தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 31, 2017

கட்டிலா ? தொட்டிலா ?

கட்டில் சுகம் என்னை கை விட்டது
தொட்டில் சுகம் பின்னும் தொடர்ந்தது...

சிலருக்கு இந்த உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும். இது இறைவன் வகுத்த நியதி இதில் நானும் ஒருவனே. வாழ்வில் எதையும் பெறாத என்னை இன்று தொட்டில் சுகமும் கை விடுகின்றது...
என் கணக்கு தவறு, விதியின் கணக்கே சரி.

600th Post Finish 
(மனஆறுதல் தரும் இந்தக் கணக்கையாவது இறுதிவரை நம்பி வாழ்வோம்)


Good bye 2017 Welcome 2018

வெள்ளி, டிசம்பர் 29, 2017

தள்ளாத வயதிலும்...


தள்ளாத வயதிலும் இல்லாத கணவனென்று
இல்லாள் நினைக்கவில்லை பொல்லாத
உலகமிது இருப்போர்க்கு ஊக்குவிக்கும்
இல்லாத மனிதருக்கு இடம் மறுக்கும்

முதுகெலும்பு இல்லாத அரசு இது
முதியோரை நினைக்க இங்கு நேரம் ஏது
பெற்றோரை மதியாத பிள்ளை இங்கு
பெருமழையால் இவர்கள் போவது எங்கு

கல்லானாலும் கணவன் என்றே கசிந்தாள்
புல்லானாலும் புருசன் என்றே புசித்தாள்
மண்ணானாலும் மனைவி என்றே மணந்தான்
துரும்பானாலும் துணைவி இவளே துணைதான்

மகன் வேண்டுமென்று மன்றாடினாள் அன்று
மகன் வேண்டாமென்றான் திண்டாடினாள் இன்று
இறைவா இவர்கள் செய்த பாவம்தான் என்ன
இவர்கள் வாழ்வதால் இங்கு லாபம்தான் என்ன

சிவாதாமஸ்அலி-
இவர்களைக் கண்டாவது பாவம் செய்பவர்கள் திருந்தணும்.

புதன், டிசம்பர் 27, 2017

The Grand Design

உலகத்தை படைத்தது நிச்சயம் கடவுளல்ல; இயற்கை தனக்கு தானே படைத்துக் கொண்டதுதான் உலகம்’’ என்று இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி Stephan Hacking தெரிவித்துள்ளார் அண்ட சராசரம் பற்றி ஆராய்ந்து புத்தகம் எழுதுவதில் அவர் பிரபலம். 1988-ல் அவர் எழுதிய A Freed History of Time என்ற ஆராய்ச்சி புத்தகம் சர்வதேச அளவில் விற்பனையில் சக்கை போடு போட்டது. மேலும் அவர் The Grand Design என்ற புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் இடம் பெற்றுள்ள சில அம்சங்களை லண்டனைச் சேர்ந்த The Times நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, டிசம்பர் 24, 2017

தீர்க்கதரிசி


ஏழு ஆண்டுகள் காமராஜ் ஆட்சியினை கண்டபின் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வியாழன், டிசம்பர் 21, 2017

¾ நீர்-வாணம்


நட்பூக்களே... மனிதன் என்பவனுக்கு நகைச்சுவை உணர்வுகள் வேண்டும் அப்பொழுதுதான் அவன் ஐந்தறிவு இனங்களிலிருந்து வேறு படுகின்றான் நானும்கூட நகைச்சுவை உணர்வாளனே என்னைச்சுற்றி உள்ளவர்களை மகிழ்வித்துக் கொண்டு இருப்பதில் உள்ளுக்குள் மகிழ்பவன் ஆனால் வெளியில் சிரிக்கத் தெரியாதவன் அல்ல ! சிரிப்பை இழந்தவன் அந்த நகைச்சுவை உணர்வுகளின் உந்துதல்களே கேளிக்கைகள் விளையாட்டுகள் ஆனாலும் எந்த நிலையிலும் இன்றுவரை விபரீதமாக செய்யாதவன் கீழ்காணும் விபரீத காணொளியால் எழுதியதே இந்த பதிவு.

நண்பர்கள் சில நேரங்களில் நையாண்டியுடன் பேசி சிரிப்பது, பிறரை சிரிக்க வைப்பது வாடிக்கையான விடயமே இப்பொழுது விஞ்ஞான வளர்ச்சியின் அதிவேகத்தால் நண்பர்கள் எந்த நேரமும் எதையும் ஏன் ? தற்கொலைகள், கொலைகளைக்கூட கைப்பேசியில் ஒளியலை எடுத்து உடனுக்குடன் ஊடகங்களுக்கு அனுப்பி விடுகின்றார்கள் சிலர் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற சிந்தையில் திட்டமிட்டே இப்படி செய்து காணொளி எடுத்து பிறரை மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு சில நேரங்களில் விபரீத செயல்களில் ஈடுபட்டு விடுகின்றார்கள் கீழ்காணும் காணொளி தங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம் இதன் பின்னணியை சிறிது யோசித்தால் வேதனையான விடயமே ஆம் இந்த நபர் யாரோ எவரோ எனக்கு தெரியாது நண்பர்கள் சேர்ந்து செய்யும் விளை(னை)யாட்டால் இவர் இந்த வாளிக்குள் விழுந்து விடுகின்றார் அவரை வெளியே தூக்குகின்றார்கள் பிறகு காணொளி இல்லை ஒரு மனிதனை சட்டென இரண்டாக மடித்தால் அவனது முதுகெலும்பு என்னாகும் என்று நாம் சிறிது யோசித்துப் பார்க்க வேண்டும் இந்த வேதனையை தெரியாத மனிதர்கள் இருக்கவே முடியாது யோகா, தந்திரம் போன்றவற்றை செய்பவர்களுக்கு பிரச்சனை இல்லை இந்த வாளியிலிருந்து இவரை வெளியே எடுத்து விட்டாலும் இவருக்கு ஏற்பட்டு இருக்கு முதுகுவலி எப்படியிருக்கும் ? வலியோடு பிரச்சனை முடிந்து விட்டாலும் பரவாயில்லை வேறு ஏதாவது பிரச்சனைகளை தொடர்ந்து விட்டால் அவரின் வாழ்க்கையே மூழ்கி விடும் விபரீதமாக சாத்தியம் உண்டு இவ்வளவு விளக்கமாக நான் சொல்வதற்கு காரணம் நான்கு வருடங்களுக்கு முன்பு எனது நண்பரொருவர் தவறுதலாக மூன்றடி உயரத்திலிருந்து இதே மாதிரி வாளிக்குள் விழுந்து விட்டார் இன்றுவரை அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் கடின வேலைகள் செய்ய முடியவில்லை இன்னும் பூரணமாக வலியிலிருந்து விடுபடவும் இல்லை நண்பர்களே... யாராக இருந்தாலும் சரி இந்த வகையான வினையாட்டுகளை செய்யாதீர்கள் விளையாடுவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

இதைப்போல மற்றொரு காணொளி YouTube கண்டேன் அதையெல்லாம் தங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறு காரணம் கில்லர்ஜியின் பெயர் மட்டுமல்ல எமது தளத்தின் பெயரும் கெடும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பெண்களின் கூத்து பெண்கள் பீர் குடித்து விட்டு ஆட்டம் ஆடுவதும், ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டாலும் பரவாயில்லை உடைகளை கிழித்து விளையாடுகின்றார்கள் ஏறத்தாழ முக்கால் நிர்வாணமாக்கிய விளையாட்டு (?) இவர்கள் சமூகத்தை சீரழிக்கின்றார்கள் என்று பெரிய குற்றச்சாட்டை எல்லாம் நான் முன் வைக்கவில்லை காரணம் பீப் பாடலையே ஆதரித்து பேசிய பல கல்லூரி பெண்களை பார்த்து விட்டேன் நான் சொல்ல வருவது இவர்களின் எதிர்கால வாழ்க்கையை குறித்தது தங்களது தாய்-தந்தைகளின் கௌரவத்தைப்பற்றி சிறிதளவாயினும் நினைத்துப் பார்ப்பது இல்லையா ? என்பதே எமது வியப்புடனான வினா இப்படிச் செய்த தவறைக்கூட மன்னித்து விடலாம் ஆனால் இதையும் பகிரங்கமாய் பொது இடமான YouTubeல் வெளியிடலாமா ? நாளை இவர்களையும் ஒருவன் திருமணம் செய்வதற்கு தயாராகிக் கொண்டுதானே இருக்கின்றான் ஒருக்கால் இவர்களின் பந்துக்கள் இதை கண்டால் இவர்களின் வீட்டில் பெண் எடுப்பார்களா ? படிப்பதால் அறிவு வளர்ச்சி பெறுகின்றார்கள் என்பதில் எனக்கு அவ்வப்போது ஐயம் ஏற்படுவது இவ்வகைகளை காணும் பொழுதே பண்டைய காலங்களில் படிக்காத பெண்களே அதிகம் அவர்களில் ஒருவர்கூட இப்படி எல்லாம் செய்ததாக நாம் அறிந்ததில்லை அரண்மனைகளில் வாழ்ந்த தேவதாசிகள்கூட மது அருந்தியதாக கேள்விப் பட்டதில்லை கல்லூரி மாணவிகளே செல்லம்மா புருஷன் ஆசைப்பட்டது இந்த வகையான தங்களைப் போன்ற புதுமைப் பெண்களை அல்ல ! வேலு நாச்சியார் போன்ற வீரமுள்ள விவேகமுள்ள புதுமைப் பெண்களை தாங்கள் செய்தது தவறென்று ஒருநாள் உணர்ந்து வருந்துவீர்கள் அந்நாளில் உங்களுக்கும் ஒரு வயது பெண் அல்ல ! ஒரு ’’வயதுப்’’ பெண் இருப்பாள்.

 அழகிய பெண்ணினமே உம்மை ஆணினம் மதிப்பதற்கு முன் உன்னை நீயே மதிப்பிடுகில்லர்ஜி
காணொளி

செவ்வாய், டிசம்பர் 19, 2017

பிறந்தநாள்


பிறந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக்கடி கொண்டாடுகிறார்கள் ஆனால் எத்தனையாவது ? 16-ரில் தொடங்கி 61-வரை எப்பொழுதுமே குழப்பம் சரி போகட்டும் அது நமக்கு அவசியமில்லாத விசயம் வேண்டாம்

ஒரு வருடத்தை கடக்கும்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளது கடந்த வருடத்தை விட இன்று நமது பொருளாதார நிலை உயந்துள்ளதா ? வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா ? கடந்த வருடத்தை விட இந்த வருடம் நமது தவறுகளை குறைத்திருக்கிறோமா ? மனிதநேயம் எனச்சொல்வார்களே அது நம்மிடம் குறைந்துள்ளதா ? நிறைந்துள்ளதா ? என என்றாவது நாம் தேடிப் பார்த்திருக்கிறோமா ? உண்மையில் நாம் தொலைவைத் தேடி (தொலைந்து போகுதல், மரணித்தல்) ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை நிஜத்தை மறந்து விட்டு நிழலை கண்டு மகிழ்கிறோம்.

ஒரு குழந்தை பிறக்கிறது அதை உலகிற்கு வரவேற்று கொண்டாடுகிறோம் தனது சந்ததி தொடர்கிறது தான் ஆண்மகன் என சமூகத்திற்கு நம்மாலான ஒரு அறைகூவல், இன்னாரு மகன் மன்னாரு என்பதற்கு நம்மாலான ஒரு பட்டயம் நமது அஸ்தியை கரைத்து ஆஸ்தியை எடுத்து நாஸ்தியாக்க நம்மாலான ஒரு குஸ்தி வீரன்.

இப்படி ஏதாவது ஒரு காரணங்களுக்காக இந்த நாட்களை நமது குழந்தைகளின் பெரிய பருவம் வரை நாம் குழந்தைகள் அல்ல ! என நம் குழந்தைகள் நினைக்கும் காலம்வரை இதை கொண்டாடலாம் ஆனால் House Go go என, Cemetery Come come என சொல்லும் காலம் வரை கொண்டாடுவது எனக்கென்னவோ மாற்றுச் செயலென தோன்றுகிறது.

இன்று பலருக்கும் தனது தாய்-தந்தை பிறந்தநாள் எதுவென்று தெரியாது (நான் எனது தந்தையின் பிறந்தநாளை அறிய முயன்றும் முடியவில்லை) ஆனால் தனது அரசியல் தலைவனின் பிறந்தநாளை தொண்டனும், திரைப்பட நடிகனின் பிறந்தநாளை ரசிகனும் சரியாக அறிந்து வைத்து அதை சந்தோஷமாக கொண்டாடுகின்றான் இது தமிழ் நாட்டில்தான் அதிகம் என்பதை நினைக்கும் பொழுது வெட்கப்பட வேண்டியது இருக்கின்றது.

இதில் அரசியல்வாதிகள் இறந்து போன தலைவர்களுக்கு நினைவு நாளில் மௌனஅஞ்சலி செலுத்துகின்றார்கள் இது தியாகத்துக்கு கொடுக்கும் மரியாதை சரி. ஆனால் பிறந்தநாள் விழா கொண்டாடுவது சரியா ? சமீபத்தில் அன்னை இந்திரா காந்தி, எம்ஜிஆர் போன்றவர்களுக்கும் பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள் என்றால் இறந்ததற்கு சந்தோஷப்படுவதாகத்தானே அர்த்தமாகிறது சரி இன்று தலைவர்கள் தினந்தோறும் பெருகி கொண்டு வருகின்றார்கள் நாளை அவர்களையும் எமன் வந்து அழைத்துப் போகத்தான் போகின்றான் பிறகு வருடத்தில் 365 நாட்களும் கொண்டாடினால் சாலைகளில் ப்ளக்ஸ் போர்டு வைப்பதால் மக்களுக்கு தினம் இடையூறுதானே... சமீபத்தில் கோவையில் அரசியல்வாதியின் ப்ளக்ஸ் ஃபோர்டு தலையில் விழுந்து ஒரு இளைஞர் மரணம் யாருக்கும் கவலை இல்லை அந்தக் குடும்பம் இன்று உணவளித்தவனை இழந்து நிற்கிறது. இதில் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன மன்னர்கள் சிலருக்கும் கடந்த பத்து ஆண்டுகளாக ஜாதீயத்தை கையிலெடுத்துக் கொண்டு வெறித்தனமாக பிறந்தநாள் விழா கொண்டாடுவதைக் காணும் பொழுது இவ்வளவு நாட்களாக புடுங்கவா போனாங்க என்ற கேள்வியும் எமக்கல்ல சிலருக்கு எழக்கூடும். இன்னும் எவ்வளவு அட்டூழியங்கள் இந்த வாக்குரிமையின் தன்மையை அறியாத அறியாமை மக்களுக்கு நிகழப் போகின்றதோ.... யாரு.... கண்டா ?  


Sampasivam & Sivathomasali
Many many happy Returns of the Birthday to Mr. Killergee
Chivas Regal சிவசம்போ-
யாருய்யா இவங்கே சாவுகிராக்கி அவருக்கு புடிக்காத விசயத்தைச் சொல்லி சாயங்காலம் பார்ட்டிய மண் அள்ளி போட்ருவாங்கே போலயே...

கரட்டுவாத நண்பர் திரு. Chivas Regal சிவசம்போவுக்கு எமது பரிசு

வெள்ளி, டிசம்பர் 15, 2017

அவை மரபு


நண்பர்களே... எனக்கு வெகுகாலமாகவே ஒரு சந்தேகம் மனதில் தோன்றி இருக்கின்றது தீர்த்து வைப்பார் யாருமில்லை அறிந்தவர் அறியத்தருக... அதாவது தமிழக முதல்வர் போலவே தமிழக மந்திரிகளும், இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்களே அதாவது முதல்வரைவிட அதிகாரம் சற்றுக் குறைவனவர்கள் இவர்களுக்கு முதல்வர் பதவியில் இருப்பவர் முதலாளி அல்ல ! அதேநேரம் இவர்களை வழி நடத்திச் செல்லும் முன்னவர் என்பது உண்மையே இவருக்கு மேலாளர் என்ற வகையில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவை மரபு மற்றும் சட்டநியதி அதேபோல் இவருக்கு பாதுகாவலுக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் பாதுகாவலர்களும் இதே நிலைப்பாடுதான் ஆனால் தனிப்பட்ட வகையில் யானைப்படை, பூனைப்படை என்றும் சொல்கின்றார்களே... அதாவது சொந்தமாக சம்பளம் கொடுத்து அவர்களுக்கு முதல்வர் பதவியில் இருப்பவர் முதலாளிதான் இவர்கள் முதல்வருக்கு மரியாதையோடு பயந்தும் வேலை செய்தல் அவசியமாகின்றது இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது நான் மட்டுமல்ல ! நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்கள் உள்பட.

இதில் எனது சந்தேகம் என்னவென்றால் தொகுதி மக்கள் ஓட்டுப்போட்டு அங்கீகரித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி எங்களுக்கு உள்ள குறைகளை முதல்வரிடம் விவரித்து நிதியுதவி பெற்று எங்கள் வாழ்வு வளம் பெறச்செய்யுங்கள் என்று அனுப்பி வைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமும் இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்களில் ஒருவனே என்ற சிந்தையை மறந்து குறிப்பாக தான் ஒரு ஆண் (?) என்பதை மறந்து சட்டத்துக்கு புறம்பாக, மனுதர்ம சாஸ்த்திரத்துக்கு எதிராக இப்படி கும்பலி சாசனமும், குடலி சாசனமும் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இப்படி இருப்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சனைகளை பேசி ஆணித்தரமாக வாதாடி மக்கள் நலனைப்பெற முடியும் என்பது மட்டுமல்ல ! மற்றொன்றும் உள்ளது சம்பளத்துக்கு வேலை செய்யும் யானைப்படையினரோ, பூனைப்படையினரோ ஒருவர்கூட இப்படி காலில் விழாமல் முதல்வரை அவமதிப்பது தொழில் தர்மம் அல்ல ! என்பதே எமது குற்றச்சாட்டு சரிதானே நண்பர்களே இதுக்கு நீங்கள்தான் விளக்கம் தரணும் தாங்கோ..... பார்ப்போம்.

சிவாதாமஸ்அஸி-
தொகுதி மக்கள் ஓட்டுக்கு ஆயிரம் ஓவா வாங்குனதோட அவுக வேலை முடிஞ்சு போச்சு பிறகென்ன பேச்சு ?
Chivas Regal சிவசம்போ-
ஆயிரமா ? நம்ம தொகுதியில முன்னூறு கொடுத்து ஏமாத்திட்டாங்களே....

காணொளி

செவ்வாய், டிசம்பர் 12, 2017

கோவில்பட்டி, கோடாங்கி கோமுட்டி


வணக்கம் நட்பூக்களே... எமது பள்ளி நண்பன் வருசைமுத்து வாழ்க்கையில் விரக்தியாக இருக்கிறது அதனால் எத்தனையோ சோசியர்களை பார்த்து மனம் நொந்து விட்டேன் என்று என்னிடம் வந்து வருந்தினான். சரியென்று நம்ம சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் அழைத்து போகலாம் என்று சொன்னேன் அதற்கு...

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

வெள்ளி, டிசம்பர் 08, 2017

சேரன் சோழன் பாண்டியன்


வாழவே புடிக்கலைனா என்ன செய்யிறது ?
அப்ப செத்துட வேண்டியதான்.
சாகவும் புடிக்கலைனா ?
அப்ப வாழவேண்டியதுதான்.
என்னய்யாநீ ஏடாகூடமா பேசுறே ?  
யாரு நானு... ஏண்டா டேய் நானே சாவோம்னு போயிக்கிட்டு இருக்கேன்... யேங்கிட்டே வந்து,
யேன் சாகப்போறே ?
வாழப்புடிக்கலே.
யேன் வாழப்புடிக்கலே ?
மொதல்லே ஒனக்கு யேன் வாழப்புடிக்கைலைனு சொல்லு.
விருப்பமே இல்லை வாழ
ரெண்டும் ஒரு எலவுதான்யா... 
என்னய்யா...  நீ எலவு கிலவுனு பேசுக்கிட்டு..
யேன் பேசுனா என்ன ?
அந்த மாதிரி பேசுனா எனக்குப் புடிக்காது.
புடிக்கலைனா போயி சாவுடா யேங் கழுத்தை அறுக்காம...
என்னை சாகச்சொல்ல நீ யாருடா ?
எங்கிட்டே ஏண்டா...  ஐடியா கேட்டே ?
நான் சாகத்தான் வந்தேன் ஆனா நீ சொல்லி சாகவேண்டிய அவசியம் இல்லை வேணும்னா நீ போயி சாவு.
என்னடா நீ தகராறு பண்ணுறதுக்கு வந்துருக்கியா ?
சட்டையை விட்றா...
என்னடா செய்வே ?
விட்றா....

இருவரும் சண்டையில் இருந்த மும்முரத்தில் தண்டாவாளத்தை விட்டு விலகாமலே பேசிக்கொண்டிருக்க.... பாண்டியன் எக்ஸ்பிரஸ் வருவதை கவனிக்காமல் உருண்டு கொண்டிருக்க.. அடுத்த சில நொடிகளில் இருவரும்  .......................................

பாண்டியன் சேரன் மாதேவியை விட்டு, சோழந்தூரை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தான்

Chivas Regal சிவசம்போ-
சாவுகிராக்கி பயலுகள் சண்டை போடுறதுக்கு வேற இடம் கிடைக்கலை ?

புதன், டிசம்பர் 06, 2017

பிடித்த விச(ய)ம்

December - 06
மதம் மறப்போம் மனிதம் காப்போம்

கிருஸ்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

பொய் சொல்லாமை இவர் கிருஸ்தியன் இவர்கள் அணியும் வெள்ளையுடையை போல மென்மையானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என ஆணித்தரமாக நம்பக்கூடிய நிலையிருந்தது ஒரு காலத்தில் ஒரு மனிதன் பொய் சொல்வதை நிறுத்தும் பொழுது எல்லா கெட்ட செயல்களும் அவனை விட்டு விலகி விடும் இன்று பொய் சொல்லாத மனிதர்களும் இருக்கிறார்களா ? என்று ஆச்சர்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இஸ்லாம் மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

பலதார மணங்களுக்காக சொல்லப்பட்ட காரணங்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதின் பின்னணியில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது அன்றைய காலகட்டத்தில் போர்கள் நடந்தது இன்றைய காலகட்டத்திலும் WARகள் நடக்கிறது ஆனால் இன்று அந்த காரணங்கள் அடியோடு மறக்கப்பட்டு சில அற்ப காரணங்களுக்காக நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இந்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

ஒருத்தி ஒருவனுக்காகவும், அந்த ஒருவன் ஒருத்திக்காகவும் வாழும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறை ஆனால் இன்று 100க்கு 99.9 % மாறுபட்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது, அந்த 00.1 %த்திற்குள் நானும் இருக்கின்றேன் என்பதில் பெருமை பட்டுக்கொள்கிறேன். உணவுக்கும், உறக்கத்திற்கும் அப்பாற்பட்ட இறைவனுக்கு தெரியும் இது உண்மையென்று ஆனால் உணவருந்தி மலம் கழிக்கும் மானிடர்கள் நம்ப மாட்டார்கள் இதை ஏனெனில் அம்மணத்தான் ஊரிலே கோவணம் கட்டியவன் கிறுக்குப்பயல் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இருப்பினும் எனது குருதிவற்றி இறுதிபாதை செல்லும் வரையில் இப்படியே செல்லுமென உறுதியோடு.....

காணொளி
(தலைப்பு எமக்கல்ல பாழும் சமூகத்திற்கு)

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

நீங்க அழகா இருக்கீங்க...

எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் கொள்ளுப்பேத்தியின் மகள் எம்.விஷாலி

மரியாதை
தண்ணீர் எடுக்கும் பாவையிடம் சொன்னேன்
ரொம்ப அழகாக இருக்கீங்க என்று
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
நல்ல வார்த்தைதானே சொன்னேன் ?
* * * * * * * * * * 01

கணவன்
அவனைப் பார்த்து உங்கள்
மனைவியாக வர வேண்டும்
என்றேன் அவன் சொன்னான்
நீ வர-தட்சிணை வேண்டும் என்று.
* * * * * * * * * * 02

செழிப்பு
மரம் கேட்டது மேகத்தைப் பார்த்து
நான் செழித்து வளர மழை தா என்று
உடன் மேகம் மழையுடன் காற்றையும்
கொடுத்து மரத்தை வீழ்த்தியது.
* * * * * * * * * * 03

பருப்பு
ஐஸ்வர்யா அழகி அவளை அழைப்பது
போல் ஐஸ் வண்டியை அழைத்தேன்
ஐஸ் என்று ஐஸ் வாங்கி கொண்டிருந்தவள்
என்னிடம் சொன்னாள் இங்கே பருப்பு வேகாது.
* * * * * * * * * * 04

கண்ணீர்
மாப்ளே எம்மக கண்ணீர் வடிக்காமல்
பார்த்துக்கோங்க மாமனார் கலங்கிட,
மருமகன் சொன்னான் இனி குழம்புக்கு
வெங்காயம் வாங்க மாட்டேன் மாமா.
* * * * * * * * * * 05

அகம்பாவம்
இமை சொன்னது விழிகளிடம்
உனக்கு பாதுகாவலனே நான்தான் என்றதற்கு
வேல்விழியாள் என்று கில்லர்ஜி
வர்ணிப்பது உன்னையல்ல என்னையே
* * * * * * * * * * 06

சினம்
இரயில் கேட்டது தண்டவாளங்களை
செருப்புகளா சௌக்கியமா ? சினம் கொண்ட
தண்டவாளம் சொன்னது இரயிலை
நாங்க காலை விரிச்சோம் ? டப்பா கழன்றுமுடீ...
* * * * * * * * * * 07

எழுத்து
நான் ரொம்ப அழகாக எழுதுவேன் ஸார்
அவன் மேலாளரிடம் சொல்லும்போது
விரல் நினைத்தது நம்ம எழுத
மூதேவி வாய் பெருமை பேசுதே...
* * * * * * * * * * 08

பழிச்சொல்
இவன் லாரியால மொக்கைராசுவை
ஏத்திக் கொன்னதை நான் பார்த்தேன் ஐயா
பார்த்தசாரதி சாட்சி சொல்ல, எமன் நினைத்தான்
பிறகு என்னை எதுக்கு பழி சொல்றாங்கே ?  
* * * * * * * * * * 09

சிரிப்பு
குழந்தை அழுவதை இரசித்துப் பார்த்து
உறவுகளோடு சிரித்தனர் தாயும், தந்தையும்
யாருக்கும் கவலையில்லை காரணமென்ன ?
இதோ இப்பொழுதுதானே குழந்தை பிறந்தது.
* * * * * * * * * * 10

Chivas Regal சிவசம்போ-
ஹைக்கூவுல நம்ம ஐயிட்டத்தை பத்தி வரவேயில்லையே ?