தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சனி, ஜூலை 29, 2017
வியாழன், ஜூலை 27, 2017
திங்கள், ஜூலை 24, 2017
வரலாறு முக்கியம்
கடந்த
வாரத்தில் ஒருநாள் காலை
பத்து மணி காளையார் கோவில் பேருந்து நிலையம் தேவகோட்டையிலிருந்து பரமக்குடி
போவதற்காக சிவகங்கை பேருந்தில் ஏறியவன் வழியில் காளையார் கோவிலில் இறங்கி
பரமக்குடி பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தவனின் விழிகளில் முதலில் தென்பட்டது விமானம்
ஆம் காளையார் கோவிலின் கோபுரக் கலசத்தின் விமானம் சட்டென உடன் நினைவில் வந்தவர்
சரித்திர பதிவர் இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் அவர் எழுதியிருந்த
மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியார் மற்றும் குயிலியைப்பற்றிய பதிவின் நினைவோட்டங்கள்
இதோ இந்த இடத்தில்தானே வெள்ளையர்கள் அவரை சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டு
இருந்தார் இதோ இந்த இடத்திலிருந்து சுமார் முப்பது அடி தூரமிருக்குமா ? இதே இடத்தில் நாம் கடந்த காலங்களில் ஐநூறு
முறையாவது நின்று இருந்திருப்போமா ? நமக்கேன்
உள்ளே சென்று வரவேண்டுமென்று தோன்றவில்லை இதோ நண்பரால் தோன்றி விட்டதே...
பரமக்குடிதானே போகிறோம் ஒரு பேருந்தை விட்டால் மறு பேருந்தில் போவோமே உடன் கோவிலை
நோக்கி நடந்தேன்.
சனி, ஜூலை 22, 2017
வியாழன், ஜூலை 20, 2017
கேள்விக்கென்ன பதில்
பல மனிதர்கள்
தான் நியாயமானவன் என்பதால் மற்றவர்களும் நியாயமாக இருக்க வேண்டும் என
நினைக்கிறார்கள் இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை கோமாளியாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் நஷ்டப்பட்டு கெட்டுப் போனதால் மற்றவர்களும் கெட்டுப்போக வேண்டுமென நினைத்தால்
நாட்டில் தொழில் வளர்ச்சியின் நிலையென்ன ?
ஆ
பல மனிதர்கள்
தான் மதவாதி என்பதால் மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்
இந்த எண்ணம் பிறரின் பார்வையில் அவரை மதவெறியனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் திருடன் என்பதால் மற்றவர்களும் திருட வேண்டுமென நினைத்தால் நாட்டில்
திருட்டுத் தொழில் நலிந்திடுமோ ?
இ
பல மனிதர்கள்
திடீரென பக்திமான் ஆகி விடுவதோடு மற்றவர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்,
இதுவும்கூட பிறரின் பார்வையில் அவரை கேலிக்குறியவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் பணக்காரன் என்பதால் மற்றவர்களும் பணக்காரனாக வேண்டுமென நினைத்தால் நாட்டில்
தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்களோ ?
ஈ
பல மனிதர்கள்
தான் ஆத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனைபோல் இருக்க வேண்டும் எனநினைக்கிறார்கள்
இது அவன் அயோக்கியன் ஆயினும் அவனை நல்லவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
தான் வாக்களிப்பதில்லை என்பதால் மற்றவர்களும் வாக்களிக்ககூடாது என நினைப்பதுபோல் எல்லோரும் இருந்தால் நாடு
முன்னேற
சாத்தியமுண்டா ?
உ
பல மனிதர்கள்
தான் நாத்திகன் என்பதால் மற்றவர்களும் அதனை போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்
இது அவன் நல்லவன் ஆயினும் அவனை கெட்டவனாக்கி விடுகிறது.
சில மனிதர்கள்
உலக நாடுகள் அனைத்தும் நமது கைக்குள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென நினைப்பதுபோல்
நடந்து விட்டால் அவனது ஆசைகள் இத்துடன் தீர்ந்து விடுமா ?
கில்லர்ஜி தேவகோட்டை
திங்கள், ஜூலை 17, 2017
என் நினைவுக்கூண்டு (4)
இதன்
பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...
தேவகோட்டை நமது வீட்டுக்கு நீ வாழ்ந்த வீட்டில் உன்னை
கொண்டு வந்து இரவு முழுவதும் உறங்க வைத்ததில் அந்நிலையிலும் எனது மனதில் சிறிய
நிறைவு ஏற்பட்டது.
சனி, ஜூலை 15, 2017
வியாழன், ஜூலை 13, 2017
காட்சிக்கு நான் சாட்சி
ஒருமுறை அபுதாபியிலிருந்து... துபாய்க்கு
காரில் போய்க்கொண்டு இருந்தேன் வழக்கமாக நான் முதல் ஃபாஸ்ட் டிராக்கில்தான் போவேன்
பின்னால் வரும் நபர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் லைட் அடித்துக் காண்பித்தால்
உடன் வழிவிட்டு மீண்டும் அவரை விரட்டிப்போய் பிடித்து அவருக்கு லைட் அடித்து வழி
கேட்பதில் எனக்கு ஒரு விதமான சந்தோஷம் எப்போதுமே உண்டு.
அன்றும் அப்படி நூற்றி அறுபதில் போய்க்கொண்டு
இருந்தேன் கேமரா வரும் இடம் எனக்கு முன்கூட்டியே தெரியும் அந்த இடத்தில் மட்டும்
நூற்றி நாற்பதுக்கு வந்து விடுவேன் எனக்குப் பின்னால் என்னையும்விட வேகமாக வந்தவன்
லைட் அடித்துக் கொண்டே வர நான் இரண்டாவது ட்ராக்குக்கு போக முடியாத சூழல் காரணம்
வரிசையாக கார்கள் இத்தனைக்கும் நான் விலகுவதற்காக உடன் வலதுபுற இண்டிக்கேட்டரை
போட்டு விட்டேன் சுமார் கால் கி.மீ தூரத்திற்கு விலகமுடியாத நிலையில் கார்கள்
போய்க்கொண்டு இருக்க இவனும் விடாமல் லைட் அடித்து முட்டிவிடும் நிலையில்
உரசுவதுபோல் வருகிறான் கண்ணாடி வழியே பார்த்தேன் நான் நினைத்ததுபோல அரபிக்காரனே ஒரு
வழியாக இரண்டாவது ட்ராக் போனேன் அவனும் இரண்டாவது ட்ராக் மாறி லைட் அடித்தான்,
மீண்டும் மூன்றாவது ட்ராக் மாறினேன் அவனும்... நான்காவது மாற, அவனும்...
ஐந்தாவது மாற, அவனும்... ரைட்டு சைத்தான் செவ்ரோலெட்டுல வருது
ஓரமாக நிறுத்தி டபுள் இண்டிக்கேட்டரை போட்டு விட்டு இறங்கினேன் பின்புறமாய்
நிறுத்தி விட்டு அவனும் இறங்கினான் முதலில் ஸலாம் சொல்வதுதான் இங்கு மரபு நான் சொல்ல அவன் கோபமாக கேட்டான்
லேஷ் இந்தே மாஃபி ஜீப் தரீக்... ?
ஏன் நீ வழி தரவில்லை.. ?
அனா கேஃப் ஜீப் எஹ்தர் தரீக் ஸாராக் த்தாணி
மாஃபி மக்கான் அலத்தூல் ஈஜி சையாராஹ் இந்தே மாஃபி ஸூப் ?
நான் எப்படி வழி கொடுப்பது இரண்டாவது
ட்ராக்கில் தொடர்ந்து கார்கள் வந்தது நீ பார்க்கவில்லை ?
அனா மோத்தன் லாசம் இந்தே ஜீப் தரீக்
நான் இந்த நாட்டுக்காரன் நீ கண்டிப்பாக வழி
கொடுக்கணும்
அனா அறஃப் இந்தே மோத்தன் லேகின் அனா கேஃப் சீர்
தரீக் த்தாணி ஃபோக் ?
எனக்குத்தெரியும் நீ இந்த நாட்டான் ஆனால்
நான் எப்படி அடுத்த ட்ராக் போவது மேலேயா ?
லா இந்தே கலம்த் வாஜித், அனா மோத்தன்
இல்லை நீ ரொம்ப பேசுறே நான் இந்த
நாட்டுக்காரன்
ஆஹா லூசுப்பக்கியில வந்துருக்கு இன்றைக்கு
காலையிலே யாரு... பதிவை முதல்ல படிச்சோம் இந்த லூசை எப்படி... சமாளிப்பது
? என
நான் யோசிக்கத் தொடங்கும் முன்பே சைரன் ஒலி கேட்டு கலைந்தேன் எங்கிருந்துதான்
வந்தார்களோ... தெரியவில்லை அவனது காருக்குப் பின்னே விளக்குடன் இரண்டு போலீஸ்காரர்கள்
இறங்கி வந்தார்கள் வந்தவர்கள் ஸலாம் சொல்லி கை கொடுத்து முதலில் என்னிடம்தான் கேட்டார்கள் அரபு மொழி போதுமே....
என்ன பிரச்சனை ?
அவர் முதலில் சொல்லட்டும் பிறகு நான்
சொல்கிறேன்.
என்ன பிரச்சனை ?
இவன் ஃபாஸ்ட் ட்ராக்கில் போனான் லைட்
அடிச்சுக் கேட்டால் ? வழி விடவே இல்லை நான்
இந்த நாட்டுக்காரன்...
நீ சொல்லு...
தெளிவாக எல்லா விடயத்தையும் சொன்னேன்...
அவனிடம் திரும்பி...
சத்தியம் செய்து சொல் இவன் சொல்வதில் பொய்
இருக்கா ?
அவன் என்னை சிறிது முறைத்து விட்டு...
அல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை
பின்னே அவன் எப்படி உனக்கு வழி கொடுப்பான் ?
நான் இந்த நாட்டுக்காரன்.
நீ எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன் எப்படி
வழி கொடுக்கமுடியும் மேலே பறந்து போக முடியுமா ?
நான் இந்த நாட்டுக்காரன், அவன் இந்தியக்காரன் நீ அவனுக்கு ஆதரவா பேசுறே...
நான் யாருக்கும் ஆதரவாக பேசலை இதுதான் சட்டம்
இப்படித்தான் பேசணும் காரை எடுத்துக்கிட்டு கிளம்பு.
அவன் போலீஸ்காரர்களை முறைத்து விட்டு அவனது
காரை நோக்கிப்போக... போலீஸ் சொன்னார் என்னிடம்...
அவன் பேச்சு சரியில்லை அவன் போகட்டும் நீ கொஞ்சம்
நேரம் கழித்து கிளம்பு உன்னைக்கண்டால், உனது கார் மீது மோதினாலும்
மோதுவான்... நாங்க துபாய் பார்டர் வரை வருவோம்.
நன்றி ஸார்.
மூவருமே ரோட்டை விட்டு சரளிக்கற்களில்
நிறுத்தியிருந்தோம் அவன் காரை எடுத்தவன் கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காண்பிக்க சடக்கென
‘’க்ரீச்ச்ச்ச்ச்’’
என்ற சத்தத்தை தொடர்ந்து...
‘’டொம்ம்ம்ம்‘’
என்ற பயங்கர ஒலியும் சரளியில் தேய்ந்த டயர்கள்
ஐந்து ட்ராக்குகளையும் கடந்து தடுப்புச்சுவர் கம்பிகளை மடக்கி பேரீட்சம்பழ மரத்தை
சாய்த்து காரின் பேனட் கீழே கிடக்க நல்லவேளையாக அந்த நேரம் கார்கள் தூரத்தில்
வந்து கொண்டு இருந்தது ஓடிய போலீஸ்காரர்கள் கதவைத்திறந்து அரபியை வெளியில்
தூக்கிக் கொண்டு வந்தார்கள் தலையிலிருந்த வட்டு காணவில்லை பெரிய அளவில் காயமில்லை
முகம் அஷ்டகோணலாக இருக்க அவனை போலீஸ் காருக்கு கொண்டு வந்தார்கள் எப்பொழுதுதான்
செய்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை அவனது கையில் விலங்கு பூட்டி இருந்தது ஒரு
போலீஸ் என்னிடம் கண்களால் பேசினார்...
போ
நான் கண்களில் நன்றி சொல்லி எனது காரை
எடுத்துக்கொண்டு கிளம்பினேன் துபாயை நோக்கி....
நண்பர்களே... இதை எதற்காக சொன்னேன் என்றால் இவர்கள்
நினைத்திருந்தால் என்னையும் அலைக்கழித்து இருக்க முடியும் அங்கு போலீஸ்காரர்கள்
நியாயப்படி, தர்மப்படி, சட்டப்படியே நடப்பார்கள்
என்பதற்கு எனது கண்முன் நடந்த இந்த சம்பவம் ஒரு சாட்சி
வல்லாஹி ஊவா மாஃபி கலம் கஸாப்
அல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை
ஒரு முஸ்லீம் பொய் சொல்லக்கூடாது மாட்டான்
என்பது இங்கு ஆணித்தரமாக நம்பப்படுகிறது உண்மையும் அதுவே அதாவது நான் சொல்வது அரபு
நாட்டாருக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன்
அங்கு பேரீட்சம்பழம் மரத்தை சாய்ப்பது மிகப்பெரிய குற்றம்
அதுவும் கன்று என்றால் கூடுதல் தண்டணை
காணொளி
செவ்வாய், ஜூலை 11, 2017
ஞாயிறு, ஜூலை 09, 2017
வெள்ளி, ஜூலை 07, 2017
வாழ்க வளமுடன்
பேருந்தில்
வாசலில் நிற்பது யார் தெரியுமா ? சரியாக விடை சொல்பவர்களை அடுத்த பதிவில்
அறிவிக்கப்படும்
கடந்த முறை ஊருக்கு
வந்தபோது திருச்சியிலிருந்து... தேவகோட்டைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்
என்னையும், ஓட்டுனரையும், நடத்துனரையும் சேர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக
சுமாரான பயணிகளே இருந்தனர் எனது மூன்று இருக்கைக்கு முன்புறமும் இரண்டு பெண்கள்
சுமார் முப்பத்தைந்து வயதிருக்கலாம் இருவருமே திருமணம் ஆனவர்களே... பக்கவாட்டில்
இரண்டு இருக்கையில் ஒரு புதிதாக திருமணம் முடிந்த ஜோடிகள் அனைவரது கண்ணும் இந்த
ஜோடிகள் மீதுதான் காரணம் அவர்களின் செய்கைகளும், குலாவல்களும், அப்படி இருந்தது
நம்மைச்சுற்றியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என்ற சிந்தையே இருவருக்கும் இல்லை
நான் எனக்கு முன்புறமிருந்த பெண்கள் பேசிக்கொண்டு வருவதையே கவனித்தேன்.
இந்த மூதேவிங்க இங்கேயே
இப்படி இருக்குகளே... வீட்டுக்குள்ளே.. எப்படி ?
புதுசா என்னத்தை எல்லாரையும்
போலத்தான்.
இப்படிக் குழையிறானே...
பய...
ஒனக்கு ஏத்தா பொறாமை எல்லாரையும் போலத்தான் இவனும் இருக்கான்.
அதுக்காக பொது எடத்துலயா அவ அவனுக்கு மேலே இருக்காளே... வீட்டுக்கு போயி வச்சிக்கிற வேண்டியதுதானே
வீட்டுல மாமியா தொந்தரவு
இருக்குமோ... என்னமோ அதான்
இங்கேயாவது சந்தோஷமா இருப்போம்னு நினைச்சிட்டா..
புதுசாக் கல்யாணம் ஆனவளை
மாமியா என்ன... செய்யப்போறா
நீ வேற ய்யேன் மாமியாளோட
சேந்தவளா இருந்தாலும் இருப்பா.
வ்வோன் மாமியா என்ன...
செஞ்சுச்சு
ஒனக்குத்தான் தெரியுமே
எம்புருசன் நல்லா சிரிக்க சிரிக்க பேசுவாரு, எனக்குத்தான் பட்டுனு சிரிப்பு
வந்துருமே சத்தமில்லாம செய்கையிலே சிரிக்க வச்சுப்புட்டு போயிடுவாரு நான்
சிரிச்சுடுவேனா நீ லூசானு கேட்கும்
கெழட்டு முண்டம்.
அங்கே பாரு.... அவனை
இப்படிக் குழையிறானே.... பாவி.
விட்டுத்தொலை எல்லாம் மூணு மாசத்துக்குத்தான் அப்புறம் ச்சீ தள்ளி நில்லு மூதேவினு சொல்லுவான் தெரியாது இந்த
ஆம்பளைங்களைப்பத்தி...
சொன்னவுடன் சடக்கென
திரும்பிப் பார்க்க நான் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் அந்தப் பெண்களுக்கு
என்னைப் பார்க்கவும் வெட்கமாக போய் விட்டது பிறகு அவர்கள் பேசவே இல்லை திருமயம்
வந்தது இறங்கும்போது என்னை திரும்பி திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள்
அவர்கள் மறையும்வரை நானும் அவர்களை பார்த்துக் கொண்டே வந்தவன் மீண்டும் அந்த
ஜோடிகளை கவனிக்கத் தொடங்கினேன் அவர்களிடம் போய் வீட்டில் போய் வைத்துக் கொண்டால்
என்ன என்று கேட்போமா ? என்னுள்
மனசாட்சி கேட்டது உனக்கு இந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற பொறாமையா உடன் அந்த எண்ணத்தை கை விட்டேன் காரைக்குடி வந்தது இறங்கி
விட்டார்கள் அந்த இளம் ஜோடிகள்.
(அவர்கள் செயலைத்தான் வெறுத்தேனே தவிர அவர்களை அல்ல)
நான்
கேட்காமல் விட்டதற்கு முக்கிய காரணம் எப்பொழுமே என்னிடம் 1991 முதல் ஒரு பழக்கம்
உண்டு இது நல்ல பழக்கம் என்றே என் மனதுக்கு படுவதால் இன்றுவரை தொடர்கிறேன் ஆம்
சாலையில் போகும்போது யாராவது முகமறியாதவர்களாக இருந்தாலும் சந்தோஷமாக பேசிக்கொண்டு
கொண்டு போனால் எனது கை ஆசீர்வதிப்பது போல் எழும் மனதுள் நினைப்பேன் இவர்கள்
கடைசிவரை இப்படி சந்தோஷமாக வாழட்டும் என்று இப்படி நான் நினைப்பதால் அவர்கள்
சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நான் சொன்னால் அது எனது முட்டாள்த்தனம் நமக்குத்தான்
இப்படியெல்லாம் வாழ்க்கை கிடைக்கவில்லை இவர்களுக்காவது கிடைத்ததே என்ற அற்ப
சந்தோஷம் எனக்கு உண்டு எனது ஆத்ம திருப்திக்காக இப்படி நினைக்கின்ற பொழுது நாளை
எனது ஆத்மாவுக்கும் திருப்தி ஏற்படும் என்பதை நம்புகின்றேன் வாழட்டும் அந்த இளம்
ஜோடிகள் என்றென்றும் நலமுடன் வாழ்க வளமுடன்.
வியாழன், ஜூலை 06, 2017
ஈ கவித நினக்கல்ல - ഈ കവിത നിനക്കല്ല
உனக்காக உருகிய
உலகநாதன்.
உன்னை கண்ணே
என்றேன் ஆதலால்
என்னை கண்ணீர்
வடிக்க விட்டாய்
உன்னை கனியே
என்றேன் ஆதலால்
என்னை சனியனை
பிடிக்க விட்டாய்
உன்னை முத்தே
என்றேன் ஆதலால்
அண்ணனை விட்டு
என்னை மொத்த விட்டாய்
உன்னை மணியே
என்றேன் ஆதலால்
என்னை பணியை
இழக்க விட்டாய்
உன்னை அருகே
வா என்றேன் ஆதலால்
என்னை
கல்லறையருகே தூக்கி போக விட்டாய்
எனது
வார்த்தைகளின் அர்த்தங்களை
புரிந்து
கொள்ளாத நீ தமிழச்சியே அல்ல
நீ நலமுடன்
வாழ் நீண்ட காலம் ஏனெனில்
நான் மேலேயாவது நிம்மதியாய் வாழ்கிறேன்
ஈ கவித
நினக்கல்ல மோளே நின்டே அச்சன் திரு. நாராயண நம்பூதிரிக்கு.
ഈ കവിത നിനക്കല്ല മോളേ നിൻറ അഛഹൻ ശ്രീ.
നാരായണ നംബുതിരിക്കു
This Poem not for you dear, it’s for your father Mr. Narayana Namboothiri
CHIVAS REGAL சிவசம்போ-
அப்போ நீ மலையாளியவா
காதலிச்சே ?
சாம்பசிவம்-
யாரையோ... தாக்குறது மாதிரி இருக்கு
ஆனா, சரியாத் தெரியலயே.
காணொளி
செவ்வாய், ஜூலை 04, 2017
ராஜா, राजा, రాజా, രാജാ, Raja, راجا
இடம்
பேரையூர் பேருந்து நிலையம்.
02.35 am Police catch
3 People
இங்கே வாங்கடா இந்த நேரத்திலே இங்கே என்ன வேலை ?
சினிமாவுக்கு போனோம் ஸார் சிட்டி பஸ்ஸுக்காக நிற்கிறோம்.
உன் பேரென்ன ?
ராஜா
உன் பேரென்ன ?
ராஜா
உன் பேரென்னடா ?
ராஜா
? ? ? ஏட்டு இவங்களை வண்டியிலே
ஏத்து.
போலீஸ் ஸ்டேஷன்.
ஏண்டா... பேரைக்கேட்டா ஒன்னு சொன்னாப்பலே ராஜானு
சொல்லுவியலோ எந்த நாட்டுக்குடா ராஜா நீங்களெல்லாம் ?
ஸார் யேன்பேரு ராஜாதான் முழுப்பேரு ராஜாராம்.
உங்க அப்பா பேரு ?
ராஜாமணி ஸார்.
நீ வாடா சொல்லு.
எம்பேரு ராஜா உசேன் ஸார்.
உங்க அப்பா பேரு ?
ராஜா முஹம்மது ஸார்.
? ? ? நீ சொல்றா.
ஸார் எம்பேரு அந்தோனி ராஜா
அப்பன் பேரென்ன... ஆரோக்கியராஜாவா ?
ஆமா ஸார்.
சரிதான் படிக்கிறீங்களாடா ?
ஆமா ஸார்.
எந்த காலேஜ் ?
ராஜா தேசிங்கு காலேஜ்.
எல்லாரும் காலேஜ் ஐ.டி. எடுங்கடா,.
மூன்று பேரும் தங்களது ஐடியை எடுத்துக்
கொடுக்க இன்ஸ் பார்த்து விட்டு...
யோவ் ஏட்டு இவங்கெளை முதல்ல வெளியே அனுப்பு
விட்டா மதப்பிரச்சனையை கிளப்பி காலேஜை இங்கே கொண்டு வந்துருவாங்கே போங்கடா
தொலைஞ்சு போங்கடா...