தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 21, 2023

நடந்தது நன்றாகவே நடந்தது

   னிதர்களுக்கு, சந்தோஷங்களும் கவலைகளும் இணைந்து இருப்பதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ளும் மனது, கவலைகளை ஏற்பதில்லை. ஒரு மனிதன் இறுதிவரை சந்தோஷமாக வாழ்ந்து கழிக்க வேண்டுமெனில் பணம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பது அறிவீனம். எத்தனையோ செல்வந்தர்கள் மகிழ்ச்சியை இழந்து நிற்பதற்கு காரணம் என்ன ?

திங்கள், செப்டம்பர் 18, 2023

Audi Car நல்லால்லே...

ணக்கம் நண்பர்களே... ‘’ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே’’ என்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அற்புதமான பாடலை திருமதி வல்லிசிம்ஹன் அம்மா அவர்கள் வேண்டுகோளுக்காக எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

வியாழன், செப்டம்பர் 14, 2023

நீலகிரி, நீட்தேர்வு நீலாவதி


நீட் தேர்வு எழுத நீட்டாக உடை அணிந்து சென்ற மாணாக்கர்களை குறிப்பாக பெண்களை இப்படி தலைவிரி கோலமாக அலங்கோலப்படுத்தி உள்ளே அனுப்புகின்றார்கள். தேர்வு நேரலை காணொளியில்தான் நிகழ்கிறது மேலும் ஆசிரியர்கள் குழுவும் சுழன்று வருகிறது அதன் மத்தியில் தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்து விடமுடியுமா ? அரபு நாடுகளிலும் தேர்வு நிகழத்தான் செய்கிறது அங்கு பெண்களை முக்காடு போடக்கூடாது என்று சொல்ல முடியுமா ?

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

வத்திக்குச்சி

ணக்கம் வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வடக்கு வாயா நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே ?

புதன், செப்டம்பர் 06, 2023

மடியில் கனமில்லை, மனதில் பயமில்லை

திரைப்படக் கூத்தாடன் திரு.எஸ்.வி.சேகர் அவர்களோடு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும் மேல் காணும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்மீது எனக்கு மரியாதை வந்து விடும். அதிமுகவில் எத்தனை பேர் இருந்தார்களோ அவ்வளவு பேர்களும் அடிமைகள்தான். ஏதோ உடலுறுப்பு வகையில் ஆண்வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

சனி, செப்டம்பர் 02, 2023

புதன், ஆகஸ்ட் 30, 2023

அலங்காரமா ? அலங்கோலமா ?

வர்கள் என்ன உடையணிகின்றார்கள் ? இவளைச்சுற்றி இவளது உடையை தூக்கி கொண்டு ஆறு நபர்கள் மேடைக்கு அழைத்து வருகின்றார்கள். தெருவை பெறுக்கி வருவது போன்ற இந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா ? பல லட்சங்கள். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இந்த கொங்காச்சிறுக்கி மறைக்க வேண்டியதை மறைக்க வில்லையே... பிறகு இது எதற்கு ? யார் வாங்குவார்கள் ? சந்தனம் எவர் வீட்டில் மிஞ்சினால் வாங்குவார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

வியாழன், ஆகஸ்ட் 24, 2023

துரோகச்சுவடுகள்

மது முன்னோர்கள் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்லி வைத்தது எவ்வளவு உயர்வான அனுபவமொழி. எங்கும், எதிலும், எவரும் துரோகம் இது தவறென்றே உணராத மனிதர்கள்தான் இப்பொழுது வாழ்கின்றார்கள். யாரையுமே நம்புவதற்கில்லை. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் நம்பாமல் பொய்முகத்தோடுதான் இருக்கின்றார்கள். உண்மை முகங்களை அல்ல, உண்மை முகத்தை பார்ப்பது அரிது.

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

நான் தமிழன்டா...

னது தோட்டத்து வயலில்
வண்ணத்துப்பூச்சி பூவாய்
என்னைப் பார்த்து சிரித்தது
அழகு ஓவியமாய்...- நான்
நீ மட்டும் பல வண்ணங்களில்
எப்படி பிறக்கிறாய் ? என்றேன்
நாங்கள் பாக்கியசாலிகள்.
மேலும் என்னை கேட்டது

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2023

ரேணிகுண்டா, ரேஷன்கடை ரேணுகா

ந்திர மாநிலம் ரேணிகுண்டா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கு ரேஷன்கடையில் பணியாற்றும் ரேணுகா நல்ல மனதுக்காரர். பொது மக்களிடம் அதிகம் கெடுபிடி செய்ய மாட்டார். இல்லாதவர்கள் யார் வந்து கேட்டாலும் அரிசி கொடுத்து அனுப்புவார்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2023

ஆரியபவனில் சூடான தோசை

01. தேர்தலில் வாக்கு செலுத்த மூன்று
புறமும் பணம் வாங்குவது தப்பா ?
 
02. மளிகைக்கடையில் போய் குழம்பு
வைப்பதற்கு புலி கேட்டால் தப்பா ?

சனி, ஆகஸ்ட் 12, 2023

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (5)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2023

வான் தந்த மழையும் வெல்லும்...

 

டம் ஊட்டி ஊத்துவா ஹோட்டல் அறை எண் 1032 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, பாடல் எழுதுவதற்காக காத்திருக்கின்றனர்.

சனி, ஆகஸ்ட் 05, 2023

இலுப்பக்குடி சாலையில்...


ன்றொருநாள் இலுப்பக்குடி சாலையில் எனது மகிழுந்தில் ஜலந்தரில் ஒரு நண்பரது திருமணத்திற்கு போய்க் கொண்டு இருந்தேன். உசிலம்பட்டி பிரிவு பாலத்தின் கீழே போனபோது... எனது முன்புறம் வெள்ளை நிறத்தில் ஒரு MARUTI SUZUKI SWIFT மகிழுந்து என்னைக் கடந்து போனது. அதில் ஒரு பத்து வயது குழந்தையை கடத்துவது போல் தெரிந்தது அதாவது குழந்தையை அடிப்பது போலிருந்தது. இதைக் கண்டதும் எனக்கு உடன் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

புதன், ஆகஸ்ட் 02, 2023

கொரோனா வியாபாரம்

ணக்கம் நண்பர்களே... இன்று மருத்துவமனை எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறதே... இதற்கான அடிப்படை காரணம் என்ன? இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் உச்சி முகர்ந்து வரவேற்று ஆராதிக்கின்றோம். காரணம் நமக்கு எல்லாமே விரைவாக கிடைக்க வேண்டும் என்ற பேராவல்.

ஞாயிறு, ஜூலை 30, 2023

அரசியல் உத்தமர்கள்

கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து உடைத்த தேங்காயை கொண்டு சட்னி வைக்கும் மக்கள், அதே தேங்காயை சிதறுகாய் உடைத்தால் எடுத்து வருவது தவறு என்ற கட்டமைப்பை அமைத்தது சுகாதார நலன் கருதியா ?
அப்படியானால், தரையில் போட்டு சாப்பிடும் மண்சோற்றில் சுகாதாரத்தை மறந்தது ஏன் ?
* * * * * * * 01 * * * *

வியாழன், ஜூலை 27, 2023

சிவன் ராத்திரி


சிவன் ராத்திரி என்றால் என்ன ? அன்று தமிழர்கள் அவரவர் குலதெய்வக் கோயில்களுக்கு சென்று இரவு முழுவதும் விழித்திருந்து பூஜை செய்து வழிபடுதல் என்பதுதான் தொன்று தொட்டு வழக்கம். உறங்காமல் உட்கார்ந்து இருப்பார்கள். காரணம் அன்றுதான் சந்திர, சூரிய கிரகணங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதாகவும், அதன் மூலம் நமது முதுகுத்தண்டில் அதன் சக்தி பாய்ந்து நமக்கு சக்தி பெருகுவதாகவும் சொல்லப்பட்டது.

திங்கள், ஜூலை 24, 2023

ஐயன்பட்டி, ஐடியா ஐயாச்சாமி

ணக்கம் ஐயாச்சாமி அண்ணே நல்லா இருக்கீங்களா ? பார்த்து ரொம்ப நாளாச்சு....
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனம் நல்லா இருக்கேன்டா... என்ன இந்தப்பக்கம் ?

வெள்ளி, ஜூலை 21, 2023

வீரத்தின் அடையாளம்


யானை வளர்த்தால் பல்லக்கு தூக்கிட வாடகைக்கு விடலாம்.
குதிரை வளர்த்தால் விஷேசங்களுக்கு வாடகைக்கு விடலாம்.

திங்கள், ஜூலை 17, 2023

ஆறுகுட்டியும், ஆறுமுகமும்

கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அபுதாபியில் என்னோடு அறையில் தங்கி இருந்த நண்பன் ஆறுகுட்டி விடுமுறையில் ஏற்கனவே வந்து இருந்தான் அலைபேசியில் அழைத்தேன்.

வியாழன், ஜூலை 13, 2023

கொடுத்து கெடுத்தேன்


ணக்கம் நண்பர்களே... உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

ஞாயிறு, ஜூலை 09, 2023

குரலில் குறள் கொடு

 

01. குறள் படி குரல் கொடு
02. பிணி தீரும் மணி அடி
03. மாடு வாங்க மடு பார்
04. ஆசை ஒழிய பூசை செய்

புதன், ஜூலை 05, 2023

எனது விழியில் பூத்தது (9)

ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஒன்பதாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி

சனி, ஜூலை 01, 2023

ஆவுடையார்கோயில், ஆட்டுக்காரன் ஆவுடையப்பன்


...... .... ....
ட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததுன்னு...
 
டேய் ட்டுக்காரா... டோய்...
வாங்க ளவந்தான் ஐயா.

வியாழன், ஜூன் 29, 2023

திங்கள், ஜூன் 26, 2023

கொல்லைக்கு போகும் முல்லையே...

யலுக்கு போகும் வனவள்ளியே
என்னை தள்ளி போவதில்லையே
நானும் வாறேன்டி முல்லையே
 
வேண்டாம் நீயும் தொல்லையே
நானும் போறேன் கொல்லையே
உனக்கு வேலையே இல்லையே

வெள்ளி, ஜூன் 23, 2023

தீய அஞ்சலி

ணக்கம் நட்பூக்களே... மேலே கண்ட புகைப்படத்தில் பார்த்தீர்களா ? கோவை குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி இந்து மக்களுக்கு தீப அஞ்சலி நல்ல செயல்தான் ஆனால் இந்த குண்டு வெடிப்பில் இந்துக்கள் மட்டும்தான் பலியானார்களா ? இஸ்லாமிய, கிருஸ்துவ சகோதரர்கள் பலியாகவில்லையா ? இது தீப அஞ்சலி அல்ல! தீய அஞ்சலி.

திங்கள், ஜூன் 19, 2023

வாழவந்தானும், வாத்து மடையனும்


ணக்கம் வாழவந்தான் அண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா வாத்து மடையா நல்லா இருக்கேன்டா.. என்ன இந்தப்பக்கம் ?
சில சந்தேகங்கள் வந்துச்சு உங்கள்ட்ட கேட்டுப் போகலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன் ?

வியாழன், ஜூன் 15, 2023

நஞ்சில்லா லஞ்சம்

ணக்கம் நட்பூக்களே... நமது நாட்டில் ஆர்.டி.ஓ. என்று சொல்லப்படும் வாகன பரிசோதனைத்துறை என்னதான் செய்கிறது ? இந்தியன் திரைப்படத்தில் ஷங்கர் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார். வேன் முழுவதிலும் உள்ள குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்து விடும். பணத்தை கொடுத்தால் பேருந்துகள் பரிசோதனைக்கு வராமலேயே தேர்வாகி விடும் அதன் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதால் வந்த இடர்பாடுகள்.

ஞாயிறு, ஜூன் 11, 2023

புஹாரி

ணக்கம் நண்பர்களே... காதலின் பொன் வீதியில்’’ என்ற பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

புதன், ஜூன் 07, 2023

தலைவர் தண்டல்பாடே

தையரதக்காபுரம் பண்ணை பங்களா கொ.இ.க தலைவர் தண்டல்பாடே தொண்டர்களை தேர்தல் தோல்விக்குப் பிறகு தன்னை சந்திக்க அனுமதி வழங்கி இருந்த காரணத்தால் அல்லக்கைகள் முதல், அடிவருடிகள் வரை அலைமோதிய கூட்டத்தை அடியாட்கள் கூட்டம் வசப்படுத்தி வடக்கு பக்கமாக போட்டிருந்த நிரந்தர கொட்டகை பந்தலில் ஒதுக்கியது.

சனி, ஜூன் 03, 2023

முதலூர், முதலாளி முத்தையா

    ந்த முதலூர் முத்து தியேட்டரின் வளாகத்தில் வேலையற்ற ரசிகர்களின் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்தது ‘’வெல்டிங் ஸ்டார்’’ வடுகநாத் நடித்த சிவப்பு ரத்தம் வெளியாகி இருந்தது. அருபது அடி உயர பதாகையில் திருப்பாச்சி அருவாளிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக வழிந்தது போல வைத்து இருந்தனர். அதன் உச்சியில் ஏறி நின்று மூன்று முடுதாருகள் பாலை ஊற்றிக் கொண்டு இருந்தனர். தமது வாழ்வு பாழாவது தெரியாமல்.

செவ்வாய், மே 30, 2023

வியாழன், மே 25, 2023

எங்கள் திருவிழா

 

இதம்பாடல்
 
ங்கள் அய்யா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதாராக வாழ்ந்த அழகிய கிராமம். இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை 8 கி.மீ ஏர்வாடி  5  கி.மீ, சிக்கல்  5  கி.மீ, மூன்று திசைகளில் இங்கிருந்து செல்கிறது.

ஞாயிறு, மே 21, 2023

Silver Jubilee Marriage


ந்த மேடைக் கச்சேரியில் என்ன தகராறு ?
மாதவியோடு பாடு’’னு சொல்றதுக்கு பதில், மாதவியோடு படு’’னு சொல்லிட்டானாம்.
* * * * * * * 01 * * * * * * *

புதன், மே 17, 2023

திருகப்பட்ட மனங்களுக்கு திருமணம்


இதற்கு சாட்சிகள் ?
 
ஒன்று - மண்ணாங்கட்டி என்று சொல்லப்படும் அவனது மனசாட்சி.
 
இரண்டு - நிலக்கோட்டையிலிருந்து நிலத்தின் கோட்டைக்குள் சென்று விட்ட அவள் சாட்சி.
 
மூன்று - பொழுது போகாமல் அவனையும் அவளையும் படைத்து விட்டானே அந்த திருவாளியத்தவன் அவனே சாட்சி.