எனது முகவுரையில் நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து
மறைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பேன் இதெல்லாம் புதுமைக்காக
சொல்லப்பட்டது அல்ல... என் அடி மனதின் ஆழத்தில் படிந்துள்ள உண்மையான படிமங்கள் ஆம்
நண்பர்களே... எனக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது விபரமறிந்து
உலகையறிந்த நாள்முதல் உள்ளவை.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வெள்ளி, அக்டோபர் 28, 2022
திங்கள், அக்டோபர் 24, 2022
வியாழன், அக்டோபர் 20, 2022
ஞாயிறு, அக்டோபர் 16, 2022
உண்மையை உடையப்பா
ஓர் வெற்றிகரமான
திரைப்படம் எடுப்பதற்கு அடித்தளம் எது ? கதைக்களம்
உண்மைதானே... அதாவது கதாசிரியர் அதற்கு முன் பணம் வேண்டும் என்பது வேறு விடயம்.
பிறகு கூத்தாடன், கூத்தாடி, இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், புகைப்படக்காரர்கள்,
வசனகர்த்தா, நடன இயக்குனர், சண்டைக்காட்சி அமைப்பாளர், பாடலாசிரியர்,
இசையமைப்பாளர், பாடகர், பாடகி, இன்னும் எத்தனையோ தொழில்நுற்ப கலைஞர்கள் இணைதல்
வேண்டும்.
செவ்வாய், அக்டோபர் 11, 2022
இனி யார் துணை ?
சமீபத்தில்
ஓர் கோயிலுக்கு சென்று வந்தேன் எதற்காக தெரியுமா ? நேர்த்திக்கடன் என்று காசுகளை மஞ்சள் துணியில் சுற்றி
வைத்து விடுவார்கள் என்பது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமே... குடும்பத்தில்
வேண்டப்பட்டவர் செய்த வேலை... இல்லை வைத்த, நேர்த்திக்கடன்கள். ஒன்றல்ல, இரண்டல்ல
மஞ்சள் முடிச்சுகளை அவிழ்த்து இரு கைகளிலும் அள்ளிக் கொள்ளும் அளவுக்கு காசுகள்.
வெள்ளி, அக்டோபர் 07, 2022
உயர்ந்த உள்ளம்
ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கு அரசியல்வாதியாகவோ, திரைப்படக் கூத்தாடியாகவோ இருக்க வேண்டும் என்பது இல்லை. பணமும் முக்கியம் இல்லை. மனம் இதுதான் வேண்டும். சுயநலம், வறட்டு கௌரவம் பார்க்காது இருக்கும் உயர்ந்த உள்ளம் வேண்டும். இது எங்கு கிடைக்கும் ? லூலூ சூப்பர் மார்கெட்டிலா ? இல்லை நமது குருதியில் பிணைந்து ஓடுதல் வேண்டும்.
செவ்வாய், அக்டோபர் 04, 2022
சனி, அக்டோபர் 01, 2022
மன்னர் செம்படையார்
நட்பூக்களே... பலரும் அறிந்த பழமொழியும், அதையே நான் கற்பனையில் கதையாக புனைந்து
நீட்டி பிறகு சமூக கதையாக்கி தங்களது பார்வைக்கு...
தேவநாடு மன்னர் வடுகமுத்து செம்படையார்
தர்பார் மண்டபத்தில் அமைச்சர் பெருமக்கள் கூடி இருக்க உள்ளே நுழைகிறார்...