தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 28, 2023

குன்றக்குடி, குடிமகன் குருநாதன்

நாட்டின் குடிமகன்
என்பது இவர்களுக்கே
பொருந்தும்... ஆனால்
குடிக்காத என்னை
குடிமகன் என்பது
முறையில்லை அரசே
இது முறையில்லை...

வியாழன், செப்டம்பர் 21, 2023

நடந்தது நன்றாகவே நடந்தது

   னிதர்களுக்கு, சந்தோஷங்களும் கவலைகளும் இணைந்து இருப்பதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ளும் மனது, கவலைகளை ஏற்பதில்லை. ஒரு மனிதன் இறுதிவரை சந்தோஷமாக வாழ்ந்து கழிக்க வேண்டுமெனில் பணம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பது அறிவீனம். எத்தனையோ செல்வந்தர்கள் மகிழ்ச்சியை இழந்து நிற்பதற்கு காரணம் என்ன ?

திங்கள், செப்டம்பர் 18, 2023

Audi Car நல்லால்லே...

ணக்கம் நண்பர்களே... ‘’ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே’’ என்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அற்புதமான பாடலை திருமதி வல்லிசிம்ஹன் அம்மா அவர்கள் வேண்டுகோளுக்காக எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

வியாழன், செப்டம்பர் 14, 2023

நீலகிரி, நீட்தேர்வு நீலாவதி


நீட் தேர்வு எழுத நீட்டாக உடை அணிந்து சென்ற மாணாக்கர்களை குறிப்பாக பெண்களை இப்படி தலைவிரி கோலமாக அலங்கோலப்படுத்தி உள்ளே அனுப்புகின்றார்கள். தேர்வு நேரலை காணொளியில்தான் நிகழ்கிறது மேலும் ஆசிரியர்கள் குழுவும் சுழன்று வருகிறது அதன் மத்தியில் தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்து விடமுடியுமா ? அரபு நாடுகளிலும் தேர்வு நிகழத்தான் செய்கிறது அங்கு பெண்களை முக்காடு போடக்கூடாது என்று சொல்ல முடியுமா ?

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

வத்திக்குச்சி

ணக்கம் வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடா வடக்கு வாயா நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே ?

புதன், செப்டம்பர் 06, 2023

மடியில் கனமில்லை, மனதில் பயமில்லை

திரைப்படக் கூத்தாடன் திரு.எஸ்.வி.சேகர் அவர்களோடு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும் மேல் காணும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்மீது எனக்கு மரியாதை வந்து விடும். அதிமுகவில் எத்தனை பேர் இருந்தார்களோ அவ்வளவு பேர்களும் அடிமைகள்தான். ஏதோ உடலுறுப்பு வகையில் ஆண்வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

சனி, செப்டம்பர் 02, 2023

ஓரியூர், ஓட்டுனர் ஓடத்துரை

இது ஆங்கிலோ இண்டியன் கவிதை.
 
     Money
01. இது எனது குடிசை வீடு
ஆம் காசுக்கேற்ற கூடு