே என்று நமது நாட்டின் அவலநிலை இதுதான்.