தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 29, 2015

கணக்கு


நேற்று இரவு 02.00 மணிக்கு பொழுது போகவில்லை சரி நமது வாழ்வில், நாம் எவ்வளவு காலங்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோம் ? என நாட்காட்டியை வைத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டைரிகளை வைத்து கணக்கு எடுத்தேன்.

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

வாழ்வாதாரம்


இந்த சமூகத்தில் பலரும் கஷ்டப்படுவதற்கு முக்கிய காரணம் தன்தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழ, ஆசைப்படுவது மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்துவது, இதற்காக கடன் வாங்குவது, வட்டிக்கு வாங்குவது இதன் விளைவு வாழ்வாதாரம் உயர்வில் நிரந்தர சறுக்கல்.
 (சம்பாரிப்பன் எல்லோருமே பணக்காரன் ஆகமுடியாது சேமிப்பவனே பணக்காரன் ஆகமுடியும். 1980-ல் நாட்காட்டியில் நான்கண்ட பொன்மொழி)
 பணக்காரன் ஆவது இன்றைய சூழ்நிலையில் பெரியகஷ்டம் ஒன்றுமில்லை, ஆனால் அதற்கு முதலில் கொஞ்சம் பணம் வேண்டும், இதுதான் மிகப்பெரிய கஷ்டம் ஏனெனில் அந்த கொஞ்ச பணத்தை சேமிப்பதற்குள் நமது ஆயுளின் பகுதி காலம் முடிந்து விடும் காரணம் குடும்பச்சுமை, அன்றாட விலைவாசி உயர்வு, புதிது புதிதாய் வியாதிகள், கல்விக்கட்டணம், தங்க விலை உயர்வு, தங்கம் நமது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது ஏனெனில் மகளுக்கு கட்டாயம் வரதட்சினை கொடுத்தாக வேண்டும், விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியால் புதிது புதிதாய் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் வரவுகள், அவைகளை நாம் வாங்காமல் வாழமுடியாது ஏனெனில் அப்பொழுதுதான் சமூகத்தில் சமமரியாதை கிடைக்கும், அதனால் கூடுதலாய் மின்சார செலவுகள், இத்யாதி, இத்யாதிகள் இந்த கஷ்டங்களுக்கு மூலகாரணம் ஒட்டுமொத்த சமூகமே ! ஆம் நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தலின் அறியாமை, காரணம் நாம் ஏணியாகவே இருந்து ஏற்றிவிட்டு ஏமாறுவதில் சுகம் கண்டு விட்டோம், ஏணியில் ஏறிப்போக ஆசையில்லை, காலம் மாறி விட்டது மானிடா ! இன்று ஏணியே தானியங்கியாக மேலே போய் விட்டு கீழே வருகிறது அந்த இரும்பு ஏணிகூட காலப்போக்கில் தன்னை மாற்றிக் கொள்ளும்போது நாமேன் மாற்று சிந்தனைக்கு வரக்கூடாது ? அப்படி வரவில்லை எனில் இதற்க்கு மாற்றுத்தீர்வு ஆசையை துறக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.
ஆகவே புத்தரின் போதனைப்படி நாம் ஆசையை ஒழிக்க வேண்டாம் ஆசை என்பதை பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் எடுத்துக் கொண்டால் போதுமானது, ஆசையில்லாமல் வாழ்வதுகூட விரக்தியை கொடுத்து விடும் பேராசை, பெரிய ஆசைகளை தவிர்த்து சிறிய ஆசைகளுடன் வாழ நினைத்தால் சீறான, சிறப்பான வாழ்வே !

வியாழன், டிசம்பர் 24, 2015

மண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி


தேவதையைப் போன்ற
அவளைப் பார்த்தேன்
என்னைப் பார்த்து
சிரித்தாள் என்னுள்
ஏதோ பாய்ந்தது போல்
இருந்தது ஏன் ? சிரித்தாள்
என்னைப் பார்த்து என்று பாட
வேண்டும் போலிருந்தது அவள் இடுப்பில்
மண் குடம் சம்மணமிட்டு உட்கார்ந்து என்னைப்
பார்த்து கேலி செய்கின்றதோ.. என்று எனக்கு தோன்றியது
ச்சே இந்தக் குடத்துக்கு வந்த வாழ்க்கை நமக்கு வராதா ? ச்சே
ஏன் ? என் மனம் இப்படி களி மண்ணாய் இருக்கிறது அதனால்தான்
நமது வீட்டில் உனக்கு மூளையே இல்லை உள்ளே களி மண்ணுதான்
இருக்கு என்று எல்லோருமே சொல்கிறார்களோ இவளிடம் பேசலாமா ?
கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு பக்கத்தில் சென்றேன்
என்ன ? என்பது போல் என்னை பார்க்கவும் எந்த ஊர் ? என்றேன் மண்டபம்
தான் என்றவள் உங்க பேரென்ன ? என்றாள் மண்ணை வளவன் என்றவன்
உங்கள் பேரு ? மண்டோதரி என்றவள் ஏன் ? இல்லை தாகமாக இருக்கு
 குடிக்க தண்ணி வேணும் என்றேன் சரி என்று பானையை கவிழ்த்தி
 குடி என்றாள் நான் குனிந்து குடிக்கும் பொழுது பொரை ஏறி இரும
அவள் சட்டென பானையை விட்டு எனது தலையில் தட்டி விட
பானை கீழே விழுந்ததில் சுக்கு 100 ஆகியது மண்ணிலிருந்து
 வந்த களி மண் பானை மீண்டும் மண்ணுக்கே போனது
இவளுக்கு நாம் பானை வாங்கி கொடுக்க வேண்டும்
சந்தைக்கு வர முடியுமா ? என்றேன் ஏன் ? உனக்கு
வேறு பானை வாங்கித் தருகிறேன் வாங்க
போகலாம் இப்படித் தொடங்கியது
எங்கள் காதல் இப்பொழுது
பானை போன்ற வயிறு
அவளுக்கு காரணம்
இது 8ம் மாதம்
ஹி... ஹி...


Chiwas Regal சிவசம்போ-
போங்கடா நீங்களும் உங்க காதலும்...
சாம்பசிவம்-
4 வார்த்தைகளில் கதை ஆகிப்போச்சே ?
சிவாதாமஸ்அலி-
இவங்களையெல்லாம் பித்தளைப் பானையாலேயே அடிக்கனும்.

குறிப்பு – முன்பு இலங்கை வாணொலியில் கதை சொல்வார்கள் கேட்டு இருப்பீர்கள் ஒரே நபர் இரண்டு விதமாக பேசுவது அதைப்போல நாமும் செய்தால் என்ன ? என்ற தோன்றியதின் விளைவு.

அடிக்குறிப்பு - இப்பதிவை பானை வடிவில் எழுதியமைத்தேன் சில கணினியில் வேறு மாதிரியாக தெரியலாம் அப்படி இருந்தால் கீ-போட்டில் Ctrl கண்ட்ரோல் பட்டனில் ஒரு விரலை அழுத்திக்கொண்டு எலியை சிறியதாக உருட்டுங்கள் பானையின் வடிவம் கிடைத்து விடும் விளக்கம் கொடுப்பதால் தவறாக கருதவேண்டாம் சிலருக்கு தெரியாமல் இருக்ககூடும் ஆகவே சொன்னேன் - கில்லர்ஜி

புதன், டிசம்பர் 23, 2015

மரணத்தின் கொல்லைவாசல்


இணையத்தில் எடுத்தேன் இதே நிலைப்பாடு அன்றைய விபத்து

நான் மரணத்தின் தலைவாசலில் நின்றவன் அல்ல ! மரணத்தின் கொல்லை வாசலுக்கே சென்று வந்தவன்.

ஆம், என் இனிய தேவகோட்டையிலிருந்து... (வருடம் 2010 சூன் மாதம்) சென்னை விமான நிலையத்தை நோக்கி முந்னூறு மைல்கள் பேருந்தில் கடந்து விட்டேன் கடைசி ஐம்பதில்தான் விதியின் விளையாட்டு அதிகாலை சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரும்பு பட்டா கனரக சரக்கு ஊர்தியின் பின்புறத்தை விரைந்து வந்து சத்தத்துடன் முத்தமிட்டது எனது பேருந்து. பயணிகள் அனைவருமே நித்திரையில் ஒரே கூக்குரல் பிறகு

மயான அமைதி நடந்தது என்ன ? தெளிந்த பின் மீண்டும் கூக்குரல்கள், கதறல்கள், கண்ணீர்கள் நான் ஒரு தெளிவிற்கு வந்தவுடன் உடைந்த சன்னல் கண்ணாடிகளை எனது ஷூக்காலால் தேய்த்து அதன் வழியே வெளியே குதித்தேன் முன்புறம் சென்று ஓட்டுனரை பார்த்தேன் பேருந்தின் இடிபாடுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருந்தவரை காலை பிடித்து அழைத்தேன் பிறகுதான் தெரிந்தது அவர் இறந்து விட்ட விசயம் நேற்றிரவு திருச்சியில் என்னுடன் பேசிக்கொண்டே தேநீர் அருந்திய மற்றொரு ஓட்டுனர் ஓட்டுனரின் பின்புறத்தில் நசுக்கிய இடிபாடுகளுடன் பிணமாய் என் வாழ்வில் இறந்தவர்களை மண்ணில் புதைக்கும்போது பார்த்து இருக்கிறேன் முதன் முதலாக பேருந்தின் இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை அன்றுதான் கண்டேன்.

தேவகோட்டையில் ஏறிய எனக்கு ஆறாவது வரிசையில் இருக்கை ஆனால் பேருந்து புறப்பட்டதும் முதல் வரிசை காலியாக கிடந்ததால் அதில் உட்கார்ந்து வந்தேன் காரைக்குடி பேருந்து நிலையம் வந்ததும் ஏறிய பெரியவர் ஒருவர் தம்பி இது நான் ஏற்கனவே பதிவு செய்த என்னுடைய இருக்கை உங்கள் இடத்துக்கு செல்லுங்கள் என்றார் நானும் ஒன்றும் சொல்ல முடியாமல் எனது ஆறாவது வரிசைக்கு வந்து உட்கார்ந்தேன் அந்தப் பெரியவர் இப்போது பிய்க்கப்பட்ட சடலமாய் கண்டதும் எனது கண்ணீர் ஆறாய் பெருகியது.

முதல் நாள் மாலை காரைக்குடியில் ஏறிய ஒரு முதியவர் எனது முன் ஐந்தாவது வரிசை இருக்கையில் அமரும்போதே நாராயணா என்று அமர்ந்தார் இன்று காலை அமரராகி அந்த நாராயணனே வைகுண்டத்திற்கு அழைத்துக் கொண்டார் ஒரு வேளை பயணப் பேருந்தின் பெயர் நாராயணமூர்த்தி என்பதாலோ ? மோதிய வேகத்தில் பகுதி பேருந்து எனக்கு முன் ஐந்தாவது இருக்கை வரை நசுங்கி நுழைவாயில் அடைத்துக் கொண்டது கதறிய குழந்தைகளை சன்னல் வழியே வெளியே வாங்கினேன் என்னால் முடிந்தவரை உதவினேன் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தேன் யாருமே நிறுத்தவில்லை மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா ? இருக்கிறது இருப்பினும் இல்லை காரணம் நமது சுதந்திர இந்தியாவின் சட்ட திட்டங்கள் பயம் பயம் சராசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம் இந்திய அரசியல் சட்டம் எறிக்கப்பட வேண்டிய ஒன்று இதை நான் சொல்லவில்லை சட்ட அமைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் அம்பேத்கர் சொன்னது. ஓடி ஓடி உதவிய என்னால் ஓட முடியவில்லை காரணம் பிறகுதான் புரிந்தது எனது காலில் அடி, நெஞ்சில் அடி,  நாடியில் அடி தண்ணீரில் குளித்திருந்த எனது உடைகள் முதன் முதலாக எனது குருதியிலும் குளித்தது. அந்நிலையிலும் எனக்கு பிறருக்கு உதவும் மனப்பான்மையை கொடுத்த இறைவனுக்கு (?) நன்றி.

நீ.........ண்............. இடை.....வெளி....க்கு....பின்னே
தீ அணைப்பு வீரர்கள்
வந்தார்கள்,
நின்றார்கள்,
சென்றார்கள்.

மருத்துவமனை விரைவூர்தி
வந்தது,
நின்றது,
சென்றது.

தொலைக்காட்சிகாரர்கள்
வந்தார்கள,
பிடித்தார்கள்,
சென்றார்கள்.
பத்திரிக்கைக்காரர்கள்
வந்தார்கள்,
எடுத்தார்கள்,
சென்றார்கள். 


நானும் சென்றேன் கடைசியாக மருத்துவமனை விரைவூர்தியில் செங்கற்பட்டு அரசாங்க மருத்துவமனைக்கு என்னுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருவர் இறக்கி உள்ளே கொண்டு செல்ல ஊழியர்கள் இல்லை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனக்கு முன்னே சென்ற பயணிகளில் பலரும் சடலங்களாய் சற்றுமுன் மரண வேதனையில் என்கண் முன்னே துடித்தவர்கள் இறந்து விட்டார்கள் இல்லை இறக்கடிக்கப்பட்டார்கள் இப்போது செவிலித்தாய்கள் மட்டுமே இறந்தவர்களை கணக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் எனக்கு எங்கே ? கிடைக்கும் சிகிச்சை நான் நியாயம் கேட்டேன் கத்தினேன் ஒன்றும் கிடைக்கவில்லை பிறகுதான் புரிந்தது நான் நின்று கொண்டிருப்பது எனது இந்தியா வென்று வேதனையில் காறித்துப்பி விட்டு வாயிலிருந்த எனது ரத்தத்தைத்தான் 

எனது உடையை மாற்றிக்கொண்டு என்னை நானே சுத்தப்படுத்திக் கொண்டு விமான நிலையம் வந்து விட்டேன் சிறிது நேரத்தில் நாடியில் அடிபட்ட எனது முகம் தெற்கும் மேற்குமாய் இழுத்துக் கொண்டு எனக்கே என்னை அடையாளம் காண்பதற்கு கஷ்டமாக இருந்தது பற்களுக்குள் சிக்கிய நாக்கு Cut ஆகி விட்டது பேச்சு குழறுபடியாகியது சுங்க அதிகாரிகள் என்னை சந்தேகமாகவே பார்த்தார்கள் அவர்களை சமாளிக்க வாயில் கசிந்த ரத்தத்தை நானே கஷ்டப்பட்டு குடித்துக்ரரரர கொண்டு இருந்தேன் ஒரு வழியாக விமானத்துக்குள் வந்ததும் பணிப்பெண்ணிடம் சுகமில்லை என்று சொல்லி போர்வை வாங்கி முழுவதும் தலையைப் போர்த்திக் கொண்டு உணவு கொண்டு வரும் போதுகூட தலையை மட்டும் அசைத்து வேண்டாம் என்றவன் வேதனையில் உறங்கி விட்டேன் துபாய் விமான நிலையத்திலும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் முகம் ஏன் ? இப்படி இருக்கிறது எனக்கேட்க சென்னை கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டேன் உடனடியாக மருத்துவமனை போகவேண்டும் என்று சொல்லி துரிதமாக வெளியில் வந்தேன் சீருந்துடன் நின்ற நண்பர்களுக்கு என்னை அடையாளம் தெரியாத நிலையில் எனது முகம் பிறகு அபுதாபி வந்து முதல் வேளையாக எனது நீண்ட மீசையை சிறிதாக Cut செய்து விட்டு காரணம் மீசையே வேறு மாதிரியான கோணத்தில் இருந்தது மருத்துவமனை செல்ல மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காரணம் இவ்வளவு பெரிய அடியை வாங்கி கொண்டு எப்படி சுமார் 12 மணி நேரம் சிகிச்சை எடுக்காமல் நாடு விட்டு நாடு வந்தாய் ? நாடி எலும்பில் முறிவு தொடர்ந்து சிகிச்சை எடுத்தேன் இந்த மருத்துவர்களின் லட்சணம் இரண்டு மாதங்கள் நாடியில் சீழ் படிந்து ஜலம் வந்தது பிறகு அதற்கும் சிகிச்சை தொடர்ந்து இரண்டு வருடங்களாக பேச்சும் தெளிவாக வருவது கஷ்டமாக இருந்தது இன்னும் கூட நாடியில் அடிபட்ட உணர்வு உண்டு.

தாங்கள் நினைக்கலாம் பயணத்தை ரத்து செய்திருக்கலாமே...

அப்படி செய்தால் மருத்துவமனை போகவேண்டும், சிகிச்சை எடுத்தவுடன் ஓய்வு வேண்டும், தேவகோட்டை திரும்பினால் பத்து மணி நேரமாவது மீண்டும் பேருந்து பயணம் செய்ய வேண்டும், வீட்டில் சொன்னால் அனைவரது மனமும் வேதனைப்படும், சொந்த பந்தங்கள் தேவகோட்டை படையெடுத்து வரும், மருத்துமனை செலவு கையை பிடிக்கும், விமான பயணச்சீட்டு வீணாகி மீண்டும் வேறு சீட்டு எடுக்க வேண்டும், முக்கியமாக மறுநாள் நான் பணியில் இருக்க வேண்டும், அலுவகத்தில் தாமதமானதற்கு வேண்டிய ஆதார சான்றிதழ்கள் வேண்டும், இங்கு பணியில் நுழைந்து அட்டையை பதிந்து விட்டால் மருத்துவ அட்டையில் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம், பிறகு என்னை நானே பராமரித்துக் கொள்வேன் பிறருக்கு துன்பம் கொடுப்பதை நான் என்றுமே விரும்பாதவன் நாளைய எனது கடைசி காலத்தில் என்னை நானே பராமரித்துக் கொள்வதற்கான ஒத்திகையாக இதை நான் பரீட்சை செய்து கொண்டேன். 


இதிலும்கூட எனக்கு குடும்பத்துக்குள் சில உண்மைகளை புரிந்து கொள்ள முடிந்தது ஒவ்வொரு மனிதனுக்கும் சரி, மனுஷிக்கும் சரி அவர்களின் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு தோழமை இவ் உலகில் வேறு யாருமில்லை இந்த தருணங்கள்தான் என்னவளை நான் தினம் நினைத்துக் கொண்டு வேதனைப்படும் வாய்ப்பை மேலும் அதிகமாக்கியது அதுவே இல்லாத அவள் மீது அழுத்தமான ஆழமான காதலை வளர்த்தது, வளர்த்துக் கொண்டு இருக்கின்றது இன்று வரை.

நான் கடந்த பத்தொன்பது (From 1996 to 2015) ஆண்டுகளாக அரபு நாட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டதால் பொறுப்பற்ற சமூக அவலங்களைக் கண்டு மனம் பொறுக்க முடியவில்லை அரேபியர்களுக்கு தன்னை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை இருப்பினும் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள நமக்கோ ?

இதற்கு காரணம்
சாபக்கேடா ?
துரதிஷ்டமா ?
அறியாமையா ?
முட்டாள்த்தனமா ?
ஒரு வேளை செய்வினையோ ? ? ?

திங்கள், டிசம்பர் 21, 2015

கிலி கிளி கிழி


இந்தப் பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

சனி, டிசம்பர் 19, 2015

திருமண பந்தம் ஏன் ?

ஞானி ஸ்ரீ பூவுவின் கொள்ளுப்பேத்தியின் மகன் M. ரித்தீஷ் சென்னை.

ஒரு மனிதன் எதற்காக ? திருமணம் செய்கின்றான் அல்லது செய்து வைக்கப்படுகின்றான் மனிதன் திருமணம் செய்வதின் முக்கிய நோக்கம் தாம்பத்யம் மட்டுமல்ல ! உடல் சுகத்துக்காகத்தான் திருமணம் என்றால் அது ஏற்க முடியாத விடயம் அதற்கு விபச்சாரிகள் போதும் எல்லோருமே விபச்சாரன், விபச்சாரி ஆகி தாம்பத்யம் என்பதே விபச்சாரம் என்ற அர்த்தமாகும் பிறகு தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தை, மச்சான், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, குறிப்பாக கொழுந்தியாள் என்ற உறவுகள் எப்படியிருக்கும் ?

வியாழன், டிசம்பர் 17, 2015

செல்லூர், செவிடன் செங்கோடன்


ஏம்பா தம்பி, அரியலூரு வண்டி வருமா ?
ஆமா, இது அரியநாயகம் ஐயா வண்டிதான்.

நான், அரியலூரு வண்டி வருமானு கேட்டேன்
ஆமாங்கய்யா, நான் அரிசி மண்டிக்குத்தான் போறேன்.

சரியான செவிடு போலயே...
என்ன தவிடு வேணுமா ?

ஆளை விடுய்யா, நான் போறேன்.
ஆலங்குடியா போறீய, சரி போயிட்டு வாங்க.

(சரி வேறொருத்தன் வர்றான் அவன்ட்ட கேட்போம்)

ஏங்க, அரியலூரு வண்டி வருமா ?
அரிச்சுவடி எல்லாம், பாண்டியூரு போனா கிடைக்குமுங்க.

யோவ், அரியலூரு போகணும்னு சொன்னேன்யா.
என்ன அரியநாயகம் ஐயா போயிட்டாரா ? ஐயய்யோ...

(சரி, நடந்தே போவோம், அந்த ஸைக்கிள்காரன்ட்ட கேட்போம்)

தம்பி, ஸைக்கிள்ல கொஞ்சம் ஏறிக்கிடலாமா ?
ஸைத்தானெல்லாம் இந்த ஏரியாவுல கிடையாதுங்க.

செல்லூருக்காரன், பூராம் இப்படித்தானாடா...
செல்போணு, எங்கிட்ட இல்லைங்களே....

(சரி, அந்த மாட்டு வண்டியிலயாவது போவோம்)

ஐயா, மாட்டு வண்டியில கொஞ்சம் வரலாமா ?
ஆமா  நான்தான் மாயாண்டி என்ன விசயம் ?

ஐயா, நான் அரியலூரு போகணும் வண்டியில வரலாமா ?
ஆமா, நானும் கேள்விப்பட்டேன் அரியநாயகம் ஐயா போயிட்டாராம்.

சரி, போங்க... போங்க... நான் நடந்தே போறேன்.
என்ன செய்யிறது, நடக்க வேண்டியது நடந்து போச்சு.

சரி, சரி, போய்யா...
வண்டியில ஏறுங்களேன் நானும் கேதத்துக்குத்தான் போறேன்.

(ஐயய்யோ, இப்படியே திரும்பலைனா, நம்ம உயிருக்கு பிரச்சனை ஆயிடும் போலயே)

(திரும்பி வேகமாக ஓடுகிறார், திருவேகம்புத்தூரை நோக்கி)