தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 29, 2016

என்னதான் நினைக்கிறாங்கே.... ?


மக்களை இவங்கே என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்கே ? அரசியல்வாதி ஏமாத்துறான், சினிமாக்காரன் ஏமாத்துறான், கிரிக்கெட் வீரர் (?) ஏமாத்துறான் நீங்களுமாடா ? தரமாக தயாரிச்சு விளம்பரத்துக்கு கொடுக்கிற காசை விலையைக் குறைச்சு விற்றால் விற்காதா ? ஒருவேளை விற்காதோ ? காரணம் நம்ம ஆளுக்கு பகட்டு வாழ்க்கை மேலேதானே மோகமாக இருக்கு இது கடைசியில் மோசமாகும் என்பது விளங்காதுதான்.

நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கிருவோமே அப்படின்னு தொ(ல்)லைக் காட்சியை திறந்தால் ஒரு நடிகன் அந்த வேஷ்டியை வாங்குங்கிறான், இன்னொரு நடிகன் இந்த வேஷ்டியை வாங்குங்கிறான், அங்கிட்டு ஒரு நடிகன் இதை மட்டுமே வாங்குங்கங்றான் சரி ஸூட்டிங் போக மற்ற நேரத்தில் அவன் வேஷ்டி கட்டுறானான்னு பார்த்தால் கோட்டு ஸூட்டு போட்ட கோமானாகவே காட்சி தர்றான் ஏண்டா.... டோய் விவசாயிக்கு கோவணம் கட்டத் துணியில்லையே உங்களுக்கு தெரியுமாடா ? சரியின்னு இவங்கே யாருன்னு.... இணையத்துல தேடிப்பார்த்தால் ? எல்லா வேஷ்டிக்குமே ஒருத்தன்தான் முதலாளியாக இருக்கான் இந்த மக்களை கஞ்சி தண்ணி குடிக்க விடமாட்டீங்களாடா ? பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான் ஏழை ஏழையாகவே இருக்கான்.

நண்பர் மதுரைத்தமிழன் எழுதி இருந்தார் நடிகர் சங்க கட்டிடம் கட்ட 26 கோடி ரூபாய் தேவையாம் அதுக்கு கிரிக்கெட் நடத்தப் போறாங்களாம் ஏண்டா டோய் நேற்று வந்தவன்கூட கோடிகள் சம்பளம் வாங்குறீங்களேடா... உங்களுக்கு மனசாட்சி இல்லையா ? உங்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்பது எல்லா மடப்பய ரசிகனுக்கும் தெரியும் தெரிஞ்சும் உங்களைப் பார்க்கத் துடிக்கிறான் நீங்களும் சோத்தை தின்னுட்டு பீயைத்தானேடா பேளுறீங்க.. எதுக்குத்தான் இவங்கே உங்களிடம் மயங்குறானோ புரியலையே.... ஏண்டா நாசமாப் போறவங்களா ? கொஞ்சமாவது யோசிங்களேன்டா ? உங்களைத்தானடா ஐயா திரு. A.P.J. அப்துல் கலாம் கனவு காணுங்கள்’’னு சொன்னாரு... இன்னும் தூக்கத்துலயே... இருக்கீங்களடா.... உங்களை எல்லாம் கேப்டனை விட்டு தூக்கி அடிச்சாத்தான் சரியா வருமா ? இதோ போடுறேன்டா போனு.

சிவாதாமஸ்அலி-
போனை கீழே போட்டுறாம.....
Chivas Regal சிவசம்போ-
எந்தக் கேப்டனை சொல்றாரு.... டோணியவா ? அவருக்கு பின்னால காலை தூக்கத் தெரியாதே... ?
சாம்பசிவம்-
அம்மணத்தான் ஊருல கோவணம் கட்டுனவன் கிறுக்குப்பயலாம் சில பேருக்கு இது கடைசியிலதான் புரியும்.

திங்கள், டிசம்பர் 26, 2016

வாழ்க்கை ஒரு முறையே...

எல்லா மனிதர்களுக்குமே விரிவான சிந்தனை உணர்வுகள் இருப்பதில்லை இது அனைவரும் அறிந்த விடயமே.. சிலர் 1000 வருடங்கள் வாழப்போவது போல நினைத்துப் பேசுகின்றனர் குறிப்பாக அரசியல்வாதிகள்.

சிலர் மனைவியை அடிப்பதும், எட்டி உதைப்பதுமாக இருப்பதை பார்த்து இருப்பீர்கள் இவர்கள் தனது மனதில் நம்மை யாருமே ஒன்றும் செய்ய முடியாது என்ற மடத்தனமான கர்வம் உள்ளவர்கள் நாளையே ஏதோவொரு வகையில் விபத்து நடக்கலாம் நமது கை, கால், மற்ற இதர உறுப்புகளை இழக்கலாம் ஏன் ? ஏதோவொரு வியாதி வந்துகூட கோமா நிலைக்கு ஆளாகலாம் இதுதான் வாழ்க்கையின் சூட்சுமம் இதை உணர்ந்து பார்க்காதவர்கள் நிறையப்பேர் இந்த சமூகத்தில் உண்டு அவர்களைப் போன்றவர்கள்தான் நான் மேலே சொன்ன மனைவியை அடிப்பவர்கள் நாளை நாம் திடீரென விழுந்து விட்டால் நாம் நினைவிழந்து பிறந்த மேனியாய் கிடந்தாலும் நம்மை பார்க்க வேண்டியவர்கள், பார்க்க கூடியவர்கள் மனைவியைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லை இது கணவன் மனைவியைப் பார்ப்பதற்கும் பொருந்தும் நான் எனது மனைவிக்கு 90 வது வயதில் செய்ய வேண்டியதை அவளது 30 வது வயதில் கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அனைத்தும் செய்து முடித்து விட்டேன் இதற்கு சாட்சி மூன்று நபர்கள் உண்டு அதில் தற்போது இருவரே உண்டு மேலும், என் மனசாட்சி, இறைவன் இருப்பின் அவனும் சாட்சியே... இருப்பினும் இதை பின்னாளில் மறந்து பேசி என் மனதை காயப்படுத்திய மனிதர்களை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது பொதுவாக நான் எதையும் மறப்பவன் அல்ல !

சிலருக்கு சிலரை பிடித்து விடும் அதற்கு காரணம் சொல்லத் தெரியாது சிலரை பிடிக்காமல் போய் விடும் இதற்கு காரணம் சொல்ல முடியாது தன்னை படாதபாடு படுத்திய கணவன் வயதான காலத்தில் விழுந்தவுடன் பழி வாங்கும் நோக்கில்லாமல் முழுமனதுடன் பணிவிடை செய்த மனைவியர்களை நான் பார்த்து இருக்கின்றேன் அப்பொழுது அந்த கணவர்களின் மனம் எவ்வளவு வெட்கப்பட்டு இருக்கும் இதுதான் அந்த கணவர்களுக்கு மனைவியர் கொடுக்கும் தண்டனை அன்றைய காலங்களில் குடிகாரர்கள் குறைவு, நல்ல எண்ணங்களுடன் வளர்க்கப்பட்ட பெண்டிரும் அதிகம் இன்று குடிகாரர்கள் அதிகம் நீ அடிப்பதற்கு கையை ஓங்கினாலே கராத்தே அடி கொடுத்து உனது கையை ஒடிக்கும் பெண்டிர் இன்று அதிகமாகி விட்டனர் வாழும் காலம் கொஞ்சமே அதிலும் வாழவேண்டிய அந்த கட்டம் மிகவும் கொஞ்சமே அதை கவனமாக கையாளுங்கள் போகும் தூரமோ திரும்பாதது முடிவு அறியாதது இறப்புக்கு பின் நம்நிலை யாரறிவார் ? 

கணவனோ, மனைவியோ எதைக் கொடுக்கின்றீர்களோ அதுவே தங்களுக்கு திரும்ப கிடைக்கும் அன்பைக் கொடுங்கள் அன்பைப் பெறுங்கள் நண்பா இதை உமக்கு சொல்ல எமக்கு தகுதி உண்டு காரணம் நான் இழந்து இழந்தவன் மட்டும் அல்ல ! இருந்தும் இழந்தவனும்கூட... எமது அனுபவம் எம்மை எதிரியாக நினைப்பவருக்கும்கூட வரவேண்டாம்.

வாழ்க்கை ஒருமுறையே அதை வாழ்ந்து பெறுவீர் முறையே...
- தேவகோட்டை கில்லர்ஜி -

வியாழன், டிசம்பர் 22, 2016

மனிதம் காப்போம்



 நண்பர்களே... மேற்கண்ட செய்தியை படித்தீர்களா ? நெஞ்சு வெடிப்பது போல் இருக்குமே... இந்த பாவத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று சொல்லி விடமுடியாது அவர்களை தேர்ந்தெடுத்த நாமே குற்றவாளி.

  என்றுமே குற்றம் செய்தவனைவிட அதை செய்யத் தூண்டியவனே முதல் குற்றவாளி இல்லையா ? ஆகவே இந்தப் பாவத்துக்கு நாமும் காரணவாதிகள் என்னைப் பொருத்தவரை இவர்களை கருணைக் கொலை செய்வதே நல்லது என்பேன் காரணம் மறுபிறவி உண்டு என்ற நம்பிக்கை பரவலாக இருக்கின்றது ஆகவே மறுபிறவி எடுத்தாவது இவர்கள் நல்ல வாழ்க்கை வாழட்டுமே.... இந்த இழிவாழ்க்கை எதற்கு ? அதாவது நான் சொல்வது இந்தியாவுக்கு மட்டுமே... ஏர்வாடியில் மனநல காப்பகத்தில் தீப்பிடித்து எத்தனை நோயாளிகள் கட்டிப்போட்ட காரணத்தால் உயிர் இழந்தார்கள் U.A.E நாட்டில் எவ்வளவு முரடான மனநல நோயாளியாக இருந்தாலும் கட்டிப்போடுவதில்லை அங்குள்ளவர்களுக்கு நோயாளி எந்த நாட்டுக்காரராயினும்.... நல்ல உணவு, மாத்திரை, குளித்து உடைமாற்ற செவிலியர்கள், படுத்து உறங்க கட்டில் மெத்தை வாரம் ஒருமுறை மருத்துவர் பரிசோதனை மாதம் ஒருமுறை முடி வெட்டுதல், உழைப்பவனுக்கு கிடைக்காத வசதிகள்கூட இவர்களுக்கு கிடைக்கின்றது அதிலும் இவர்களில் விஐபி மட்டுமல்ல விவிஐபி நோயாளிகளும் உண்டு அவர்களது கவனிப்புகள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை இவர்களைக்குறித்து விரிவாக பல சுவையான நிகழ்வுகள் மட்டுமல்ல அதிசயமான நிகழ்வுகளும் உண்டு விரைவில் எழுதுகிறேன் காரணம் நானும் அங்கு இருந்தவனே நட்பூக்களே அவசரப்பட்டு தவறாக நினைத்து விடாதீர்கள் U.A.E-யில் ஆரம்ப காலத்தில் சுமார் மூன்று வருடங்கள் நான் அங்கு வேலை செய்தேன் என்பதே... நான் அரபு மொழி பேச பயின்றதும் இங்குதான் இவர்களிடம்தான் சுலபமாக மொழி கற்க, ஐயங்கள் தீர்த்துக் கொள்ளமுடியும் காரணம் பேச்சுக்கு இவர்களிடம் எல்கை இல்லை என்பதும் எமது கருத்து.

  உலகிலேயே சந்தோஷமானவர்கள் குழந்தையும், மனநலம் குன்றியவர்கள் மட்டுமே என்ற சொல்வழக்கு நம்மில் உண்டு ஆனால் இதில் இந்திய மனநல நோயாளிகளை சேர்க்க முடியாது என்பது எமது ஆணித்தரமான கருத்து அவர்கள் படும்பாட்டை வீதிகளில் நாம் பார்த்துக்கொண்டுதான் வாழ்கிறோம் இதில் பலரும் அரை நிர்வாணமாக நடந்து கொண்டுதான் திரிகின்றார்கள் இது நம்மில் பலருக்கும் சங்கடத்தை உண்டு செய்யத்தான் செய்கின்றது இதை மட்டுமா ? நாம் கடந்து செல்கின்றோம் ஆறறிவு (?) உள்ள மனிதனே பொது இடத்தில் அருவெறுப்பான ஆபாச வார்த்தைகளை பேசுகின்றான், பலரும் காணும் பொழுது பொது இடத்தில், பேருந்து நிலையங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கின்றனர் அதைக்கூட நம்மால் மனித நாகரீகப்படியோ.. இல்லை சட்டப்படியோ தட்டிக்கேட்க முடியாத சூழலில்தான் வாழ்கின்றோம், காரணம் நாம் நடுத்தர வர்க்கம். கீழ்மட்டத்தினருக்கு இது பெரிய விடயமே இல்லை, அரசியல்வாதியோ, திரைப்பட நடிகரோ கருப்புக் கண்ணாடியை ஏற்றிவிட்டு ஏசி காருக்குள் கடந்து செல்கின்றார்கள் அவர்களுக்கு தெரியவும், கேட்கவும் வாய்ப்பில்லை.  பசிக்காக கடைகளோரம் வந்து நிற்ககும் இவர்கள்மீது சுடுநீரை வீசி, விரட்டுபவர்களும் உண்டு அந்த நேரங்களில் நான் கடையில் எட்டிப்பார்ப்பேன் வரிசையாக தெய்வங்களை புகைப்படங்களாக நிறுத்தி வைத்து பூமாலை சூட்டி இருப்பார்கள் இறைவனை வணங்கும் இறை நம்பிக்கையற்ற, அரை நம்பிக்கை மனிதர்கள். நான் உண்மையிலேயே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தி இருக்கின்றேன். இவர்களை அரசும் நினைத்துப் பார்ப்பதில்லை மேலும் மனநலம் குன்றியவர்களை சிறுவர்கள் கல்லை எடுத்து எறிகின்றார்கள் இதை நமக்கு சொல்லிக் கொடுத்தது நமது முன்னோர்கள்தானே... என்னைப் பொருத்தவரை உலகிலேயே மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா ? மனநலம் குன்றியவர்களை துன்புறுத்துவதுதான். கற்பழிப்பு குற்றத்தைக்கூட அடுத்த நிலைக்கு கொண்டு செல்லலாம் காரணம் அவளால் காமுகனை எதிர்க்கும், தடுக்கும் சிந்தனையும், பலமும் உண்டு இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதையே நான் ஏற்கனவே எனது நூலிலும் வலியுருத்தி எழுதியிருக்கின்றேன்.

  நான் பல நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு நமக்கு மட்டும் அதிகார பலம் இருந்தால் முதல் வேலையாக இவர்களை பராமரிப்பதுதான் காரணம் நல்ல மனிதன் தனக்கு வேண்டியவைகளை தானே தேடிக்கொள்வான், அல்லது பிறரிடம் கேட்டு வாங்கிக்கொள்வான். போதாக்குறைக்கு அரசியல்வாதிகள், மக்களிடம் சிறிய பணத்தை லஞ்சமாக கொடுத்து ஓட்டு வாங்கி பெரிய அளவில் கோடீஸ்வரர் ஆவது போலவே அதே பாணியில் இவனும் கோயில் உண்டியலில் 10 ரூபாய் லஞ்சம் போட்டு விட்டு இறைவனிடம் என்னை கோடீஸ்வரன் ஆக்கு என்ற கோரிக்கையை வைக்கிறான் ஆனால் இவர்கள் யாரிடம் என்ன கேட்க முடியும் ? ஆகவே மனநலம் பாதித்தவர்களை கண்டால் அவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை அவர்களை இழிவாக பார்க்காதீர்கள், இழிவாக நினைக்காதீர்கள் கண்டிப்பாக துன்புறுத்தாதீர்கள் இதைப்படிக்கும் யாராவது இதன் பிறகு யாரையாவது காண நேரிட்டால் எனது நினைவு தங்களுக்கு வரவேண்டும் அந்த நினைவுகள் அவர்களுக்கு உதவி செய்ய உதவும் என்று ஆத்மார்த்தமாக நம்புகின்றேன்.


மனிதனாக பிறந்தோம்...
புனிதனாக வேண்டாம்...
மனிதனாகவே வாழ்வோமே...
தேவகோட்டை கில்லர்ஜி

திங்கள், டிசம்பர் 19, 2016

அவசரம்


நான்,
இரையை தேடும் அவசரத்தில்,
இறைவனை தேட மறந்து விட்டேன்,
பணத்தை தேடும் அவசரத்தில்,
பக்தியை நாட மறந்து விட்டேன்,
மதுவை தேடும் அவசரத்தில்,
மனசாட்சியை மறந்து விட்டேன்,
மாதுவை தேடும் அவசரத்தில்,
மானமுள்ளதை மறந்து விட்டேன்,
கடைசியில் இடத்தை வாங்கிய போதுதான்,
தெரிந்தது இது சுடு(ம்)காடு என்பது...

* * * Today my Birthday Post * * *