சமீபத்தில்
சீர்காழி போய் மூன்று தினங்கள் தங்கினேன் அப்பொழுது நானும் தொ.கா.நாடகம் பார்க்கும்
துர்பாக்கிய நிலைப்பாடு வேறு வழியின்றி பார்த்தேன். அப்பொழுது அவளுக்கு, இவளும்
இவளுக்கு அவனும், அவனுக்கு இவளும் என்ன உறவு முறை ? என்பதை
வீட்டிலிருந்த எனது அப்பத்தாள் சீதாலட்சுமி எனக்கு மிகவும் பொருப்புணர்வோடு
புளியைப்போட்டு விளக்கினார்கள்.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வெள்ளி, செப்டம்பர் 27, 2019
ஞாயிறு, செப்டம்பர் 22, 2019
புதன், செப்டம்பர் 18, 2019
மேலூர், மேலாளர் மேகநாதன்
வணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில்
இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை
கதைக்கு பேசி தீர்மானித்த எழுபத்தி மூன்று லட்சத்து, பதினாறு ஆயிரத்து, நானூற்றி
எண்பத்து இரண்டு ரூபாய், ஐம்பது காசுகள் (73,16,482.50) இதுவரை தரப்படவில்லை என்பதை இதன் மூலம்
அறிவிக்கிறேன். இதைப்படிப்பவர்கள் நல்ல தீர்மானமாக எடுத்துச் ஜொள்ள’’வும்.
மேகலா ஓர் தீர்மானத்துடன்
நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும்
பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான் கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம்
வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன்
பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள்
ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது
பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி பயனில்லை,