தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 28, 2023

ஜேம்ஸ் ஊரணி


(மேலே இருப்பதை சொடுக்கினால் தண்ணீருக்குள் தள்ளி விடுவர்)
 
ந்த பெண்ணை வெகு காலமாக
தொடர்ந்து கவனித்து வருகிறேன்
அவளை பார்க்கும் போதெல்லாம்
சிரிக்கின்றாள். நானும் இன்று
கேட்டு விடுவோம் என்ற முடிவு
கட்டி அருகில் சென்றேன். பெயர்
என்ன ? என்றேன் பே.. பே... பே...
என்றாள் உடன் நகர்ந்து விட்டேன்.
ச்சே இதற்காகவா மூன்று வருசம் ?
* * * * * * * 01 * * * * * * *

சனி, மார்ச் 25, 2023

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4)


முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், மார்ச் 21, 2023

காலனி நிலம் வேண்டும்


காணி நிலம் வேண்டாம்
ஆம் எனக்கு காலனியே
வேண்டும். நான் உருண்டு
விளையாட ஓர் காலனி
வேண்டும், எனது ஏழேழு
சந்ததிகள் கூடிக் கழித்திட
காலனி வேண்டும் ஆகவே
நான் தேர்தலில் நிற்பேன்.
* * * * * * * 01 * * * * * * *

வெள்ளி, மார்ச் 17, 2023

பூசேரி, பூசாரி பூவலிங்கம்

 

ந்த பூசேரி கிராமத்தின் ஐயனார் கோயிலின் வளாகத்தில் மரத்தடியில் கிடா ஒன்று கயிற்றில் கட்டப்பட்டு இருந்தது, கீழே இலை தழைகளும் கிடந்தது நேற்றிரவே போட்டு இருந்தது. கொஞ்சமும் குறையவில்லை அதாவது கிடா உண்ணவில்லை என்பது தெரிந்தது. அந்த மரத்தடிக்கு அன்றைய விழா நாயகன் செஞ்சடை நாதீஸ்வரன் அருகில் வந்தான். அவன் அகவை ஐந்தை தொட்டு இருந்தான். இனிதான் முடி இறக்கி, குளித்து புத்தாடை அணிந்து காதை துளைக்க வேண்டும். இதற்காகவே வந்து இருந்தார். சுற்று வட்டார பதினெட்டுபட்டி கிராமங்களுக்கும் சொந்தக்காரர் முத்து மரையான் ஆச்சாரி.

செவ்வாய், மார்ச் 14, 2023

கர்வமுள்ளவன்

 

நேசிப்பது எனது இந்திய மண்
சுவாசிப்பது இந்தியக் காற்று
வாசிப்பது எம் தமிழ் மொழி
வசிப்பது தமிழ் இனத்தோடு

சனி, மார்ச் 11, 2023

வியாழன், மார்ச் 09, 2023

விவாஹ(M)ரத்து (4)

 

முந்தைய தொடர்ச்சிகள் ஒன்று இரண்டு மூன்று
 
துவரை.... அந்த இரண்டு குழந்தைகள் பிறப்பு,  அந்தக் கோப்புபற்றி எனது அலுவலகத்தில் வேலை செய்யும் அரபியிடம் சாதாரணமாக பேசிய பேச்சு விகாரமாகி விட்டது

செவ்வாய், மார்ச் 07, 2023

விவாஹ(M)ரத்து (3)

முந்தைய தொடர்ச்சிகள் ஒன்று இரண்டு
 
இதுவரை.... இதெல்லாம் சரி இங்கு இந்தியப் பெண்கள் எப்படி வந்தார்கள் ? அதானே எப்படி வந்தார்கள் ?

ஞாயிறு, மார்ச் 05, 2023

விவாஹ(M)ரத்து (2)

 

முந்தைய தொடர்ச்சி ஒன்று
 
இதுவரை.... ஏதோவொரு காரணத்திற்காக அவன் அவளை அறைந்து விட்டாள்ல் நடப்பது என்ன ?

வெள்ளி, மார்ச் 03, 2023

விவாஹ(M)ரத்து (1)


ரேபியர்கள் ஒன்று முதல் மூன்று வரை திருமணம் செய்து கொள்கிறார்கள் இது சரியா ? தவறா ? என்ற உள் விபரங்களுக்குள் தயவு செய்து போக வேண்டாம் என்பதை முன் கூட்டியே நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் காரணம் அது வேறு விதமான பிரச்சனைக்கு வழி வகுத்து விடும் பிறகு இந்த பதிவு எதற்கு ? எமது எமராத் வாழ்வில் தெரிந்து கொண்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்கின்றேன் என்பதே குறிக்கோள்.