தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 26, 2014

என் நூல் அகம் 2

 
மதுரை பதிவர் விழாவில் இனிய தோழி கவிஞர். திருமதி. மு.கீதா அவர்கள் எழுதிய நூலை கையொப்பமிட்டு கொடுத்தார் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ பருகினேன் பருகப் பருக...

செவ்வாய், டிசம்பர் 23, 2014

இன்றைய MONEYதர்கள்


விஞ்ஞானம் மனித வாழ்வுக்கு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

இன்றைய கால மனிதர்கள் 90 % பேர் சர்வ சாதாரணமாக 50 வயதுக்கு உள்ளேயே இயற்கையான மரணம் வந்து இறந்து விடுகிறார்கள், இது போக, செயற்கை மரணங்கள் பல வகைகளில் வருகிறது

பூகம்பம், TSUNAMI, BOMB BLAST, FLIGHTS ACCIDENT, TRAIN ACCIDENT, BUS ACCIDENT, POLITICS MURDERS, WARகளால் MURDERS, ரசிகர் மன்ற வேலைகளால் ACCIDENT, சொத்து காரணமாய் MURDERS, LOVE விவகாரங்களால் MURDERS, கள்ளக்காதலால் MURDERS, தியாகம் என்ற பெயரில் CYANIDE குப்பி உண்ணுதல், தலைவனுக்காக தீக்குளித்து SUICIDE, POLITICS SUICIDE என்ற பெயரில் MURDERS, LOVE FAILUREரால் மரணம், வழிப்பறிகளால் MURDERS, COLLEGEகளில் EV TEASING என்ற பெயரில் குரூரங்கள், CINEMA ACTORரை காணப்போய் கூட்ட நெரிசலில் மரணம், CINEMA ACTORருக்காக SUICIDE, ஜாதிமத சண்டையால் மரணங்கள், மின்சாரத்தால் மரணங்கள், விசவாயு தாக்கி மரணம். 

இன்னும் விதவிதமாய், வினோதமாய், வித்யாசமாய், மரணங்கள். ஒரு ''தேள்'' கடித்தால்கூட தாங்க கூடிய உடல் பலமோ, மனபலமோ தற்கால மனிதர்களிடம் இல்லை, காரணமென்ன ? 

உடல் உழைப்பு இல்லை, கடைசி காலம் வரை காலையில் CHEMICAL கலந்து உப்பு, புளி, மிளகாய் சேர்க்கப்பட்ட TOOTHPASTEடில் பல் துலக்குவது, இதனால் 40 வயதுக்குள் பல் விழுந்து விடுகிறது, HEATERரில் சூடாக்கப்பட்ட SHOWERரில் வரும் CHEMICAL கலந்த நீரில் CHEMICALலிலான SOAP, SHAMPOO போட்டு குளியல், ஆதலால் கூடிய விரைவில் முடி கொட்டுதல், அல்லது முடி வெளுத்துப் போகிறது, MAKE-UP என்ற பெயரில் முகத்திற்கு, POWDER, CREAM இதனால் தோல் வியாதி, MINERAL WATER என்ற பெயரில் கலப்படம் செய்யபட்ட BOTTLE நீரையே குடிக்கிறார்கள், திடமான உணவுகள் இல்லை, ஆறு மாதங்களுக்கு முன்பே கொல்லப்பட்ட மாமிச இறைச்சிகள், FRIDGE ஜில் வைத்து பாதுகாக்கப்பட்டு ELECTRIC அல்லது GAS அடுப்பில் உடனுக்குடன் சுடவைத்த உணவுகள், செயற்கை உரங்கள் போடப்பட்டு துரிதமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள், PIZZA, SANDWICH என்ற பெயரிலான கௌரவத்திற்காக உண்ணப்படும் ரப்பர் துண்டுகள், AIR COOLER மூலம் செயற்கை குளிரில் உறங்குவது, இதனால் BLOOD உறைந்து போய் OMENYSHTION என்ற நோய் வருகிறது, சிறிய நேரம் கிடைத்தாலும் COMPUTERரையோ, MOBILEலையோ நோண்டிக் கொண்டிருப்பது, அல்லது T.V பார்ப்பது, (இதில் 3D வேறு) இதனால் 25 வயதிலேயே கண் பார்வை இழந்து விடுகிறது, 

சரி வாழ்க்கை எப்படி போகிறது ? OFFICEஸில் வேலை முடிந்து களைத்து வீடு வந்தால், மனைவிக்கு NEW MODEL MIXER வாங்கவில்லை என்பதால் சண்டை, சரி இரவில் சமாதானப்படுத்துவோம் என்றால் L.K.G படிக்கும் மகள் இரவு 09.00 மணிவரை COMPUTERரில் CAMS விளையாடிக் கொண்டு இருக்க, மகனும் இரவு 10.30 மணிவரை LAPTOP YOUTUBEபில் மன்மதராசா... மன்மதராசா... பாட்டு போட்டு கேட்டுக் கொண்டிருக்க, OFF செய்யச் சொன்னால் தங்கச்சியை காரணம் சொல்வான் அவளுக்கும் அண்ணனை கண்டாலே ஆகாது இருவரும் கீறியும்-பாம்பும் போல், பிறகு எப்படி ? மனைவியும் தன் பங்குக்கு இரவு 11.15 மணிக்கு VIZAN T.V யில், வரும்...

''தோ(ல்)ள் கொடுத்த தோழி'' 

SERIALலுகாக, காத்துக் கொண்டிருக்க... மன உலைச்சலில் அப்படியே உறங்கிப்போக.... இப்படியே பல வருடங்களும் உருண்டோட.... 

மகனுக்கு தெரிந்த, M.L.A மூலம் M.B.B.S. APPLICATION னும் கிடைத்து விட்டது DONATION கொடுக்க, BANKகில் FIVE LAKH, LONEனுகாக லோலோன் அலைய வேண்டியதாகிப் போச்சு, உறவுக்கார திருமணத்திற்கு போககூட நேரமில்லாமல் e MAILலில், வாழ்த்து அனுப்ப வேண்டிய நிலை, ஒருவழியாக COLLEGE போக, மகன் PULSAR BIKE இல்லாமல், உள்ளே நுழையவே முடியாதாம் ? ? ?

அதற்காக கீழ்வீட்டை ஒத்திக்கு விட்டு அதற்கு ஒரு லட்சம் அழுது, சரி மகன் படித்து DOCTOR ஆகி, கை நிறைய சம்பாரித்து நம்மகிட்டதானே கொடுக்கப் போறான், என சமாதானமடைய... அடுத்த வீட்டு அருணாசலம் ஒருநாள் சொன்னசேதி கேட்டு முதல் முறையாக HEART ATTACK 06.2 வந்து HOSPITAL லில் சேர்த்து CT SCAN, MEDICINE, ROOM RENT, 43,000 Rs, CREDIT CARD டில் இழுக்க விட்டு, மூன்றுநாள் கழித்து வீடு வந்து மனைவியிடம் தான் கேட்ட சேதியை சொன்னால் ?

உங்களுக்கு வேற, வேலையே இல்லை எப்பப்பாரு எம்புள்ளைய கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருங்க... மனைவி போயே விட்டாள், அவர் கேட்டசேதி 

உன் மகனும், கீழ்வீட்ல ஒத்திக்கு வந்து இருக்கிறவருடைய மகளும் BIKEல, லட்சுமி THEATERக்கு CINEMA பார்க்க வந்தாங்க, நான் பார்த்துட்டு தெரியாதது மாதிரி வந்துட்டேன், பார்த்துக்க அப்புறம் கீழ்வீட்டுக்கு ஒத்திக்கு வந்தவ, மேல்வீட்ல விளக்கு ஏத்திடப்போறா... 

இதன் விளைவுதான், HEART ATTACK 06.2  அடப்பாவி உனக்கு COLLEGE போக BIKE வாங்கி கொடுத்தா நீ அவளோட BIKEல, ஊரைச்சுத்தறியா ? நம்ம, ஜாதியென்ன ? அவ ஜாதியென்ன ? ச்சே... இதைப்பக்குவமா கையாளனும் மகனிடம் இதைப்பற்றி கேட்கவேண்டாம், நாளைக்கே பணத்தைக் கொடுத்து வீட்டைக்காலி செய்யணும் மனைவியிடம் பணத்திற்கு NECKLACEசை கேட்டால் நானே ஒண்ணுதான் வச்சுயிருக்கேன், சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு எதை போட்டுப் போறது ? அவள் தரவில்லை சரி ஏற்கனவே இருந்த யோசனைப்படி OUTDOORரில் தன்பெயரில், வாங்கிப் போட்ட 12 சென்ட் இடத்தை உடனே விற்று ஒரு லட்சம் கொடுத்து வீட்டை காலி செய்துட்டு, நல்ல இடமாப்பார்த்து மகளுக்கு கல்யாணம் செய்திடலாம், கல்யாணமாலை மூலம் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் மாப்பிள்ளை DUBAIயில், OIL COMPANYயில் SUPERVISOR ராக, வேலை பார்ப்பதாகவும் அதனால் 65 பவுன் நகையும், BIKEகும், கொடுத்தால் போதுமென பெருந்தன்மையாக சொல்லி விட்டார்கள், நல்ல இடமென்பதால் எல்லாவற்றுக்கும் சம்மதித்து கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தது, இன்னும் ஒருவாரமே இருக்கிறது, நகைகளெல்லாம் செய்து வந்து பீரோவில் பூட்டி வைத்து விட்டு நிம்மதியாக தூங்கினார், காலையில் மனைவி அலறியடித்துக் கொண்டு வந்து உசுப்பிளாள்...

என்னங்க... பீரோவுல இருந்த நகையப்பூராம் காணோமுங்க... கீழ்வீட்டுக்கு குடிவந்த அந்த ஓடுகாலிச் சிறுக்கி நம்ம பயலை கூட்டிக்கிட்டு ஓடிட்டாங்க.... அய்யோ... நான் என்ன செய்வேன் ?

ஒப்பாரி வைத்தவள், எழுந்து உட்கார்ந்த கணவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதால்...
''என்னங்க'' 
என தோளில் கை வைத்தாள், அவர் ஏற்கனவே SECOND HEART ATTACK 09.4 வந்து 49 வது, வயதிலேயே முடிந்துபோய் 0.54 SEC ஆகி விட்டது.

கணவன் கேட்டு NECKLACE தரமறுத்தவள், கணவன் கேட்காமலேயே தாலியை கொடுக்கத் தயாரானாள்.

விஞ்ஞானம் அபார வளர்ச்சிதான், மனிதனுக்குமா ?

இது,அன்றைய மனிதர்கள்.in தொடர்ச்சி

இனிய நெஞ்சங்களே.... வலைச்சரத்தில் எனது கடைசி பதிவில் இப்படி எழுதியிருந்தேன்...

நண்பர்களே கில்லர்ஜி க்கு இன்னொரு பெயர் உண்டு அதுதான் கீழே சொடுக்குக....


என்று கூறியிருந்தேன் இதை ‘’கிளிக்’’கி சென்று கருத்துரை அளித்த ....

திரு. துளசிதரன் தில்லை அகத்து
திரு. மெக்னஷ் திருமுருகள்.
திருமதி. இளமதி

அவர்களுக்கு நன்றி.

அறிவிப்பு – நண்பர்களே, டேஷ்போர்டில்.

புதன், புனிதாவுக்கு விரதம் – நாலு பேருக்கு நன்றி (M.R. ராஜாமணி 1983) 

நேற்று முதல் வந்து இருக்கிறது ‘’கிளிக்’’கினால் Blank Page என்று வருகிறது இதற்க்கு நான் பொருப்பு அல்ல என்பதை அறிவிக்கிறேன் நன்றி.


புதன், டிசம்பர் 17, 2014

அன்றைய மனிதர்கள்


விஞ்ஞானம் மனித வாழ்வுக்கு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

பண்டையகால மனிதர்கள் 90 % பேர் சர்வ சாதாரணமாக 100 வயதுமுதல், 120 வயதுவரை வாழ்ந்து இயற்கையான மரணமடைந்தார்கள், வயல்வெளிகளில் ஸர்ப்பம் தீண்டினால்கூட அந்த''வலி''யை தாங்ககூடிய வலிமை பெற்றிருந்தார்கள், காரணம் கடைசிகாலம் வரையிலும் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தார்கள், நிலத்தடி நீரையே குடித்தார்கள், நிறைய உணவும் உண்டார்கள், என்ன உணவு ? 

மண் பானையில் விறகு வைத்து சமைத்த, கேழ்வரகு, கம்மங்கூழு, நல்லவகை நெல்சோறு, பச்சைக் காய்கறிகள், பழவகைகள், அந்தந்த காலகட்டங்களில், பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, இந்த மாதிரியான எந்த வகையான உரங்களாலும் வளர்க்கப்படாத இயற்கை உரங்கள் மட்டுமே "போடப்பட்ட'' தாவரவகை உணவுகள். 

இரவு ஏழு மணிக்கே கெட்ட சிந்தனைகள் இல்லாமல் உறங்கி விடும் குழந்தைகள், அதனால் பெற்றோர்கள் பெற்றார்கள் பேரின்பம், வாழ்ந்தார்கள், வாழ்ந்தார்கள், வாழ்ந்தார்கள், வீடுநிறைய சகோதரத்துடன் அக்கா, அண்ணன், தம்பி, தங்கையென வளர்க்கப்பட்ட குழந்தைகள்...

காலையில் ஆறுகளில், ஊரணிகளில், கண்மாய்களில், அருவிகளில், ஓடைகளில், கிணறுகளில், முங்கி மூழ்கி குளிர்ந்த நீரில் குளித்தல், காலை உணவு திடமான கேப்பை ரொட்டி, வயற்காட்டில் உணவுக்காக மட்டுமே உழைப்பு, கல்யாண வீடுகளில், சொந்த பந்தங்களுடன் கூடிக்குழாவி உண்டு களித்தார்கள், கோவில்களில் திருவிழாக்கள் நடத்தி சந்தோஷப்பட்டார்கள், அகத்தில் சந்தோஷம் நிறைந்ததால் புறத்திலும் நோயின்றி வாழ்ந்தார்கள், காரணங்கள் பல...

மனைவி CESAREAN முறையில் குழந்தை பெற்றதில்லை, 
பிறந்த குழந்தைக்கு WOODWARD'S வாங்கி கொடுத்ததில்லை, 
சளி பிடித்த குழந்தையை C.T SCANE எடுக்க வைத்தியர் சொன்னதில்லை,
குழந்தைக்கு L.K.G.  APPLICATIONக்கு DONATION கேட்க யாருமில்லை,
படிக்கப்போன மகளை RAGING எவனும் செய்ததில்லை, 
மகளை எவனும் PHOTO எடுத்து, INTERNET டில் இணைத்ததில்லை,
மகளின் CHELL PHONE னில் MESSAGE சப்தம் கேட்டதில்லை, 
மகள் SERIAL லில் நடிக்கப் போய் சீரலிந்து போனதில்லை, 
மகளுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் செய்யவேண்டும் என்ற கவலையில்லை, 
வரதட்சினையாக CARரோ, MOTOR BIKEகோ, கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை, 
கட்டிக் கொடுத்த மகள் CYLINDER வெடித்து சிதறி விடுவாள் என்ற சிந்தையில்லை, 
மகளின் கணவன் குடித்து விட்டு மகளை கொடுமைப்படுத்துகிறான், என்ற குரல்கள் ஒலித்ததில்லை,
மகனுக்கு M.B.B.S. APPLICATIONக்கு FIVE LAKH கொடுத்ததில்லை,
படிக்கப்போன மகனை மதிய வேளையில் ''பலான'' THEATER ரில் பார்த்ததாக பழகியவர்கள் சொன்னதில்லை, 
மகன் அடுத்த வீட்டு பெண்ணுடன் ஓடிப்போய் விட்டதாக ஒருவரும் சொன்னதில்லை,  
LOVE FAILUREரால், மகன் தண்டவாளத்தில் தலையை வைத்து தகர்த்ததாக தகவலில்லை, 
மகனை CRICKET கிறுக்கன் எனஎவனும் அழைத்ததில்லை,
மகனுக்கு DUBAI VISA வந்து விட்டது என யாரும் வந்து சொன்னதில்லை, 
மகன் ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்து போனதில்லை, 
அதனால் என் சொத்தை பிரிடா என, மகன் சொல்லிக் கேட்டதில்லை, 
BUSசில் வரும்போது வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து ATM, CARDடை பிடுங்கிப் போனதில்லை, 
SCHOOLலில் தீபிடித்து கும்பகோணத்தில் குழந்தைகள் பலி போன்ற குரூரங்கள் நடந்ததில்லை,
TSUNAMI வந்து 10,000 பேர்பலி என PAPER ரில் படித்ததில்லை, 
BOMB வெடித்து பல மாடிக்கட்டிடம் சரிந்ததாக RADIO வில், சரோஜ் நாராயண்சாமி சொல்லவில்லை,
சாமியாரின் சரசங்களை SUN TV யில் கண்டதில்லை, 
காரணம் இந்த, ENGLISH எலவுகள் எல்லாம் அன்று இல்லை. 

உணவு, உழைப்பு, உறக்கம், ஆகவே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் கவலை என்ற சொல் முளையிலேயே களை எடுக்கப்பட்டது, ஆகவே நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள், நோய் என்பது சூட்டின் காரணமாய் அம்மைநோய், அல்லது காய்ச்சல்.

இந்த வார்தையை தவிர வேறேதும் கேள்விப்படதில்லை பண்டைகால மனிதர்கள்.

சரி, இன்றைய மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் ?
Sorry, Just Wait One Week

ஞாயிறு, டிசம்பர் 14, 2014

முதல் மரியாதை


சமூகத்தில் உயர்ந்த மரியாதை கிடைப்பது பணம் படைத்தவனுக்கா ? படித்து பட்டம் பெற்றவனுக்கா ? வீரம் உள்ள பலசாலிக்கா ? பண்டைய காலத்தில் புலவர்கள், வழக்காடுகள் நடத்தினார்கள், முடிவில் படித்தவனே உயர்ந்தவன் எனமுடிவும் செய்தார்கள், இதனை வலியுறுத்தி சரஸ்வதி சபதம் (1966) என்ற பெயரில் ஐயா A. P. நாகராஜன் அவர்கள் ஒருதிரைப்படம் இயக்கி மிகப்பெரிய வெற்றியும் கண்டார்.

 காலப்போக்கில் இதில் உயர்ந்தவன் பணம் படைத்தவனே என்ற முடிவுக்கும் வந்தார்கள், மக்களும் இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தது, இன்று இந்த மூவரையுமே பின்னுக்கு தள்ளக்கூடிய நிலைக்கு நாம், நம்மையறியாமல்... மாற்றிக் கொண்டிருக்கிறோம், என்பது மறைந்து கொண்டுள்ள உண்மை. 

ஒரு கோவிலில் விஷேச உற்சவம் சிறப்பு விருந்தினராக.. ஒரு படித்தவரும், ஒரு பணக்காரரும், ஒரு பலசாலியும் வருகிறார்கள் என்றால் யாருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது ?

பணக்காரருக்கு காரணம் அவர் தனது பணத்தால் அனைவரையுமே விலை பேசிவிடுவார் இது என்னைப் போன்ற பாமரனுக்குகூட தெரிந்த உண்மை, 

இதே சூழ்நிலையில் இந்த மூன்று மனிதர்களும் வருகிறார்கள் அந்த மூன்று நபர்களும், சரிசமமான பணக்காரர்கள் என்றுகூட வைத்துக் கொள்வோம், படித்தவன் அந்த இடத்தில் உயர்ந்து நிற்கின்றான்.

இதே சூழ்நிலையில் இந்த மூன்று மனிதர்களையும், ஓரத்தில் தள்ளி விடக்கூடிய ஒரு மனிதர் இருக்கிரார், அவர் ? ? ? இந்த மூன்று மனிதரிடம் இருக்கும் பணத்தில் துளியளவுகூட இவரிடம் இல்லையென்று வைத்துக் கொள்வோம், இவர் மழைக்குகூட பள்ளியருகில் ஒதுங்கியவரும் இல்லை, மிகப்பெரிய வீரனும் இல்லை, இருப்பினும் இவருக்கே முதல் மரியாதை காரணம் என்ன ? அவர்தான் பதவி வகித்துள்ள வார்டு ஆம். இன்று பதவியாளனுக்குத்தான் மரியாதை.

நமது வீட்டுக்கு ஒரு பணக்காரர் வருகிறார், என வைத்துக் கொள்வோம் எங்க வீட்டுக்கு பணக்காரர் வருகிறார் என வெளியில் பீற்றிக் கொள்ள முடியுமா ? இல்லை ஒரு படித்தவர் வருகிறார் என்பதால் எங்க வீட்டுக்கு படித்தவர் வருகிறார், என வெளியில் பீற்றிக் கொள்ள முடியுமா ? இல்லை முஹம்மது அலி ஜின்னாவைப் போலொரு குத்துச்சண்டை வீரர் வருகிறார் என்பதால், எங்க வீட்டுக்கு வீரன் வருகிறார், என வெளியில் பீற்றிக் கொள்ள முடியுமா ? அதே நேரம் ஒரு M.L.A வருகிறார் என்றால் ? எங்க வீட்டுக்கு M.L.A வருகிறார் என மொழி தெரியாதவனிடம் கூட பெருமைபேசி மகிழ்கிறோம்.

ஒரு கவுன்சிலருக்கே இப்படி என்றால், மேலாளர், தாசில்தார், கலெக்டர், சேர்மன், மேயர், I.P.S, M.L.A,  M.L.C,  M.P  சபாநாயகர், முதல்வர், பிரதமர், ஜனாதிபதி, இவர்களைவிட நாளைய இந்தியாவின் ஆட்சியை நிர்மானிக்கும் திரைப்பட நடிகர், நடிகைகள் ? 

ஆக.... இன்றைய வாழ்வில் படித்தவனையும், செல்வந்தனையும், வீரனையும், சுலபமாக பதவியாளர்கள் பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள் காரணம், பதவி கொண்டு பணக்காரராகி விடலாம், அந்த பணம் கொண்டு படித்தவனை தனக்கு கீழ் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம், அந்த பணம் கொண்டு வீரர்களை அடியாட்களாக மாற்றி விடலாம்.

ஆக இன்றைய வாழ்வாதாரத்தில் படித்தவரைவிட, பணக்காரரைவிட, பலசாலியைவிட, பதவியாளனே உயர்ந்தவன், அவனுக்கே  SORRY அவருக்கே, FIRST RESPECT.   

CHIVAS REGAL சிவசம்போ-
போட்டோவை பார்த்தா முதல் மரியாதை கிடைக்காது போல முதல் வெட்டுதான் கிடைக்குமோ ?

அன்பு நெஞ்சங்களே... வலைச்சரத்தில் தற்போது நான் ஆசிரியராகி வெளியிட்ட பதிவு கிளிக் நாந்தாங்கோ......கில்லர்ஜி. கலாமே.....

சனி, டிசம்பர் 13, 2014

ஹிந்தமிழ்


ஹிந்தி மொழியால், தமிழ் அழிந்து விடுமென ஒரு காலத்தில், கதை கட்டி விட்டவர்களை நம்பி ஹிந்தியை எதிர்த்தார்கள் தமிழ்நாட்டில், அன்றைய சூழ்நிலைக்கு ஒருவேளை அது சரியாக இருந்திருக்கலாம்? தமிழர்கள் பிழைப்பு தேடி, அரக்கோணத்தை தாண்டி போனதில்லை காரணம், மொழி ஒரு முக்கிய பிரச்சனை. ஹிந்தி ஒழிப்பை ஆதரித்த மக்கள், தங்களது எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை நினைத்துப் பார்க்க ம(றுத்)றந்து விட்டார்கள், ஆனால் ஹிந்தியை ஒழிக்கப் பாடுபட்டவர்கள்... 

தங்களது மக்களின் எதிர்காலத்தை கணக்கில் வைத்தே பாடுபட்டார்கள், என்பது அறிவாளிகளின் மூளைக்கே விளங்கும், முட்டாள்களின் மூளைக்கு I THING விளங்காது.

டெல்லி பாராளுமன்றத்தில், இலக்கணப்படி ஹிந்தி பேச, எழுத, படிக்க தெரிந்த ஒரு தமிழன் யார் ? சிந்தித்துப்பார் தமிழா... புரிந்திருக்குமே யாரென்று ? 

(நானும் கூட பெருமை கொள்கிறேன், என் இன தமிழன் ஒருவன் இருப்பதில்) 

ஆனால் இன்று எங்கெல்லாம் மனித ஜீவராசிகள் வாழ்கிறார்களோ ! அங்கெல்லாம் தமிழன் தனது தடம் பதிக்கின்றான். 

அரபு தேசங்களில் வேலை செய்யும் என் இன தமிழர்களே உங்களுக்குத் தெரியும் அரேபியர்கள், மட்டுமல்ல ஈரானியர்கள் கூட நம்மிடம் ஹிந்தியில் பேசும்போது நாம் பதில் பேசமுடியாமல், எவ்வளவு வெட்கப்பட்டு இருக்கிறோம், வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், நாளையும் வெட்கப்படப் போகிறார்கள்.

இந்தியாவில் ஹிந்தி பேசத்தெரியாத மனிதர்கள் தமிழர்க(ல்)ள் மட்டுமே... அரபு நாடுகளில் நமது இந்திய தூதரகத்தில் கூட ஹிந்தி பேசத்தெரியாத காரணத்தால் நமது நாட்டுக்காரர்களே புழுவைப்போல ஏளனமாக பார்க்கப்படும் இந்தியர் தமிழர்கள் மட்டுமே... உண்மைதானே...  

நாம் வெளியே போகவேண்டாம் இந்தியாக்குள்ளேயே ரயிலில் டெல்லியை நோக்கிப் போகிறோம், அந்த வகுப்பில் நான்கு நபர்கள் மட்டுமே பயணிக்கிறோம், ஒரு தமிழர், ஒருவர் கன்னடர், அடுத்தவர் மலையாளி, மற்றவர் தெலுங்கர், இதில் தமிழரைத் தவிர மற்ற மூவரும் பொது மொழியான ஹிந்தியில் பேசிக்கொண்டு வருவார்கள், தமிழன் அந்த இடத்தில் ஒதுக்கப்படுகிறான், அவமானமும் படுகிறான், இன்னும் சொல்லப் போனால் மூவரும் பேசி திட்டம் தீட்டி தமிழனை சதிக்கவும் முடியும், ஏனெனில் தமிழனுக்கு ஹிந்தி தெரியாதென்பது பொது மரபு .

(தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'' இந்த வசனத்தை இந்த இடத்தில் நினைத்துப்பார்) 

ஏன் இவர்களுக்கு தாய்மொழி கன்னடம் இல்லையா ? மலையாளம் இல்லையா ? தெலுகு இல்லையா ? தமிழனுக்கு மட்டும்தான் தாய்மொழி இருக்கிறதா ? இந்தியாவில் 1,652 மொழிகள் இருக்கின்றபோது...

(இதில் அங்கீகாரம் பெற்றவை 18) 

ஏதாவது ஒரு மொழி பொதுவாக இருந்தே தீரவேண்டும் அப்பொழுதுதான் நாம் மனதால் இணைய முடியும், அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்பதென்பது இயலாதகாரியம், அந்தப் பொதுமொழி ஏன் ஹிந்தியாக இருகக்கூடாது ?

தமிழா, ஹிந்தி என்ன உகாண்டா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொழியா ? அதை நாம் ஒதுக்குவதற்கு அதுவும் இந்திய மொழிதானே.. 

அப்படிப் பார்த்தால் உலகையே அடிமையாக்கி மொழிகளை அழித்து வருகிறதே... ஆங்கிலம் அதையேன் ஏற்றுக்கொண்டாய் ? 

தமிழா.. தமிழ்நாட்டில் எத்தனை வீட்டில் குழந்தைகள் அம்மா-அப்பா என்று அழைக்கிறது ? எல்லாமே MAMMY-DADDY என்றுதான் அழறுகிறது நீயும் அதைத்தானே விரும்புகின்றாய், பாலகுமாரா.... INCLUDING தமிழச்சி.

சாம்பசிவம்-
ஹிந்தியை எதிர்ப்பவர்கள், ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, இதை மட்டும் எழுதுவதற்கு உபயோகப்படுத்துவது ஏன் ?

CHIVAS REGAL சிவசம்போ-
சிரிக்கும்போது கூட, ‘’ஹா’’ தானே யூஸ் பண்றீங்கே... எங்கே ? அது வேணாமுன்னு, கா, கா, ன்னு சிரி பாப்போம், காக்கா தான், வந்து நிக்கிம், இதையெல்லாம் கேட்டா,, குடிகாரப்பய ஒளர்ர்ர்ர்ர்ர்ரான்னு சொல்வாங்கே...

காணொளி