30.08.2015
வயல் வெளியோரம் போகும்
காற்றே...
என் வேதனையை கொஞ்சம்
ஆற்றே...
பாதையோரம் விளையும் புல்லே...
என் பாவமென்ன நீயும்
சொல்லே...
கண்ணுக்குள்ளே கண்ணாய்
வந்தாள்
நெஞ்சுக்குள்ளே கனலைத்
தந்தாள்
மீளாத் துயரில் என்னைத் தள்ளி
தூரப் போய் விட்டாயடி கள்ளி
எந்தன் நிலையை நீயும் கண்டோ
எனக்கும் ஒரு மாற்றம் உண்டோ
சதி செய்தது இறைவன் தானே
கதியற்று இப்படி நிற்பது நானே
காணவேண்டும் உன்னைக் கனியே
வாடுகின்றேன் நானும் தனியே
சதி என்று என்னிடம் வந்தாய்
பதியை விட்டு தீயில் வெந்தாய்
மீண்டும் நான் மட்டுமே
உனக்கு
தவறுமோ என் மனக் கணக்கு
எனை அழைக்க வருவாய் என்றே
நானும் இங்கே தயாராய் இன்றே.
(30.08.1991)
இன்று எங்களது திருமண நாள் என்னவளுக்காக எமது
வழக்கமான காணிக்கையாக இந்தக் கவிதையை அர்ப்பணிக்கின்றேன்.