தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 28, 2014

பாம்பனிலிருந்து.... பாம்பாட்டி


மனிதர்கள் செய்யும் தவறுகள், மதம் சொன்னது எனச்சொல்வது, உண்மைதானா

மதம் எப்படி தவறு செய்யச் சொல்லும் ? 

அப்படிச் சொன்னால் அது மதம்தானா ? எனமனிதன் ஏன், சிந்தித்துப் பார்க்க மறுக்கிறான் ? அதேநேரம் எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கிறது அதை அவன் செய்வதில்லை, காரணம் நடைமுறை வாழ்வுக்கு அது, பாதகமாக இருப்பதாக கருதுகிறான்.

தனக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றுவதை 

அவன் நடைமுறைப்படுத்த முனைகிறான், மதத்தில் தவறில்லை மனிதா, நீ புரிந்து கொண்ட விதத்தில்தான் தவறு. ஆம் மனிதா

இறுக்கம் கொண்டமனம் இரக்கம் கொள்ளாது 

ஆகவே மனதை மென்மையாக்க முயற்சி செய். 
மானிடா மதம் உன்னைப் பிடித்தாலும் சரி, உனக்கு மதம் பிடித்தாலும் சரி, அழிவு மனிதனுக்கே ! மதத்திற்கு அல்ல !
(You have Brain too much, because just think after you decide) 
ஆகவே, எது சரியென யோசி, 
(but one thing only you, don't include others) 
பிறகு நீ தானாகவே மனிதனை நேசிப்பாய். 

வாழும் காலம் என்பது, ராமேஸ்வரத்திலிருந்து... தனுஷ்கோடி போய் மீன் பிடிப்பது போன்றது, போகும் தூரம் என்பது, ராமேஸ்வரத்திலிருந்து... கச்சத்தீவு போய் மீன் பிடிப்பது போன்றது.

மதம். யானைக்கு, பிடித்தால் காடு அழியும்.
மனிதனுக்கு, பிடித்தால் நாடு அழியும்.

காடு அழிந்தால் மனித உயிருக்கு பாதிப்பில்லை, நாடு அழிந்தால் மனித உயிரும் அழிந்து, நாடே காடாகும் நமது முன்னோர்கள் விஞ்ஞானம் வளராத அந்தக் காலத்தில் நமக்காக காட்டை அழித்து நாட்டை உருவாக்கினார்கள், இன்று விஞ்ஞானம் அபார வளர்ச்சி என, பீற்றிக்கொள்ளும் மானிடா, நாட்டை மீண்டும் காடாக்க வேண்டுமா ? எதைச் சாதிக்க நினைக்கிறாய் ? எதை எடுத்துப் போக நினைக்கிறாய் ? இந்த நிமிடம் நீ மரணித்தால் ? போன நிமிடம் வரை நீ உண்டதுதான் நீ எடுத்து போக முடிந்தது ''எடுப்புச்சாப்பாடு'' எனச் சொல்வார்களே ! அதைத் தவிர வேறொன்றும் இல்லை.

காணொளி

சனி, ஜூலை 26, 2014

விசித்திகன்


என் வாழ்வில் நான் கண்ட, காணும் ஆத்திகம் பேசும், பேசிய மானிடர்களில், பெரும்பாலானோர் நடைமுறை வாழ்வில் நியாயமாக நடந்தவர்கள் இல்லை, அதேநேரம் நாத்திகம் பேசும் பல மனிதர்களை நான் பார்த்து விட்டேன் பெரும்பாலானவர்கள் யோக்கியர்களாகத்தான் இருக்கிறார்கள், நாத்திகர்களை உயர்த்தி பேசுவதால் நான் நாத்திகஜாதி என அவசரப்பட்டு எண்ண வேண்டாம்.

நான் நாத்திகத்திலும், ஆத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக் கொண்டிருப்பவன், விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் குழைத்து என் ஞானம் பேசமுயல்பவன்.

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றால் ? உயிரற்ற தாதுப்பொருள்களில் இருக்கும் இறைவன், உயிர் ஜீவனான உன் மனசாட்சியுடன், இருக்கமாட்டானா ? பிறருடைய பொருளை அபகறிப்பது தவறான செயல் என, உன் மனசாட்சிக்கு தெரியும்போது அந்த மனசாட்சியை உருவாக்கிய இறைவனுக்கு தெரியாதா ? தெரியுமென நீ நிச்சயமாக நம்புவாய்யென நான் நம்புகிறேன் ஏனெனில் நீ ஆத்திகன், உயர்பிறவியான மனிதப்பிறவியாக இறைவன் உன்னை படைத்து பூமியில் விட்டு விட்டான், மனிதானான நீ மனிதனாக வாழ்ந்து மனிதனாகவே மரணித்தால் என்ன ?

என்னைப் பொருத்தவரை இறைவணக்கத்தை நாடுவதுகூட ஒரு வகையில் மன்னிப்பை தேடுவது போல்தான், மன்னிப்பு யாருக்கு தேவை ? குற்றவாளிக்கு, நீயோ குற்றமற்றவன் பிறகு நீயேன் இறைவனை வணங்கவேண்டும் ? நீ போடும் ஊழைக்கும்பிடு இறைவனை திருப்திபடுத்துமென நினைத்து நீ திருப்தி கொள்கிறாய் அப்படித்தானே ! இறைவனுக்கு படைக்கிறேன் எனக்கூறி விட்டு அனைத்தையும் நீயே உண்கிறாய், ஒருக்கால் இறைவன் உண்டால் ? நீ உணவுகளை உண்டாக்க மாட்டாய்.

(காரணம் இன்றைய விலைவாசி அப்படி) 

இறைவன் ஆசாபாசம், விருப்பு, வெறுப்பு, பசி, பட்டினி, உறக்கம், உறவுகளுக்கு அப்பாற்பட்டசக்தி.

மனிதர்கள் அனைவரும் தன்னிடம் அடிபணிய வேண்டுமென இறைவன் நினைத்தான் என்றால் ? அவன் இறைவனே அல்ல ! நம்மைப் போல, ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதியைப்போல, சராசரி மனிதப்பிண்டமே...... இறைவனுக்கு நிச்சயமாக உருவம் இல்லை அதேநேரம் நீ அந்த இறைவனை, இறைசக்தியை சந்தித்தே தீரவேண்டும் அதுதான் உன் மரணநாள். மலம் கழித்து வாழ்ந்த மனிதர்களை வணங்கியவனைக்கூட மன்னித்து விடுவான் ஆனால் அவன் போலியென தெரிந்த பின்னும் அவனை வணங்கிய ஆத்திகனை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான், நாத்திகன் இந்த வட்டத்திற்குள் வரமாட்டான் காரணம் அவன் இறைவனையே வணங்குவதில்லையே ! நாத்திகனை அவன் தண்டிக்க சாத்தியமில்லை என்பதே என்வாதம் எமது பார்வையில், பெரும்பாலான நாத்திகர்கள் நல்லவரே... 

மரணநாளை நினைத்துப்பார் நீ மனிதனாகி விடுவாய்.

வியாழன், ஜூலை 17, 2014

வள்ளியூர், வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தி



கேள்விக்கணை கேசவமூர்த்தியும், வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தியும்.


என்னப்பா, வயிறு எப்படியிருக்கே ?
வா கேசு நல்லாயிருக்கேன், நீ எப்படியிருக்கே ? துபாயில இருந்து எப்ப வந்தே ? கல்யாணமெல்லாம் முடிச்சுட்டியா ?

இல்லே வா இப்படி உட்காரு, நம்ம ஊருலதான் கட்டுப்பாடு இருக்கே, உள்ளூருலதான் பொண்ணு எடுக்கனும்னு.
இங்கே, எந்தச் சிறுக்கியிருக்கா ?
  
என்னா...சொல்றே ? வீணை வாசிச்சுகிட்டு இருந்தாளே, வீணா அவ எங்கே போனா ?  
அந்த வீணாப் போனவதான் நம்ம வீரபாண்டிய கல்யாணம் செய்துட்டாளே...

சந்தா வசூலிச்சுகிட்டு இருந்தாளே, சாந்தா அவ எங்கே ?
சாந்தமானவ, மாதிரி இருப்பாளே அவ, நம்ம சாந்தகுமார கல்யாணம் செய்துட்டாளே...

களை எடுப்பாளே கலாவதி அவ என்ன ஆனா ?
அந்தக் காலாவதி ஆனவதான், நம்ம கலாநிதிய கல்யாணம் செய்துட்டாளே...

குண்டா இருப்பாளே, குயிலி அவ எங்கே ?
அந்த குந்திதான், நம்ம குருநாதனை கல்யாணம் செய்துட்டாளே...

ராங்காவே பேசுவாளே, ராணி அவ எங்கே ?  
அந்த ராங்கிதான், நம்ம ரங்கசாமிய கல்யாணம் செய்துட்டாளே...

கோதுமை கடை வச்சிருந்தாளே, பூங்கோதை அவ எங்கே ?  
அந்தக் கோந்தைதான் நம்ம கோதண்டராமனை கல்யாணம் செய்துட்டாளே...

மாலை கோர்த்து விப்பாளே மாலா அவ எங்கே ?
அந்த மாடுதான் நம்ம மாடசாமிய கல்யாணம் செய்துட்டாளே...

பழக்கடை வச்சிருந்தாளே பழனியம்மா அவ என்ன ஆனா ?  
அந்தப் பாழாப்போனவதான் நம்ம பழனியாண்டிய கல்யாணம் செய்துட்டாளே...

பூ வியாபாரம் செய்வாளே, நம்ம பூமயிலு அவ எங்கே ?
அந்த பூதந்தேன், நம்ம பூமிநாதனே கல்யாணம் செய்துட்டாளே...

முருக்குகடை வச்சிருந்தாளே, முனியம்மா அவ என்ன ஆனா ?  
அந்த முண்டந்தேன், நம்ம முனீஸ்வரனே கல்யாணம் செய்துட்டாளே...

சவுக்குகடை வச்சிருந்தாளே, சந்தியா அவ என்ன ஆனா ?
அந்த சந்திசிரிச்சவதான், நம்ம சத்யாவே கல்யாணம் செய்துட்டாளே...

நரஸுவேலை பார்த்தாளே நர்மதா அவ எங்கே ?  
அந்த நாசமா போறவதான், நம்ம நடராஜனைக் கல்யாணம் செய்துட்டாளே...

பார்மஸியில வேலை பார்த்தாளே பார்வதி அவ எங்கே ?
அந்தப் பாதகத்திதான் நம்ம பாண்டுரங்கனை, கல்யாணம் செய்துட்டாளே...

காய்கறிக்கடை வச்சிருந்தாளே, காளியம்மா அவ என்ன ஆனா ?  
அந்தக் காவாலி சிருக்கிதான் நம்ம காளிமுத்தனை கல்யாணம் செய்துட்டாளே...

வழவழன்னு பேசுவாளே, வள்ளி அவ என்ன ஆனா ?  
அந்த வள்ளுகிராக்கிதான் நம்ம வரதராஜனை கல்யாணம் செய்துட்டாளே...

இருமிக்கிட்டே இருப்பாளே இருளாயி அவ எங்கே ?  
அந்த இருமி கொட்டாந்தான், நம்ம இருளப்பனை கல்யாணம் செய்துட்டாளே...

மூக்குத்தி போட்ருப்பாளே, மூக்காயி அவ எங்கே ?
அந்த மூதேவிதேன், நம்ம மூர்த்திய கல்யாணம் செய்துட்டாளே...

ஓடிக்கிட்டே இருப்பாளே ஒச்சாயி அவ எங்கே ?  
அந்த ஓடுகாலிதான், நம்ம ஓம்பிரகாஷே கல்யாணம் செய்துட்டாளே...

என்னடா இது, எல்லாப் பொண்ணுக்குமே கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்றே, அப்ப நீ யாரைத்தான் கல்யாணம் செஞ்சே ?
யேண்டா அத இப்பத்தான் கேக்றியா ? நானே பொண்ணு கிடைக்காம நம்ம வைரவன்பட்டி, பைரவன் பொண்டாட்டி வைதேகிய வச்சுக்கிட்டு இருக்கேன். கேக்றான் பாரு கேள்வி கேணபய மாதிரி.

சாம்பசிவம்-
மனுசனுக்கு வயித்தெரிச்சல் இருக்கும் தான் அதுக்காக இப்படியா ?

குறிப்பு - இந்தப் பெயர்களில் வரும் சகோதரிகள் இதை படித்தால் ?  வயித்தெரிச்சல் வயிரவமூர்த்தி சார்பாக, எனது SORRY-- Killergee
F.P- 20 Mar 2012

செவ்வாய், ஜூலை 15, 2014

கடவுளும், கொலையாளியும்


இடம்: மதராசப்பட்டினம், மயில் ஆடும் பூங்கா. (தற்போது மயிலாப்பூர்)
திருவள்ளுவர் ஆண்டு 1745, சுரவம் மாதம், 21 ஆம்த திகதி, அறிவன் கிழமை

திடீரென எனக்கு தோன்றியது... வலைப்பதிவர் நகையை வித்தவர் SORRY நகைச்சுவை வித்தகர் பகவான்ஜியும், கில்லர்ஜியும் சந்தித்து பேசிக் கொண்டால் எப்படி இருக்கும் வேறெப்படி இப்படித்தான்.

ஆமா நீ ஆரு  ஜோக்காளி மாரிகீரே நாடகத்துல நடிச்சுகினு அப்பிடியே வந்துட்டியா ? 
யாம் பூலோகத்தை காணவே வந்தோம்.

ஒராளு வந்துகினு வந்தோம்கீறே நான்   ஆரு தெரியுமா ?
தெரியும் எமக்கு.

ஆரு ?
மானிடன்.

இன்னாது மானிட்டரா ?
உமக்கு மானிடன் என்றால் ? என்னவென்றே தெரியவில்லை வேடிக்கை வேடிக்கை 

யோவ் யாருய்யா நீ ய்யேன் 
ஏரியாவுல வந்து என்னையவே சத்தாய்க்கிறே...
மானிடா நீ என்ன மொழி 
பேசுகின்றாய் ?

மொதலே நீ இன்னா பேசுறே சொல்லுமே மானிட்டருங்கிறே குவாட்டருங்கிறே... 

மானிடா நான் பகவான்ஜி எமக்கு நீர் 
பணிந்தே தீரவேண்டும்


நான் கில்லர்ஜி சும்மா போட்டுட்டு போய்கினே...  ருப்பேன் தாமாஷூ பண்ணிகினுகீறே
 ? உனது பணி என்ன

இன்னாது பனியா அப்பிடினா ? 
உனது அன்றாட வேலை என்ன ?

தலையை எடுக்குனது கையைக் காலை கிள்ளிப் போடுறது, இதாமே என்னோட ஜோலி.
மானிடா இது தவறு, இதை இன்றோடு நிறுத்தி விடு நாளை என்னிடம் நீ சரணடைந்தே தீரவேண்டும்

சட்டென கில்லர்ஜி பட்டன் கத்தியை எடுத்து...
இன்னாங்கிறே இப்ப நீ போறீயா ? இல்லை உட்சுற வுடுறியா ?

பகவான்ஜி கையை உயர்த்தி
 ஆசீர்வாதம் செய்ய சட்டென கத்தி மறைந்து விட்டது.
நீ யாரு  மந்திரவாதியா மேஜிக் எல்லாம் காட்றே ?

மானிடா நான் பகவான்ஜி உன்னை படைத்தவன், நான் நினைத்தால் 

உன்னை அழித்து விடுவேன்.
நானு கில்லர்ஜி இப்ப இன்னா 
செய்றேன் பாரு ?

கில்லர்ஜி கையை மடக்கி குத்தவர... பகவான்ஜி ஆசீர்வாதம் செய்ய... கில்லர்ஜிக்கு கழுத்துவரை சிலையாகி தலை மட்டும் அசைந்தது
சாமி... மன்னிச்சுடுங்கோ... மன்னிச்சுடுங்கோ... இனிமே இந்த, யாபாரமே வச்சுக்க மாட்டேன்... ஏதாவது பொட்டிக்கடை வச்சுகினு பொழ்சுகிறேன், மன்னிசுக்க சாமி.

நல்லது மானிடா, நீ திருந்தியது உண்மை எனில் உனது வணிகம் நல்ல விதமாக யாம் அருள் புரிவோம் நீ மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் நடந்தால் நீ அழிந்து போகக்கடவது.
பகவான்ஜி அருள் பாவித்து, கில்லர்ஜியை பழைய நிலைக்கு திரும்ப வைத்து மறைந்து விட்டார்.


நான் இந்த பதிவை வெளியிட, எமக்கு பச்சைக்கொடி காட்டி அனுமதியளித்த இனிய நண்பர் பகவான்ஜி அவர்கள் கையின் விரலுக்கு மோதிரம் மாட்ட வேண்டும் ஆனால் எமது நண்பர் ‘’தங்கம் நமக்குள் ஏற்படுத்தும் பங்கம்’’ எனசொல்லி விட்ட காரணத்தால் அந்த எண்ணத்தை ‘’ச்சே‘’ என்னத்த என ரணில் தூக்கிப் போட்டு விட்டு.... பகவான்ஜிக்கு, கில்லர்ஜி in THANKSஸை மட்டும் ஒரு கன்டெய்னரில் அனுப்பி விட்டேன். 

வெள்ளி, ஜூலை 11, 2014

தாலி


திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் ? தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என்ற பருவ நிலைக்கு மாறக் காரணம் என்ன ? போலி கௌரவம் மனதில் குடிகொண்டு விட்டது, இதன் விளைவு ? சில நேரங்களில் உயிர்ப்பலியில் வந்து கூட முடிகிறது பெண்களுக்கு பொன்ஆசை மண்ணுக்கு போகும்வரை விடாது கணவன் கட்டி விடும் மஞ்சள் கயிற்றை தனது வாழ்நாள்வரை, அல்லது கணவன் இறக்கும்வரை உயிராக நினைத்து வந்தார்கள், இப்பொழுது அப்படியில்லை தாலி என்பது தங்கச் செயினில் இருந்தால்தான் கௌரவம் என நினைத்து அதையும் 5 அல்லது 10 பவுனில் செய்தால்தான் மரியாதையென கருதுகின்றார்கள்.

கொள்ளையர்களும், வழிப்பறி திருடர்களும் அபகறிக்கும்போது தாலியென அதற்கு முதல் மரியாதை கொடுக்க, அவர்கள் என்ன பாரதிராஜாவா எதையும் செய்யத் துணிந்த கயவர்கள்.

சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் கொள்ளையர்கள் கத்தி முனையில் குழந்தையை நிறுத்தி, வீட்டில் உள்ளவர்களிடம் பணமும். 225 பவுன் நகைகளை கொள்ளை அடிக்கும்போது, எல்லா பெண்களிடமும் தாலியையும் கழட்டி விட்டார்கள், 225 பவுன் நகை வைத்திருந்தவர்கள் வீட்டில் தாலிச்செயின் எத்தனை பவுனில் போட்டிருப்பார்கள் எனநீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், ஒரு வயதான அம்மையார் கொள்ளையர்களின் காலில் விழுந்து மன்றாடி இருக்கிறார் தாலியை மட்டும் விட்டு விடுங்கள் என்று...

பதியின் காலில் விழுந்து பழக்கப்பட்ட சதியை, சதிகாரர்களின் காலிலும் விழ வைத்தது விதி அதில் ஒரு நல்லதாய் பெற்ற மகன் தாலியை மட்டும் விட்டு விட்டா(ர்)ன்.

ஏன் அந்த மஞ்சள் கயிற்றை உங்கள் கழுத்தில் தொங்க விட்டால் கௌரவம் குறைந்து விடுமா ? அப்படி நினைத்தால் அந்த நஞ்சுக் கயிற்றை கட்ட வேண்டிய அவசியமென்ன ? மனம்போல வாழ்க்கை என்ற நிலைக்கு மாறி விடலாமே ! 

சினிமாக்களிலும், சீரியல்களிலும் வரும் தாலியை கழட்டி எறியும் காட்சிகள் சர்வ சாதாரணமாக பார்த்து வந்த, பெண்கள் தாலியையும் சாதாரண உடலில் இடும் ஆபரணம் போல கொண்டு வந்து விட்டீர்கள். 

இதற்கு மேல் கேள்வி கேட்டால் இத்தனை காலம் நாங்கள் தாலியை சுமந்தோம் இப்பொழுது நாங்கள் உங்களுக்கு கட்டி விடுகிறோம் எனச் சொன்னாலும் சொல்வீர்கள் ஏனென்றால் நீங்கள் பாரதி சொன்ன புதுமைப் பெண்கள்.

CHIVAS REGAL சிவசம்போ-
இதுகூட நல்லாத்தான் இருக்கு எவனாவது, தாலியறுக்க வந்தா ''ங்கொய்யால'' முட்டித் தூக்கிடலாம்.